Friday, December 12, 2008

ஒரு ரசிகரின் சாதனை

ம் நண்பர் ஈ.ரா. தமது கைக்காசை செலவிட்டு, சூப்பர் ஸ்டாரை பற்றி தாம் சுயமாக எழுதிய ஒரு கவிதை தொகுப்பை சென்ற ஆண்டு சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டார். நம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்ற நூல் அது. எழுதியவர் நம்மில் ஒருவர என்பதாலேயோ என்னவோ அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. மிகவும் வருத்ததிற்குரிய விஷயம் அது.

அந்த கவிதை தொகுப்பில் தீர்க்கதரிசனமான பல வரிகள் இடம்பெற்றிருக்கும். படியுங்கள் அசந்து போவீர்கள். (பெரு ம்ழை தானாகக் பொழியும், கலங்காதீர்கள் என்று அவர் கூறியதும் அதன் படியே நடந்ததும் குறிப்பிடத்தக்கது.)

உதராணத்துக்கு சில வரிகள்

--------------------------

கொடுத்துச் சிவந்தனவாம் கரங்கள்!
நீதான் கொடுப்பதே பிறர்க்கு தெரியாதே? -
பின் எப்படி நாங்கள் கண்டு கொள்வது?

--------------------------

உன் இடுப்பு -
இந்த வயதிலும் ஆடுகிறது உன் இடுப்பு!
அதனால்தான் எரிகிறதோ பல ஆயிரம் அடுப்பு?

--------------------------

இன்றைக்கு ஜப்பானே விரும்பும்
ஒரே மேட் இன் இந்தியா - நீ தானே?

--------------------------

கோடிகளிலே புரளும்
கோமான்களுக்கு மத்தியிலே - தெருக்
கோடியில் இருப்போரும் வளம்பெற
கோலோச்சும் நாள் எந்நாள்?

--------------------------

உன்
இதயத்தின்
ஈரப்பதத்தை
எந்தக் கருவியாலும்
அளவிட முடியாது!

--------------------------

நீ புகைத்திருக்கிறாய் - ஆனால்
பிறர் வெற்றி கண்டு
புகைந்ததில்லை!

--------------------------

வந்த வழியை மறக்காமல்
வாழும் வழியை மறைக்காமல்
ஆசை சிறிதும் பிறக்காமல்
ஆட்சிக் கதவைத் திறக்காமல்
அடக்கத்தோடு நிற்கும்
அலெக்ஸ் பாண்டியனின் பிறந்த நாள்!

--------------------------

சூப்ப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈ.ரா.வின் கவிதைத் தொகுப்பை உங்களுக்கு மீண்டும் அளிக்கிறேன்.

http://padikkathavan.blogspot.com/2008/12/blog-post_10.html

(சன் செய்திகள் ஈ.வே.ரா.விற்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரா இவர் என்று சிலர் கேட்பதால் இதை கூறுகிறேன். இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கணிப்பொறி வல்லுனராக பணிபுரிகிறார். குணத்தில் ஒரு சின்ன ரஜினி.)

[END]