Sunday, November 30, 2008

தன்னை வருத்திக்கொள்பவனே சிறந்த தலைவன்; தூண்டிவிடுபவன் தேசத் துரோகி!!

கோவை குண்டுவெடிப்பு பற்றிய சர்ச்சைக்குரிய டி.வி. உரைக்கு ரஜினி அளித்த விளக்கம் என்ன?

பாட்ஷா வெள்ளி விழாவில் (1995) தீவிரவாதிகளை கண்டித்து ரஜினி பேசிய ஆவேச உரையை முந்தைய பதிவு ஒன்றில் நாம் வெளியிட்டது நினைவிருக்கலாம்.

ஏன் அப்படி ஒரு உரை நிகழ்த்தினார் ரஜினி...

அந்த பதிவில் பின்னூட்டமளித்த நம் Guest ஒருவர், பாட்ஷா வெள்ளி விழாவிற்கு பிறகு - அதாவது மூன்றாண்டுகள் கழித்து - Feb 14, 1998 அன்று நடந்த கோவை குண்டுவெடிப்பின் போது ரஜினி நிகழ்த்திய டி.வி. உரையை பற்றி குறிப்பிட்டு, அது பக்குவமற்ற ஒன்று எனவும், அன்றைய தி.மு.க. - த .மா.கா. கூட்டணியின் நிர்ப்பந்தம் காரணமாக பின்விளைவுகளைப் பற்றி கவலையின்றி அவர் ஏன் அப்படி ஒரு உரை நிகழ்த்தினார் என்றும், என்னை அதற்க்கு தகுந்த விளக்கம் அளிக்கும்படியும் கேட்டிருந்தார்.

அவர் கூறியதை போல ரஜினியின் அந்த டி,வி. உரை மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது உண்மைதான். அந்த சர்ச்சைக்குரிய டி.வி. உரை பற்றி மக்களுக்கும் ரசிகர்களுக்கும் தகுந்த விளக்கமளிக்க, அடுத்த சில தினங்களில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி. அதில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளித்தார். அளித்ததோடல்லாமல் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியையும் அறிவித்தார். ஏன் ரஜினி அப்படி பேசினார் என்று பதிலளிக்க நான் முனைந்தபோது, எனக்கு கிடைத்த தகவல் இது. (என்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டு இந்த பதிவை நாள் அளிக்க தூண்டுகோலாய் திகழ்ந்த அந்த நண்பருக்கு என் நன்றி.)

சூப்பர் ஸ்டாரின் இந்த விளக்கத்தை படித்தவுடன் சொந்த லாபத்துக்காக மக்களை பலிகடாவாக்கும் தலைவர்களுக்கு மத்தியில் நம் தலைவர் ஒரு பத்தரை மாற்று தங்கம் என்பது நமக்கு தெளிவாகும்.

அந்த பதட்டமான சூழ்நிலையில் ரஜினியை போல ஒரு சுயநலமற்ற மனிதரிடமிருந்து அப்படி ஒரு பேட்டியைத் தான் எதிர்ப்பார்க்கமுடியும். சிறுபான்மை சமுதாயத்திற்கு ஆதரவாக அவர் அப்படி பேசியது எப்படி பார்த்தாலும் அன்றைய சூழலில் சரியே. அதன் மூலம் ரத்த ஆறு மேலும் பரவாது தடுக்கப்பட்டது. தான் தோற்றாலும் தனது நோக்கத்தில் ரஜினி வெற்றி பெற்றார். அவர் அப்படி கூறியதால் தான் சிறுபான்மை சமூகத்தை விட்டுவிட்டு ரஜினியின் மீது மத வெறியர்கள் தங்கள் கவனத்தை திருப்பினர். பதட்டத்தை தணிக்க அது ஓரளவு உதவியது.

செல்வாக்கா அல்லது பொது அமைதியா?

தனது செல்வாக்கா அல்லது பொது அமைதியா - இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிர்ப்பந்தம் ரஜினிக்கு ஏற்படும்போதெல்லாம் அவர் தனது செல்வாக்கை துச்சமாக மதித்து அமைதியைத்தான் தேர்ந்தெடுப்பார். கோவை குண்டுவெடிப்பு முதல் தற்போதைய "வருத்தம்" சர்ச்சை வரை அமைதியின் பொருட்டு தான் அவர் எந்த முடிவும் எடுக்கிறார். இப்போது படியுங்கள் இந்த கட்டுரைக்கு நான் இட்டிருக்கும் தலைப்பை... சரியான தலைப்பு தான் அல்லவா?

அவரை இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளாதவர்களே (அவரது சில ரசிகர்கள் உட்பட) அவரது ஒவ்வொரு செயலிலும் சுயநலத்தை காண்கின்றனர்.

இந்த மேற்கூறிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரஜினி சில கேள்விகளுக்கு கூறிய பதிலை உன்னிப்பாக பார்க்கவும்.

நான் எதையும் மெதுவாக செய்வேன். ஆனால் சரியாக செய்வேன்!!

"நான் எப்போவும் எதையும் மெதுவாக செய்வேன். ஆனால் கரெக்டாக செய்வேன். நான் ஆன்மீக வாதி. மதவாதி அல்ல. எனக்கு எல்லா மதமும் சம்மதம். நான் எல்லா மதத்திற்கும் பொதுவானவன். எரிகிற தீயில் தண்ணீர் விட்டு அணைக்க வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். அதில் என்னை ஊற்றி தீயை எரிய விட நான் விரும்பவில்லை. கோவை குண்டுவெடிப்பை வைத்து சிலர் கலவரத்தை தூண்டிவிட முயல்வார்கள். அந்த தூண்டுதலுக்கு ரசிகர்களும் மற்ற யாரும் ஆளாகிவிடக்கூடாது என்று கேட்டுகொள்கிறேன்.

இந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவரது குடும்பத்தினர்களுக்கு என் அனுதாபம் நூறு சதவீதம் இருக்கிறது. இந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பண ரீதியாக அதிக பட்சம் எவ்வளவு உதவலாம் என்று தான் நான் யோசிக்கிறேன்."

இவ்வாறு கூறிய ரஜினி சொன்னதைப் போல அடுத்த சில தினங்களில் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் காயமுற்றவர்களுக்கும் எந்தவித பப்ளிசிட்டியும் இல்லாமல் தாராளமாக நிதியுதவி அளித்தார். சத்தியநாராயணா மூலம் கோவையிலேயே நேரடியாக அளிக்கப்பட்ட அந்த உதவி பற்றிய விபரம் பத்திரிக்கைகளுக்கு கூட தெரிவிக்கப்படவில்லை. நிதியுதவி பெற்றவர்களே விஷயத்தை கூறிய பின்பு தான் வெளியுலகிற்கு தெரிந்தது.

குறிப்பு:

இந்த மாதிரி ஒரு சூழலில் ரஜினியின் புகழ் பாடுவது எங்கள் நோக்கம் அல்ல. அதற்கான அவசியமும் எங்களுக்கு இல்லை. நாடு இன்று இருக்கும் இக்கட்டான தருணத்தில் சுயலாபத்திற்காக மற்றவர்களை தூண்டிவிடும் தலைவர்களுக்கு 'ஒரு நல்ல தலைவன் எப்படியிருக்க வேண்டும்?' என்று சுட்டிக்காட்டவே இந்த பதிவு. நாட்டின் தற்போதைய தேவையும் இத்தகு தன்னலமற்ற தலைவன் ஒருவன் தான். அது யாராக இருப்பினும் நாம் வரவேற்க தயார்....!!

[END]

Saturday, November 29, 2008

மும்பை தீவிரவாதத்திற்கு பலியானோருக்கு அஞ்சலி செலுத்துங்கள்!

ழை வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகிப்போன சென்னை மற்றும் தமிழகத்தின் இதர பகுதி மக்கள் முதலில் மும்பை தாக்குதலின் தீவிரத்தை உணரவில்லை. புறநகர் பகுதிகளில் வசித்துவந்த அனைவரும் நீரால் சூழப்பட்டு வெளியுலகுடன் துண்டிக்கப்பட்டுவிட்டனர். பல வீடுகளில் கடந்த சில நாட்களாக மின் சப்ளை இல்லை. இதனால் தொலைக்காட்சியோ செல்போனோ வேலை செய்யவில்லை. அத்தியாவசியத்தேவையான பால், குடிநீர் முதிலயவைகள் கூட இன்றி பலர் சிரமப்படுகின்றனர். பேருந்துகள், ரயில்கள் இயங்கவில்லை. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல இடங்களில் சகஜ நிலை திரும்பவில்லை. நூற்றுக்கும் மேற்பட்டோர் இது வரை மழை வெள்ளத்துக்கு பலியாகிவிட்டனர். அவர்கள் அனைவருக்கும் நம் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்கள் குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

மழை இன்று சற்று ஓய்ந்திருப்பதை அடுத்து, தற்போது தான் தமிழக மக்கள் மும்பை தாக்குதலின் தீவிரத்தை மெல்ல உணரத்துவங்கியுள்ளனர்.

முதலில் இது குறித்து நான் நேற்று பதிவிடலாம் என்று நினைத்த போது என்ன போடுவது யாரை தேற்றுவது என்று எனக்கு எதுவும் புரியவில்லை. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பாட்ஷா வெள்ளி விழாவில் ரஜினி நிகழ்த்திய தீவிரவாதிகளுக்கெதிரான உரையை சேர்த்து நேற்று வெளியிட்டேன்.

இருப்பினும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு ஒரு தனி பதிவு வெளியிட்டால் அஞ்சலி செலுத்த விரும்புபவர்களுக்கு தூண்டுகோலாக அமையுமே என்ற காரணத்தால், நேற்று வெளியிட்ட “Times of India” அஞ்சலி படிவத்தை URL வடிவத்தில் இங்கும் இணைத்துள்ளேன். கீழ் கண்ட முகவரியை க்ளிக் செய்து உயிர்நீத்த ஆத்மாக்களுக்கு உங்கள் அஞ்சலியை பதிவு செய்யுங்கள்.

Pay your tributes to those who killed in Mumbai

http://timesofindia.indiatimes.com/tributes.cms

தீவிரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் தம் இன்னுயிர் நீத்த அப்பாவி மக்களுக்கும், பாரதத்திற்கு விருந்தினர்களாக வந்து எதிர்பாராவிதமாக மடிந்த அயல் நாட்டவருக்கும், தேசத்தை பாதுகாக்கும் பொருட்டு கடமையை செய்யும்போது வீரமரணமடைந்த காவல்துறையினருக்கும், அதிரடிப்படையினருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் எங்கள் இதயம் நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலி.

[END]

Friday, November 28, 2008

"தீவிரவாதிகளை விசாரணையின்றி தூக்கிலிடுங்கள்!!" - பாட்ஷா விழாவில் ரஜினி ஆற்றிய ஆவேச உரை!!

மும்பையில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த நெஞ்சை பதற வைக்கும் அப்பாவி மக்கள் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் கண்டு நாடே உறைந்து போயிருக்கும் இந்த நேரத்தில், பிணையாளிகளை காக்கும் பொருட்டு களத்தில் இறங்கி தம் இன்னுயிர் நீத்த போலீசாருக்கும், தேசிய பாதுகாப்புப்படை கமேண்டோக்களுக்கும் எங்கள் கண்ணீர் அஞ்சலி. நாடு என்றென்றைக்கும் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் சவால் விடப்பட்டுள்ள இந்த தருணத்தில் நாமனைவரும் ஒன்று பட்டு நின்று தீவிரவாதத்திற்கெதிராக ஒருமித்த குரல் கொடுப்போம்.

தீவிரவாதம் பற்றி ரஜினியின் கருத்து என்ன?

சூப்பர் ஸ்டார் அறவே வெறுக்கும் ஒரு விஷயம் தீவிரவாதம். பாட்ஷா பட வெள்ளிவிழாவில் அப்போது தமிழ் நாட்டில் பரவி வந்த வெடிகுண்டு கலாச்சாரத்தை கண்டித்து பேசியாதும், பிறகு அது மிகப் பெரிய அரசியல் சூறாவளியாக மாறி அப்போதைய ஜெயா அரசை தூக்கி எரிந்ததும் அனைவருக்கும் தெரிந்ததே.

கண்டித்து பேசியதோடல்லாமல் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கான வழிமுறைகளையும் அந்த உரையில் அவர் கூறியிருந்தார். தீவிரவாதம் எல்லை மீறி போய்விட்ட இந்த தருணத்தில் அதை நான் நினைவுகூர்கிறேன்.

தீவிரவாதிகளை ஒடுக்க தேவையானது ஒரு இரும்புக்கரம். அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் அவர்கள் மீது துளியும் இரக்கம் கட்டக்கூடாது. விசாரணை, சாட்சி போன்ற சட்ட நடைமுறைகளை பின்பற்றி அவர்களை தப்பவிட்டுவிடக் கூடாது. இதைத்தான் சூப்பர் ஸ்டார் பாட்ஷா வெள்ளி விழாவில் வலியுறுத்தியிருந்தார்.

ரஜினி கூறிய வழிமுறையை பின்பற்றி சிலரை தண்டித்தலே போதும், நிச்சயம் மற்றவர்களுக்கு பயம் வந்துவிடும். தீவிரவாதம் கட்டுப்படும்.

1995 இல் ரஜினியை ஆவேசப்படுத்திய நாட்டின் அப்போதைய சூழல் இன்றைக்கு அதை விட பலமடங்கு பெருகியிருப்பது வருத்ததிற்குரிய விஷயம்.

(சூப்பர் ஸ்டாரின் உரைக்கு அருகிலுள்ள பேப்பர் கட்டிங்கை க்ளிக் செய்து 'ZOOM' செய்து பார்க்கவும்.)

Pay your tributes to those who killed in Mumbai

http://timesofindia.indiatimes.com/tributes.cms

[END]

சூப்பர் ஸ்டாரின் அயராத வெற்றியின் சூட்சுமம் என்ன?

ன்னை நோக்கி வீசப்பட்ட தடைக்கற்கள் அனைத்தையும் படிக்கற்க்களாக்கி, சோதனைகளை கூட சாதனைகளாக்கும், சூப்பர் ஸ்டாரின் வித்தையை கண்டு வியக்கதவர்களே இருக்கமுடியாது. அதுவும் சக நடிகர்கள் மற்றும் யூத் (??!!) ஹீரோக்கள் மத்தியில் ரஜினி ஒரு 'Living Inspiration' என்றால் மிகையாகாது.

ரஜினியை போல் நாமும் வரவேண்டும் என்று எந்த நடிகனும் விரும்பினால், அதில் தவறேதும் இல்லை. அது அவரவர் விருப்பம். அவர்களுக்கிருக்கும் தகுதியை பொறுத்தது அது. ரஜினி ஏன் உண்மையில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று ஆராய்ந்து அவர் கடைப்பிடிக்கும் குணாதீசியங்களை அவர்களும் கடைபிடித்தால் - ரஜினியைபோல் இல்லாவிட்டாலும் - ஓரளவாவது பிரகாசிக்க இயலும். அதை விட்டுவிட்டு நேர்வழியில் போராடாமல் குறுக்கு வழியில் போல அந்த பட்டத்தை அடைய முயற்சிப்பவர்களை பார்த்து நான் பரிதாபம்தான் படுகிறேன். ரஜினி பின்பற்றும் உயரிய பண்பாடுகள் சிறிதும் பின்பற்றாமல் ஆனால் அவரைபோல் வெற்றிகளைக் குவிக்கவேண்டும் என்று பேராசைப்படுவதைத்தான் நாம் எதிர்க்கிறோம்.

"உன்னோட வாழ்கை அது உன் கையில் இருக்கு; அடுத்தவன் கொடுத்தா அது நிக்காதப்பா!!

கஷ்டப்பட்டு உழைச்சி முன்னேறப் பாரு, இஷ்டப்பட்டு எல்லோரும் உன் பின்னால் வருவான்"
- எத்துனை சத்தியம் இந்த வார்த்தைகள்??!!

ரஜினியால் மட்டும் எப்படி இது சாத்தியமாகிறது?

அது சரி ரஜினி மட்டும் ஏன் இப்படி மக்கள் மனங்களில் கோலோச்சுகிறார்?

அவர் சொன்னால் மட்டும் அது மக்களை அவ்வளவு சுலபமாக சென்றடைகிறதே எப்படி? அந்தஸ்து மரியாதை இவையெல்லாம் அவரை தேடி வருகிறதே எப்படி?

மிகப்பெரும் சோதனைகளை கூட அனாயசமாக தாண்டிவிடுகிறாரே அது எப்படி? படத்துக்கு படம் அவரது மார்கெட் மட்டும் இப்படி உயருகிறதே எப்படி?

- இத்தகைய எப்படிகளை அவரைப் போல் வர விரும்பும் ஒவ்வொரு நடிகனும் தங்களுக்குள் கேட்கவேண்டும்.

விடை இது தான்:

அவரை அவரது நடவடிக்கைகளை, அடுத்தவர்களிடம் அவர் நடந்துகொள்ளும் முறையை கூர்ந்து கவனித்தாலே போதும். நடிகை நயன்தாரா கூறியதைப் போல அவர் நமக்கு உபதேசம் செய்வதில்லை. வாழ்ந்து காட்டுகிறார். அதிலிருந்து நாமே நிறைய கற்றுக்கொள்ளலாம்.

அவர் நிறைய படிக்கிறார். நிறைய கேட்கிறார். குறைவாக பேசுகிறார். தினமும் தியானம் செய்கிறார்.

தியானம் - மதங்களை கடந்த மாமருந்து!!

தியானம் என்பது மதங்களை கடந்த மாமருந்து. அதன் சக்தி அபாரமானது. தியானத்தின் பலன்களை அது நம் வாழ்வில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சுட்டிக்காட்ட சூப்பர் ஸ்டார் தவறுவதேயில்லை.

தியானம் செய்தேன் - உங்களை சந்தித்தேன்

2004 ஆம் ஆண்டு மலேசிய நட்சத்திர கலைநிகழ்ச்சியில் அவரிடம் கேள்வி கேட்க்கும் அறிய வாய்ப்பை பெற்ற ரசிகர் ஒருவர் சொன்னார், "தலைவா, நீங்கள் தியானம் செய்றதை பற்றி அடிக்கடி சொல்வீங்க. நான் அதை கேட்டு தியானம் செய்தேன். இதோ உங்களை நேரடியாக சந்திக்கும் அறிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன்" என்றார் பலத்த கைத்தட்டல்களுக்கிடையே.

ரஜினி 25 விழாவில் வரவேற்புரையாற்றிய சூப்பர் ஸ்டார், தனது வெற்றிக்கு முக்கிய காரணமாக தியானத்தை குறிப்பிட்டார். மேலும் தியானம் செய்ய மதம் ஒரு பொருட்டல்ல என்றும் எந்த மதத்தவராயினும் தியானம் செய்து பலன் பெறலாம் என்றும், அதற்குரிய வழிமுறைகளையும் கூறி அசத்தினார். (பெட்டிச் செய்தியில் காண்க).

தொண்டர்களை சுயலாபத்துக்காக தூண்டிவிடும் தலைவர்களுக்கிடையே, அவர்களை "மனதை ஒருமுகப்படுத்துங்கள்; வெற்றிகளை குவிக்கலாம்!!" என்று கூறும் சூப்பர் ஸ்டார் உண்மையில் வித்தியாசமான மனிதர் தான்.

குறிப்பு:

சென்ற பதிவில் நம் onlyrajini.com வலைதளைத்தை பற்றி "ரசிகனின் தீர்ப்பு" என்று பெட்டிச் செய்தியாக சினிமா எக்ஸ்பிரஸ் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதை நான் கூறவில்லை.

நம் நண்பர்கள் கண்டுபிடிக்கிறார்களா பார்க்கலாம் என்று விட்டுவிட்டேன். ஒரு சிலர் அதை கவனிக்கவில்லை என்று தெரிகிறது. அவர்களுக்காக தான் இந்த நினைவூட்டல். கட்டுரையின் மூன்றாம் பக்கத்தில் நம் வலைத்தளைத்தை பற்றிய செய்தி பெட்டிச் செய்தியாக வெளியாக வந்திருக்கிறது.

தற்போது நண்பர் முரளி எனக்கு தியானம் பற்றி அனுப்பிய சேதி ஒன்றை தருகிறேன்.

- சுந்தர்

…………………………………………………………………………………………………………………

சுந்தர் , தியானம் பற்றி தலைவர் சொல்படி நானும் கற்று இபொழுது அதன் பலன்களை அனுபவித்தும் வருகிறேன் இப்பொழுது ஈஷா யோகா மையம் திருவல்லிக்கேணியிலும் , தொடர்ந்து மைலாப்பூரிலும் வகுப்புகள் தொடங்க இருக்கிறார்கள் , அதை ஒட்டிய பதிவை உங்கள் இணையத்தளத்தில் போடமுடியும் என்றால் , அதன் மூலம் நம் ரசிகர்கள் பயன்பெறுவார்கள் எனபது உறுதி , மேலும் நம் தலைவர் வழி நடக்க நாமும் ஒரு அடி எடுத்து வைதூம் என்ற மனநிறைவும் இருக்கும் ,

இதுட்டன் தமிழில் தட்டச்சு செய்யப்பட்ட வகுப்புகள் பற்றிய விவரங்கள் தங்களக்கு அளிக்கிறேன் , அதில் உங்கள் பதிவில் போடவேண்டும் என்றும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

- முரளி

ஈஷா யோகா

வாழ்கையை புதிய கோணங்களில் சிந்திக்கவும் உணரச்செய்யவும் செய்கிறது . நினைவாற்றல் மனம் குவிப்பு திறன் முடிவெடுக்கும் திறன் ஆகியவை சில வாரப் பயிற்சிகளிலேயே 100% வரை அதிகரிக்க முடியும்

நாட்பட்ட நோய்களான ஆஸ்துமா , உயர் ரத்த அழுத்தம் , நீரிழிவு , மூட்டு வலிகள், தலைவலி , சைன்ஸ் , முதுகுவலி , இருதய கோளாறு , உடற்பருமன் மற்றும் தீராத நோய்கள் குணமடையவும் , வராமல் தடுக்கவும் இயலும்

மிகவும் தொன்யமையான ஷாம்பவி மகா முத்ரா பயற்சி வாழ்கை முறையை மாற்றி அமைக்கக்கூடிய அளவில் ஷக்தி வாய்ந்ததாகும் .

இப்பயிற்சியில் கலந்துகொள்ள வாழ்கை முறை மற்றும் பழகவழகங்களில் எந்த மாற்றமும் செய்துக்கொள்ள தேவையில்லை . எந்த மதமானாலும் , எந்த இனமானாலும் , எந்த பிரிவானாலும் இந்த யோகா பயிற்சிகளுக்கு தடை இல்லை .

இப்பயிற்சி அனைவருக்கும் முற்றிலும் பரிசோதித்து அனுபவபூர்வமாக அறியக்கூடிய விஞ்ஞானம் ஆகும் .தினமும் மூன்று மணி நேரம் வீதம் 7 நாட்கள் என விஞ்ஞான முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது

வாருங்கள் உங்களில் மலருங்கள்

அறிமுக உரையுடன் பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 3 ம் தேதி மாலை 6 மணிக்குத்துவங்கும்

(* பயிற்சிக் கட்டணம் ரூபாய் 900/- மட்டும் )

இடம் :

புது ரஹ்மத் மன்ஜில்
25/13 , குப்புமுத்து முதலி தெரு,
திருவல்லிக்கேணி
சென்னை - 600005
(எல்லிஸ் சாலை ஜாம்பஜார் மார்க்கெட் இடையில் )

தொடர்பு கொள்ள :

ரமேஷ் : 9841285177
முரளி : 9840223632

…………………………………………………………………………………………………………………

[END]

Thursday, November 27, 2008

நிலைத்த, நீடித்த, உறுதியான வெற்றிக்கு தயாராகும் ரஜினி!!

மீபத்தில் நடந்த ரசிகர் சந்திப்பு மூலம் மிகப் பெரிய சமூக மாற்றத்திற்கான விதையை அமைதியாக தூவிவிட்டு எதுவுமே தெரியாதது போல 'எந்திரன்' படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சூப்பர் ஸ்டார்.

ரஜினியின் அரசியல் வாழ்க்கை மற்றும் அதற்கான வாய்ப்புகளை ரசிகர் சந்திப்புக்கு முன்பு மற்றும் ரசிகர் சந்திப்புக்கு பின்பு என்று பேசாமல் பிரித்துவிடலாம். அந்தளவு மக்களிடையே ரசிகர்களிடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த சந்திப்பு. அதே போல சூப்பர் ஸ்டாரும் முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்தில் இருக்கிறார். ஈழத்தமிழர்களுக்காக நிகழ்த்திய உண்ணாவிரத உரை மற்றும், இந்த பேட்டிக்கு பிறகு அவரது நிலையே வேறு.

கழுதை அறியுமா கற்பூர வாசம்..?

'கழுதை அறியுமா கற்பூர வாசம்..?' என்பது போல இந்த சந்திப்பின் முக்கியத்துவம் அது நிகழ்த்தபோகும் மாற்றம் குமுதத்தில் ஜோக்கர் பணி செய்து வரும் 'அரசு' போன்ற அதிமேதாவிகளுக்கு புரியாது தான். ஆனால் சராசரி மக்களுக்கு புரிந்துவிட்டது. குழப்பத்தில் தத்தளித்து கொண்டிருந்த ரசிகனுக்கு புரிந்துவிட்டது. 'நாம் காத்திருப்பது எந்த நாளும் வீண் போகாது' என்ற நம்பிக்கை அவனுக்கு பிறந்துவிட்டது.

வெறும் நடிகன் என்ற தகுதியை தவிர ரஜினிக்கு என்ன உண்டு என்று நினைத்துக்கொண்டிருந்த பலர் - (அவரது கடும் விமர்சகர்கள், எதிர்ப்பாளர்கள் உட்பட ) இந்த பேட்டிக்கு பிறகு தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொண்டுள்ளனர் என்பது கண்கூடு. சில வாரங்கள் முன்பு வரை ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி மாற்றுக்கருத்து கொண்டிருந்த பலர் தற்போது பேட்டிக்கு பிறகு மனம் மாறியிருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. (ஆனால் நம் ரசிகர்களில் சிலர் இன்னும் அவரை சந்தேகக்கண்கொண்டு பார்ப்பது தான் கொடுமை!!)

ஆக்கபூர்வமான ஆலோசனைகள் சொன்ன சினிமா எக்ஸ்பிரஸ்

ரஜினியை வைத்து சம்பாதித்துவிட்டு அவரையே குறை கூறிக்கொண்டிருக்கும் பத்திரிக்கைகளுக்கு நடுவே, 'சிருவும் எந்திரனும்' என்ற கட்டுரையின் மூலம் ரஜினி என்ன செய்யவேண்டும் என்ற வித்தியாசமான கோணத்தில் அலசி, ஆக்கபூர்வமான ஆலோசனைகள் சொன்னது சினிமா எக்ஸ்பிரஸ். அவர்கள் கட்டுரை வெளியிட்ட நேரம் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டு குழப்பம் விளைவிக்கும் ரசிகர்களை அதில் எச்சரித்திருந்தார்.

அதற்கடுத்து சமீபத்தில் 'விடாக்கண்டர்களும், கொடாக்கண்டர்களும்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டு ரஜினியின் அசைவுகளுக்கு காரணம் அரசியல் அல்ல அவருக்குள் இருக்கும் ஒரு சராசரி குடிமகனே என்றும் அவரது முடிவுகளில் எள்ளளவும் சுயநலம் இருந்ததில்லை என்றும் ஆணித்தரமாக மீண்டும் ஒரு முறை உணர்த்தியது சினிமா எக்ஸ்பிரஸ். அதையே நாம் ஆபாச விகடனின் "தந்திரன் - ரஜினியின் முடிவுகளுக்கு பின்னால்...." என்ற கட்டுரைக்கு பதிலடியாக தந்திருந்தோம்.

இனிமே தான்டா இருக்கு வான வேடிக்கையே

இதோ ரசிகர் சந்திப்பிற்கு பிறகு - மீண்டுமொருமுறை சூப்பர் ஸ்டாரை பற்றிய சூப்பர் அலசல் கட்டுரை ஒன்றை திகட்ட திகட்ட தந்திருக்கிறது சினிமா எக்ஸ்பிரஸ்.

ரஜினியின் எதிர்கால திட்டங்களை அலசி, இனி தான்டா இருக்கு வான வேடிக்கையே என்று கூறுகிறது இந்த அலசல். மேலு நிலைத்த, நீடித்த, உறுதியான வெற்றிக்கு ரஜினி தன்னை தயார் படுத்தி வருவதாக கூறுகிறது இந்த கட்டுரை.

மேலோட்டமாக படித்தால் புரியாது

இது ஒரு HEAVY WEIGHT கட்டுரை. சும்மா மேலோட்டமாக படித்தால் புரியாது. எந்த வித வெளிப்புற தொந்தரவும் இல்லாமல் (without any external disturbance) அமைதியான ஒரு சூழலில் இந்த கட்டுரையை படிக்கவேண்டும். படித்துவிட்டு அசைபோடவேண்டும். அப்போது தான் இது சொல்லவரும் விஷயங்களை கிரகித்துக்கொள்ள இயலும்.

மற்றுமொருமுறை சூப்பர் ஸ்டாரை பற்றி ஒரு அட்டகாசமான கட்டுரை தந்திருக்கும் Cinema Express க்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

- சுந்தர்

[END]

Wednesday, November 26, 2008

Superstar Rajini’s 1995 Doordarshan interview - Part 4

சூப்பர் ஸ்டாரின் பரபரப்பான தூர்தர்ஷன் 1995 பேட்டியின் நான்காம் பகுதி இது.

நாம் இந்த தூர்தர்ஷன் கேள்வி பதில் தொகுப்பை ஆரம்பித்த நேரம் நிஜமாகவே ஒரு லேட்டஸ்ட் கேள்வி பதில் தொகுப்பை தந்து அசத்திவிட்டார் தலைவர் என்று நம் நண்பர்கள் சிலர் என்னிடம் கூறினார். மகிழ்ச்சியாக இருந்தது.

Part 3 ஐ படிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட லிங்க்கை க்ளிக் செய்யவும்.
http://www.onlyrajini.com/?p=2464

Part 2 ஐ படிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட லிங்க்கை க்ளிக் செய்யவும்.
http://www.onlyrajini.com/?p=2319

…………………………………………………………………………………………………………………

அந்த நடிகரின் நான்காண்டு அரசியல் டிராமாவை ஊதித்தள்ளிய ரஜினி

மேலும், அதில் இப்படி ஒரு பேட்டியை சூப்பர் ஸ்டார் அளித்தாலே போதும் சரிந்த அவரது செல்வாக்கு மீண்டு முன்பை விட பலமாக எழுந்துவிடும் என்று நான் அதில் கூறியிருந்தேன். அப்படியே நடந்தது இறைவன் அருள். சூப்பர் ஸ்டாரின் சமீபத்திய ரசிகர் சந்திப்பு தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டு, லட்சகணக்கான மக்களை அது சென்றடைந்தது. நான்கு வருடமாக கோடிக்கணக்கில் செலவு செய்து, ஆள் பிடித்து, பல ஜாலங்கள், தந்திரங்கள் செய்து, எண்ணற்ற விளம்பர பேனர்கள் வைத்து, கோடிக்கணக்கில் பத்திரிகை விளம்பரங்கள் கொடுத்து, மக்களுக்கு மாநாடு என்ற பெயரால் தொல்லை கொடுத்து, கரணங்கள் அடித்து, தி.மு.க.வை குறை கூறுவதையே அரசியல் தகுதியாக எண்ணிக்கொண்டு ஒரு நடிகர் நடத்தி வந்த அரசியல் நாடகத்தை சூப்பர் ஸ்டார் ஜஸ்ட் லைக் தட் ஒரு சிறு ரசிகர் சந்திப்பு மூலம் ஊதித்தள்ளிவிட்டார் என்றால் மிகையாகாது. (சூப்பர் ஸ்டாரின் பேட்டி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை விரிவாக ரசிகர் சந்திப்பு பற்றிய கவரேஜில் கூறுகிறேன்.)

ஆட்களை பிடித்து வந்து நடத்தப்பட்ட அவரது பிரம்மாண்டமான மாநாடு சாதிக்கமுடியாததை சூப்பர் ஸ்டாரின் இந்த எளிமையான ரசிகர் சந்திப்பு 'கேள்வி-பதில்' சாதித்துவிட்டது.

…………………………………………………………………………………………………………………

தூர்தர்ஷன் 1995 பேட்டியின் நான்காம் பகுதி

ந்த தூர் தர்ஷன் பேட்டியில் நம் rajinifans.com ராம்கி ஒரு கேள்விகேட்டிருப்பார் என்று கூறியிருந்தேன் அல்லவா? இந்த தொகுதியில் இடம் பெற்றிருக்கும் தியானம் செய்வது பற்றிய கேள்விதான் அது. மிக அற்புதமான, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு பதிலை சூப்பர் ஸ்டார் கூறியிருப்பார்.

பேட்டியின் சிறப்பம்சம்

இந்த பேட்டியின் சிறப்பம்சமே பெரும்பாலான பதில்களை சூப்பர் ஸ்டார் சொன்னவுடன் அதற்க்கு பொருத்தமான க்ளிப்பிங்குகளை, பாடல் காட்சிகளை காண்பித்ததுதான்.

உதாரணத்துக்கு, அன்றைய காலகட்டங்களில் சூப்பர் ஸ்டாரை கடுமையாக தொலைக் காட்சிகளிலும், பத்திரிக்கை களிலும் விமர்சித்து வந்த மன்சூர் அலி கானைப் பற்றிய கேள்விக்கு அற்புதமான, யாரும் எதிர்பார்த்திராத பதில் ஒன்றை அளித்தார் சூப்பர் ஸ்டார். பதிலின் முடிவில், பாட்ஷா படத்தில் சூப்பர் ஸ்டாரை கம்பத்தில் கட்டிவைத்து ஆனந்தராஜ் அடிக்கும் காட்சியும், பாட்ஷா பாரு... பாட்ஷா பாரு என்னும் அந்த சோகப் பாடலும் அதன் முடிவில் "உங்களுக்கு கோவமே வராதா..?" என்று அவர் தம்பி கேட்டவுடன் சூப்பர் ஸ்டார் அதற்க்கு ஒரு சிரிப்பு சிரிப்பாரே அந்த முழு காட்சி தொகுப்பும் காண்பிக்கப்பட்டது. அதன் மூலம், பலருக்கு பல விஷயங்கள் உணர்த்தப்பட்டது.

பாம்பு பற்றிய கேள்விக்கு முத்து படத்தில் அந்த சாரட் சேசிங் காட்சியில் பாம்புடன் வரும் காட்சி காண்பிக்கப்பட்டது.

முன்கோபம் பற்றிய கேள்விக்கு அவர் கூறியிருக்கும் பதில், குசேலனில் வரும் "எனக்குள்ள இன்னும் பழைய அசோக் இருக்கான்" என்னும் வசனம் நினைவு படுத்துகிறது அல்லவா? வாவ்...!

நான் அடிக்கடி கூறிவரும் ஒரு விஷயம், கீதையில் கூறப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் பின்பற்றும் ஒரு பாலிசி "நிகழ் காலத்தில் நில்!" என்பது தான்.

இந்த கேள்வி-பதில் தொகுப்பில் அவர் கூறியிருக்கும் மறக்க முடியாத நிகழ்ச்சி பற்றிய ஒரு பதில் அதை ஊர்ஜிதப்படுத்துகிறது. கடந்த காலத்தை பற்றி கவலைப்படாமல், வருங்காலத்தை பற்றி கோட்டை கட்டாமல், நிகழ்காலத்தில் வாழும் ஒருவராலேயே இப்படி பதில் கூற இயலும். மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் மேடையில் அவரிடம் இதே போன்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு அவர் கூறிய பதிலும் நிகழ்காலத்தை ஒட்டியே அமைந்தது. நிகழ்காலத்தில் வாழ்பவர்களால் தான் நிம்மதியாக, அமைதியாக கவலைகளின்றி இருக்க முடியும்.

சூப்பர் ஸ்டாருக்கு அரசியல் தெரியாது?

அரசியல் உங்களுக்கு தெரியாது என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு அவர் கூறிய பதில், பொதுமக்கள் பலரின் பாராட்டை பெற்றது. அவர் அரசியலுக்கு வந்தால் அது எத்தகையாதாக இருக்கும் என்று இந்த பதிலின் மூலமே தெரிந்துகொள்ளலாம். யாருக்காவது அரசியல் குறித்து இப்படி ஒரு தெளிந்த சிந்தனை இருக்கமுடியுமா?

மேலும் அண்ணாமலை படத்திலேயே அரசியல் ஒரு புனிதமான விஷயம், சம்பாதிப்பதற்கு எதற்கு அதை பயன்படுத்துகிறீர்கள் என்று வெடித்திருப்பார் சூப்பர் ஸ்டார். அரசியலை சாக்கடையாக எல்லாரும் பார்க்கும் நேரத்தில், அதை புனிதமாக பார்த்தது நம் தலைவன் ஒருவனே.

- கேள்வி பதில் தொகுப்பு தொடரும்

[END]

Endhiran braves Rain... shooting going on at alternate spots!!

Friends, previously i told you about Endhiran shoot is not at gym but at a beauty parlour on top of that gym. Now today DC has come out with an interesting snipped about a scene shot at that beauty parlour.

Meanwhile rain is lashing out at Chennai for the past two days and people's normal life is affected severely. According to The Hindu, a cozy set erected by art director Sabu Cyrill has been damaged by the rain.

Brave master Shankar, didn't stop the shooting and is now canning other scenes as he doesn't want to waste the dates of country's one and only Superstar.

For the past two days shooting has been held at various spots in the city before anyone could sniff about it. When they hear the news about it and rush to the spot, it would have been wound up already.

Two days before the shoot was held at Joy Alukkaas Jewellery, Prashant Gold Towers located at Northy Usman Road, T.Nagar. The shoot was held completely in the night hours as it won't disturb the public or those who come to the showroom. The crew including Superstar and other co-artistes were spotted at the showroom premises who were busy acting according to Shankar's direction.

Actor Prashanth, whom the complex belongs to came in around 10.30pm. On lookers say that he just came there to greet Superstar who came to the complex for shoot. According to grapevine, shoot was also held at Prasad Studio, which couldn't be verified.

Anyway, Endhiran is going on at brisk pace braving the monsoon.

[END]

"தலைவரிடம் நான் கற்றுக்கொண்டது என்ன...?" - மனம் திறக்கிறார் நயன்தாரா!

லைப்பை பார்த்தவுடன் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்குமே....? பிரபல வார இதழ் ஒன்றில் சூப்பர் ஸ்டாரை இப்படித்தான் கூறியிருந்தார் நயன்தாரா.

என்ன விஷேஷமாக இருந்துவிடப் போகிறது இந்த கட்டுரையில் என்று நான் ஸ்கிப் செய்ய நினைத்து பக்கத்தை புரட்ட எத்தனிக்கையில் "என்ன தான் சொல்லியிருக்கிறார் நயன்தாரா என்று தான் பார்போமே.." என்று படிக்கத் துவங்கிய எனக்கு இன்ப அதிர்ச்சி.

திரையுலகில் தான் படித்த பாடங்களை நயன்தாரா அதில் சுவையாக கூறியிருந்தார். அந்த கட்டுரை முழுதும் அவர் சூப்பர் ஸ்டாரை 'தலைவர்' என்று தான் விளித்திருந்தார். (அவரை பெயர் சொல்லி விளிக்கும் சில ரசிகர்கள் கவனிக்க!!)

"நான் தலைவருன்னு சொல்றது..." - நயன்தாரா

"தலைவரிடம் நான் நிறைய விஷயங்களை கத்துகிட்டேன். ஆனா எனக்கு அவர் எந்த அட்வைஸும் பண்ணல. அவரோட செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளிலிருந்து நானாகவே நிறைய கத்துகிட்டேன். நான் தலைவருன்னு சொல்றது சூப்பர் ஸ்டார் ரஜினி சாரை.

"இப்போல்லாம் நடிகர் நடிகைங்களுக்கு கேரவன் என்பது அத்தியாவசியமாப் போச்சு. அது அவசியம் என்பதைவிட கௌரவ சின்னமாப் போச்சு. முன்னெல்லாம் நான் ஒரு ஷாட் முடிஞ்சதும் ஓடிபோய் கேரவனுக்குள்ள உக்காந்துக்குவேன். அடுத்த ஷாட் ரெடின்னு அசிஸ்டன்ட் வந்து கூப்பிட்டதுக்கபுரம்தான் வெளிய வருவேன். ஆனால் தலைவர் அப்படி செய்யமாட்டார்.

அவர் இந்தளவு உயரத்திற்கு வந்ததற்கான காரணம்...

"அவருடன் நான் நடித்த மூன்று படங்களின் படப்பிடிப்புகளிலும் அவரது எளிமையை பார்த்து நான் வியந்தேன். அது தவிர அவர் இந்தளவு உச்சத்திற்கு வந்ததற்கான காரணம் அவரோட தொழில் பக்தி மற்றும் அர்பணிப்புதான் என்பதையும் நான் புரிஞ்சிக்கிட்டேன்.

"ஷூட்டிங் சமயத்துல அவரோட ஷாட் முடிஞ்சதுன்னா கூட கேரவனுக்கு போகாம அப்படியேதான் உக்காந்திருப்பார். லன்ச்சை கூட யூனிட் ஆட்கள் கூட சேர்ந்து தான் பெரும்பாலும் சாப்பிடுவார். டைரக்டரே வந்து, "உங்க அடுத்த ஷாட்டுக்கு ரொம்ப நேரம் ஆகும்"னா தான் கேரவனுக்கு போவார். டைரக்டர் கட்டுன்னு சொன்ன அடுத்த செகண்ட் கேரவனுக்குள்ள ஓடுற எனக்கு ரஜினி சாரின் செயல் ரொம்ப விசித்திரமாப்பட்டுச்சு.ஒரு வேளை சும்மா எளிமையா இருக்கிற மாதிரி சீன் போடுராரோன்னு கூட எனக்கு தோணிச்சு.

"ஒரு நாள் ஷூடிங்கின்போது சொன்னார், "நடிப்பு நமது தொழில். அது நமக்கு சோறு போடுது. அதை நாம் சின்சியரா செய்யனும். ஒரு ஆபீஸ்ல வேலைக்கு போறவன், பைலை புரட்டி கையெழுத்து போட்டதும் உடனே ரெஸ்ட் ரூமுக்கு போய் ஓடிப் போய் உட்கார்ந்துக்க முடியுமா? மார்னிங் 9 முதல் ஈவ்னிங் 6 வரைக்கும் ஒரு கால்ஷீட். இந்த கால்ஷீட் நேரம் நம்மோட சொந்த நேரம் கிடையாது. பணத்தை வாங்கிகிட்டு அந்த நேரத்தை நாம் படம் எடுக்குறவங்ககிட்ட கொடுத்துட்டோம். அந்த நேரங்கள்ல அவங்க சௌகரியப்படிதான் நாம் நடந்துக்கணும். நம்ம சொந்த வேலைகளை அந்த நேரத்துல கண்டிப்பா பார்க்ககூடாது. நம்மளை யாரு கேப்பாங்கன்னு நினைக்கூடாது. அது தான் என்னோட பாலிசி."

அன்றிலிருந்து தலைவர் பாணியில ஷாட் முடிஞ்சதும் செட்டில் போய் உக்காந்துடுவேன். அவசியம் ஏற்பாட்டாலோழிய கேரவனுக்குள்ள எட்டிகூட பார்க்க மாட்டேன். இந்த விஷயத்துல தலைவர் வழி என் வழி. இப்படி அவர் கிட்ட நான் கத்துகிட்ட விஷயங்களை பத்தி சொல்லிக்கிட்டே போகலாம். அதுக்கு ஒரு நாள் ரெண்டு நாள் போதாது," என்று முடித்தார் நயன்தாரா.

…………………………………………………………………………………………………………………

பெரும்பாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருடன் படம் எடுத்துக்கொள்ளவதை தலைவர் விரும்புவதில்லை. காரணத்தை தான் பார்த்துவிட்டோமே. மேலும் அப்படி தவிர்க்க இயலாமல் எடுக்க நேர்ந்தால், இயக்குனரிடம் அனுமதி பெற்றுவிட்டு தான் எடுத்துக்கொள்வார். இப்படி ஒரு தொழில் பக்தி மிக்க நட்சத்திரத்தை இந்த காலத்தில், சினிமா உலகில் பார்ப்பது அரிது. நிஜ வாழ்கையிலும் பார்ப்பது அரிது.

அவர் வழி நடுத்தும் மக்களுக்கு?

உடன் நடிப்பவர்களுக்கே எப்படி உதாரணமாய் திகழ்கிறார் நம் தலைவர் பார்த்தீர்களா? அப்போ அவர் வழி நடுத்தும் மக்களுக்கு?

இதை தான் அவர் ரசிகர் சந்திப்பில் கூறியிருந்தார், "ஒரு பொறுப்புள்ள நடிகனா, மனைவிக்கு நல்ல கணவனா, குழந்தைகளுக்கு அப்பாவா, இந்த நாட்டுக்கு ஒரு நல்ல குடிமகனா - நான் என் கடமைகளை கரெக்டா செய்துட்டு வர்றேன். நீங்களும் உங்க கடமைகளை சரியா செய்யுங்க."

[END]

Tuesday, November 25, 2008

Revolution, the only way to save our country - Superstar's blazing interview (1993) - Part 1

இந்தியா உருப்பட புரட்சி தான் ஒரே வழி - சூப்பர் ஸ்டாரின் பரபரப்பான (1993) பேட்டி-Part 1

சூப்பர் ஸ்டார் இதுவரை எத்தனையோ பத்திரிகை பேட்டிகள் அளித்திருந்தாலும் அந்த பேட்டிகளில் தனது கொள்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றி அரிதாகத் தான் அவர் மனம் திறப்பார். மற்றபடி பொதுப்படையாக திரையுலக வாழ்க்கை, படங்களின் வெற்றி தோல்வி, அடுத்த படம், தன்னை பாதித்த நிகழ்வுகள் என்று பொதுவாகதான் பத்திரிக்கைகளிடம் பேசுவார்.

ஆனால் அவற்றிலிருந்து மிகவும் வித்தியாசப்படுகிறது 1993ல் அவர் ஆனந்த விகடனுக்காக மதனுக்கு அளித்த இந்த பேட்டி.

பேட்டியை வெளியிடுவதற்கு காரணம் ?

இந்த பேட்டியை நான் தற்போது வெளியிடுவதற்கு காரணம் உள்ளது. ஆபாச விகடன் அண்மையில் தனது இணைப்பில் மேற்படி பேட்டியை அறை குறையாக கைமா செய்து வெளியிட்டிருந்தது. பேட்டியில் தலைவர் கூறிய நிகழ் காலத்திற்கு மிகவும் பொருந்தக் கூடிய பல கருத்துக்களை, வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்துவிட்டது. அறை குறையாக படிப்பவர்களுக்கு, எதுவும் புரியாதல்லாவா? அது தான் அவர்கள் எண்ணம். இதோ நாம் முழுமையாக கொடுத்துவிட்டோம்.

சூப்பர் ஸ்பெஷல் பேட்டி

இந்த முப்பதாண்டு காலங்களில் அவர் அளித்திருக்கும் பல பேட்டிகளில் இந்த பேட்டியை சூப்பர் ஸ்பெஷல் பேட்டி என தாராளமாக கூறலாம். சூப்பர் ஸ்டாருக்குள் இப்படி ஒரு எரிமலையா என்று அனைவரையும் புருவம் உயர்த்தச் செய்த பேட்டி இது. அவரது சமூகக் கோபம் தீப் பிழம்பாய் வெளிப்பட்ட பேட்டி இது.

சூப்பர் ஸ்டாருக்குள் காந்திஜி மட்டுமல்ல ஒரு நேதாஜி கூட உண்டு

சூப்பர் ஸ்டாருக்குள் காந்திஜி மட்டுமல்ல ஒரு நேதாஜி கூட உண்டு என்று நமக்கு உணர்த்தியது இது. இந்த பேட்டியில் உள்ள ஒரு ஆச்சரியம் என்னவென்றால், 15 வருடங்களுக்கு முன்பு (வள்ளி வெளியான காலகட்டம்) அவர் கூறிய கருத்துக்கள் இன்றைய சூழ்நிலைக்கு கூட அப்படியே பொருந்துகிறது என்பது மிகப்பெரிய ஆச்சரியம். சூப்பர் ஸ்டார் உண்மையிலேயே தீர்க்கதரிசிதான்.

நாட்டை செம்மைப் படுத்த எமெர்ஜென்சி தேவை என்று 1993ல் சூப்பர் ஸ்டார் கூறினார். ஆனால் நாடு தற்போதுள்ள சூழலில் எமேர்ஜன்சி தான் சரிப்பட்டுவரும் என்று பெரும்பாலான மக்கள்
கருதுவது உங்களுக்கே தெரியும்.

தவிர வீணாகும் விவசாய நிலம், விஷம் போல ஏறி வரும் விலைவாசி, ஊழல் புரையோடிப்போன அரசியல், மரத்துப் போன மக்கள் என்று எல்லாரையும் பிடித்து வாங்கு வாங்கென்று வாங்கியிருப்பார்.

இரு தொகுதிகளாக வெளிவரும்

இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேட்டியை இரு தொகுதிகளாக வெளியிடுகிறேன். முதல் தொகுதியில் முன்னுரை மற்றும் வள்ளி படத்தை அவர் எடுத்ததற்கான சூழல், காரணம் ஆகியவை இடம் பெரும். அடுத்த தொகுதி தான் பாட்ஷா படத்தின் செகண்ட் ஹாப் போல விறுவிறுப்பாக இருக்கும். வழக்கம் போல சற்று பொறுங்களேன். (ஹி...ஹி...!!)

இப்போதைக்கு முதல் தொகுதியை தருகிறேன். இரண்டொரு நாட்களில் மீதி முழு பேட்டியையும் வெளியிட்டு விடுகிறேன்.

ஏற்கனவே நான் தொடரும் என்று கூறியிருந்தவற்றில் அடுத்தடுத்த பகுதிகளை விரைவில் தந்துவிடுகிறேன்.

[END]

Monday, November 24, 2008

Rain turns villain for Endhiran

Friends, the following news is from today’s The Hindu. Normally Hindu won’t provide such shooting news. But our Boss is exemption. It provided shooting news of Sivaji whenever the opportunity it had. And now it is giving Endhiran shooting news. From today’s news it is learnt that the rain is playing spoilsport for the shooting. But shoot is going on at brisk pace by shooting other scenes.

- Sundar
…………………………………………………………………………………………………………………

‘Enthiran’ shooting on in Chennai

The Hindu Staff Reporter

CHENNAI: It may well take a year or two before actor Rajinikanth’s ‘Enthiran’ is completed, but news on the shoot of this film is already doing the rounds.

The crew is currently in the city, after completing a schedule in Hyderabad.

According sources, Director Shankar had planned to film a few important sequences at a magnificent set erected by art director Sabu Cyril in the premises of a city school during the last two days. With the rain playing spoilsport, the set was damaged and the shooting had to be cancelled.

The shooting will continue for the next few days in South Chennai, it is learnt.

Actor Aishwarya Rai, playing the female lead in the film, is expected to arrive in the city by mid-December.

Recently, the ‘Superstar’ requested his fans to refrain from celebrating his birthday falling on December 12.

However, for fans in the city, the shoot in progress here promises to offer some excitement around that time.

http://www.hindu.com/2008/11/24/stories/2008112457670200.htm

[END]

Sunday, November 23, 2008

உபதேசம் ஊருக்கு மட்டும் அல்ல; சொந்த மகளுக்கும் தான் - உதாரணமாய் திகழும் ரஜினி

"சித்தவனுக்கு மீனை கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்று கொடு; அவன் ஆயுளுக்கும் நீ உணவளித்தவனாகிறாய்!!" - இது தான் சூப்பர் ஸ்டாரின் பாலிசி. காரணம் இது உழைப்பை ஊக்குவிக்கும், வளத்தை கொண்டுவரும்.

மீனை கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்று கொடு

பசித்தவனுக்கு மீன் பிடிக்க கற்று கொடு என்கின்ற இந்த அவரது கொள்கையை தனது மகள் விஷயத்தில் கூட அவர் செயல்படுத்தினார் என்பது தான் உண்மை. இந்த கொள்கைதான் அவரது அரசாங்கத்தின் கொள்கையாகவும் இருக்கும் என்று நம்பலாம். இது குறித்து ஒரு சுவையான சம்பவம் உண்டு. அதை 'கலியுக கர்ணன் சூப்பர் ஸ்டார்' தொடரில் கூறுகிறேன். இப்போது வேறு ஒரு விஷயம்.

சொன்னதை செய்துகாட்டிய ரஜினி

தனது வாரிசுகளின் எதிர்காலத்தை பற்றிய கேள்விக்கு 1995 லேய தூர்தர்ஷன் பேட்டியில் அவர் அளித்த பதில் தெரியுமா? ஏற்கனவே நாம் அளித்த தூர்தர்ஷன் பேட்டி தொகுப்பிலிருந்து இதை தருகிறேன். அருகில் தரப்பட்டுள்ள ஸ்கேன் கட்டிங்கை பார்க்கவும்.

சொன்னது போலவே அவர் தனது மகள் தனது சொந்தக் காலில் நிருக்கும்படி செய்துவிட்டார். (மற்றொருவர் கல்யாணமாகி நல்லபடியாக செட்டில் ஆகிவிட்டார். அவரது வாழ்க்கைத்துணை பிரபல நடிகர் என்பதால் ரஜினியின் மகள் என்கின்ற அடையாளம் என்பது போய் தனுஷின் மனைவி என்று அவருக்கென்று ஒரு அடையாளம் வந்துவிட்டது. ரஜினி விரும்புவதும் இதைத் தான்.)

மகள் என்பதால் ரஜினி எந்தவித விஷேஷ சலுகையும் அளிக்கவில்லை

சௌந்தர்யா ரஜினியின் அடையாளத்திற்கு பின்னர் இருப்பது அவரது கடும் உழைப்பு. தனது மகள் என்பதால் அவருக்கு ரஜினி எந்தவித விஷேஷ சலுகையும் அளிக்கவில்லை. அனிமேஷன் படிப்பு முடித்த பிறகு, சொந்தமாக தொழில் துவங்க வங்கியில் கடன் பெற்று அந்த கடனை சரியாக ஒழுங்காக கட்டவேண்டுமே என்று வாய்ப்புகளுக்கு அலைந்து, தன் சொந்த முயற்சியால் ஆர்டர்ஸ் பிடித்து எந்த வித சிபாரிசும் இல்லாமல் அனிமேஷன் துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். (வங்கியில் கடன் பெற்று தொழில் தொடங்கியதும், அதற்க்கு அவர் தற்போது ட்யூ கட்டி வருவதும் எத்துனை பேருக்கு தெரியும்?)

எழுபேருடன் துவக்கப்பட்ட ஆக்கர்

சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு வெறும் ஏழு பேருடன் துவக்கப்பட்ட அவரது ஆக்கர் ஸ்டூடியோஸ் இன்று பல நாடுகளில் கிளைவிட்டு நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் பணிபுரியும்வன்னம் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறது. விஷுவல் டெக்னாலஜியில் ஒரு பெரும் சந்தை சக்தியாக உருவெடுதிருக்கிறது. தென்னிந்திய விஷூவல் எபெக்ட்ஸ் சந்தையில் இவரது நிறுவனம் 40% கைப்பற்றியிருப்பது சாதாரணமான விஷயம் அல்ல.

எந்தவித சிபாரிசும் இல்லாமல் அவரது சொந்த முயற்சியில் தான் அவரது முதல் வாய்ப்பு சந்திரமுகி படத்துக்காக டைட்டில் டிசைன் செய்வதற்கு கிடைத்தது. அதற்க்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

சௌந்தர்யா தனது திறமையை நிரூபித்தபிறகு தான் சுல்தானுக்கு கூட அவர் வாய்ப்பளித்தார். தந்தையை சமாதானம் செய்வது அவருக்கு அத்தனை எளிதாக இருக்கவில்லை.

இது குறித்து சௌந்தர்யா கூறியதாவது:

சுல்தான் படம் என்னுடைய பல வருட கனவு, உழைப்பின் விளைவு என்றுகூடச் சொல்லலாம். இந்தப் படத்தை இப்படித்தான் எடுக்க வேண்டும் என கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேல் நான் திட்டமிட்டேன்.

இல்லாவிட்டால் அப்பாவை அத்தனை சீக்கிரம் யாராலும் கன்வின்ஸ் பண்ணவே முடியாது. தன் மகள் என்பதற்காகவெல்லாம் எந்த வாய்ப்பையும் தந்துவிடமாட்டார் அவர்.

ஆனால் அப்பா ஒரு முறை முடிவு செய்துவிட்டால், கடவுளே நினைத்தாலும் அதை மாற்றமுடியாது. அதுதான் அவரது இயல்பு. ஆரம்பத்திலேயே இந்தப் படம் குறித்த ஒவ்வொரு காட்சிக்கும் அவருக்கு போதிய விளக்கம் கூறி அவருக்கு திருப்தி வரும் வகையில் கதையை அமைத்தேன்.

(நன்றி: http://envazhi.com)

சௌந்தர்யா ரஜினி சொந்தமாக போராடி பிசினசில் வெற்றிக்கொடி நாட்டியது பற்றி நவம்பர் 26, 2008 தேதியிட்ட இந்தியா டுடே யில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதன் ஒரு பகுதி தான் நீங்கள் அருகில் காண்பது.

இந்தியா டுடேயில் மேற்படி கட்டுரையை படித்தவுடன் சூப்பர் ஸ்டாரின் மீன் பிடிக்க கற்றுகொடு பாலிசிதான் நினைவுக்கு வந்தது. தனது சொந்த மகளின் விஷயத்தில் கூட அவர் அதை அப்ளை செய்தது எனக்கு பெரிய ஆச்சரியம். அதனால் தான் அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடிவு செய்தேன்.

[END]

கோடிட்ட தலைவன்; பூர்த்தி செய்யும் ரசிகர்கள்!!

"ன் பிறந்த நாள் ஈழத்தமிழர்களை பாதுக்காக்க தூண்டுகோலாக அமையுமானால் அதுவே என் மகிழ்ச்சி" என்று கோடிட்டு கட்டினார் ரஜினி. இதோ நம் ரசிகர்கள் களமிறங்கிவிட்டனர்.


சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான வரும் டிசம்பர் 12 அன்று ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்க மதுரை மாநகர் ரசிகர்கள் தீர்மானித்துள்ளனர்.

வெறும் உண்ணாவிரத போராட்டம் என்று மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக உணவு, உடை மற்றும் மருந்து ஆகியவைகளை கூட திரட்டி செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர் ரசிகர்கள். அவர்கள் போராட்டம் மற்றும் முயற்சி வெற்றியடைய நம் வாழ்த்துக்கள்.

மேற்கூறிய உண்ணாவிரதம் மற்றும் நிவாரணப் பொருட்கள் திரட்டுவது பற்றி இன்று காலை மதுரையில் ரஜினி ரசிகர்கள் செய்தியாளர்களுக்கிடையே பரபரப்புகளுக்கிடையே அறிவித்தனர். முக்கிய தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்களின் நிருபர்கள் செய்தி சேகரிக்க வந்திருந்தன. ஜஸ்ட் ரசிகர்கள் அறிவிக்கும் போராட்டம் இது என்பதை நினைவில் கொள்ளவும்.

இதற்கிடையே ரசிகர்களின் ஒவ்வொரு செயலிலும் ஈழத்தமிழர்களுக்கான அக்கறை வெளிப்படுகிறது. சென்னையை சேர்ந்த ரசிகர்கள் சிலர் எழுப்பியிருக்கும் போஸ்டரில் கூட நம் நாட்டின் தற்போதைய சூழல் தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதனுடன் கூடவே ஈழத் தமிழர்களுக்கான நலனையும் வெளிப்படுத்தியிருக்கார்கள். நல்ல வித்தியாசமான சிந்தனை.

இணைக்கப்பட்டுள்ள போஸ்டரை சற்று உற்று பார்க்கவும். பாரதத்தையும் அதன் பின்னணயில் சூப்பர் ஸ்டாரின் உருவத்தையும் காணவும்.

[END]

Saturday, November 22, 2008

ரஜினி மீது ராஜபக்சே குற்றச்சாட்டு, ரஜினி வாழ்க்கை வரலாற்று நூலை கனிமொழி வெளியிடுகிறார்… - Titbits 8

1) ரஜினி வாழ்க்கை வரலாறு (தமிழ் பதிப்பு) - கனிமொழி எம்.பி. வெளியிடுகிறார்

சென்னையை சேர்ந்த டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை வரலாற்றை The Name is Rajinikanth என்ற பெயரில் கடந்த ஏபரல் மாதம் வெளியிட்டார். நல்ல வரவேற்ப்பை பெற்று விற்பனையில் சாதனை படைத்தது அது.

http://onlysuperstar.blogspot.com/2008/03/best-seller-much-elated-creator.html

அநேகம் பேர் கேட்டுகொண்டதையடுத்து வாழ்க்கை வரலாற்றின் தமிழ் பதிப்பை வெளியிட முடிவு செய்து அதற்க்கான் முயற்சியில் காயத்ரி ஸ்ரீகாந்த் கடந்த பல மாதங்களாக ஈடுபட்டு வந்தார். தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டுளது அந்நூல். ஆங்கில பதிப்பில் காணப்பட்ட குறைபாடுகள் இதில் களையப்பட்டுளது. தவறுகளும் திருத்தப்பட்டுள்ளன.

தற்போது புத்தகம் தயாராகி வெளியீட்டிற்கும் தேதி குறிக்கப்பட்டுவிட்டது. வரும் 30 ஆம் தேதி கனிமொழி எம்.பி. அவர்கள் இந்நூலை சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் வெளியிடுகிறார். சவேரா ஹோட்டல் எம்.டி. திருமதி. நீனா ரெட்டி பெற்றுக்கொள்கிறார். கௌரவ விருந்தினர்களாக இயக்குனர் திரு. எஸ்.பி.முத்துராமன் மற்றும் கார்டூனிஸ்ட் மதன் ஆகியோர் கலந்துகொள்வார்கள். வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெறும்.

புத்தகத்திற்கான விலை Rs.250/- க்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த புத்தகமும் விற்பனையில் சாதனை படைக்க வாழ்த்துகிறோம்.

குசேலன் ரிலீஸ் சமயத்தின் போது, ஆதரவற்ற குழந்தைகளுக்காக சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் நடைபெற்ற குசேலன் சிறப்பு காட்சியை கூட கனிமொழி தனது மகனுடன் வந்திருந்து துவக்கி வைத்து சிறப்பு காட்சியை கண்டுகளித்தது குறிப்பிடத்தக்கது.

2) ஒரு தலைப் பட்சமாக பேசுகிறார் ரஜினி - இலங்கை அதிபர் ராஜ பக்சே குற்றச்சாட்டு

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து தமிழ் திரையுலகம் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார், தமிழர்கள் கொல்லபடுவதை கண்டித்ததோடு இலங்கை அரசையும் குறிப்பாக ராஜ பக்சேவையும் ஒரு பிடி பிடித்தார்.

அவரின் உரை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சில தினங்களுக்கு முன்பு கூட விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர், நடேசன் சூப்பர் ஸ்டாரின் இந்த உரையை வெகுவாக பாராட்டினார்.

இந்நிலையில் சிங்கள ஆதரவு பத்திரிகை ஒன்றிற்கு இலங்கை அதிபர் ராஜ பக்சே அளித்த பேட்டியில் இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

"முப்பது ஆண்டகளாக விடுதலைப் புலிகளுடன் போர் புரிந்து கூட அவர்களை இலங்கை அரசால் வீழ்த்த முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறாரே?"

இதற்க்கு பதிலளித்த ராஜபக்சே, "தமிழ் நாட்டில் இருக்கிற பலரைப் போன்று ரஜினிகாந்த் அவர்களும், இலங்கைப் பிரச்னை பற்றிய ஒருதலைப் பட்சமான செய்திகளையே அறிந்துள்ளார். விடுதலைப் புலிகளின் சார்பான பிரச்சாரங்களை வைத்து முடிவெடுக்காமல், இந்த பிரச்னை குறித்து ஆழமாக ஆராய்ந்து அறிந்துகொள்ள முனையுமாறு அவரை கேட்டுகொள்கிறேன்."

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா ராஜபக்சே அவர்களே?

3) ரஜினிக்கும் சத்திக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சி

தளபதி சத்திக்கு உடல்நலக் குறைவு காரணமாக சூப்பர் ஸ்டார் ஒய்வு கொடுத்திருப்பதும் அந்த இடத்திற்கு தனது நெருங்கிய நண்பர் சுதாகர் என்பவரை ரஜினி நியமித்திருப்பதும் தெரிந்ததே. சுதாகர் அவர்களும் தனக்கிருக்கும் மாபெரும் பொறுப்பை உணர்ந்து பம்பரமாக சுழன்று வருகிறார். பொறுப்பான் ஒரு பாலமாக செயல்பட்டும் வருகிறார்.

இதற்கிடையே சத்தியின் ஒய்வு பற்றி எழுதும் நம் பத்திரிக்கைகள், பொய்களையும், புரட்டுகளையும் எழுதி குவித்து வருகின்றன. சத்தியே எதுவும் கூறாத நிலையில் அவர் அப்படி நினைக்கிறார், இப்படி நினைக்கிறார் என்று தங்கள் மனதில் தோன்றும் வக்கிர எண்ணங்களுக்காக சத்தியின் பெயரை வடிகாலாக்க துடிக்கின்றன மேற்படி பத்திரிக்கைகள். அதுமட்டுமாலாமல் ரசிகர்களை தூண்டிவிடும்படி தங்கள் எண்ணங்களை உண்மை என்று கூறி வெளிப்படுத்திவருகின்றன.

உண்மையில் ரஜினியின் எந்த முடிவுக்கும் தாம் கட்டுபடுவதாகவும், தான் தற்போது ஓய்வில் தான் இருப்பதாகவும் சத்தியே கூறிவிட்டார். "மன்றத்திற்கு எதிராகவோ, ரஜினிக்கெதிராகவோ நான் என்றுமே செயல்பட்டதில்லை. அது என் மனசாட்சிக்கு தெரியும். இன்றைக்கும் அவர் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்பவனாகத்தான் நான் இருக்கிறேன். மற்றபடி யார் மீதும் எனக்கு வருத்தம் இல்லை" என்று கூறிவிட்டார் சத்தி.

இருப்பினும் ரத்த வெறி பிடித்த இந்த ஓநாய்கள் பொய்களை மூட்டை கட்டுவதை மட்டும் நிறுத்தவில்லை. இது குறித்து செய்தி வெளியிட்ட ஜூ.வி. மற்றும் பக்கீரன் ஆகியவை கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல் இட்டு கட்டிய செய்திகளை தந்திருக்கின்றன. ரிப்போர்டரும் அப்படியே. (அடிக்கடி முருங்கை மரம் இரு வேதாளம் இது!)

ஆனாலும் இவர்கள் நினைத்தபடி எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தமுடியவில்லை என்பது தான் நிஜம்.

4) சென்னையில் சத்தமின்றி நடந்துவரும் எந்திரன் படப்பிடிப்பு

சென்னையில் எந்திரன் படப்பிடிப்பு, அமைதியாக அதே சமயம் வேகமாகவும் நடந்து வருகிறது. ஷங்கர் ரகிசியமாக ப்ளான் செய்து திடீர் திடீரென்று படப்பிடிப்பை நடத்தி முடித்துவிடுகிறார்.

பாரதிராஜாவின் மகன் மனோஜ் இதில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். சென்னை லோக்கேஷன்களை தேர்வு செய்வது அவர் பொறுப்பில் விடப்பட்டுள்ளது.

தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டி, தண்டையார்பேட்டை பாரத் பெற்றோலியம் கிடங்கு, ஈ.சி.ஆர் மற்றும் அடையாரில் உள்ள ஒரு பியூட்டி பார்லர் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருகின்றன.

இதில் எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. அடையாரில் உள்ள ஜிம்மில் படப்பிடிப்பில் நடந்ததாக கூறப்பட்டது தவறு. அந்த ஜிம்மின் மேலே இயங்கிவந்த அனுஷ்கா பியூட்டி பார்லரில் தான் படப்பிடிப்பு நடந்தது.

இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு குழு குலுமனாலி கிளம்பவுள்ளது. ஐஸ்வர்யா ராய் அதில் கலந்துகொள்வார் என்று தெரிகிறது.

எல்லாம் திட்டமிட்டபடி சரியாக போய்கொண்டிருக்கிறது. ஐஸ்வர்யா ராய் மணிரத்னத்தின் படத்தில் நடிக்க ஒதுக்கிய தேதிகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது குறித்து வரும் புருடாக்களை யாரும் பொருட்படுத்தவேண்டியதில்லை.

[END]

ரஜினி எதிர்ப்பாளர்கள் மீது பால் தாக்கரே பூசிய கரி

தமிழர்களுக்காக போராடுவது போல், மராட்டியர்களுக்காக போராட வாருங்கள் - ரஜினிக்கு தாக்கரே அழைப்பு

தமிழ்நாட்டுக்காக தமிழர் நலனுக்காக போராடியது போதும். மகாராஷ்டிரம் வந்து மராட்டியர்களுக்காக போராட வாருங்கள் என்று சிவா சேனா தலைவர் பால் தாக்கரே சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

சிவா சேனா தலைவர் பால் தாக்கரே பற்றி எனக்கு மாறுப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், இங்குள்ள நம் டமில் நாட்டு அரசியல் தலைவர்கள் கூட ரஜினி விஷயத்தில் கூற தயங்குவதை அவர் கூறிவருவதை கண்டு நமக்கு மகிழ்ச்சி தான்.

ரஜினியின் தமிழ் பற்றை அங்கீகரிக்க மறுக்கும் நம் உள்ளூர் நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் டமில் பற்றாளர்கள் முகத்தில் தாகரே டன் கணக்கில் கரி பூசியுள்ளார்.

அந்த வகையில் அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

(தாக்கரே ரஜினி பற்றி கூறிய செய்திக்கு இணைக்கப்பட்டுள்ள தந்தி கட்டிங்கை காண்க)

Friday, November 21, 2008

ரஜினி முன்பு அனைவரும் சமம். ரசிகர்களை அவர் என்றும் பிரித்து பார்ப்பது கிடையாது” - திரு.சுதாகர் கூறும் வைர வார்த்தைகள்!

“எனக்கு எதுக்குப்பா சால்வை மரியாதை இதெல்லாம். நான் ஒரு சாதரண ஆளு. இங்க நான் எந்த போஸ்டிங்குலயும் இல்ல. எந்திரன் முடிஞ்ச பிறகு ரஜினியே இறங்கி நேரடியா எல்லா விஷயத்தையும் கவனிப்பார். இப்போ ரஜினி சாருக்கும் உங்களுக்கும் இடையில நான் ஒரு போஸ்ட் மேன். அவ்வளவுதான்.”

தன்னை சந்திக்க படையெடுக்கும் ரசிகர்களிடம் திரு.சுதாகர் கூறுவது இதுதான்.

மீடியாவின் பார்வை இப்போ இவர் பக்கம்

ரஜினிக்கும் ரசிகர்களுக்குமிடையே பாலமாக செயல்படும் திரு.சுதாகர் தான் தற்போது மீடியாவின் ஹைலைட். உடல்நலக்குறைவு காரணமாக சத்தி தலைவரின் அறிவுறுத்தலுக்கேற்ப ஓய்வெடுத்துகொண்டிருப்பதால் அந்த இடத்துக்கு திரு.சுதாகர் வந்திருக்கிறார். தன் பொறுப்பை உணர்ந்து தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்குமிடையே ஒரு சிறந்த பாலமாக பணியாற்றியும் வருகிறார்.

தன்னை சந்திக்க வரும் ரசிகர்களிடம் சுதாகர் நடந்துகொள்ளும்விதமே அவரது பக்குவத்திற்கு சாட்சி.

கனிவாக…பொறுமையாக…

முதலில் மண்டபத்துக்கு வரும் ரசிகர்கள் உட்காரவைக்கப்படுகிறார்கள். பின்னர் யார் யார் எங்கிருந்து வருகிறார்கள், அவர்கள் முகவரி மற்றும் தொலைபேசி, செல் நம்பர் ஆகியவை குறித்துகொள்ளப்படுகின்றன. ஏற்கனவே அப்பாயின்ட்மென்ட் வாங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பின்னர் ரசிகர்கள் சுதாகரை சந்திக்கிறார்கள். அவர்களிடம் மிகவும் கனிவாக பொறுமையாக உரையாடுகிறார். சொல்பவற்றை கேட்டுகொள்கிறார். குறித்துகொள்கிறார்.

சுதாகர் ரசிகர்களிடம் கூறுபவற்றை அப்படியே இதோ தருகிறேன்…

ஒரே தலைவர் ரஜினி தான்

நான் உங்களுக்கு தலைவர் கிடையாது. ஒரே தலைவர் ரஜினி தான். அவர் எடுக்குறது தான் இறுதி முடிவு. என்னை பார்க்கவரும்போது பொன்னாடை போர்த்துறது, எனக்கு மாலை போடுறது இதெல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. அதே போல் நிறைய பேர் எனக்கு போன் பண்ணி வாழ்த்து சொல்றாங்க. வாழ்த்து சொல்றதுக்கும் நான் ஒன்னும் ரஜினிகாந்த் கிடையாது. நான் ஒரு போஸ்ட் மேன். ரஜினி என்றால் சூப்பர் ஸ்டார், அவர் அப்படி நினைப்பார், இப்படி இருப்பார் என்றெல்லாம் நினைக்காதீங்க. அவர் ரொம்ப சாதாரன ஆள். அன்னிக்கி ரசிகர் சந்திப்பின்போதே ரஜினி வந்தவுடன் என்னிடம் முதலில் கேட்ட கேள்வி, “பசங்க எல்லாம் வந்துட்டாங்களா? எல்லாருக்கும் சாப்பாடு அரேஞ் பண்ணிட்டீங்களா? நல்ல கவனிச்சீங்களான்னுதான்…?” அவர் ரொம்ப எளிமையானவரு. அவரை ஒரு மனிதனா மட்டும் பார்த்தீங்கன்னா அது போதும். அதைத்தான் அவரும் விரும்புராறு.

வேண்டாமே….

நீங்கள் செய்யும் பணிகளில் தலைவரின் படத்தை மட்டுமே உபயோகிக்கவும். லதா ரஜினி, மற்றும் சத்தி உள்ளிட்ட வேறு யார் படமும் உபயோகிக்கவேண்டியதில்லை. இது தலைவரே அறிவுறுத்துகிற விஷயம்.

ரசிகர்களை எப்போ ரஜினி சந்திப்பார்?


ரசிகர்களை ரஜினி எப்போது சந்திப்பார் என்று கேட்டால், “இப்போதைக்கு ரஜினி எந்திரன் ஷூடிங்கில் பிசியாக இருக்கிறார். ரசிகர்களை சந்திக்க எனக்கு அப்பாயின்ட்மென்ட் எதுவும் ஒதுக்கவில்லை. இப்போதைக்கு தினமும் எனக்கு வரும் கூறு விபரங்களை, தொலைபேசி தகவல்களை அப்படியே அவர்கிட்ட சொல்லிக்கிட்டு வர்றேன். எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணியும் அதுதான்.

செய்யும் காரியங்களை சொல்லவேண்டாம்

அதே சமயம் நான் இதை செஞ்சிருக்கேன், அதை செஞ்சிருக்கேன் அப்படின்னு என்கிட்டே சொல்லாதீங்க. அப்படி சொன்ன நான் உங்களுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் தருவன்னேல்லாம் நினைக்காதீங்க. என்னக்கு எல்லா ரசிகர்களும் ஒண்ணுதான். தவிர நான் உங்களுக்கும் ரஜினிக்கும் இடையே ஒரு பாலம். அவ்வளவுதான். நீங்க என்கிட்டே சொல்ற விஷயத்தை நான் அவர் கிட்டே கனவே பண்ணுவேன்.

எல்லாத்தையும் ரஜினி சார் கவனிப்பாரு…

மன்றங்களுக்கிடையே உள்ள பூசல்கள், மற்றும் குளறுபடிகள் ஆகியவற்றை ரஜினி சாரே இனி நேரடியாக கவனிப்பார். எந்திரன் ஷூடிங்கிர்க்கு பிறகு அனைத்தையும் சீர் செய்து செம்மை படுத்துவார்.

ஒருவரிடம் இருக்கும் மற்றவரிடம் இருக்காது. எனவே….

நாங்க ரஜினிக்காக, மன்றத்துக்காக இதை செஞ்சிருக்கோம், அதை செஞ்சிருக்கோம் என்று சொல்லாதீர்கள். அது இரண்டாம் பட்சம் தான். ஏனெனில், ஒருவரிடம் பணம் இருக்கும் மற்றவரிடம் இருக்காது. கோடீஸ்வரர்கள் முதல் அன்றாடம் கூலிவேலை செய்யும் பாமரன் வரை அவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். இதில் பணம் இருப்பவர்கள் நினைக்கும் நற்பணிகளை செய்யமுடியும். ஆனால் அப்படி செய்ய வசதியற்றவர்கள்? பணமில்லாவிட்டாலும், ரஜினி சாரை உயிரினும் மேலாக நேசிப்பவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். அவர்காளால் எதுவும் செய்யமுடியாதல்லாவா? மேலும் தீவிர ரசிகர்கள் பலர் மன்றங்களில் உறுப்பினர்களாக இல்லை. ஆனால் அவர்களும் ரசிகர்கள் தானே. ரஜினியை பொறுத்தவரை அவர் முன் எல்லா ரசிகர்களும் சமம். உயர்ந்தவன், தாழ்ந்தவன், செய்தவன், செய்யாதவன் என்று அவர் யாரையும் பிரித்து பார்ப்பது கிடையாது.

நல்லதே நடக்கும்

நீங்கள் மனம் குளிரும்படி எல்லாம் நடக்கும். நல்லதே நடக்கும். நீங்கள் உங்கள் பணியை, கடமையை சரியாக குறைவின்றி செய்து வாருங்கள். சார் சொன்னது போல உங்கள் குடும்பத்தை நன்கு கவனியுங்கள். அது தான் அவர் உங்களிடம் எதிர்ப்பார்ப்பது.

அரசியல் வசனங்கள் கூடாது…

மன்றப்பணிகளை பொறுத்தவரையில் யாருக்கும் அஞ்சாமல், உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்து வாருங்கள். சர்ச்சைக்குரிய வார்த்தைகள், அரசியல் வசனங்கள் ஆகியவற்றை உபயோகப்படுத்தாதீர்கள். உண்மையான அன்பை மட்டுமே வெளிப்படுத்துங்கள். ரஜினி சாரைப் போல இறைவனை நம்புங்கள். ஆண்டவனை வேண்டிக்கொள்ளுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அவர் அமைதியா சந்தோஷமா இருக்கணும்…

தேவையின்றி அவரை எதிலாவது வற்புறுத்தவது, போர்ஸ் பண்ணுறது இதெல்லாம் வேண்டாம். அவருக்கும் நிறைய ஸ்ட்ரெஸ் உண்டு. அவர் ஏதாவது வார்த்தையை விட்டால் அது எவ்வளவு பெரிய இஷ்யூ ஆவுதுன்னு உங்களுக்கே தெரியும். ஸோ அவர் அமைதியா சந்தோஷமா இருக்கணும். இப்போ நான் வந்தவுடனே பாருங்க என்னல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கும் சத்திக்கும் மனஸ்தாபம் அது இதுன்னு… இதெல்லாம் தேவையற்ற வார்த்தைகள். உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சத்தி சாருக்கு ஒரு ஆறு மாத காலம் ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரை எதற்கு வீண் தொந்தரவு செய்வானேன்? அதனால் தான் அவர் படத்தை போடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்றபடி விஷேஷ காரணம் எதுவுமில்லை.

மனம் நிறைந்த ரசிகன்

பேசிமுடித்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் மனம் நெகிழ்ந்து, நிறைந்து காணப்படுகிறார்கள். தங்கள் தலைவனுடன் இனி எப்போது வேண்டுமானால் நாம் பேசலாம். இதோ ஒரு தூதுவர் கிடைத்துவிட்டார். எங்களுக்கு கவலையில்லை என்று அவர்கள் முகம் சொல்கிறது.

தலைவர் ஒரு சரியான நபரைத்தான் பாலமாக அமைத்திருக்கிறார். நன்றி தலைவா…!!