Tuesday, December 23, 2008

அடக்கத்தின் சிகரம் ரஜினி - நானா படேகர் புகழாரம்

நானா படேகர். பாலிவுட்டின் நடிப்பு சக்ரவர்த்தி. பாலிவுட்டின் சிவாஜி கணேசன் என்று இவரை தாராளமாக அழைக்கலாம். அந்த அளவு நடிப்பில் பெயர் பெற்றவர். உடன் நடிப்பவர்கள் அனைவரையும் தன் நடிப்பால் தூக்கி சாப்பிட்டுவிடுவார். எந்த இலக்கணத்திற்கும் கட்டுபடாத ஒரு காட்டுக்குதிரை இவர். கிடைக்கும் படங்களிலெல்லாம் இவர் நடிப்பதில்லை. தனக்கு பிடிக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியாகியிருக்கும் பொம்மலாட்டத்தில் தூள் கிளப்பியிருப்பதாக சொல்கிறார்கள்.

இப்பேர்ப்பட்ட ஒரு நடிகர், சூப்பர் ஸ்டார் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா? படியுங்கள்...

பாலிவுட்டையும் தமிழ் சினிமாவையும் ஒப்பிடக்கூடாது. இங்கு ரஜினி, கமல் உள்ளிட்ட ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். தென்னிந்திய நடிகர்கள் மீது நான் அதிகபட்ச மதிப்பு வைத்திருக்கிறேன். ரஜினிகாந்த் ஒரு தலைசிறந்த கல்வி நிறுவனம் போல. அவரிடத்தில் 'தான்' என்னும் ஆணவம் துளியும் இல்லை. இத்தனை ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்தாலும், அவர் இன்னும் மனிதாபிமானத்துடனும், அடக்கத்துடனும் நடந்துகொள்கிறார். அவர் காலை தொட்டு வணங்க கூட நான் தயார். அதே போல கமல் ஹாசனும், மொதன்லாலும் இருக்கிறார்கள். கே.பாலச்சந்தர், விஸ்வநாத், மற்றும் சிவாஜி கணேசன் போன்ற சிறந்த கலைஞர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிட்டாதது சோகமே.

மற்றபடி பொம்மலாட்டம் படத்தில் என் பாத்திரத்தை ரசித்ததற்கு சென்னை மக்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். உங்கள் மூலம் ரஜினிக்கு ஒரு "Hi" சொல்ல ஆசைப்படுகிறேன்.

ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தான் நானா இவ்வாறு கூறியிருந்தார்.

இங்குள்ள வெந்தது வேகாதது, நண்டு சிண்டு நார்த்தங்காய், விடலை, விரல் சூப்பும் நடிகர்கள் நானா படேகர் சொல்வதை கொஞ்சம் கேட்கவேண்டும். அப்போதாவது தாம் எவ்வளவு பெரிய மனிதர் மற்றும் நடிகர் ரஜினியுடன் வாழ்ந்துவருகிறோம் என்று அவர்களுக்கு உறைக்கிறதா என்று பார்க்கலாம்.

[END]