Sunday, December 28, 2008

Titbits 10: எந்திரனை வரவேற்ற மீஞ்சூர் ரசிகர்கள், எல்லோரையும் வசியம் செய்யும் ரஜினி! Etc,etc.,

1) சூப்பர் ஸ்டாரை வரவேற்ற மீஞ்சூர் ரசிகர்கள்

சென்ற வாரம் எண்ணூரில் எந்திரன் படப்பிடிப்பு நான்கு நாட்கள் நடைபெற்றது நினைவிருக்கலாம். படப்பிடிப்பில் தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு சூப்பர் ஸ்டார் பைக்கில் சென்ற விஷயத்தை கேள்விப்பட்டோம்.

முதல் நாள் அவர் அங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஷயத்தை கேள்விப்பட்ட அந்த பகுதி ரசிகர்கள் வல்லூர் கேம்ப் நுழைவாயிலில் அவரை வரவேற்று அட்டகாசமான பேனர் ஒன்றை அடுத்த நாளே வைத்துவிட்டனர்.

தமிழகத்தின் நாளைய தளபதியே வருக... வருக...!!

"எந்திரன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வருகை தரும் தமிழகத்தின் நாளைய தளபதியே வருக... வருக..." என்ற வாசகத்துடன் காணப்பட்ட அந்த பேனர் எந்திரன் படப்பிடிப்பு எண்ணூரில் நடக்கும் விஷயத்தை அப்பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தியது. படப்பிடிப்புக்கு செல்ல மக்கள் ஆயத்தமாகுமுன் அந்த குறிப்பிட்ட ஷெட்யூலே முடிந்து சூப்பர் ஸ்டார் வேலூர் சென்றுவிட்டார். சூப்பர் ஸ்டாரை நேரில் காண ஆவலாயிருந்த வல்லூர் மற்றும் மீஞ்சூர் பகுதி மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

2) எந்திரனுக்கு எதிராக திட்டமிட்டு பரப்படும் வதந்திகள்

மெகா பட்ஜெட் படமாக இருந்தாலும் எந்திரன் படத்துக்காக ஷங்கர் எந்த அளவு Planning செய்கிறார் என்று சென்ற பதிவில் பார்த்தோம் அல்லவா? இப்படி திட்டமிட்டு செயல்படும் ஷங்கர் குறித்து தேவையற்ற வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர்.

ஷங்கர் படப்பிடிப்புக்காக மூன்று உயர் ரக கார்களை கேட்டதாகவும், அதில் ஒன்றை அவர் வேண்டுமென்றே அடித்து நொறுக்கும் காட்சியில் பயன்படுத்தியதாகவும் இது குறித்து ஐங்கரன் சொல்லாததையெல்லாம் தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்து கூறியிருந்தார் ஒரு ஆங்கில பத்திரிக்கையின் எழுத்தாளர் சில நாட்களுக்கு முன்பு. ஷங்கர் மூன்று கார்களை கேட்டது உண்மை. ஆனால் அது அவர் பயணம் செய்வதற்கு அல்ல. படத்தின் காட்சிகளில் பயன்படுத்த.

இப்போது அதே நாளிதழ் அந்த மூன்று கார்களையுமே (Mercedes Benz, BMW, Audi) ஷங்கர் அடித்து நொறுக்கப்படும் காட்சியில் பயன்படுத்திவிட்டதாக அபாண்டமாக கூறியுள்ளது. பொய் எப்படியெல்லாம் ரெக்கை கட்டி பறக்கிறது பார்த்தீர்களா? இப்படியெல்லாம் செய்திகளை வெளியிடுவதன் மூலம் சன்னை கலவரப்படுத்தும் அவர்கள் நோக்கம் நமக்கு தெரியாமலில்லை. ஆனால் சூப்பர் ஸ்டார் இருக்க பயமேன் என்று ஹாயாக இருக்கிறது 'சன்'.

3) "நம் எல்லோரையும் வசியம் செய்கிறார் ரஜினி" - ஜாக்கி ஷராப்

அண்டை மாநில மற்றும் பாலிவுட் கலைஞர்கள் நம் சூப்பர் ஸ்டார் மீது வைத்துள்ள மதிப்பும் மரியாதையும் வியக்கத்தக்க ஒன்று என்று நமக்கு தெரியும். நானா படேகர் மற்றும் மணீஷ் மல்ஹோத்ராவையடுத்து நடிகர் ஜாக்கி ஷராப் சூப்பர் ஸ்டார் பற்றி மிகவும் உயர்வாக கூறியிருக்கிறார். பாலிவுட்டின் ஸ்டைலிஷ் நடிகர்களில் இவரும் ஒருவர். 'Best Dressed Actor' விருதை கூட இவர் ஒரு முறை பெற்றிருக்கிறார்.

'ஆரண்யகாண்டம்' என்ற தமிழ் படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்துள்ள அவர் இங்கு Deccan Chronicle நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் ஒரு கேள்விக்கு சூப்பர் ஸ்டார் பற்றி அவர் கூறியிருக்கும் பதிலை பாருங்கள்.

உங்கள் குடும்பமே ரஜினி ரசிகர்களாக இருப்பது குறித்து...

ஜாக்கி ஷராப் : "நம் எல்லோரையும் ரஜினிகாந்த் வசியம் செய்கிறார் என்பதுதான் உண்மை. நானும் என் மனைவியும் மட்டுமல்ல என் மகன் டைகர் கூட அவரின் தீவிர விசிறி. நாங்கள் அவரது படங்கள் ஒன்றை கூட விடுவதில்லை"
…………………………………………………………………………………………………………………
On his entire family being a Rajinikanth fan...
Rajinikanth really mesmerises all of us. Not only my wife and I but my son Tiger is also a great fan of Rajinikanth. We never miss out his films. (Deccan Chronicle 27/12/08)
…………………………………………………………………………………………………………………

ரஜினியின் சம கால நடிகர் இவர். ஈகோ எதையும் பார்க்காமல் என் குடும்பமே ரஜினி தீவிர ரசிகர்கள் என்று கூறும் ஜாக்கி ஷராப்பின் பெருந்தன்மையை பாராட்டுவோம். நன்றி ஜாக்கி. தங்கள் ஆரண்யகாண்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

4) இதை படித்துவிட்டு சிரிக்காமல் இருப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு...!!!

அடுக்கு மொழி மன்னன் விஜய டி.ஆர். இந்த வாரம் வெளியாகியிருக்கும் ஆ.வி. இதழில் சீரியஸ் பேட்டி ஒன்று அளித்துள்ளார். என் நண்பர் படித்து காண்பித்தவுடன் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. எனவே உங்கள் பார்வைக்கும் அந்த பேட்டியில் ஒரு பகுதியை வைக்கிறேன்.

"பெரிய பெரிய நடிகர்களுக்கெல்லாம் சிம்பு மீது பொறாமை
"

"சிம்புவை சுற்றி ஏன் இத்தனை சர்ச்சைகள் என்று கேட்க்கிறார்கள். காய்ச்ச மரம் கல்லடி படத்தானே செய்யும். "இந்தப் பைய்யன் இப்படி வளர்றானேன்னு சிம்பு மேல பெரிய பெரிய நடிகர்களுக்கெல்லாம் ஆதங்கம் இருக்கு. என் மகனைப் போல நல்லவனை இதுவரைக்கும் நான் பார்க்கலை. எவ்வளவோ பெண்கள் கூட பழகறதுக்கு வைப்பு கிடைச்சபோதும் காதல் குறித்து மென்மையான ஒரு இதயத்தோட இருக்கான் சார். சினிமாவுல இருந்துட்டு என்னை மாதிரியே நல்லவனா இருக்குறது பெரிய விஷயம். என் மகனை நினைச்சி நான் பெருமைபடுறேன்."

என் மகன் அடுத்த சூப்பர் ஸ்டாரா வர்றதுக்கு வாய்ப்பிருக்குதான்னு தானே கேக்குறீங்க? சினிமாவுல ஜெயிக்கிறதுக்கு புத்திசாலித்தனம், திறமை இருந்தா மட்டும் பத்தாது. பொறுமையும் அதிர்ஷ்டமும் கூட இருக்கணும். இவ்வளவு நடிகர்கள் இருக்கிற தமிழ் சினிமாவுல ரஜினி-கமல், விஜய்-அஜீத், தனுஷ்-சிம்பு ஆகிய ஆறு பேருக்கு மட்டும்தான் மக்கள் இடம் கொடுத்திருக்காங்க. அதுல ஒருத்தனா வந்து நிக்கிறான் யாரு? அவனைப் பெத்து இந்த விஜய டி.யாரு. "ஐ ஆம் எ லிட்டில் ஸ்டார். ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்" என்று 1989 லேயே நான் அவனுக்கு பாட்டெழுதிட்டேன் சார். எதிர்காலத்துல அவன் எப்படி வளர்ந்து வர்றான்னு பாருங்க சார். நான் தலைக்கனதொட சொல்லலை. தன்னம்பிக்கையோட சொல்றேன்."

என் அடுத்த படத்துல நான் ஒரு முரட்டுத்தனமான வாலிபனா வர்றேன் ...

"என்னோட அடுத்த படத்தை இப்போ உள்ள யூத்துகளுக்காக எடுத்துகிட்டிருக்கேன். இதுல நான் ஒரு முரட்டுத்தனமான வாலிபனா வர்றேன். அதுக்காக உடம்பை குறைக்க ஜிம் பொய் வெயிட்டை குறைச்சிக்கிட்ட்ருக்கேன். (வயிற்றில் வேகமாக அடிக்கிறாராம்) பாருங்க தொப்பைஎல்லாம் இல்லாம யூத் மாதிரியே இருக்கேனில்லை? இப்போ இருக்கிற ஹீரோக்களை என்னை மாதிரி ஆடி பாட சொல்லுங்க பார்க்கலாம்..."

ரஜினி, கமல் இவங்கல்லாம் ஹீரோவா நடிக்கும்போது நான் நடிக்கக்கூடாதா?

"வீராசாமியில நான் ஆடினா தியேட்டர்லே கைதட்டி ரசிக்கிறாங்க சார். உங்களை மாதிரி சிலர் தான் "ஏன் ஹீரோவா நடிக்கிரீங்கன்னு?" கேட்க்குறீங்க. ரஜினி கமலை விட நான் வயசுல சின்னவன் சார். அவங்க நடிக்கும்போது நான் நடிக்கக் கூடாதா? ஒரு காலை தூக்கி இப்படி அடிச்சேன்னா (பக்கவாட்டில் உதைக்கிறாராம்) நாள் முழுக்க அடிச்சிக்கிட்டே இருப்பேன்... நீங்க வேண்ணா கிண்டலுக்கு டி.ஆர். சிக்ஸ் பேக் வைக்கப்போரான்னு எழுதலாம். நான் முகத்தை காட்டி ஜெயிக்கிறவன் இல்லை. அகத்தை காட்டி ஜெயிக்கிறவன்."

ஆனந்த விகடனில் வரும் ஜோக்குகள் இப்போதெல்லாம் சிரிப்பை வரவழைப்பதில்லை என்று வாசகர்கள் குறைபட்டுக்கொள்வதால் இப்படி ஒரு முயற்சியில் விகடன் இறங்கியிருப்பதாக தகவல்.

இன்னொரு காமெடியும் இருக்கிறது. சமீபத்தில் இவரது மகன் நடித்து வெளிவந்துள்ள படத்தை குடும்பத்தினருடன் நிச்சயம் பார்க்கமுடியாது. இந்த லட்சணத்தில் படம் வெளியான் அடுத்த நாளே, சிஃபி கும்பல் அந்த படம் பெரிய வெற்றி என்று தீர்ப்பு கூறிவிட்டது. மேலும் அந்த வெப்சைட்டில் அந்த நடிகர் அளித்த பேட்டியில், "தம்பட்டம் படம் மிகப் பெரிய வெற்றி. என்னை மாஸ் ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர். வசூல் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது" என்று பேட்டியளித்திருந்தார். பேட்டியை படித்தவர்களுக்கு "கேள்வியும் நாங்களே, பதிலும் நாங்களே" என்று சிஃபி செயல்பட்டிருப்பது நன்கு புரிந்திருக்கும். (எப்படியிருந்த சிஃபி இப்படியாகிவிட்டது!!).

முதல் காமெடியைவிட இது பெரியதாக இல்லை?

Those who want Bonus Comedy pls watch this video. Pls pls watch this video. Monday madness will go. You will be releived from stress and a non-stop laughter guaranteed.









http://in.youtube.com/watch?v=583A2jqmnIw

[END]