Saturday, December 27, 2008

ஆராய்ச்சி கூடத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் உற்சாகம் - Endhiran Shooting update

வேலூர், காட்பாடியில் உள்ள VIT பல்கலைக்கழகத்தில் எந்திரன் படப்பிடிப்பு ஜரூராக நடைபெற்றுவருகிறது. படப்பிடிப்பு பற்றி வேலூரில் கட்டுதீயாக செய்தி பரவி, இப்போது வேலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள நம் மன்ற தோழர்களும் ரசிகர்களும் சூப்பர் ஸ்டாரை நேரில் பார்த்த்விடவேண்டும் என்ற ஆவலில் தினசரி VIT உக்கு படையெடுத்து வருகின்றனர்.

படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படும் என்பதால் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து ஒரு ஆங்கில நாளிதழ் மிகவும் அங்கலாய்க்கிறது. என்ன அக்கறை ரசிகர்கள் மேல? எங்க தலைவருக்கு எங்க மேலே இல்லாத அக்கறையா? (குசேலனில் சூப்பர் ஸ்டார் இது குறித்து கூறியது நினைவில் இருக்கிறதா? "சினிமா பார்க்குற மாதிரி ஷூட்டிங் பாக்குறது அவ்ளோ இன்ட்ரெஸ்டிங்கா இருக்காது. தவிர, ஷூட்டிங் பார்க்க ரசிகர்களை அலோ பண்ணினா ஷூட்டிங் டிஸ்டர்ப் ஆகும். உங்க இடத்துல ஷூட்டிங் நடந்தப்போ அதை நீங்களே பார்க்கமுடியல. அதுக்காக படப்பிடிப்பு குழு சார்பா நான் உங்ககிட்டே மன்னிப்பு கேட்டுக்கிறேன்.")

சென்னையிலிருந்து தினசரி காரில் வேலூர் வரும் ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்பு முடிந்ததும் அன்றே சென்னை திரும்பி விடுகிறாராம். ஆனால் சூப்பர் ஸ்டார் அங்கு தான் தங்கியுள்ளாராம்.

வேலூர் அருகே இருக்கும் புகழ் பெற்ற ஸ்ரீபுரம் நாராயணி அம்மன் பொற்கோவிலுக்கு சூப்பர் ஸ்டார் விஜயம் செய்யலாம் என்று கூறப்படுகிறது. அப்போது அவரை பார்த்துக்கொள்ளலாம் என்று ரசிகர்கள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்க்கு முன் வேறு சில படங்களின் படப்பிடிப்பு VIT யில் நடைபெற்றிருந்தாலும் எந்திரன் படப்பிடிப்புக்கு பிறகு அது மிகவும் பிரசித்தி பெற்றுவிடும் என்று கூறப்படுகிறது.

மேலும், படப்பிடிப்புக்கான லொக்கேஷனை ஷங்கர் கடந்த நவம்பர் மாதமே ஷங்கர் வேலூர் வந்து இறுதி செய்துவிட்டதாக நம் ரசிகர் ஒருவர் அவர் நடத்தும் வலைத்தளத்தில் (amarnath-r.blogspot.காம்) குறிப்பிட்டிருக்கிறார். இதை அவர் நவம்பர் மாதம் 16 ஆம் தேதியன்றே கூறியிருக்கிறார் என்பதை கவனிக்கவேண்டும். பலே..

தவிர VIT யில் எடுக்கப்பட்ட காட்சிகள் குறித்த விவரமும் நமக்கு கிடைத்திருக்கிறது. அதாவது விஞ்ஞானியாக வரும் சூப்பர் ஸ்டார் தனது ஆய்வு கூடத்தில் புதிதாக ஒன்றை கண்டுபிடிக்க, அவரும் உதவியாளராக வரும் ஐஸ்வர்யா ராயும் உற்சாகத்தில் மிதப்பது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டன. (வேறென்ன இந்திரனை உருவாக்கியிருப்பார் அல்லது அவனது அட்டகாசத்தை அடக்க வேறொரு வழிமுறையை கண்டுபிடித்திருப்பார்!) ஆராய்ச்சியின் முடிவில் "சக்சஸ்...சக்சஸ்" என்று அவர் உற்சாகத்தில் கத்துவது படம்பிடிக்கப்பட்டது.

(Source: Indian Express, amarnath-r.blogspot.com, shankarendhiran.blogspot.com)

[END]