Tuesday, December 30, 2008

தலைவரின் நிகழ்ச்சிகளுக்கு என்றுமே மவுசு தான்...

ரண்டு நாட்களுக்கு முன்பு, சன் மியூசிக் தொலைக்காட்சியில் இப்போதெல்லாம் அவர்கள் ஷூட் செய்த பழைய திரைப்பட விழாக்களை, கலைநிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பு செய்துவருகின்றனர்.

அந்த வகையில் பொதுவான அனைத்து நட்சத்திரங்களும் பங்கேற்ற கலை விழாக்களை அடுத்து அவர்கள் அதிகம் ஒளிப்பரப்புவது நம் சூப்பர் ஸ்டாரின் பட விழாக்களைதான். எனக்கு தெரிந்து வேறு எந்த நடிகரின் பட வெற்றி விழாக்களையும் அவர்கள் ஒளிபரப்பியதாக தெரியவில்லை. (எந்திரன் தயாரிப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடந்த மாதமும் அதற்க்கு முந்தைய மாதமும் கூட அவர்கள் இதே போல நம் விழாவொன்றை ஒளிபரப்பினார்கள்). மேற்க்கண்ட சூப்பர் ஸ்டாரின் நிகழ்ச்சிகளின் பொது சன் மியூசிக்கின் TRP ரேட்டிங் நிச்சயம் கூடியிருக்கும்.

பிடுங்கு ரிமோட்டை...

இரண்டு நாட்களுக்கு முன்பு, சன் மியூசிக்கில் சந்திரமுகி படத்தின் 200 வது நாள் விழா ஒளிபரப்பப்பட்டது. நான் அப்போது வெளியே இருந்தேன். நம் நண்பர்கள் நிறைய பேர் எனக்கு இது குறித்து SMS அனுப்பினர். ஏற்கனவே பார்த்தது தானே என்று நான் உடனே வீட்டிற்கு செல்ல ஆர்வம் கட்டவில்லை. பணியெல்லாம் முடித்த பின்பு இரவு நான் வீட்டிற்கு திரும்பிய பின், டி.வி முன் உட்கார்ந்தேன். ஊரில் இருந்து வந்திருந்த எனது கஸின் ஒருவர் வேறு ஏதோ நிகழ்ச்சியை பார்த்துகொண்டிருந்தார். அவரிடமிருந்து அவசர அவசரமாக ரிமோட்டை பிடுங்கி சன் மியூசிக்கை ட்யூன் செய்தேன்.

பாதி முடிந்துவிட்டிருந்தது

நல்லவேளை நிகழ்ச்சி போய்க்கொண்டிருந்தது. சூப்பர் ஸ்டார் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அவரது உரை பாதி முடிந்துவிட்டிருந்தது. அதனால் என்ன, தேனில் ஊறிய பலாச்சுளை பாதிகிடைத்தால் என்ன சாப்பிடமாட்டோமா என்று அதை ரசிக்க ஆரம்பித்தேன்
.
நிகழ்ச்சியை எனது கஸினும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார். "என்னங்க நீங்க எனக்கு போன் பண்ணி சொல்லியிருக்ககூடாதா? நான் இதை பார்த்துக்கிட்டுருந்திருப்பேனே..." என்று என்னை கோபித்துக்கொண்டார்.

வீட்டுக்குள் இப்படி கை தட்டி விசில் அடிப்பவர்களை...

உரையை ரசித்துகொண்டிருக்கையில் ஒரு கட்டத்தில் நான் பலமாக கையை தட்டி விசில் அடிக்க என்னை வித்தியாசமாக பார்த்தார். வீட்டுக்குள் இப்படி கை தட்டி விசில் அடிப்பவர்களை இப்போது தான் பார்க்கிறார் போல...

அடாடா. ... என்ன ஒரு உரை அது.... ச்சே.. முழு உரையை மிஸ் பண்ணிட்டோமே என்று ரொம்ப ஃபீல் செய்தேன்.... (எனக்கு நிகழ்ச்சி முடிந்த பின்னர், போன் செய்த நண்பர்களும் இதையே தான் கூறினார். "என்ன சுந்தர் இது இப்படி பிச்சு உதர்ராறு தலைவர். இப்போ பார்த்தா கூட ப்ரோக்ரேமும் சார் ஸ்பீச்சும் ப்ரெஷ்ஷா இருக்கு. ச்சே... லேட்ட வந்ததுனால முழு ப்ரோக்ரேமும் பார்க்கமுடியல..." என்று அங்கலாய்த்தனர் .)

அனைத்து சூழ்நிலைகளுக்கும்...

சூப்பர் ஸ்டாரின் அந்த உரை ஏதோ நேற்று பேசியது போல உள்ளது.

"சோதனை வந்தாதான்யா சாதனை வரும்..."

"நல்லவங்க நிச்சயம் வாழ்வாங்க. என்ன... கொஞ்ச லெட் ஆகும் அவ்வளவுதான்"

"உங்களுக்கு நல்ல படத்தை கொடுக்கணும்னு தான் நான் ரொம்ப டயம் ஒவ்வொரு படத்துக்கும் எடுத்துக்குறேன்"

இப்படி அவர் கூறியது சமீபத்திய சோதனைகள், சர்ச்சைகள் மற்றும் இப்போது அவர் நடித்து வரும் எந்திரன் என அனைத்து சூழ்நிலைகளுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் பேசிய பேச்சு அப்படியே பொருந்தியது பெரிய ஆச்சரியம் தான்.... முரண்பாடு என்பது துளியும் அவரது பேச்சில் இல்லை.

சில நடிகர்கள் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அளித்த ஒரு சிறிய பத்திரிகை பேட்டியை கூட நம்மால் படிக்க முடியவில்லை. அந்தளவு முரண்பாடு, தம்பட்டம், புளுகு.... ஆனால் தங்க தலைவர்? 'கொடி பறக்குது' படத்தில் ஒரு வசனம் வரும். "இன்னிக்கி ஒரு பேச்சு... நாளைக்கு ஒரு பேச்சு இல்லே சார் நம்மகிட்டே. மூச்சிருக்கும் வரை ஒரே பேச்ச்சு... ஆமாமாம்!!" எவ்வளவு உண்மை..!!

[END]