Friday, December 19, 2008

டாப் கியரில் எந்திரன் - எண்ணூரில் படப்பிடிப்பு!!

எந்திரனை எச்சரித்த ரஜினி

எந்திரன் தொடர்பான சிக்கல்கள் சன் குழுமம் வாங்கிய பிறகு தீர்ந்ததையடுத்து, உடனடியாக படப்பிடிப்பை துவங்கிவிட்டார் இயக்குனர் ஷங்கர்.

தற்போது எண்ணூர் துறைமுகத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிற்கான சாதனங்கள் காலை முதல் குவியத்துவங்கின. கண்ணை கூசும் Focus Light கள் உதவியுடன் ராட்சத ஜெனரேட்டோர்கள் உறும அந்த இடமே திமிலோகப்படுகிறது.

படப்பிடிப்பை ரசித்த ஊழியர்கள்

படப்பிடிப்பு சாதனங்கள் காலை வந்து இறங்கியவுடன், இது வேறு ஏதோ படத்திற்கு என்று தான் அனைவரும் நினைத்தனர். ஆனால் துறைமுக ஊழியர்கள் யூனிட்டாருடன் பேச்சு கொடுத்தவுடன் தான் தெரிந்தது எல்லாம் எந்திரனுக்காக என்று. எண்ணூர் துறைமுகத்தில் பணி முடிந்து வீடு திரும்பவேண்டிய பலர், தற்போது படப்பிடிப்பை ரசித்து வருகின்றனர்.

இரண்டு கேரவன்கள் படப்பிடிப்பு தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒன்று சூப்பர் ஸ்டாருக்காக. இன்னொன்று ஐஸ்வர்யா ராய்க்காக. சூப்பர் ஸ்டார் க்ரே கலர் கோட் சூட் அதனுள் சிவப்பு நிற சட்டை அணிந்து படு ஸ்மார்டாக இருந்தார். அவரின் ஸ்டைலுக்கு மாட்சாக ஐஸ்வர்யா ராய் உடையணிந்திருந்தார்.

துறைமுக இயக்குனர் நேரில் வந்து வாழ்த்து

10.00 மணி படப்பிடிப்பிற்கு 8.30 மணிக்கே சூப்பர் ஸ்டார் வந்துவிட்டார். எண்ணூர் துறைமுகத்தின் CMD (Chief Managing Director) நேரில் வந்து சூப்பர் ஸ்டாருக்கு போக்கே அளித்து வாழ்த்து தெரிவித்தார். எண்ணூர் துறைமுகத்தில் சூப்பர் ஸ்டாரின் படப்பிடிப்பு நடைபெறுவதற்கு தமது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

இணைக்கப்பட்டுள்ள படத்தில் காணப்படும் சிறிய கப்பல்கள் வரும் இடத்தின் அருகில் தான் படப்பிடிப்பு நடைபெற்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். அதிகாலை 2.30 மணி வரை படப்பிடிப்பு நடைபெற்றது. சூப்பர் ஸ்டாருக்காக நிறுத்தப்பட்டிருந்த கேரவனை அவர் கடைசிவரை பயன்படுத்தவேயில்லை.

ரஜினி, ரோபோ மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்தார் ஷங்கர்.

ரஜினியே ரோபோவாகவும் நடிப்பதால் ரோபோவுடன் ரஜினி பேசுவது போன்ற காட்சிகளில் ரோபோவுக்கு பதில் ஒரு Mike Stand பயன்படுத்தப்பட்டது.

எந்திரனை எச்சரித்த ரஜினி

சூப்பர் ஸ்டார் கோபமாக ரோபோவிடம், "நீ தொடர்ந்து இதே மாதிரி பண்ணிக்கிட்டு இருந்தா உன்னை பிரிச்சு கடல்ல போட்டுருவேன், ஜாக்ரதை" என்று எச்சரிப்பது போல காட்சி எடுக்கப்பட்டது. ஹூம்... ரோபோ என்ன குறும்பு பண்ணிச்சுன்னு தெரியல..!! (I will dismantle you and throw into the sea!!)

விரிவான தகவல் நாளை.

குறிப்பு:

இரவில் படப்பிடிப்பை நடத்துவது தான் ஷங்கரின் ஸ்டைல். சிவாஜி படபிடிப்பு பெரும்பாலும் இரவில் தான் நடந்தது. பொதுமக்களுக்கு இடையூறு இருக்காது, நேர விரயம் ஏற்படாது உள்ளிட்ட பல சௌகரியங்கள் இதில் இருக்கின்றன.

Stay tuned....

[END]