Wednesday, December 31, 2008

Rajini’s Enthiran headed for Hollywood

Rajini’s Enthiran headed for Hollywood

Mid-day, Bangalore

Sun Pictures is all set to make director Shankar’s dream of making it to Hollywood come true. It’s on the verge of a tie-up with HBO which will see Enthiran being released in the West simultaneously.

Enthiran’s budget has now almost reached a record of sorts — Rs 200-crore, sources say.

Enthiran will be subtitled in English and released in Hollywood simultaneously, making it the biggest opening for the film industry. Rajinikanth’s Shivaji had raked in good money overseas and has made things easier for Shankar.

The crew is about to finish the shoot at VIT University College in Vellore. The next stop is Top Slip and Valparai and the crew will then move to Kulu Manali next year.


Tuesday, December 30, 2008

"சூப்ப்பர்ர்ர் ஸ்டார் வாழ்க" - ரசிகர்களால் அதிர்ந்த வி.ஐ.டி. வளாகம்!!

வேலூரில் எந்திரன் படப்பிடிப்பு, சூப்பர் ஸ்டார் கலந்துகொண்டு நடித்து வருகிறார் என்று தெரிந்தது தான் தாமதம், சாரை சாரையாக நம் ரசிகர்கள் நாள்தொறும் வி.ஐ.டி. க்கு படையெடுத்து வருகின்றனர். உள்ளே அனுமதிக்கப் படாவிட்டாலும் வெளியே இருந்து படப்பிடிப்பு நடக்கும் அந்த இடத்தை பெருமையுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

பொதுவாக விடுமுறை காலத்தை விரும்பும் மாணவர்கள், "அடடா இப்போது பார்த்து விடுமுறை சீசனாக போய் விட்டதே" என்று வருத்தப்படுகின்றனர்.

இருப்பினும் உள்ளே செல்ல நம் ரசிகர்களுக்கு தெரியாத டெக்னிக்கா? தங்கள் யூனிவெர்சிட்டி ஐ.டி. கார்டை காண்பித்து, 'பயோ-டெக் ப்ராஜெக்ட்' என்று கூறி நம் ரசிக மாணவர்கள் சிலர் உள்ளே புகுந்துவிட்டனர். சிறிது தூரத்திலிருந்து சூப்பர் ஸ்டாரை தரிசித்தவர்கள், தங்கள் அனுபவங்களை அனைவருக்கும் சொல்லி சொல்லி புளங்காகிதமடைகின்றனர்.

கருப்பு டி.ஷர்ட், கருப்பு ஜீன்ஸ், கருப்பு கூலிங் க்ளாஸ்

அன்று அவர்கள் பார்த்தபோது தலைவர் இருந்த தோற்றம்: கருப்பு டி.ஷர்ட், கருப்பு ஜீன்ஸ், கருப்பு கூலிங் க்ளாஸ் (வாவ்!!) - மீசையின்றி!! பார்ப்பதற்கு 'தில்லுமுல்லு' அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன் போல அவர் இருந்ததாக கூறப்படுகிறது. புகைப்படம் எடுக்க கடும் கட்டுபாடுகள் இருந்தபடியால் படம் எதுவும் எடுக்க இயலைவில்லை. (தகவல் உதவி: ரோபோ சத்யா)

படப்பிடிப்பில் ரசிகர்களின் கட்டுங்கடங்காத கூட்டத்தை பற்றியும் நேற்று எடுக்கப்பட்ட காட்சிகள் குறித்தும் இன்றைய தினத் தந்தி வேலூர் பதிப்பில் வந்த செய்தி இணைக்கப்பட்டுள்ளது. எவ்வித பாரபட்சமும் இன்றி எந்திரன் செய்தியை தவறாது எங்களுக்கு அளித்து வரும் தந்தி குழுமத்திற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.

//ரஜினிகாந்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வி.ஐ.டி. பல்கலைகழகத்தின் வெளியே குவிந்திருந்தனர். ஏராளமான ரசிகர்கள் வெளியே நின்றிருக்கும் தகவலை கேட்ட ரஜினிகாந்த் வெளியே வந்து ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையை அசைத்தார். ரஜினிகாந்தை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து சூப்பர் ஸ்டார் வாழ்க என கோஷமிட்டனர்.

ரசிகர்கள் குவிந்ததால் காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பட்டாபி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். நேற்றும் பட யூனிட் குழுவினரை தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.//

முழு செய்திக்கு இணைக்கப்பட்டுள்ள பேப்பர் கட்டிங்கை பார்க்கவும்.

[END]

தலைவரின் நிகழ்ச்சிகளுக்கு என்றுமே மவுசு தான்...

ரண்டு நாட்களுக்கு முன்பு, சன் மியூசிக் தொலைக்காட்சியில் இப்போதெல்லாம் அவர்கள் ஷூட் செய்த பழைய திரைப்பட விழாக்களை, கலைநிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பு செய்துவருகின்றனர்.

அந்த வகையில் பொதுவான அனைத்து நட்சத்திரங்களும் பங்கேற்ற கலை விழாக்களை அடுத்து அவர்கள் அதிகம் ஒளிப்பரப்புவது நம் சூப்பர் ஸ்டாரின் பட விழாக்களைதான். எனக்கு தெரிந்து வேறு எந்த நடிகரின் பட வெற்றி விழாக்களையும் அவர்கள் ஒளிபரப்பியதாக தெரியவில்லை. (எந்திரன் தயாரிப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடந்த மாதமும் அதற்க்கு முந்தைய மாதமும் கூட அவர்கள் இதே போல நம் விழாவொன்றை ஒளிபரப்பினார்கள்). மேற்க்கண்ட சூப்பர் ஸ்டாரின் நிகழ்ச்சிகளின் பொது சன் மியூசிக்கின் TRP ரேட்டிங் நிச்சயம் கூடியிருக்கும்.

பிடுங்கு ரிமோட்டை...

இரண்டு நாட்களுக்கு முன்பு, சன் மியூசிக்கில் சந்திரமுகி படத்தின் 200 வது நாள் விழா ஒளிபரப்பப்பட்டது. நான் அப்போது வெளியே இருந்தேன். நம் நண்பர்கள் நிறைய பேர் எனக்கு இது குறித்து SMS அனுப்பினர். ஏற்கனவே பார்த்தது தானே என்று நான் உடனே வீட்டிற்கு செல்ல ஆர்வம் கட்டவில்லை. பணியெல்லாம் முடித்த பின்பு இரவு நான் வீட்டிற்கு திரும்பிய பின், டி.வி முன் உட்கார்ந்தேன். ஊரில் இருந்து வந்திருந்த எனது கஸின் ஒருவர் வேறு ஏதோ நிகழ்ச்சியை பார்த்துகொண்டிருந்தார். அவரிடமிருந்து அவசர அவசரமாக ரிமோட்டை பிடுங்கி சன் மியூசிக்கை ட்யூன் செய்தேன்.

பாதி முடிந்துவிட்டிருந்தது

நல்லவேளை நிகழ்ச்சி போய்க்கொண்டிருந்தது. சூப்பர் ஸ்டார் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அவரது உரை பாதி முடிந்துவிட்டிருந்தது. அதனால் என்ன, தேனில் ஊறிய பலாச்சுளை பாதிகிடைத்தால் என்ன சாப்பிடமாட்டோமா என்று அதை ரசிக்க ஆரம்பித்தேன்
.
நிகழ்ச்சியை எனது கஸினும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார். "என்னங்க நீங்க எனக்கு போன் பண்ணி சொல்லியிருக்ககூடாதா? நான் இதை பார்த்துக்கிட்டுருந்திருப்பேனே..." என்று என்னை கோபித்துக்கொண்டார்.

வீட்டுக்குள் இப்படி கை தட்டி விசில் அடிப்பவர்களை...

உரையை ரசித்துகொண்டிருக்கையில் ஒரு கட்டத்தில் நான் பலமாக கையை தட்டி விசில் அடிக்க என்னை வித்தியாசமாக பார்த்தார். வீட்டுக்குள் இப்படி கை தட்டி விசில் அடிப்பவர்களை இப்போது தான் பார்க்கிறார் போல...

அடாடா. ... என்ன ஒரு உரை அது.... ச்சே.. முழு உரையை மிஸ் பண்ணிட்டோமே என்று ரொம்ப ஃபீல் செய்தேன்.... (எனக்கு நிகழ்ச்சி முடிந்த பின்னர், போன் செய்த நண்பர்களும் இதையே தான் கூறினார். "என்ன சுந்தர் இது இப்படி பிச்சு உதர்ராறு தலைவர். இப்போ பார்த்தா கூட ப்ரோக்ரேமும் சார் ஸ்பீச்சும் ப்ரெஷ்ஷா இருக்கு. ச்சே... லேட்ட வந்ததுனால முழு ப்ரோக்ரேமும் பார்க்கமுடியல..." என்று அங்கலாய்த்தனர் .)

அனைத்து சூழ்நிலைகளுக்கும்...

சூப்பர் ஸ்டாரின் அந்த உரை ஏதோ நேற்று பேசியது போல உள்ளது.

"சோதனை வந்தாதான்யா சாதனை வரும்..."

"நல்லவங்க நிச்சயம் வாழ்வாங்க. என்ன... கொஞ்ச லெட் ஆகும் அவ்வளவுதான்"

"உங்களுக்கு நல்ல படத்தை கொடுக்கணும்னு தான் நான் ரொம்ப டயம் ஒவ்வொரு படத்துக்கும் எடுத்துக்குறேன்"

இப்படி அவர் கூறியது சமீபத்திய சோதனைகள், சர்ச்சைகள் மற்றும் இப்போது அவர் நடித்து வரும் எந்திரன் என அனைத்து சூழ்நிலைகளுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் பேசிய பேச்சு அப்படியே பொருந்தியது பெரிய ஆச்சரியம் தான்.... முரண்பாடு என்பது துளியும் அவரது பேச்சில் இல்லை.

சில நடிகர்கள் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அளித்த ஒரு சிறிய பத்திரிகை பேட்டியை கூட நம்மால் படிக்க முடியவில்லை. அந்தளவு முரண்பாடு, தம்பட்டம், புளுகு.... ஆனால் தங்க தலைவர்? 'கொடி பறக்குது' படத்தில் ஒரு வசனம் வரும். "இன்னிக்கி ஒரு பேச்சு... நாளைக்கு ஒரு பேச்சு இல்லே சார் நம்மகிட்டே. மூச்சிருக்கும் வரை ஒரே பேச்ச்சு... ஆமாமாம்!!" எவ்வளவு உண்மை..!!

[END]

சூப்பர் ஸ்டாரை போட்டி போட்டு படம் பிடித்த 50 க்கும் மேற்பட்ட போட்டோக்ராபர்கள் - Endhiran Update

*TRANSLATION (SUMMARY) AVAILABLE AT THE END OF THE ARTICLE

ந்திரன் ஷூட்டிங் வேலூர் வி.ஐ.டி. பலகலைக்கழகத்தில் ஜரூராக நடைபெற்று வருகிறது.

எடுக்கப்படும் காட்சிகள் குறித்த விபரங்கள அவ்வப்போது பத்திரிக்கைகள் மூலம் கிடைத்துவருகிறது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி குறித்து, இன்றைய தினத் தந்தி வேலூர் பதிப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. விஞ்ஞானியாக வரும் சூப்பர் ஸ்டார் எந்திரனை கண்டு பிடித்ததற்காக மீடியாவின் கேமிராமேங்களும் போட்டோக்ராபர்களும் அவரை Flash மழையில் படம் எடுத்து தள்ளுவதாக காட்சி எடுக்கப்பட்டது.

விரிவான செய்திகளுக்கு இணைக்கப்பட்டுள்ள தந்தி கட்டிங்கை காண்க.

நீங்கள் கீழே காணும் செய்தி இன்றைய Indian Express நாளிதழில் வந்தது. ஆனா ஆள் அம்பு சேனை அனைத்தும் இருக்கும் நம்ம சிஃபி கும்பல் இந்த செய்தியை அப்படியே எடுத்து சுட்டு அவர்கள் வெப்சைட்டில் போட்டுவிட்டது.

கடைசியில் நான் ஆங்கிலத்தில் கொடுத்துள்ள Disclaimer ஐ படிக்க தவறாதீர்கள்.

…………………………………………………………………………………………………………………

ஐஸ்வர்யா ராய் - ரஜினி உயர் ரக காரில் ரொமான்ஸ்?

வேலூர் வி.ஐ.டி.யில் படு வேகமாக நடைபெற்று வருகிறது எந்திரன் படப்பிடிப்பு. இன்னும் சில நாட்களில் இந்த ஷெட்யூல் முடிவுற்று, அடுத்து குலு மணாலிக்கு செல்லவிருக்கிறது. அங்கு சில காட்சிகளும் ஒரு டூயட்டும் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

ரஜினி - ஐஸ்வர்யா ராய் இருவரும் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய காட்சி ஒரு காஸ்ட்லி காரில் படமாக்கப்படலாம் என்று தெரிகிறது. இதற்க்க்காகவே அந்த கார் ரூபாய் 90 லட்சம் செலவழிக்கப்பட்டு வாங்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.

விஞ்ஞானியாகவும் ரோபோவாகவும் சூப்பர் ஸ்டார் இரட்டை வேடத்தில் நடிப்பதால் மிகவும் பிசியான ஒரு ஷெட்யூலில் ரஜினி நடித்து வருகிறார். அதே போல ஐஸ்வர்யா ராயுடன் ரொமான்ஸ் மற்றும் பாடல் காட்சிகளில் நடிக்கவேண்டியிருப்பதால் தனது உடலை பிட்டாகவும் ஸ்லிம்மாகவும் வைத்துக்கொள்ள கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

**கவனிக்க கார் விலையை எக்ஸ்பிரஸ் உறுதியாக கூறவில்லை. சும்மா பரபரப்புக்காக ஒரு பெரிய தொகையை போட்டிருக்கிறார்கள்.

…………………………………………………………………………………………………………………

Sify's news:

Rajini to romance in a car?

SHOOTING for Rajinikanth’s Endhiran, The Robot, is progressing at a brisk place and it is said that the crew is likely to move to Kulu Manali next for shooting a few scenes and a song for the film.

It is believed that an important scene feautring the two will be shot in a brand new high-end Benz car, purchased at Rs 90 lakh for this.

Meanwhile, the Superstar is also said to be working out with a rigourous schedule, to fit the role of a scientist and a robot (the actor plays two roles in the movie), and to also look slim andfit for his songs with Ash.

*The views expressed in the article are the Indian Express team's and not of Sify.com. We purely lift from other sources since we don't have our own.

…………………………………………………………………………………………………………………

English Translation:

Superstar soaked in camera flashes

Endiran shooting is progressing at a brisk pace in V.I.T. now. The details about the scenes which are being shot are appearing in local newspapers frequently.

In Dinathanthi’s Vellore edition they have published an article regarding a scene shot in V.I.T.

Rajini who invented a new ROBOT, has been interviewed by media persons and morethan 50 Photographers surrounding Rajini to catch glimpse of “The great Scientist”, So lightning of flashes continued for a while.

Also Indian Express - today’s edition has published an article regarding Endiran Shooting. But Sify people did a great job by just Cut & Copy (stolen) the same to their website.

Please read the Disclaimer above without fail.

- Translation by Hari Sivaji.

{END]

Sunday, December 28, 2008

சூப்பர் ஸ்டாருக்கு லிப்ட் கொடுத்த அந்த போக்குவரத்து காவலர் என்ன கூறுகிறார்?

சென்ற வாரம் எண்ணூர் படப்பிடிப்புக்கு சூப்பர் ஸ்டார் சென்று கொண்டிருந்த போது போக்குவரத்து நெரிசலில் சிக்கிகொண்டதும் பின்னர் அந்த வழியாக சென்ற போக்குவரத் காவலரின் உதவியோடு அவர் செட்டுக்கு நேரத்துக்கு சென்றதும் தெரிந்ததே.

பார் போற்றும் சூப்பர் ஸ்டாரை பைக்கில் அழைத்து சென்ற அந்த காவலர் இது குறித்து என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆவலாயிருப்பதாக நம் நண்பர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதோ அந்த அதிர்ஷ்டசாலி காவலரின் அனுபவம்.

இன்றைய தினமணியில் வெளியாகியுள்ளது இது. இந்த கட்டுரைக்கு தினமணி கொடுத்திருக்கும் முடிவுரையை பாருங்கள்....

தினமணி கூறுகிறது:

நேற்று வந்த 'அக்கடா துக்கடா' நடிகர், நடிகைகள் கூட இந்த காரில் தான் வருவேன், ஃப்ளைட்டில் பிஸ்னஸ் க்ளாசில்தான் பயணம் செய்வேன்; கேரவன் இருந்தால் தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு உள்ளேயே வருவேன் என்றெல்லாம் அடம்பிடித்து தயாரிப்பாளர்களை வாட்டி எடுத்து வரும் இந்த காலகட்டத்தில், தன்னால் படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது எனபதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு குறித்த நேரத்தில் செல்ல ஒருவருடைய பைக்கில் செல்லக்கொடிய ரஜினியின் இந்த மனோபாவம் போற்றுதலுக்குரியது.

…………………………………………………………………………………………………………………
இதே சூழ்நிலையில் வேறு நடிகர்கள் இருந்திருந்தால்?

கீழ் கண்ட லிங்க்கை க்ளிக் செய்து அது குறித்த நமது பதிவை படியுங்கள்:

http://www.onlyrajini.com/?p=3490
…………………………………………………………………………………………………………………

[END]

Titbits 10: எந்திரனை வரவேற்ற மீஞ்சூர் ரசிகர்கள், எல்லோரையும் வசியம் செய்யும் ரஜினி! Etc,etc.,

1) சூப்பர் ஸ்டாரை வரவேற்ற மீஞ்சூர் ரசிகர்கள்

சென்ற வாரம் எண்ணூரில் எந்திரன் படப்பிடிப்பு நான்கு நாட்கள் நடைபெற்றது நினைவிருக்கலாம். படப்பிடிப்பில் தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு சூப்பர் ஸ்டார் பைக்கில் சென்ற விஷயத்தை கேள்விப்பட்டோம்.

முதல் நாள் அவர் அங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஷயத்தை கேள்விப்பட்ட அந்த பகுதி ரசிகர்கள் வல்லூர் கேம்ப் நுழைவாயிலில் அவரை வரவேற்று அட்டகாசமான பேனர் ஒன்றை அடுத்த நாளே வைத்துவிட்டனர்.

தமிழகத்தின் நாளைய தளபதியே வருக... வருக...!!

"எந்திரன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வருகை தரும் தமிழகத்தின் நாளைய தளபதியே வருக... வருக..." என்ற வாசகத்துடன் காணப்பட்ட அந்த பேனர் எந்திரன் படப்பிடிப்பு எண்ணூரில் நடக்கும் விஷயத்தை அப்பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தியது. படப்பிடிப்புக்கு செல்ல மக்கள் ஆயத்தமாகுமுன் அந்த குறிப்பிட்ட ஷெட்யூலே முடிந்து சூப்பர் ஸ்டார் வேலூர் சென்றுவிட்டார். சூப்பர் ஸ்டாரை நேரில் காண ஆவலாயிருந்த வல்லூர் மற்றும் மீஞ்சூர் பகுதி மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

2) எந்திரனுக்கு எதிராக திட்டமிட்டு பரப்படும் வதந்திகள்

மெகா பட்ஜெட் படமாக இருந்தாலும் எந்திரன் படத்துக்காக ஷங்கர் எந்த அளவு Planning செய்கிறார் என்று சென்ற பதிவில் பார்த்தோம் அல்லவா? இப்படி திட்டமிட்டு செயல்படும் ஷங்கர் குறித்து தேவையற்ற வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர்.

ஷங்கர் படப்பிடிப்புக்காக மூன்று உயர் ரக கார்களை கேட்டதாகவும், அதில் ஒன்றை அவர் வேண்டுமென்றே அடித்து நொறுக்கும் காட்சியில் பயன்படுத்தியதாகவும் இது குறித்து ஐங்கரன் சொல்லாததையெல்லாம் தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்து கூறியிருந்தார் ஒரு ஆங்கில பத்திரிக்கையின் எழுத்தாளர் சில நாட்களுக்கு முன்பு. ஷங்கர் மூன்று

இப்படியெல்லாம் பேச ரஜினிக்கு தெரியுமா?

நான் அரசியல் ரீதியாக கேப்டனை விமர்சனம் செய்யும்போது சிலர், "உன் தலைவனை முதலில் தெளிவாகப் பேசச் சொல், அப்பறம் நீ அடுத்தவனை விமர்சனம் பண்ணலாம்." என்று கூறுகின்றனர்.

நம் தலைவர் எப்போதும் தெளிவாக தான் பேசுகிறார். இதோ அவர்களது தலைவரின் தெளிவிற்கு மற்றொரு உதாரணம்.

ஷூட்டிங்குக்காக (?!!) காரைக்குடி வந்துள்ள விஜயகாந்த் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் அளித்த பதில் இருக்கிறதே... அப்பப்பா.... தெளிவான பேச்சு என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துகொள்வீர்களா?

கேப்டன் : "மும்பை தாக்குதல் எதிர் பாராமல் நடந்தது போல், தேர்தல் நேரத்திலும் கூட்டணி என்பது எதிர்பாராமல் நடைபெறலாம். அதற்காக இப்போதிருந்தே வியூகங்கள் அமைத்துகொண்டிருக்கமுடியாது."

முழு காமெடிக்கு கடைசியில் தரப்பட்டுள்ள பேப்பர் கட்டிங்கை பாருங்கள்.

அப்பப்பா என்ன ஒரு தெளிவான பேச்சு....!! (காரைக்குடியில் நல்ல தண்ணிக்கு பஞ்சமா நண்பர்களே?)

மும்பை தாக்குதல் போல இவர் கூட்டணி அமைப்பதும் மக்கள் மீதான தாக்குதல் தான் போல...எதை எதனுடன் ஒப்பிடுவது என்று கூட தெரியாத இவரெல்லாம் முதல்வர் பதவி வேட்பாளராம்... அதற்க்கு ஆதரவளிக்க ஊருக்கு நான்கு பேர். எல்லாம் தமிழ்நாட்டின் தலைவிதி... அது சரி ஊரார் எல்லாரையும் கிண்டல் கேலி செய்துவரும் இவரது திரைமறைவு கொ.ப.செ. கோணி தனது "ஐயோ" பக்கங்களில் இதை குறிப்பிட்டு குட்டுவானா? அவன் ஏதோ நல்ல எழுத்தாளன் என்று இன்னும் நம்பிக்கொண்டிருப்பவர்களுக்காக இதை கூறுகிறேன்!!)

இதையே ரஜினி கூறியிருந்தால் இந்த மீடியா என்னென்ன செய்திருக்கும்? கமெண்ட் பகுதியில் சந்திக்கிறேன்.

குறிப்பு: கேப்டன் தனது பதிலில் கூட்டணி குறித்து எங்களை யாரும் சீந்தவில்லை என்பதை எவ்வளவு நாசூக்காக கூறியிருக்கிறார் பாருங்கள்!

[END]

Saturday, December 27, 2008

கிராபிக்ஸ் (CG) மூலம் காட்சிகள் வடிவமைக்கப்பட்ட பிறகே படப்பிடிப்பு நடத்தப்படுகிறது - எந்திரன் ஆச்சரியங்கள்!!

சூப்பர் ஸ்டாரின் சிவாஜி திரைப்படம், விற்பனை முதல் வசூல் வரை பல சாதனைகளை படைத்தது. அதுமட்டுமின்றி டெக்னிக்கலாக பல விஷயங்கள் சிவாஜி படத்தில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

அதுபோல் தற்போது தயாரிப்பிலிருக்கும் எந்திரன் படம் சிவாஜியை விட பல மடங்கு ஆச்சரியங்களை உள்ளடக்கி இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் எந்திரன் குறித்து கூறியிருப்பதை மட்டும் கீழே தருகிறேன். நேரத்தை சேமிக்கும் பொருட்டு படத்திற்கான Computer Graphics CG பணி உடனுக்குடன் சுடச் சுட தயாராகி வருகிறது என்று நாம் முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்து உங்களுக்கு நினைவிருக்கலாம்.

"ஒரு காட்சி எப்படி இருக்கவேண்டும் என்று Computer Graphics மூலம் தீர்மானிக்கப்பட்ட பிறகே அது படம் பிடிக்கப்படுகிறது" - ரத்னவேலு

"எந்திரன் ஷங்கர் சாரின் லட்சியப் படம். நான் இதற்க்கு முன்பு ஒளிப்பதிவு செய்த சேது, வாரணம் ஆயிரம் போன்று உணர்வுப்பூர்வமாக இல்லாமல் எந்திரன் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும். இது என் தனிச் சிறப்பு வாய்ந்தது என்று கூற பல காரணங்கள் இருக்கின்றன. பொதுவாக படப்பிடிப்பு முழுதும் முடிந்தவுடன் Computer Graphics CG பணி மேற்க்கொள்ளப்படும். ஆனால் என்திரனில் அது உடனக்குடன் செய்யப்படுகிறது. நாங்கள் ஏற்கனவே பல 'Pre-production' பணிகள் செய்துவிட்டோம். சொல்லப்போனால் படப்பிடிப்பை விட இதற்க்கு தான் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டோம். இதன் மூல பணத்தையும் நரத்தையும் நன்கு மிச்சப்படுத்தலாம். நாங்கள் இதுவரை ஒன்றிரண்டு பாடல்கள் மற்றும் சில காட்சிகளை தான் எடுத்திருக்கிறோம். தமிழ் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு காட்சி எப்படி இருக்கவேண்டு என்று Computer Graphics மூலம் தீர்மானிக்கப்பட்ட பிறகே அது படம் பிடிக்கப்படுகிறது. CG யை பார்த்த பிறகு நிபுணர்கள் அந்த காட்சியை படம்பிடிக்க தேவையான வழிமுறைகள் மற்றும் அதற்க்கு தேவையான பட்ஜெட் குறித்து தங்கள் ஆலோசனைகளை வழங்குகிறார்கள். எந்திரனை பொறுத்த வரை என் திறமையை காட்ட ஷங்கர் எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார். எதையும் திட்டமிட்டே அவர் செய்கிறார். (Courtesy: Times of India)

…………………………………………………………………………………………………………………

உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்...

அதெப்படி CG மூலம் எடுக்க வேண்டிய காட்சிகளை தீர்மானிக்கிறார்கள்?

பொதுவாக அனிமேஷன் செய்பவர்கள் தாங்கள் எடுக்கவேண்டிய காட்சி குறித்து முதலில் Story Board வரைவார்கள். அதை அடிப்படையாக வைத்து அனிமேட் செய்வார்கள். நேரத்தை, மனித சக்தியை இதன் மூலம் பெருமளவு மிச்சப்படுத்தலாம். இதை தான் ரத்னவேலு கூறியிருக்கிறார்.
காஸ்ட் கண்ட்ரோலுக்கு (Cost Control) இது நிச்சயம் தேவை. அதுமட்டுமின்றி நாம் மனதில் நினைப்பதை கொண்டுவர இந்த Story Board மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை அனிமேஷனுக்கு மட்டும் தான் பயன்படுத்தவேண்டும் என்பதில்லை. இது போன்ற Pre-production பணிகளுக்கும் பயன்படுத்தலாம். இதன் மூலம் எடுக்க வேண்டிய காட்சி என்னவென்று ஒரு ஐடியா முன்கூட்டியே கிடைத்துவிடுகிறது. ஆகையால் படச் சுருள் பயன்பாடு (Film Roll usage), படப்பிடிப்பு நேரம், ஷூட்டிங் செலவு என அனைத்தையும் கட்டுக்குள் கொண்டுவரலாம்.

…………………………………………………………………………………………………………………

[END]

ஆராய்ச்சி கூடத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் உற்சாகம் - Endhiran Shooting update

வேலூர், காட்பாடியில் உள்ள VIT பல்கலைக்கழகத்தில் எந்திரன் படப்பிடிப்பு ஜரூராக நடைபெற்றுவருகிறது. படப்பிடிப்பு பற்றி வேலூரில் கட்டுதீயாக செய்தி பரவி, இப்போது வேலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள நம் மன்ற தோழர்களும் ரசிகர்களும் சூப்பர் ஸ்டாரை நேரில் பார்த்த்விடவேண்டும் என்ற ஆவலில் தினசரி VIT உக்கு படையெடுத்து வருகின்றனர்.

படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படும் என்பதால் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து ஒரு ஆங்கில நாளிதழ் மிகவும் அங்கலாய்க்கிறது. என்ன அக்கறை ரசிகர்கள் மேல? எங்க தலைவருக்கு எங்க மேலே இல்லாத அக்கறையா? (குசேலனில் சூப்பர் ஸ்டார் இது குறித்து கூறியது நினைவில் இருக்கிறதா? "சினிமா பார்க்குற மாதிரி ஷூட்டிங் பாக்குறது அவ்ளோ இன்ட்ரெஸ்டிங்கா இருக்காது. தவிர, ஷூட்டிங் பார்க்க ரசிகர்களை அலோ பண்ணினா ஷூட்டிங் டிஸ்டர்ப் ஆகும். உங்க இடத்துல ஷூட்டிங் நடந்தப்போ அதை நீங்களே பார்க்கமுடியல. அதுக்காக படப்பிடிப்பு குழு சார்பா நான் உங்ககிட்டே மன்னிப்பு கேட்டுக்கிறேன்.")

சென்னையிலிருந்து தினசரி காரில் வேலூர் வரும் ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்பு முடிந்ததும் அன்றே சென்னை திரும்பி விடுகிறாராம். ஆனால் சூப்பர் ஸ்டார் அங்கு தான் தங்கியுள்ளாராம்.

வேலூர் அருகே இருக்கும் புகழ் பெற்ற ஸ்ரீபுரம் நாராயணி அம்மன் பொற்கோவிலுக்கு சூப்பர் ஸ்டார் விஜயம் செய்யலாம் என்று கூறப்படுகிறது. அப்போது அவரை பார்த்துக்கொள்ளலாம் என்று ரசிகர்கள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்க்கு முன் வேறு சில படங்களின் படப்பிடிப்பு VIT யில் நடைபெற்றிருந்தாலும் எந்திரன் படப்பிடிப்புக்கு பிறகு அது மிகவும் பிரசித்தி பெற்றுவிடும் என்று கூறப்படுகிறது.

மேலும், படப்பிடிப்புக்கான லொக்கேஷனை ஷங்கர் கடந்த நவம்பர் மாதமே ஷங்கர் வேலூர் வந்து இறுதி செய்துவிட்டதாக நம் ரசிகர் ஒருவர் அவர் நடத்தும் வலைத்தளத்தில் (amarnath-r.blogspot.காம்) குறிப்பிட்டிருக்கிறார். இதை அவர் நவம்பர் மாதம் 16 ஆம் தேதியன்றே கூறியிருக்கிறார் என்பதை கவனிக்கவேண்டும். பலே..

தவிர VIT யில் எடுக்கப்பட்ட காட்சிகள் குறித்த விவரமும் நமக்கு கிடைத்திருக்கிறது. அதாவது விஞ்ஞானியாக வரும் சூப்பர் ஸ்டார் தனது ஆய்வு கூடத்தில் புதிதாக ஒன்றை கண்டுபிடிக்க, அவரும் உதவியாளராக வரும் ஐஸ்வர்யா ராயும் உற்சாகத்தில் மிதப்பது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டன. (வேறென்ன இந்திரனை உருவாக்கியிருப்பார் அல்லது அவனது அட்டகாசத்தை அடக்க வேறொரு வழிமுறையை கண்டுபிடித்திருப்பார்!) ஆராய்ச்சியின் முடிவில் "சக்சஸ்...சக்சஸ்" என்று அவர் உற்சாகத்தில் கத்துவது படம்பிடிக்கப்பட்டது.

(Source: Indian Express, amarnath-r.blogspot.com, shankarendhiran.blogspot.com)

[END]

Friday, December 26, 2008

"ரஜினி படங்களை ரிலீஸ் தேதியன்றே தியேட்டருக்கு சென்று பார்த்துவிடுவேன்!" - கலாநிதி மாறன்

சில விஷயங்கள் ஏன் நடக்கிறது, எதற்கு நடக்கிறது என்ற கேள்விக்கான விடை அந்த ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். எந்திரனின் தயாரிப்பாளராக திடீரென சன் டி.வி. வந்திருப்பதும் அப்படி தான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு...

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விகடனின் இலவச இணைப்பு ஒன்றில் கலாநிதி மாறனின் பேட்டி மற்றும் அவரது எதிர்க்கால் லட்சியங்கள் குறித்து செய்திகள் இடம்பெற்றிருந்தன. சன் நெட்வொர்க் தோன்றியது எப்படி, உடனிருக்கும் தளபதிகள் யார் யார் இதைபற்றியெல்லாம் அந்த இதழில் கலாநிதி மாறன் சுவையாக கூறியிருந்தார்.

வீட்டில் எதையோ நான் தேடிக்கொண்டிருக்கையில் கிடைத்தது இது. சுவாரஸ்யமாக இருந்ததால் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

அந்த சிறப்பிதழில் தனது ரோல் மாடல்களாக பத்து பேரை பட்டியலிட்டிருந்தார் கலாநிதி. அதில் சூப்பர் ஸ்டாரும் ஒருவர்.

அந்த பட்டியல்லுக்கு அவர் அளித்த முன்னுரை என்ன தெரியுமா?

"நாம் சந்திக்கிற ஒவ்வொரு மனிதரும் நமக்கு ஒரு குருவே. அவரிடமிருந்து ஏதாவது ஒன்றை நாம் கற்றுக்கொள்ளலாம் என்று நினைப்பவன் நான். எனக்கு அப்படி வாழ்க்கையை கற்றுத்தந்த ரோல் மாடல்கள் உலகம் முழுக்க உண்டு. எனது டாப் 10 ரோல் மாடல்கள் பற்றி இங்கே சொல்கிறேன்".

சூப்பர் ஸ்டாரை பற்றி அவர் கூறியிருந்தது இங்கு இணைக்கப்பட்டிருக்கிறது.

"ரஜினி... இவரது ரசிகன் நான்! என் பள்ளிப்பருவத்தில் அவரது படங்கள் பார்க்க, ரிலீஸ் தேதியிலேயே தியேட்டருக்கு ஓடிய நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகின்றன. அத்தனை அழகில்லை. அத்தனை நிறமுமில்லை. ஆனாலும், இன்றும் தமிழக அகராதியில் ஸ்டைல் என்றால் அது ரஜினி!

பஸ் கண்டக்டர் சிவாஜி ராவ், மாநிலம் போற்றும் சூப்பர் ஸ்டாரான கதை, ஒவ்வொரு மனிதனுக்கும் தருகிற தன்னம்பிக்கை இருக்கிறதே... அது தான் ரஜின்யின் மிகப் பெரிய ஸ்டைல்!"

மூன்று நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தாலும் அந்த பழைய விகடனை புரட்டியபோது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் இன்று? ஹூம்.... எப்படியிருந்த விகடன் இன்று இப்படி ஆகிவிட்டதே!! பெருமூச்சு தான் வருகிறது.

[END]

Thursday, December 25, 2008

வேலூர் VIT யில் எந்திரன் - Shooting Update!!

ற்போது எந்திரன் வேலூருக்கு சென்றுவிட்டார். வேலூரில் உள்ள VIT (Vellore Institute of Technology) யில் இன்று படப்பிடிப்பு நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் மற்றும் ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகளை படம்பிடித்தார் ஷங்கர்.

படப்பிடிப்புக்காக தேர்வு செய்யப்பட்ட லொக்கேஷனை பார்வையிட நேற்று VIT க்கு வந்தார் இயக்குனர் ஷங்கர். பல்கலைக்கழக கட்டிடத்தில் அமைந்துள்ள பிரம்மாண்டமான வளாகம் மற்றும் டெக்னாலஜி டவர் ஆகியவற்றை ஷங்கர் பார்வையிட்டார்.

பசுமையான கேம்பஸ்

பச்சைபசேலென்று பசுமையாக இருக்கும் கேம்பஸ், மற்றும் நேர்த்தியான அதன் கட்டிடங்கள் VIT யின் சிறப்பம்சமாகும். (இணைக்கப்பட்டுள்ள படங்களை பாருங்களேன், நீங்களே சொல்வீர்கள்.) எந்திரன் போன்ற சயன்ஸ் ஃபிக்க்ஷன் படங்களை ஷூட் செய்ய VIT ஏற்றதொரு இடமாகும். மேலும் இது விடுமுறைக்காலம் என்பதால் ஷங்கர் உடனடியாக இந்த லொக்கேஷனை டிக் செய்துவிட்டார்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

இதையடுத்து சூப்பர் ஸ்டாரும் ஐஸ்வர்யா ராயும் தனிதனி கார்களில் இன்று அதிகாலை வேலூர் வந்தனர். பல்கலைக்கழக வளாகத்திலேயே அவர்கள் தங்கியுள்ளனர். இது விடுமுறை காலம் என்பதால் எந்த வித இடையூறும் இன்றி படப்பிடிப்பு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. (நமது நண்பர் ரோபோ சத்யா கமென்ட் மூலம் இதை நமக்கு தெரிவித்துள்ளார். இன்று மாலை தமிழ் முரசு இதழில் கூட இது குறித்து சிறிய செய்தி வந்துள்ளது).

பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் முன்னாள் அமைச்சர் திரு. ஜி.விஸ்வநாதன் சூப்பர் ஸ்டாரை சந்தித்திருக்கலாம் என்று தெரிகிறது. அது குறித்து சரியான தகவல்கள் கிடைத்தவுடன் விரிவாக உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

ஷங்கருக்கு நன்றி

தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு மிக அரிதாகவே சென்றிருக்கும் சூப்பர் ஸ்டாரை வேலூர் மாவட்டத்திற்கு வரவழைத்துள்ள இயக்குனர் ஷங்கருக்கு வேலூர் ரசிகர்கள் நன்றி கூறலாம்!

[END]

ரஜினியுடன் பணியாற்றியது என் வாழ்வில் ஒரு சிறந்த தருணம் - எந்திரன் காஸ்ட்யூம் டிசைனர் மணீஷ் மல்கோத்ரா

ணீஷ் மல்ஹொத்ரா - பாலிவுட்டின் முதன்மை Fashion Designer. சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டாரை பிரமாதமான காஸ்ட்யூம்களில் காண்பித்து நம்மை சொக்க வைத்தவர். எந்திரனிலும் இவர் தான் காஸ்ட்யூம் டிசைனர்.

சமீபத்தில் சென்னைக்கு ஒரு உணவகத்தை திறந்துவைக்க வருகை தந்தவர் செய்தியாளர்களிடம் பேசினார். சூப்பர் ஸ்டாரை பற்றி உயர்வாக குறிப்பிட அவர் தவறவில்லை.

"எந்திரன் பட்டாளத்தை நினைத்தாலே ஒரே த்ரில்லிங்காக இருக்கிறது" - ணீஷ்

"சென்னை எனக்கு புதிதல்ல. பல முறை நான் இங்கு வந்திருக்கிறேன். சொல்லப்போனால் என் கேரியரை நான் ஆரம்பித்ததே சென்னையில் தான். பாலிவுட்டில் அமீர்கான், ஷாருக்கான், அமிதாப்ஜி, பலருடன் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால் ரஜினியுடன் பழகியது தான் என் 18 வருட கேரியரில் மறக்கமுடியாத ஒரு அனுபவமாகும். மிகவும் எளிமையான, அற்புதமான மனிதர் அவர். அவருடன் நெருக்கமாக பணிபுரிபவர்கள் அனேக விஷயங்களை கற்றுக்கொள்ளமுடியும். குறிப்பாக நேரந்தவறாமை. எந்திரனில் பணியாற்றும் நட்சத்திரங்களை நினைத்தாலே ஒரே த்ரில்லிங்காக இருக்கிறது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு நான் ஐஸ்வர்யா ராயுடன் பணிபுரிகிறேன். தமிழ் திரையுலகின் மாற்ற முன்னணி கலைஞர்களுடனும் பணிபுரிய நான் ஆவலுடன் இருக்கிறேன்." (நன்றி : Deccan Chronicle 25/12/2008)

பாலிவூட் கலைஞர்கள் சூப்பர் ஸ்டாரை பார்த்து அதிசயிப்பது ஏன்?

பொதுவாக பாலிவுட்டில் பணிபுரிபவர்கள் நம் சூப்பர் ஸ்டாருடன் பணிபுரிய நேர்ந்தால் ஆச்சரியப்பட்டுத்தான் போவார்கள். காரணம் சூப்பர் ஸ்டாரின் பல செயல்கள் அவர்களுக்கு அதிசயமாகத்தான் இருக்கும். "நான் தான் நம்பர் ஒன் ஹீரோ. நான் தான் சூப்பர் ஸ்டார். நீ அல்ல!" என்று முன்னணி கலைஞர்கள் அமீர் கானும் ஷாருக்கானும் பகிரங்கமாக அடித்துக்கொள்ள, அமிதாப்பை ரஜினி முந்திவிட்டார் என்று வடநாட்டு தொலைக்காட்சிகள் செய்தி ஒளிபரப்பியபோது "நான் அரசன் என்றால் அமிதாப்ஜி ஒரு சக்கரவர்த்தி, தயவு செய்து அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள்.." என்று சூப்பர் ஸ்டார் அடக்கத்தோடு கூறியதை கண்டு வடநாட்டு மீடியா மட்டுமல்ல அங்குள்ள நட்சத்திரங்களும் வியப்பாகத்தான் பார்த்தார்கள்.

அதேபோல் அங்கு பெரிய நடிகர்கள் வைத்தது தான் சட்டம். அற்ப காரணங்களுக்காகவெல்லாம் ஷூட்டிங் ரத்து செய்யப்படும். அப்படிப்பட்டவர்களுக்கு இங்கு சூப்பர் ஸ்டாரின் எளிமையையும் அடக்கத்தையும் பார்க்கும்போது வியப்பு ஏற்படுவது இயற்கையே. அதன் வெளிப்பாடு தான் நானா படேகர், மணீஷ் போன்றவர்கள் அவ்வப்போது சூப்பர் ஸ்டாரை பற்றி திரும்ப திரும்ப இப்படி கூறிவருவது.

[END]

Wednesday, December 24, 2008

போக்குவரத்து நெரிசல்: சூப்பர் ஸ்டாரின் இடத்தில் வேறு நடிகர்கள் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்? ஒரு கற்பனை!!

சூப்பர் ஸ்டார் எந்திரன் படப்பிடிப்பிற்காக செல்கையில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு பிறகு பைக்கில் சென்று உரிய நேரத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக நேற்று ஒரு செய்தி கேள்விப்பட்டோம். இன்றைய தந்தி அது குறித்து ஒரு விரிவான தகவலை வெளியிட்டுள்ளது.

நேற்றைய செய்தியில் ஸ்டண்ட் நடிகர்கள் நான்கு பேர் இயக்குனர் ஷங்கருடன் வந்து சூப்பர் ஸ்டாரை அழைத்து சென்றதாகவும், அவர்களுடன் அவர் பைக்கில் சென்றதாகவும் கூறப்பட்டது. நேற்றைய மாலை மலரில் இந்த செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் உண்மையில் சூப்பர் ஸ்டார் தாமாகவே சிரத்தை எடுத்து அந்த வழியில் சென்ற போலீஸ்காரர் ஒருவரின் பைக்கில் லிப்ட் கேட்டு பயணம் செய்து உரிய நேரத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக இன்று தினத்தந்தி கூறியிருக்கிறது.

தமது தொழிலில் போட்டியாக உள்ள நிறுவனம் 'எந்திரன்' படத்தை வாங்கியிருந்த போதும், சூப்பர் ஸ்டார் சம்பந்தப்பட்ட செய்தியை பாரபட்சமின்றி வெளியிட்ட தந்தி குழுமத்திற்கு நம் நெஞ்சார்ந்த நன்றி. நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகும் என்பது போல, சூப்பர் ஸ்டாரின் நல்ல உள்ளத்திற்கு இதெல்லாம் தானாக் நடக்கும்.

சரி, இதே நிலை (போக்குவரத்தில் சிக்கி படப்பிடிப்பிற்க்கு தாமதமானால்) வேறு நடிகர்களுக்கு ஏற்பட்டால் என்ன செய்வார்கள்? ஒரு சிறு கற்பனை.

கேப்டன்:

இந்த போக்குவரத்தை நெரிசலை தீர்க்க என்கிட்டே அருமையான திட்டம் இருக்கு. ஆனா அதை நான் வெளியே சொல்லமாட்டேன். ஆங்...!

கேப்டன் படப்பிடிப்பிற்கு செல்கையில் இதே போல போக்குவரத்து நெரிசல் ஏற்பட, உடனே காரிலிருந்து இறங்கி அங்கேயே உரையாற்றுகிறார்.

"இது தி.மு.க.வின் திட்டமிட்ட சதி. அந்தாளு (முதல்வரை அவர் இப்படி தான் அழைக்கிறார் இப்போதெல்லாம்) நான் எங்கே ஷூட்டிங் கரெக்ட் டயத்துக்கு போய் கலந்துகிட்டா, படம் எலெக்க்ஷனுக்குள்ள ரிலீசாகி அது பெரிய ஹிட்டாயிடும்னு போலீஸ்காரங்களை வைத்து இப்படி ட்ராபிக் பண்றார். நேத்து அவர் இந்த வழியாதான் போனாரு. அப்போ ட்ராபிக் ஆகலையே."

"சென்னையில இந்த மாதிரி நிறைய இடங்களல்ல போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தாய்குலங்க தங்களோட குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்ப முடியாம கஷ்டப்படுறாங்க. பெண்கள் வேலைக்கு சரியான் நேரத்துல போக முடியாம கஷ்டப்படுறாங்க. தொழிலாளிகள் உரிய நேரத்துல வேலைக்கு போக முடியாததுனால சரியா கூலி வாங்க முடியாம கஷ்டப்படுறாங்க. அதுக்கெல்லாம் இந்த ஆட்சி தான் காரணம். இன்னொன்னும் சொல்லிக்கிறேன். இதுக்கு முன்னாடி இருந்த அ.தி.மு.க. அரசாங்கம் போக்குவரத்து நெரிசலை தீர்க்க சரியான திட்டம் போட்டிருந்தா இன்னிக்கி இப்படி அவதிப்பட வேண்டிய நிலை வந்திருக்காது."

"இந்த போக்குவரத்தை நெரிசலை தீர்க்க என்கிட்டே அருமையான திட்டம் கையில இருக்கு. நான் ஆட்சிக்கு வரும்போது அதை செயல்படுத்துவேன். என்னாது......துதுது? அதை நான் வெளியே சொல்லனுமா? அஸ்கு...புஸ்கு.... இவரு காப்பியடிச்சிடுவாறு... நான் சொல்ல மாட்டேன்... "

(அவரது அடிப்பொடி ஒருவர் ஓடிவந்து, 'தலைவா ரோட்டுக்கு குறுக்கே நாம கட்டியிருக்கிற டிஜிட்டல் பேனரால தான் டிராஃபிக்கேவாம் ... அதை எடுத்துடலாமா?' என்று கேட்க, அதற்க்கு கேப்டன் "நீ யாரு? தி.மு.க. ஆளு தானே? என்னோட தொண்டர்கள் தங்கள் நரம்புகளை கம்பிகளாக முறுக்கி கட்டி வெச்சிருக்கிற பேனர் அது. அதைஎடுக்க நான் விடமாட்டேன். இதுவே ஸ்டாலின் பேனராயிருந்தா என்ன பண்ணுவீங்க? போக்குவரத்தையே மாத்தி விடமாட்டீங்க... அதே மாதிரி இப்ப பண்ணுங்க.... ஆங்...."

தொண்டர் தலையிலடித்துகொண்டு அங்கிருந்து செல்கிறார். இப்படி பேசியே மொத்த நேரத்தையும் கடத்திவிட்டபடியால் அன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுவிடுகிறது.

விரல் நடிகர் :

நான் லிட்டில் சூப்பர் ஸ்டார் பேசுறேன். உடனே நான் மாட்டிக்கிட்டுருக்கிற இடத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்புங்க..

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட, அந்த வழியில் செல்லும் பெண்களை காரில் உட்கார்ந்துகொண்டே சிறிது நேரம் சைட் அடித்துகொண்டிருக்கிறார் அவர். நேரம் செல்ல செல்ல நெரிசல் அதிகமாக அவர் தயாரிப்பாளருக்கு போன் போடுகிறார். "நான் லிட்டில் சூப்பர் ஸ்டார் பேசுறேன். ஷூட்டிங்குக்கு வரணும்னா உடனே நான் மாட்டிக்கிட்டுருக்கிற இடத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்புங்க. இல்லாட்டி நான் வரமுடியாது. முதல்ல யாரு ஷூட்டிங் வர்ராங்கங்க்றது முக்கியம் இல்லை. கடைசியா யாரு முதல்ல வர்ராங்கங்க்றதுதான் முக்கியம்."

தயாரிப்பாளர் மறுத்துவிட்டு, உடனே திருப்பதி போய்விடுகிறார்.

தனது தந்தை கரடியார்க்கு அவர் போனை போட, உடனே அவர் எப்படியோ அந்த இடத்துக்கு வந்துவிடுகிறார்.

"டேய்... என் பையன் பேரு சொம்பு. அவன் கிட்ட வெச்சுக்காதீங்க வம்பு.
ஆகிடுவீங்க நீங்க பம்பு. அவன் முன்னால நீங்க எல்லாம் ஒரு துரும்பு.
நான் அடிக்கிறதுல இரும்பு. தயாரிப்பாளர்களுக்கு அவன் ஒரு கரும்பு..." என்று பன்ச் டைலாக்கை எடுத்துவிட...

"நீ இப்போ திரும்பு" என்று போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பிவிடுகிறார்கள்.

ஜெராக்ஸ் நடிகர் :

வருங்கால முதல்வர் இளைய தளபதி அஜய் சாரோட அப்பா பேசுறேன். சார் ஷூட்டிங் வரனும்னா அவர் கேக்குறதை உடனே செஞ்சுகொடுக்கணும். அப்போ தான் அவர் வருவார்.

சூப்பர் ஸ்டாரின் ஜெராக்ஸ் புகழ் அஜய் இதேபோல நெரிசலில் சிக்கிக்கொள்ள, இதற்க்கு முன்பு சூப்பர் ஸ்டார் இந்த மாதிரி நெரிசல் ஏற்பட்டபோது, பைக்கில் சென்ற விஷயத்தை அவருக்கு யாரோ எடுத்துக் கூற, உடனே தாம் அது போல செல்ல ஒரு இம்போர்டட் பைக் கேட்க்கிறார். ஓட்டிச் செல்லும் நபர் சாதரண போக்குவரத்து எஸ்.ஐ.யாக இருக்ககூடாது, ஒரு புகழ் பெற்ற IPS அதிகாரியாக இருக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்.

அவரது தந்தைக்குலம் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்கிறார். "வருங்கால முதல்வர் இளைய தளபதி அஜய் சாரோட அப்பா பேசுறேன். சார் ஷூட்டிங் வரனும்னா அவர் கேக்குறதை உடனே செஞ்சுகொடுக்கணும். அப்போ தான் அவர் வருவார். அவரோட படத்துக்கு நல்ல எதிர்ப்பார்ப்பு இருக்கு. மக்கள் அவர் அரசியலுக்கு வரணும்னு நினைக்கிறாங்க. நீங்க இந்த ஏற்பாடெல்லாம் கண்டிப்பா செய்யனும்."

"சார் படத்தையே நான் பேசாம டிராப் பண்ணிடுறேன். இத்தோட நான் தப்பிசிகுவேன்...

புரட்சி தமிழன்:

அறிவுகெட்ட கே... கூ.. பூ....அதிகமா சம்பளம் வாங்குரவநேல்லாம் அதிக நேரம் வெயிட் பண்ணனும்

டனே காரிலிருந்து இறங்கிவிடுகிறார். "டே.... கே.. கூ. ங்களா, தமிழன் இப்படி சொரணையே இல்லாம இருக்கிறதாலதான் மத்த மாநிலத்து லாரி டிரைவருங்க எல்லாம் இப்படி நம்ம மாநிலத்துல வந்து ட்ராபிக் பண்றாங்க. இவனுங்களை நிக்க வெச்சு....

நீங்க போய் அங்க ட்ராபிக் பண்ணுங்கடா. ஆனா எவ்ளோ ட்ராபிக் வந்தாலும் ஷூடிங்குக்கு கரெக்ட் டயத்துக்கு போய் ப்ரொட்யூசர்ஸை வாழவைக்கிறதுல நம்ம புரட்சி தலைவருக்கு பிறகு, இளைய தளபதிதான். அவர் அரசியல்ல இறங்கி முதல்வர் ஆனா இதுக்கெல்லாம் கிடைக்கும் ஒரு விடிவுகாலம்.

உடனே அவரது உதவியாளர், "அண்ணே ஆளுங்கட்சி கூட்டம் ஒன்னு நடக்குது. அதுனால தான் போக்குவரத்து நெரிசலாம்."

திடுக்கிட்ட புரட்சி தமிழன் உடனே, "அடே க...கூ..ங்களா கொஞ்ச நேரம் ட்ராபிக் ஆனாதான் என்ன? உங்களுக்கு பொறுமையே இல்லியா? வந்தாரை வாழவைக்கும் தமிழனுக்கு பொறுமையே இல்லியா? டேய் ... ரோட்டுல போறது நீ. அதுவும் உன் வண்டியில போற. நீ வெயிட் பண்ணாமா உனக்கு பதிலா பக்கத்து வீட்டுக்காரனா வந்து வெயிட் பண்ணுவான்...? அறிவுகெட்ட கூ... அதிகமா சம்பளம் வாங்குரவநேல்லாம் அதிக நேரம் வெயிட் பண்ணனும். எனக்கும் அதிகமா சம்பளம் வாங்கி அதிக நேரம் வெயிட் பண்ண தெரியும். ஆனா யாரு கொடுக்குறாங்க? தமிழனுக்கு தமிழ் நாட்ட்டுல மரியாதையே கிடையாதுடா.... ஏன்னா நீங்க எல்லாம் ஒரு கே... கூ.. பூ...

வீட்டிலிருந்து அவரது மகன் போன் செய்கிறார் அப்பாவுக்கு. "அப்பா உனக்கு தான் படமும் இல்லை. ஷூட்டிங்கும் இல்லை. நீ எதுக்கு அந்த பக்கம் போனே?"

"நோ மை சன். ஆக்சுவலி நான் என் ஷூடிங்குக்கு போகலே. நம்ம favourite பூ நடிகையோட ஷூட்டிங்கை சும்மா வேடிக்கை பார்க்கத்தான் போய்கிட்டிருக்கேன்..."

"அப்படின்னா நானும் வர்றேன் டாடி. வீட்டுல ரொம்ப போர் அடிக்குது!!"

சுப்ரீம் ஸ்டார்:

நடிகர் சங்க ஒரு நபர் மீட்டிங் இருப்பதால் உடனே நான் அங்கு செல்லவேண்டியிருப்பதால் படப்பிடிப்பை ரத்து செய்கிறேன்

டனே காரிலிருந்து இறங்கிவிடுகிறார். இதே சூழல் ஏற்பட்டபோது ரஜினியும், கேப்டனும் என்ன செய்தார்கள் என்று தெரிந்துகொள்கிறார். பிறகு அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கிறார்.

'அடுத்த தேர்தலில் என் கட்சி ஆட்சியை பிடிக்கும். துணை முதல்வராக எனது மனைவி பொறுப்பேர்ப்பார். அப்போது இது குறித்து ஒரு முடிவு செய்யப்படும். இங்கே யார் வந்தார்கள்... உடனே படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஷூட்டிங்கிர்க்கு பைக்கில் போனார்கள் என்ற விபரம் எனக்கு தெரியும் இன்னொருவர் ஷூட்டிங்கே போகாமல் பேசிய டபாய்த்துவிட்டாராம். அதுவும் எனக்கு தெரியும். நான் இது போன்ற சூழ்நிலைகளில் ஒபாமாவுடன் காரிலேயே போயிருக்கிறேன். வேண்டுமானால் அமெரிக்க தூதரகத்திற்கு சென்று ஆவணங்களை பாருங்க. (நெசமாவே இதே தொனியில் சமீபத்திய ரிப்போர்டரில் ஒரு பேட்டியை கொடுத்திருக்கிறார் அண்ணன் சுப்ரீம் ஸ்டார்.)

இது போல நடிகர் நடிகையர் ஷூட்டிங் செல்லும் வழியில் போக்குவரத்தில் சிக்கிகொண்டால், அன்றைய படப்பிடிப்பிற்கே செல்ல தேவையில்லை என நடிகர் சங்கம் சார்பாக தீர்மானம் நிறைவேற்ற போகிறோம். இது தொடர்பாக வரும் ஞாயிறு சங்க கூட்டம் நடைபெறும். ஷூட்டிங் இல்லாத பெருவாரியான நடிகர்கள் அதில் கலந்துகொள்ளவேண்டும்.

இது போன்ற இடங்களில் சிக்னல்கள் அமைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது. அது என்ன ஆனது என்று நான் கேட்டுகொண்டிருக்கிறேன். தமிழக முதல்வர் அவர்கள் பதில் கூற மறுக்கிறார்.

உடன அவரது கட்சி தொண்டர் (??!!) ஒருவர் அருகே வந்து கிசுகிசுக்கிறார். "அண்ணே, அப்படி நிதி ஒதுக்கியது ஆந்திரா அரசாங்கம் அவங்க மாநில பட்ஜெட்லன்னே.... இங்க இல்ல."

'ஒ... அப்படியா? அப்போ தமிழக முதல்வர் அவர்கள் ஆந்திராவை பின்பற்றி சிக்னல்களுக்கு போதிய நிதி ஒதுக்கவேண்டும். அதை முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்று நம் கட்சி கண்காணிக்கும். நடிகர் சங்க ஒரு நபர் மீட்டிங் இருப்பதால் உடனே நான் அங்கு செல்லவேண்டியிருப்பதால் படப்பிடிப்பை ரத்து செய்கிறேன்."

உடனே தயாரிப்பாளரிடமிருந்து போன், "நீங்க ஷூடிங்கிர்க்கே வரவேண்டாம் சார். உங்களை தூக்கிட்டு வேற ஹீரோவை போட்டு படத்தையே கிட்ட தட்ட நாங்க முடிச்சிட்டோம்!"

[END]

Titbits 9 : ரஜினி அமிதாப் வழியில் செல்லவேண்டுமா? & கரும்பு கசந்தால் யார் குற்றம்? etc. etc.,

………………………………………………………………………………………………………………

டந்த இரண்டு நாட்களாக நான் தயார் செய்து கொண்டிருந்த இந்த தொகுப்பு, மதியமே தயாராகிவிட்டது. புகைப்படங்களை தயார் செய்ய எனக்கு நேரம் தேவைப்பட்டதால் இரவு போஸ்ட் செய்துகொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அதற்குள் நான் தயார் செய்து வைத்திருந்த ஒரு செய்திக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. ரசிகர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக சிஃபி அந்த செய்தியையே நீக்கியிருப்பதாக Envazhi.com மூலமாக அறிந்தேன். இருப்பினும் நான் தயார் செய்து வைத்திருந்த செய்தியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இந்த தொகுப்பில் இரண்டாவதாக நான் அளித்திருக்கும் செய்திதான் அது. அவர்களின் சர்ச்சைக்குரிய டாப் 5 வரிசை பற்றி நான் எதுவும் கூறவில்லை. (காரணம் அதை முதலில் படித்தவுடன் எனக்கு சிரிப்பு தான் வந்தது!) ஹொகேனக்கல் பிரச்னையில் சூப்பர் ஸ்டார் வருத்தம் தெரிவித்ததை மன்னிப்பு கேட்டதாக திரும்ப திரும்ப உள் நோக்கத்துடன் கூறி வருவதைத்தான் நான் கண்டித்திருக்கிறேன்.

- சுந்தர்

…………………………………………………………………………………………………………………

1) ரஜினி அமிதாப் வழி செல்லவேண்டுமா?

ஒருவரை கொல்வதானால் விஷம் வைத்தும் கொல்லலாம். சர்க்கரை கொடுத்தும் கொல்லலாம். ரஜினி விஷயத்தில் சிலர் எழுதுவதும் இப்படியே.

சமீபத்தில் ஒரு வலைத்தளத்தில் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்கள். கட்டுரை முழுதும் சூப்பரோ சூப்பர். ஆனால் முடிவில் அவர்கள் கூறியது இருக்கிறதே, அது தான் சொதப்பலோ சொதப்பல்.

பொதுவாக இது போன்ற உளவியல் ரீதியாக எழுதப்படும் கட்டுரைகளை படிக்கும்போது நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ரஜினியை ஆகோ ஓஹோவென்று அவர்கள் கட்டுரை முழுதும் புகழ்ந்துவிட்டு இறுதியில் அவருக்கு ஒரு வஞ்சக வலை விரித்திருப்பார்கள். இவர்கள் வலையில் ரஜினி விழவாப் போகிறார்? எதற்கு அலட்டிக்கொள்வானேன் என்று தானே கேட்கிறீர்கள். அவர் விழுந்தால் என்ன அவர் ரசிகர்கள் விழுந்தால் என்ன... எல்லாம் ஒன்று தானே?

அப்படி என்ன தான் எழுதியிருந்தார்கள் முடிவில்? அமிதாப்பை போல ரஜினி வரவேண்டுமாம். அவரைப் போல் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கவேண்டுமாம்.... இது எப்படி இருக்கு?

ரஜினி, அமிதாப்பின் பாதையில் ஏன் போகவேண்டும்?

அமிதாப் ஒரு சிறந்த மனிதர் மற்றும் நடிகர் என்பதில் எனக்கு எந்த மாற்றுகருத்தும் இல்லை. ஆனால், தமது 59 வது வயதிலும் இளம் ஹீரோயின்களோடு டூயட் பாடும் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினி, அமிதாப்பின் பாதையில் ஏன் போகவேண்டும்?

அதற்க்கு அவர் பேசாமால் ஒய்வு பெற்றுவிடலாம். சிவாஜி, அமிதாப் ஆகியோர் செய்தவற்றை ரஜினி நிச்சயம் செய்யக்கூடாது. ரஜினி என்றுமே எம்.ஜி.யார் வழியில் தான் செல்லவேண்டும். கடைசிவரை ஒரு சூப்பர் ஹீரோவாகவே எம்.ஜி.ஆர். நடித்தார். தனது கடைசிப் படத்தில் கூட எம்.ஜி.ஆர். கதாநாயகனாகத்தான் நடித்தார். எனவே சூப்பர் ஸ்டாரும் கடைசிவரை ஹீரோவாகத் தான் நடிக்கவேண்டும். எதிர்காலத்தில் நடித்தது போதும் என்று அவர் நினைத்தால் ஒன்று அரசியலுக்கு வரவேண்டும் அல்லது ஒய்வு பெற்றுவிடவேண்டும். இது தான் நம் விருப்பம்.

ரஜினியை பிடிக்காத சக்திகள் கையிலெடுக்கும் ஆயுதம்

ரஜினியை பிடிக்காத சக்திகள் கையிலெடுக்கும் ஆயுதம் தான் இந்த "அமிதாப் வழி போங்க" என்பது. இந்தியா டுடே ரஜினியை மட்டம் தட்டுவதர்கேன்றே சென்ற ஆண்டு ஒரு சிறப்பிதழ் வெளியிட்டதே ஞாபகமிருக்கிறதா? அதில் அந்த இதழின் சிறப்பாசிரியர் கூட கூறியிருந்தது இது தான். "குழப்பங்களை தவிர்த்து ரஜினி அமிதாப் வழி சென்றால் அவரது எல்லைகள் விரிவடையும்!"

பரம வைரிகள் முதல் நேற்று முளைத்த காளான்கள் வரை ரஜினியின் எதிர்ப்பாளர்கள் அனைவரும் கூறும் ஒரு ஆலோசனையாக்கும் இது. என்ன ஒரு நயவஞ்சக ஆலோசனை...! ஆனால் தலைவர் மிகவும் புத்திசாலி. அவருக்கு தெரியும் எந்த பாதையில் போகவேண்டும், எதில் போனால் மதிப்பு நிலைத்திருக்கும் என்று...!!

2) சிஃபி தூவியுள்ள விஷ விதை! யார் பலனடைய தூவப்பட்டது?

சிஃபி கும்பல் மற்றொரு வக்கிரத்தை அரங்கேற்றியுள்ளது. 2008 ன் டாப் 5 நடிகர்கள் என்ற பெயரில்.

அவர்கள் பட்டியலை முதலில் பார்த்துவிடுவோம். 5) அஜீத் 4) சூர்யா 3) விஜய் 2) ரஜினி 1) கமல்.

இந்த பட்டியலில் உள்ள வரிசை பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. அவர்களே கூறியது போல 2008 இல் அந்தந்த நடிகர்களின் படங்கள் பெற்ற வெற்றியை வைத்து இந்த வரிசையை அவர்கள் தயாரித்துள்ளார்களாம். ஓ.கே. மன்னிப்போமாக.

இதில் ரஜினியை பற்றிய செய்தியில் மட்டும் தங்கள் வழக்கமான வக்கிரத்தை அரங்கேற்றியுள்ளது வக்கிர சிஃபி கும்பல். குசேலன் குறித்து அவர்கள் கூறியதை கூட நாம் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் அதற்க்கு பிறகு அவர்கள் தூவியுள்ள விஷ விதை இருக்கிறதே.... அப்பப்பா.... யார் பலனடைய தூவப்பட்டதோ?

முன்னை காட்டிலும் உயர்ந்த ரஜினியின் செல்வாக்கு

ஹொகேனக்கல் விஷயத்தில் ரஜினி கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டதால் அவரது செல்வாக்கு பெருமளவு சரிந்ததாம். தற்போது எந்திரனை சன் பிக்சர்ஸ் வாங்கியதை அடுத்த அவரது செல்வாக்கு மீண்டு திரும்பிவிட்டதாம். இது எப்படி இருக்கு? இதை எழுதிய அரை வேக்காடு யாரு என்று தெரியவில்லை.

தான் வருத்தம் தான் கேட்டதாகவும், மன்னிப்பு கேட்க்கவில்லைஎன்றும், அதை கூட தான் கேட்டதற்கான சூழ்நிலையை சூப்பர் ஸ்டார் தமது ரசிகர் சந்திப்பில் தெளிவாக விளக்கிவிட்டபிறகும் கூட இப்படி "மன்னிப்பு கேட்டார், மன்னிப்பு கேட்டார்" என்று எழுதும் இவர்களை எல்லாம் நிற்க வைத்து.....

என்னைப் பொறுத்தவரை வருத்தப் பிரச்னையில் அவரது செல்வாக்கு பாதிக்கப்பட்டது உண்மை தான் என்றாலும், தமது ரசிகர் சந்திப்பில் நடந்து என்ன என்று அவர் விளக்கிக் கூறிய பின் அவர் மீதுள்ள கறை அகன்று முன்னை காட்டிலும் அவரது செல்வாக்கு உயர்ந்துவிட்டது. உண்மை இப்படியிருக்க எந்திரனை சன் வாங்கியதால் வருத்தப்ரச்னையில் சரிந்துவிட்ட அவரது செல்வாக்கு மீண்டும் உயர்ந்துவிட்டதாம். அடப்பாவிகளா....

இப்படி எழுதுவது ஒரு வகை "Perverted Journalism" ஆகும். அதாவது "வக்கிர இதழியல்". சிஃபி என்றாலே அவர்கள் ரஜினி எதிர்ப்பு சக்திகள், அது ஒரு ரஜினி எதிர்ப்பு வெப்சைட் என்ற அடையாளத்தை நாம் ஏற்படுத்திவிட்டால் போதும். இவர்கள் தாமாக வழிக்கு வருவார்கள்.

இதற்க்கெல்லாம் மூல காரணம் தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவில் தமது வக்கிரத்தை காண்பித்துவரும் அந்த எழுத்தாளர் தான்.

நான் மறுபடியும் மறுபடியும் கூறுகிறேன். சிஃபி, கப்சாவூட்ஸ் போன்ற தளங்களை முற்றிலுமாக புறக்கணியுங்கள். நமது சக்தியை நிரூபியுங்கள். விகடனில் இன்னும் சிலர் தங்கள் சந்தாவை சாக்கு போக்கு சொல்லி தொடர்வது வேதனைக்குரியது. வருத்ததிற்குரியது.

3) விஜயலக்ஷ்மி சுல்தானுக்கு வந்தது எப்படி?

தற்போது சுல்தான் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி விஜயலக்ஷ்மி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் இவர். விஜய் டி.வி.யில் தொகுப்பாளராக அறிமுகமான இவர் பின்னர் நடித்த 'சென்னை 600028' மற்றும் 'அஞ்சாதே' சூப்பர் ஹிட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

விஜயலக்ஷ்மியின் பாத்திரத்துக்கு முதலில் பேசப்பட்டவர் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக திகழும் இலியானா தான். ஆனால், பிசியான முன்னணி நடிகையாக இருக்கும் தனக்கு சௌந்தர்யா ரஜினி விதித்த நிபந்தனைகள் (சம்பளம் மற்றும் எப்போது கூப்பிட்டாலும் வரவேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள்) ஒத்துவராது என்பதால் அவர் படத்திலிருந்து விலகிக்கொண்டார். அதையடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டவர் தான் விஜயலக்ஷ்மி.

எத்தனையோ பேர் இருக்க இவ்விருவரை ஏன் சௌந்தர்யா அணுகினார்? அதற்க்கு காரணம் இருக்கிறது. அனிமேஷன் கேரக்டராக வரும் சூப்பர் ஸ்டாரின் தோற்றத்திற்கு ஜோடியாக இவ்விருவரும் மிகவும் பொருத்தமாக இருப்பார்கள் என்பதால் தான். இவ்விருவரின் உடற்கட்டும், முகமும், கூந்தலும் அனிமேஷன் செய்வதற்கு எளியது. சூப்பர் ஸ்டாரின் கேரக்டரின் உருவ அமைப்புக்கு பொருத்தமாகவும் இருப்பார்கள். இதில் இரண்டாவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள விஜயலக்ஷ்மி நூறு சதவீதம் பொருத்தமான ஜோடி என்றால் மிகையாகாது.

சூப்பர் ஸ்டாரின் தயக்கம்

தனது ஜோடியாக விஜயலக்ஷ்மியை ஏற்க சூப்பர் ஸ்டார் முதலில் தயங்கினார். இருப்பினும் சௌந்தர்யா அனிமேஷன் கேரக்டரின் தன்மையை எடுத்துக் கூறி தனது தந்தையை கன்வின்ஸ் செய்து சம்மதிக்க வைத்தார்.

சூப்பர் ஸ்டாரின் அனிமேஷன் கேரக்டருக்கு ஜோடியாக நடித்தாலும், நிஜமாகவே சூப்பர் ஸ்டாருடன் நடிப்பதால் ("Motion Capture" செய்வதன் பொருட்டு) விஜி மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். இருக்காத பின்னே? ஒரே படத்தில் உலகம் முழுதும் பரிச்சயமாகும் வாய்ப்பையல்லவா பெற்றிருக்கிறார்.

"ரஜினியுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன்"

சுல்தானில் நடிப்பதற்காக அவர் அதிக நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் அதன் பொருட்டு அவர் மற்ற படங்களில் நடிக்க சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அது குறித்து கூறிய விஜயலக்ஷ்மி, "ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். படத்தில் ஒப்பந்தம் செய்யும்போதே எப்போது கூப்பிட்டாலும் படப்பிடிப்புக்கு வரவேண்டும் என்று கூறித்தான் ஒப்பந்தம் செய்தார்கள். அதை நான் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். புதிதாக படங்களை ஒப்புக்கொல்லும்போதும் அதை அவர்களிடம் கூறிவிடுவேன். அதனால் எந்த பிரச்னையும் இல்லை. ரஜினியுடன் நடிக்க எத்தனை நாட்கள் வேண்டுமானால் காத்திருக்க தயார். அதுவே எனக்கு சந்தோஷம்தான்."

விஜி சுல்தானில் இடம் பெற்றது ஒரு பெரிய கதை. அனிமேஷன் படம் என்பதால் சுல்தானில் ஹீரோயினாக யாரையும் ஒப்பந்தம் செய்யும் திட்டம் முதலில் கிடையாது. காட்சிகள் தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதால், படத்தை இயக்கம் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது தந்தையிடம் பேசி, அவரது கால்ஷீட் வாங்கி, அவரை நிஜத்தில் நடிக்கவைத்து அதை அப்படியே Capture செய்து அதன் மீது 3D Modelling செய்தார். மேற்படி காட்சிகள் பிரமாதமாக வரவே, ஹீரோயினையும் இதுபோல நிஜத்தில் நடிக்கவைத்து Capture செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இலியானாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று அது சரிப்படாமல் போகவே, அடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டவர்தான் விஜயலக்ஷ்மி. சம்பளம் முதல் அனைத்து நிபந்தனைகளையும் அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். விஜியின் தந்தை அகத்தியன், ரஜினியுடன் தமது மகள் நடிப்பது குறித்து தமது மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மகளை ஆசீர்வதித்தார்.

முன்னணி இடத்தை பிடிக்க விஜயலக்ஷ்மியை வாழ்த்துகிறோம்.

4) கரும்பு கசந்தால் குற்றம் யாரிடம்?

எந்திரனுக்கு எதிராக ஏதாவது செய்திகளை எழுதிக்கொண்டேயிருக்கலாம் என்று வக்கிரத்துடன் காத்திருந்த போணியாகாத சில கட்டுரையாளர்களுக்கு இடி போல வந்தது சன் நெட்வொர்க் எந்திரனை தயாரிக்கும் அந்த செய்தி. வேறொன்று மில்லை இனி வாலை இஷ்டத்துக்கு ஆட்ட முடியாதே என்னும் கவலை தான்.

இருப்பினும், மாடு காணாமல் போனவனுக்கு மணியோசை கேட்டுக் கண்டே இருக்கும் என்னும் கதையாக எந்திரனை சுற்றிய நிகழ்வுகள் அவர்களுக்கு எதிர்மறையாகவே தெரிகிறது போல. எந்திரனை வாங்கியிருக்கும் சன்னை கலவரப்படுத்த - கொஞ்சம் மறைமுகமாக - மேற்படி கட்டுரையாளர் (22/12/08 அன்று வெளியான) டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை பதிப்பில் முயன்றிருக்கிறார் என்பது தெளிவாக புரிகிறது.

மனம் போன போக்கில்...

எந்திரனை தயாரிக்கும் பொன்னான வாய்ப்பு தவிர்க்க இயலாமல் ஐங்கரனின் கரத்திலிருந்து நழுவிச் சென்றது எனவும் அதில் அவர்களுக்கு வருத்தம் தான் எனவும் நாம் முன்பே குறிப்பிட்டிருந்தோம். ஆனால் நேற்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் கட்டுரை எழுதியிருக்கும் அந்த செய்தியாளர் எந்திரன் கைமாறியது குறித்து ஐங்கரன் தற்போது நிம்மதி பெரு மூச்சு விடுவதாக குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமா, செலவை எக்கச்சக்கமாக இழுத்துவிட்டதாகவும் அதனால் ஐங்கரன் படத்தை கைமாற்றும் என்னத்திற்கு வந்ததாகவும் ஷங்கர் மீது பழி போட்டுள்ளார். ஷங்கர் பற்றியும் அவரின் Grandeur பற்றியும் தெரிந்தேதான் படத்தை தயாரிக்க முன்வந்தது ஐங்கரன். மேலும் படத்தை துவக்கும்போது ஐங்கரன் வெளியிட்ட பத்திரிகை குறிப்பிலேயே படத்தின் அதிக பட்ஜெட் குறித்தும் அதில் பணியாற்றும் ஹாலிவுட் கலைஞர்கள் குறித்தும் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தது. உண்மை இப்படியிருக்க ஹாலிவூட் கலைஞர்கள் இடம்பெற்றது பற்றியெல்லாம் தன் மனம் போன போக்கில் உளறிக்கொட்டியிருக்கிறார் அந்த எழுத்தாளர்.

ஐங்கரனிலிருந்து எந்திரன் குறித்து இதுவரை யாருமே எதிர்மறையாக கூறாத நிலையில் தமது சொந்த கருத்துக்களை ஐங்கரனில் யாரோ கூறியதாக மேற்படி கட்டுரையாளர் அச்சேற்றியிருக்கிறார்.

மலேசியா மற்றும் சிங்கப்பூரிலேயே பார்த்துவிடுவோம். மற்ற நாடுகளை எங்கே சேர்ப்பது?

அது மட்டுமா, இன்னோர் பெரிய புளுகுமூட்டையை அந்த எழுத்தாளர் கட்டியிருக்கிறார். ரஜினியின் Overseas collection power வெறும் 15 கோடிகள் தானாம். இது எப்படியிருக்கு?

அடப்பாவிகளா.... மலேசியா மற்றும் சிங்கப்பூரிலேயே இந்த தொகையை எங்கள் சிவாஜி ஈட்டியிருக்குமே... அப்படியெனில் எண்ணற்ற மற்ற நாடுகளில் எல்லாம்? என்ன செய்வது... கரும்பு கசக்கிறது என்றால் குற்றம் வாயில் தானே தவிர கரும்பில் அல்லவே....!

ஷங்கரும் அவரது குழுவினரும் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ததையெல்லாம் ஒரு குறையாக கூறியிருக்கிறார் மேற்படி எழுத்தாளர். தமிழ் சினிமாவில் குளிப்பதற்க்கே நட்சத்திரங்கள் மினரல் வாட்டர் கேட்கும் காலமய்யா இது. சூப்பர் ஸ்டார் நடிக்கும் ஒரு படத்தின் இயக்குனரும் அவரது குழுவினரும் முதல் வகுப்பில் பயணம் செய்வது ஒரு குற்றமா?

செலவை இழுத்துவிடுவதில் ஷங்கர் மீது நானும் அதிருப்தி கொண்டிருந்த காலம் உண்டு. ஆனால் முடிவில் தயாரிப்பாளர்களுக்கு ஒன்றிற்கு பல மடங்கு லாபத்தை அவர் பெற்றுக்கொடுக்கிறாரே? அதுவல்லவா முக்கியம்? ஷங்கரின் Grandeur மற்றும் Perfectionism படத்திற்கு வலுவை அல்லவா கூட்டுகிறது....!!!

அரைவேக்காடுகள் லிஸ்ட்டில் மற்றோர் சேர்க்கை

இத்துணைக் காலம் சிஃபியில் ரஜினிக்கெதிராக விஷ விதை தூவிக்கொண்டிருந்தவர் தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் அந்த பணியை செய்துவருகிறார். ஞானி, சாரு நிவேதிதா போன்ற அரைவேக்காடுகள் லிஸ்ட்டில் மேற்படி கட்டுரையாளர் சேர்ந்துவிட்டதை வேறு எப்படி சொல்ல?

[END]

Tuesday, December 23, 2008

அடக்கத்தின் சிகரம் ரஜினி - நானா படேகர் புகழாரம்

நானா படேகர். பாலிவுட்டின் நடிப்பு சக்ரவர்த்தி. பாலிவுட்டின் சிவாஜி கணேசன் என்று இவரை தாராளமாக அழைக்கலாம். அந்த அளவு நடிப்பில் பெயர் பெற்றவர். உடன் நடிப்பவர்கள் அனைவரையும் தன் நடிப்பால் தூக்கி சாப்பிட்டுவிடுவார். எந்த இலக்கணத்திற்கும் கட்டுபடாத ஒரு காட்டுக்குதிரை இவர். கிடைக்கும் படங்களிலெல்லாம் இவர் நடிப்பதில்லை. தனக்கு பிடிக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியாகியிருக்கும் பொம்மலாட்டத்தில் தூள் கிளப்பியிருப்பதாக சொல்கிறார்கள்.

இப்பேர்ப்பட்ட ஒரு நடிகர், சூப்பர் ஸ்டார் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா? படியுங்கள்...

பாலிவுட்டையும் தமிழ் சினிமாவையும் ஒப்பிடக்கூடாது. இங்கு ரஜினி, கமல் உள்ளிட்ட ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். தென்னிந்திய நடிகர்கள் மீது நான் அதிகபட்ச மதிப்பு வைத்திருக்கிறேன். ரஜினிகாந்த் ஒரு தலைசிறந்த கல்வி நிறுவனம் போல. அவரிடத்தில் 'தான்' என்னும் ஆணவம் துளியும் இல்லை. இத்தனை ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்தாலும், அவர் இன்னும் மனிதாபிமானத்துடனும், அடக்கத்துடனும் நடந்துகொள்கிறார். அவர் காலை தொட்டு வணங்க கூட நான் தயார். அதே போல கமல் ஹாசனும், மொதன்லாலும் இருக்கிறார்கள். கே.பாலச்சந்தர், விஸ்வநாத், மற்றும் சிவாஜி கணேசன் போன்ற சிறந்த கலைஞர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிட்டாதது சோகமே.

மற்றபடி பொம்மலாட்டம் படத்தில் என் பாத்திரத்தை ரசித்ததற்கு சென்னை மக்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். உங்கள் மூலம் ரஜினிக்கு ஒரு "Hi" சொல்ல ஆசைப்படுகிறேன்.

ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தான் நானா இவ்வாறு கூறியிருந்தார்.

இங்குள்ள வெந்தது வேகாதது, நண்டு சிண்டு நார்த்தங்காய், விடலை, விரல் சூப்பும் நடிகர்கள் நானா படேகர் சொல்வதை கொஞ்சம் கேட்கவேண்டும். அப்போதாவது தாம் எவ்வளவு பெரிய மனிதர் மற்றும் நடிகர் ரஜினியுடன் வாழ்ந்துவருகிறோம் என்று அவர்களுக்கு உறைக்கிறதா என்று பார்க்கலாம்.

[END]


Monday, December 22, 2008

"Sir, one more take please..." பவ்யமாக கேட்ட ஷங்கர், அசராது நடித்த சூப்பர் ஸ்டார்!! - Endhiran Shooting Exclusive

ண்ணூர் துறைமுகத்தில் நடக்கும் எந்திரன் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது. இந்த இடைப்பட்ட மூன்று நாட்களில் ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிலவற்றை படம்பிடித்தார் ஷங்கர்.

படப்பிடிப்பில் அனைவரையும் கவர்ந்தது பம்பரமாக சுற்றி சுழன்று கொண்டிருந்த பாரதிராஜாவின் மகன் மனோஜ். மனோஜ் எந்திரனில் உதவி இயக்குனர்களில் ஒருவராக பணிபுரிகிறார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். லொக்கேஷன்களை இறுதி செய்வது அவர் பொறுப்பில் விடப்பட்டுள்ளது.

சார் ஒன் மோர் டேக் ப்ளீஸ்...

நேற்று எடுக்கப்பட்ட காட்சிகளில் சூப்பர் ஸ்டார் கூடுதலாக சில டேக்குகள் வாங்கினார். ஒவ்வொரு முறையும் ஷங்கர் சூப்பர் ஸ்டாரிடம் வந்து , "சார் ஒன் மோர் டேக் ப்ளீஸ்" என்று மிகவும் பவ்யமாக கேட்டார். சூப்பர் ஸ்டார் தான் Director's artiste ஆயிற்றே, எனவே எந்த வித முகசுளிப்போ பந்தாவோ இன்றி பொறுமையாக ஷங்கருக்கு திருப்தி வரும் வரை நடித்து கொடுத்தார்.

நேற்று எந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டதால் பாதுகாப்பு பலமாக இருந்தது. புகைப்படம் எடுக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. மீறி எடுத்தவர்கள் கேமிரா பறிமுதல் செய்யப்பட்டு பிறகு திருப்பி ஒப்படைக்கப்பட்டது.

எந்திரனின் நெற்றியில் பிளாஸ்திரி?

எந்திரனாக சூப்பர் ஸ்டார் மிடுக்காக காணப்பட்டார். எந்திரனின் நெற்றியில் பிளாஸ்திரி போல ஏதோ காணப்பட்டது. (அனேகமாக அது Micro Chip அல்லது Antenna வாக இருக்கலாம்). எந்திரனை சூப்பர் ஸ்டார் கண்டிப்பது போலவும், அதற்க்கு எந்திரன் ஏதோ பதிலளிப்பது போலவும் காட்சி படம்பிடிக்கப்பட்டது. இது Double Action subject என்பதால், தனித் தனியாக சூப்பர் ஸ்டார் சம்பந்தப்பட்ட காட்சிகளும் எந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டன. ஒரு ரஜினி இன்னொரு ரஜினியிடம் (எந்திரன்) வசனம் பேசும்போது எதிர் தரப்பு நபருக்கு பதில் Mike Stand உபயோகப்படுத்தப்பட்டது.

Tavera & Innova

இந்த படப்பிடிப்பில் புத்தம் புது பென்ஸ் கார் பயன்படுத்தப்பட்டது. (அனேகமாக அது நான் முன்பு கூறிய சூப்பர் காராக கூட இருக்கலாம்).

நேற்றைய படப்பிடிப்பு மாலை 6 மணிக்கே துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. இடைவிடாமல் நடந்த படப்பிடிப்பு அதிகாலை 2.30 மணிக்கு முடிந்தது. காத்திருந்த 'Tavera' வில் சூப்பர் ஸ்டார் கிளம்ப, ஐஸ்வர்யா ராய் 'Innova' வில் கிளம்பினார்.

அடுத்த ஷெட்யூலுக்கு எந்திரன் குழு குழு மனை கிளம்பாலாம் என்று தெரிகிறது.

எண்ணூரில் எந்திரன் படப்பிடிப்பு பற்றிய நம் முந்தைய செய்தி:

டாப் கியரில் எந்திரன்! எண்ணூரில் படப்பிடிப்பு!!

http://www.onlyrajini.com/?p=3444

[END]


Sunday, December 21, 2008

மக்கள் சேவையே மகேசன் சேவை - தலைவர் பிறந்தநாளில் பெருமிதப்பட வைத்த நெல்லை ரசிகர்கள்

ல்வேறு மாவட்டங்களிலிருந்து நமக்கு பிறந்த நாள் நலப் பணிகள் தொடர்பான செய்திகள் வந்த வண்ணமுள்ளன. இம்முறை கொண்டாட்டங்களை தவிர்த்துவிட்டு ஆக்கப்பூர்வமான பல நலப்பணிகளை செய்துள்ளனர் நம் ரசிகர்கள்.

அவற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளவை அன்னதானமும், ரத்த தானமும். இதுவரை தமது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் குறித்து, இப்படி இப்படித்தான் கொண்டாடவேண்டும், இவைகளை தான் செய்யவேண்டும் என்று ரஜினி கூறியதில்லை. ஆனால் இம்முறை, இலங்கை தமிழர் படும் துயரை கருத்தில் கொண்டு கொண்டாட்டங்களை தவிர்க்கும்படியும் அதற்க்கு பதில் மக்களுக்கு பயன் தரக்கூடிய நலப்பணிகளை மேற்க்கொள்ளும்படியும் கூறியிருந்தார். அதை கூட அவர் நேரடியாக கூறவில்லை. தற்போது ரசிகர் மன்ற நிகழ்வுகளை கவனித்து வரும் சுதாகர் மூலமாக தான் கூறியிருந்தார். தலைவர் சொல்லை தட்டாத நம் ரசிகர்கள் பல்வேறு நலப்பணிகளை செய்து திக்குமுக்காடவைத்துவிட்டனர்.

இந்த சக்திகள் எல்லாம் ஒருங்கே சேரும் நாள் நிச்சயம் தமிழகம் சொர்க்கமாகும். அந்த நன்னாளை எதிர்பார்த்து காத்திருப்போமாக.

அசத்திய நெல்லை ரசிகர்கள்

சூப்பர் ஸ்டாரின் 59 வது பிறந்த நாளை முன்னிட்டு, நெல்லை மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தினர் அதன் தலைவர் பானுசேகர் தலைமையில் பல்வேறு நலப் பணிகளை மேற்கொண்டனர்.

பாளையங்கோட்டை - பெருமாள்புரம் Hope பௌண்டேஷனில் உள்ள எய்ட்சால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

பாளையில் உள்ள பார்வையிழந்த முதியவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

பாளை தெற்கு பஜார் அரசரடி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

11/12/2008 அன்று மாலை நெல்லை ஷீபா மருத்துவமனையில் சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது. திரளான ரசிகர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்கள் ரத்தத்தை தானம் அளித்தனர்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்கள் விபரம் இணைக்கப்பட்டுள்ள செய்தித்தாள் கட்டிங்கில் உள்ளது.

[END]