Tuesday, September 28, 2010

‘எந்திரனின் அபார முன்பதிவு சாதனை..!’ திரையரங்குகள் என்ன கூறுகின்றன? – நமது Exclusive Advance Booking Report 3

ந்திரன் ரிசர்வேஷன் சாதனை குறித்து நீங்கள் செய்திகள் படித்திருந்தாலும் பார்த்திருந்தாலும் எந்திரன் ரிசர்வேஷன் எப்படி? பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்? என சம்பந்தப்பட்ட திரையரங்குகளையே கேட்டுவிடுவதென களமிறங்கினோம்.

ரசிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்ததைவிட சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது எந்திரன் முன்பதிவிற்கு. இத்துனை தியேட்டர்களில் திரையிட்டும் எந்திரன் படத்திற்கான டிக்கட்டுகளை ரசிகர்கள் அள்ளி சென்றுவிட்டனர். தயாரிப்பு தரப்பிலும் exhibitors தரப்பிலும் மகிழ்ச்சியில் திளைத்துவருகின்றனர்.

DSC 9354 640x465  ‘எந்திரனின் அபார முன்பதிவு சாதனை..!’ திரையரங்குகள் என்ன கூறுகின்றன? –  நமது Exclusive Advance Booking Report 3

பண்டிகைகால ரயில்வே டிக்கட்டுக்களை போல ஆன்லைன் டிக்கட்டுகள் பறந்துகொண்டிருக்கின்றன. புக் செய்ய முடிவு செய்து, க்ளிக் செய்வதற்கு முன்பாகவே தீர்ந்துபோய் பல தியேட்டர்களில் ஆன்லைன் பதிவு பட்டையை கிளப்பியிருக்கிறது. (சென்னையில் மட்டும் 42 தியேட்டர்ஸ் சார். 42 தியேட்டர்ஸ். ஞாபகம் வெச்சுகோங்க!)

நாம் முதலில் பேசியது தேவி திரையரங்கம்.

ரிசர்வேஷன் தினத்தன்று மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்து, வரிசையில் கால் கடுக்க நின்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது முதல் நாள் டிக்கட்டுகளை அள்ளி வழங்கிய திரையரங்குகளில் தேவியும் ஒன்று. தேவி, தேவி பாரடைஸ் என இரண்டு திரையரங்குகளில் எந்திரன் இங்கு திரையிடப்பட்டுள்ளது.

காலை நான்கு மணிமுதலே இங்கு ரசிகர்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர். சிலர் முந்தைய நாள் இரவே வந்துவிட்டனர். தேவி நிர்வாகம் மற்றும் போலீசார் சேர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்து, டிக்கட்டுகளை சலிக்காமல் வழங்கினர்.

ரிசர்வேஷன் துவங்கிய ஒரு மணிநேரத்தில் மூன்று நாட்கள் ஃபுல்லாகிவிட்டது. பொதுவாகவே ரசிகர்கள் அனைவருக்கும் படத்தை தேவியில் அந்த பிரம்மாண்ட ஸ்க்ரீனில் ஒரு தடவையாவது எந்திரனை பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. சென்னையில் அண்ணா சாலையில் பிரதான இடத்தில் இருப்பதால், தேவி திரையரங்கில் எந்திரன் நிச்சயம் மக்களை பெரிதளவில் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.

DSC 9352  ‘எந்திரனின் அபார முன்பதிவு சாதனை..!’ திரையரங்குகள் என்ன கூறுகின்றன? –  நமது Exclusive Advance Booking Report 3

"ஹைய்யா... நான் டிக்கட் வாங்கிட்டேன்," மாற்று திறனாளியின் மகிழ்ச்சி!

எந்திரனின் ரிசர்வேஷன் சாதனை குறித்து தேவி திரையரங்க மேனஜர் திரு.வி.ஆர். சங்கர் நம்மிடம் கூறுகையில், “எந்திரன் படத்திற்கு மிக பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. எங்கள் வளாகத்தில் டிக்கட்டுகளுக்கு கடும் பிரஷர் ஏற்பட்டுள்ளது. முதல் 5 நாளைக்கு படம் முழுக்க முழுக்க ஃபுல்லாகிவிட்டது. பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து அதற்க்கு பிறகு ஒரு வாரம் வரை டிக்கட்டுகள் புக் செய்து வருகிறோம். அவையும் மளமளவென புக்காகி வருகிறது. பொதுமக்கள் மற்றும் family audience அதிகளவில் புக் செய்ய திரண்டு வருகிறார்கள். அவர்களில் அநேகம் பேர், நீண்ட நாளுக்கு பிறகு குடுமபத்துடன் திரையரங்கிற்கு வரப்போவதாக கூறுகின்றனர். இன்னும் பலர், தங்கள் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு வந்து புக் செய்கின்றனர். இத்துனை தியேட்டர்களில் படம் வெளியிட்டும் இந்தளவு ரிலீசுக்கு முன்பாகவே வரவேற்பை பெற்றுள்ளது என்றால் அதற்க்கு முழு முதல் காரணம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். எம்.ஜி.ஆருக்கு பிறகு அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு அளவிடமுடியாதது. அடுத்து இந்த படத்திற்கு அமைந்துள்ள பிரம்மாண்ட கூட்டணி ஒரு பெரிய ப்ளஸ். கூடவே சன் பிக்சர்சின் அருமையான ப்ரோமோஷன்! ஒரு படத்தின் வெற்றியை உறுதி செய்வதற்கு வேறென்ன வேண்டும்?”

அடுத்து நாம் பேசியது, சென்னையின் உதயம் தியேட்டர் நிர்வாகத்திடம். திரையரங்க உரிமையாளர் திரு.மோகன் நம்மிடம் பேசியபோது, “ட்ரெயிலர் திரையிட்டபோதே, படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. தற்போது எந்திரன் டிக்கட்டுகளுக்கு ஏற்பட்டுள்ள அதீத பிரஷரை அடுத்து நாம் என் செல்போனை சுவிச் ஆப் செய்துவிட்டேன். ரஜினியின் படம் ஒவ்வொன்றும் ரிலீஸ் ஆகும்போதும் இப்படித் தான் செய்யவேண்டியிருக்கிறது. எங்கள் வளாகத்தை பொறுத்தவரை 8 ஆம் தேதி வரை அனைத்தும் ஃபுல்லாகிவிட்டது. ட்ரெயிலரை திரும்ப திரும்ப தியேட்டர்களிலும் டி.வி.க்களிலும் பார்த்த பொதுமக்களுக்கு இதன் மீது ஏற்பட்ட ஆர்வமும் இந்த பிரம்மாண்ட ரிசர்வேஷனுக்கு காரணம். அதுமட்டுமல்ல, இந்தளவு செலவு செய்திருக்கிறார்களே, அப்படி என்ன தான் படத்துல இருக்கு? என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்க்கு முன்பு சூப்பர் ஸ்டாரின் சிவாஜிக்கு தான் இப்படி ஒரு ரெஸ்பான்சை பார்த்திருக்கிறேன். இன்னும் கூட அதிகமான நாட்களுக்கு டிக்கட்டுகளை கொடுக்கும்படியும், ரிசர்வேஷனை ஓபன் செய்யும்படியும் பொதுமக்கள் எங்களை கேட்டு வருகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை ரிசர்வேஷன் கொடுப்பதில் கட்டுப்பாடுகள் உள்ளன. அதை மீறி நாங்கள் எதுவும் செய்வதில்லை. ஒன்றே ஒன்று உங்கள் ரீடர்சுக்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். எந்திரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும். நீங்களும் திரும்ப திரும்ப படத்தை பார்க்கப்போகிறீர்கள்! குழந்தைகளை படம் பெரிய அளவில் ஈர்க்கும்!!” என்று முடித்துக்கொண்டார் திரு.மோகன்.

DSC 9356 640x425  ‘எந்திரனின் அபார முன்பதிவு சாதனை..!’ திரையரங்குகள் என்ன கூறுகின்றன? –  நமது Exclusive Advance Booking Report 3

தேவி தியேட்டர் - அடிக்கு ஒரு போலீஸ் நிற்பதை கவனியுங்கள்!

அடுத்து நாம் பேசியது சங்கம் சினிமாஸ். இந்த காம்ப்ளெக்சில், சங்கம், பத்மம், ரூபம் என மூன்று திரையரங்குகள் உள்ளன. இங்கு எந்திரன் ரெஸ்பான்ஸ் எப்படி? பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்?

சங்கம் சினிமாஸ் MANAGER & HEAD, HR திரு.கார்த்திக் கூறுகையில், “முதல் நான்கு நாட்களுக்கு படம் எங்கள் வளாகத்தில் அனைத்து ஸ்க்ரீன்களிலும் புல்லாகிவிட்டது. 40 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் ஸ்க்ரீன் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இது ஒரு மிகப் பெரிய சாதனை.” என்றார் கார்த்திக்.

“இதற்க்கு என்ன காரணமாக இருக்கும்?” என்றோம் நாம்.

“வேறு என்ன சார் காரணமாக இருக்கமுடியும்? ‘ரஜினி’ என்ற ஒரு மந்திரச் சொல் தான். அந்த மந்திரம் தற்போது தன்னுடன் இரு பிரமாண்டங்களையும் சேர்த்து கூட்டிவருகிறது. வரவேற்ப்பு கேட்கவேண்டுமா?” நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே டிக்கெட்டுகள் கேட்டு பல மட்டங்களில் இருந்தும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் போன்கால்களில் பதிலளிக்க முடியாது கார்த்திக் திணறிக்கொண்டிருந்தார்.

அடுத்து நாம் சந்தித்தது சென்னையின் the most happening தியேட்டரான ஆல்பட். மேனேஜர் திரு.மாரியப்பனை அவரது அறையில் சந்தித்தோம். டிக்கட்டுகள் கவுண்டரில் அட்வான்ஸ் புக்கிங் செல்லும் நிலவரத்தை பார்வையிட்டுக்கொண்டிருந்தார். முகத்தில் எதையோ சாதித்த திருப்தி தெரிந்தது. கூடவே, டிக்கட்டுக்கான பிரஷரை சமாளிக்க முடியாது அவதியுறும் டென்ஷனும் தெரிந்தது.

“எந்திரனின் இந்த உச்சகட்ட எதிர்ப்பார்ப்பிற்க்கும் காரணம் ரஜினி.. ரஜினி தான். அவர் படம் திரையிடும்போதேல்லாம் முதல் நாள் ஷோவுக்கான டிக்கட் கேட்டு பெரிய பெரிய இடங்களில் இருதேல்லாம் ப்ரெஷர் வரும். இந்த படமும் விதிவிலக்கல்ல. இன்றைய நிலவரத்தை வைத்து சொன்னால் படம் மிகப் பெரிய ஹிட்டாகும் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை வந்த ரஜினி படங்களின் சாதனை அனைத்தையும் இது முறியடிக்கும்.” என்று முடித்துகொண்டார் திரு.மாரியப்பன்.

கமலா திரையரங்கில் விசாரித்ததில் 12 நாட்கள் வரை ஹவுஸ்புல்லாகிவிட்டதாக கூறினர். சாலிகிராமம் மற்றும் வடபழனி பகுதியில் உள்ள பெரும்பாலனவர்கள் கமலாவில் டிக்கட்டுகளை புக் செய்திருப்பதாக ஊழியர் ஒருவர் நம்மிடம் கூறினார். தவிர, கார்பரேட் புக்கிங்கும் பெருமளவில் இங்கு நடைபெற்றுள்ளது.

நாம் பேசிய, சந்தித்த பல திரையரங்குகளில் நமக்கு முதல் நாள் முதல் ஷோ டிக்கட்டுகள் சுலபமாக கிடைககும் வாய்ப்பிருந்தும் நண்பர்களுடன் படம் பார்க்கவிருப்பதால் அவர்களின் ticket offer ஐ மறுத்துவிட்டேன். (எனக்கு கொடுக்கிறேன்னு சொன்னா, என் நண்பர்களுக்கும் சேர்த்து கொடுங்கன்னு எப்படி கேட்பதாம்?).

படம் எப்படி வந்திருக்கிறது? விநியோகஸ்தர்களின் கருத்து என்ன? என்று தியேட்டர் வட்டாரங்களில் விசாரித்தபோது….

“படம் பட்டையை கிளப்பும் வகையில் வந்திருப்பதாக நமக்கு தகவல் கிடைத்தது. தவிர இதுவரை வந்த ரஜினி படங்களிலேயே இந்தப் படத்திற்கு அதிகபட்ச ரிப்பீட் ஆடியன்ஸ் இருப்பார்கள்” என்றும் உறுதியாக கூறுகிறார்கள்.

ரிசர்வேஷன் துளிகள் :

* அனைவரும் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று: வழக்கத்திற்கு மாறாக, ஞாயிற்று கிழமைக்கு பதில் இம்முறை ரிசர்வேஷன் சனிக்கிழமை துவங்கியதால், பலரால் முன்பதிவு செய்ய செல்ல முடியவில்லை. (எனக்கு லேட்டானது காரணமே, ஞாயிற்றுகிழமை தான் ரிசர்வேஷன் ஸ்டார்ட் ஆகும்னு நினைச்சி மெத்தனமா இருந்துட்டேன். ஆபீசுக்கு திடீர்னு என்னால லீவ் சொல்லமுடியலே. ரிலீசுக்கு வேற லீவ் போடணுமே..!) ரிசர்வேஷனுக்கு தியேட்டர்களில் திறளக்கூடியர்வர்களில் பெரும்பாலனவர்கள் பணி செல்பவர்கள். தொழிலாளர்கள், ஓட்டல் வேலை மற்றும் கூலி வேலை, செய்பவர்கள். ஆனால் அதையும் மீறி ரிசர்வேஷனுக்கு கூட்டம் அதிகமாக வந்ததென்றால், அது சூப்பர் ஸ்டாரை தவிர வேறு யாருக்காக இருக்க முடியும்?

* காலை ஒன்பது மணிக்கு துவங்கவேண்டிய முன்பதிவு பல தியேட்டர்களில் அதிகாலையே துவங்கிவிட்டது. ஒன்பது மணிக்கு தானே அன்று சாவகாசமாக தாமதமாக வந்தவர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.

* ரிசர்வேஷன் ஆரவாரம் மற்றும் அந்த களேபரங்களை பதிவு செய்ய எட்டு மணிக்கு மேல் நாம் சென்றதால் நமக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

* சத்யம் மற்றும் தேவி திரையரங்குகளில் காலை 9 மணிக்கு ரிசர்வேஷன் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், பல தியேட்டர்களில் இரவு முதலே வந்து மக்கள் வரிசையில் நிற்க துவங்கிவிட்டனர்.

* ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகமாகிக்கொண்டே போனது. இப்போதே இப்படியென்றால், ரிசர்வேஷன் துவங்கும்போது காலை 9 மணிக்கு எப்படி இருக்கும் என்று கலவரப்பட்ட போலீசார், திரையரங்கு நிர்வாகத்திடம் பேசி, முதலில் வரிசையில் காத்திருப்பவர்களுக்கு டிக்கட்டுகளை கொடுத்து அனுப்பிவிடுங்கள் என்று கூற, அதன்படி பல தியேட்டர்களில் அதிகாலையே டிக்கட்டுகள் தரப்பட்டது. இதனால், நாம் கேமிராவுடன் சென்ற போது, ரிசர்வேஷனுக்கு கூடிய மொத்த கூட்டத்தையும் கவர் செய்ய முடியவில்லை.

* ரிசர்வேஷன் கவுண்டர் முன் நிறைய கூட்டத்தை போலீசார் அனுமதிக்கவில்லை. பின்பக்கமாக தேக்கி, வரிசையில் நிற்க வைக்கப்பட்டிருந்தவர்களை ஒவ்வொருவராக அனுமதித்தவண்ணமிருந்தனர். (பார்க்க படம்!). இதன் மூல தள்ளுமுள்ளு தவிர்க்கப்பட்டது. தங்களுக்கு தேவையான டிக்கட்டுகளை பொறுமையாக ரசிகர்கள் ரிசர்வ் செய்ய வழி கிட்டியது.

* ஊனமுற்ற இளைஞர் ஒருவர் வரிசையில் காத்திருந்து முதல் டிக்கட்டை பெற்றார். அவர் முகத்தில் அத்துணை மகிழ்ச்சி. (தினகரன் நாளிதழில் இந்த படம் இடம் பெற்றது!)

* சத்யம் திரையரங்கில் கிட்டத்தட்ட அதிகாலை 3000 பேர் காத்திருந்தனர். ரசிகர்களின் ஆரவாரம் அதிகரித்துக்கொண்டே போனதால் விதிகளையெல்லாம் தளர்த்தி 5:00 மணிக்கெல்லாம் டிக்கட்டுகள் தர ஆரம்பித்துவிட்டது நிர்வாகம். (இந்தமுறை, கார் பார்க்கிங் என்ட்ரன்ஸ் வழியாக க்யூ அனுமதிக்கப்பட்டது. வெளியே ஒயிட்ஸ் ரோட்டை தொட்டு அதன் பாதி வரை வரிசை காணப்பட்டது.)

* டிக்கட்டுகளை புக் செய்தவர்கள் தங்கள் நண்பர்களுக்கு போன் செய்து, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

* போலீசார் பலர் தங்களின் பங்கிற்கு பல திரையரங்குகளில் தங்கள் உயரதிகாரிகளுக்கும் குடும்பத்தினருக்கும் டிக்கட்டுகள் புக் செய்தது தனி கதை.

ஆக ரிலீசுக்கு முன்பாகவே வெற்றியை உறுதி செய்துவிட்டான் எந்திரன்.

* இறுதியாக நாம் நமது FDFS ஐ பெரம்பூரில் உள்ள பிருந்தாவில் பார்க்கவிருக்கிறோம். பிருந்தா – சென்னையிலேயே Hottest Rajini Hub. இந்த முறை சென்னையை கலக்கப்போவது பிருந்தா & காசி தான். இந்த இரண்டு தியேட்டர்களும் இந்த முறை கலக்கவிருக்கின்றன. ஏற்கனவே பிருந்தா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதி முழுதுவதும் அசத்தலான பேனர்களால் நிரம்பி வழிகிறது. தவிர, பிருந்தா நமக்கு சென்டிமென்ட்டாக மிகவும் ராசியான் தியேட்டர். நான் அங்கு FDFS பார்க்கும் அனைத்து தலைவர் படங்களும் இதுவரை சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன – பாட்ஷா, முத்து, அருணாசலம், படையப்பா! (பெரம்பூரில் ஆறு வருடங்களுக்கும் மேல் நான் வசித்திருக்கிறேன்.)

————————————————————
Note: For updates on media news about thalaivar, pls refer to the RSS feed of our thalaivarnews.blogspot.com at the bottom of the home page our website.
————————————————————

Monday, September 27, 2010

‘இல்லை’ என்ற சொல் மகிழ்ச்சியளிப்பது இங்கே மட்டும் தான்! – Advance Booking Report 2

ங்கு பார்த்தாலும் “எந்திரன்” தான் பேச்சு. பஸ் ஸ்டாண்ட், டீக்கடை, அலுவலகம், பள்ளி குழந்தைகளின் கிளாஸ் ரூம், என்ஜீனியரிங் மாணவர்களின் லேப் என எங்கு பார்த்தாலும் எந்திரன் தான் வியாபித்திருக்கிறான். பள்ளி குழந்தைகள் எந்திரனில் சூப்பர் ஸ்டார் துப்பாக்கியுடன் Get Ready Folks என்பதை இமிடேட் செய்து பார்க்கும் அழகே தனி.

சென்னை திரையரங்கங்களை சுற்றி ரவுண்ட்ஸ் வந்ததில் எங்கு, யாரை பார்த்தாலும், உச்சரிக்கும் ஒரே வார்த்தை “டிக்கட் இல்லை” என்பது தான். குறிப்பாக முதல் நாள் டிக்கட். ஆனால் அதை கேட்டு யாருக்கும் கோபமோ ஏமாற்றமோ வந்ததா என்றால்…. ஹூ ஹூம் …. அதற்க்கு பதில் மகிழ்ச்சி தான்.

DSC 9396 copy1 640x440  ‘இல்லை’ என்ற சொல் மகிழ்ச்சியளிப்பது இங்கே மட்டும் தான்!  – Advance Booking Report 2

பெருமுதலீடு செய்தவனின் கடையில் சரக்கு காலியாகி வருவோர்க்கு “இல்லை” என்று சொல்வதில் ஒரு வித மகிழ்ச்சி ஒளிந்திருக்குமே அது போலத் தான் இது நம் ரசிகர்களுக்கு. தனக்கு டிக்கட் இல்லையென்றாலும் பரவாயில்லை, தலைவர் படத்திற்கான டிக்கட்டுகள் இல்லை என்ற சொல்லை கேட்டு அவன் மகிழ்ச்சி தான் அடைகிறான்.

“டிக்கட்டுகள் இல்லை” என்று தன் நட்பிற்கும் சுற்றத்திற்கும் பெருமையுடன் சொல்கிறான். தலைவர் படத்தை தவிர வேறு யாருக்கு இந்த பெருமை கிட்டும்?

எத்தனையோ தலைவர் படங்களை என் அனுபவத்தில் ரிலீஸ் சமயத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ளதை போல ஒரு எதிர்பார்ப்பு வேறு எந்த படத்திற்கும் நாம் கண்டதில்லை. படத்தை எப்படியாவது முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் அனைவரிடமும் தென்படுகிறது. “நான் எப்போவும் கொஞ்சம் சாவகாசமாத்தான் பார்ப்பேன். முதல் நாள் நமக்கு அலர்ஜி” என்று சொல்லிகொண்டிருந்தவர்கள் அனைவரும் இப்போது என்னடாவென்றால் முதல் நாள் முதல் ஷோ டிக்கட்டுக்கு அலைந்துகொண்டிருக்கின்றனர்.

“Out of the City தியேட்டர்ஸ் எல்லாம் எனக்கு வேண்டாம்; ஒன்லி சிட்டி தியேட்டர்ஸ் தான் வேண்டும்” என்று மிதப்புடன் கூறியர்வர்கள் எல்லாம் தற்போது “எங்கேயிருந்தாலும் பரவாயில்லே. ஒரு ரெண்டு டிக்கட்டாச்சும் இருக்கா பாருங்களேன்” என்று கெஞ்சி கொண்டிருப்பது தனி காமெடி. நம்ம சர்வீஸ்ல எத்தனை பேரை பார்த்திருக்கோம்.

கறுப்பு வெள்ளை காலத்தில் கதாநாயகனாக நடிக்க துவங்கி, இன்று ஆன்லைன் ரிசர்வேஷன் காலத்திலும் தலைவர் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டு பட்டையை கிளப்புகிறார் என்றால் அதற்க்கு காரணமாக எதை சொல்வது? “என்னோட ராசி நல்ல ராசி… அது எப்போதும் பெரியவங்க ஆசி” என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

எலக்க்ஷன் ரிசல்ட் போல நம் ரசிகர்கள் ரிசர்வேஷனுக்கு முதல் நாள் இரவு முழுதும் கண் விழித்திருந்து, ticketnew.com தளத்தை திரும்ப திரும்ப பார்த்து எந்த தியேட்டரில் ஆன்லைன் எப்போது துவங்குகிறது என்று ஆர்குட் மற்றும் பேஸ்புக்கில் அப்டேட் செய்தவண்ணமிருந்தனர். நாம் எந்த திரையரங்கம் என்று முடிவு செய்து புக் செய்வதற்கு முன்பே அனைத்து டிக்கட்டுகளும் சட சடவென புக்கான மாயத்தை என்னவென்று சொல்வது? அந்த அதிசயத்தை எப்படி சொல்வது? இப்படியெல்லாம் இனி ஒரு படத்திற்கு நடக்குமா? ஆன்லைன் ரிசர்வேஷன் வரலாற்றில் தலைவர் ஒரு புரட்சியையே செய்துவிட்டார்.

இப்படி புக் செய்யும்போது டிக்கட் கிடைக்கவில்லைஎன்றால் அப்போதும் நமக்கு கிடைப்பது மகிழ்ச்சி தானேயன்றி ஏமாற்றமில்லை.

நேற்று தியேட்டர் விசிட் சென்றபோது ஆல்பட் திரையரங்கில் பணிபுரியும் ஊழியர் ஒருவரிடம் புக்கிங் நிலவரம் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது “இத்துனை நாள் எங்களை மறந்திருந்தவர்களுக்கெல்லாம் எங்கள் நினைவு ஏற்படுத்தியிருக்கிறார் தலைவர்,” என்று சிரித்துக்கொண்டே கூறினார். உண்மை தான்!!

சரி.. எந்திரன் முன்பதிவு அதிசயம் குறித்து திரையரங்குகள் என்ன சொல்கின்றன? நமது எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட் On the Way!

Stay Connected…

படையெடுத்து வந்த ரசிகர்கள்; விற்று தீர்ந்த டிக்கட்டுகள்! – Advance Booking Report 1

DSC 9338 640x425  படையெடுத்து வந்த ரசிகர்கள்; விற்று தீர்ந்த டிக்கட்டுகள்! – Advance Booking Report 1

சென்னையில் அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் உற்சாக ஆரவாரத்துடன் ரிசர்வேஷன் துவங்கியது.

காலை 10.30 நிலவரப்படி பெரும்பாலான திரையரங்குகளில் ஐந்தாம் தேதி வரை டிக்கட்டுகள் விற்றுதீர்ந்துவிட்டன.

ரிசர்வேஷனுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக துல்லியமாக செய்யப்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை சீர் செய்யப்பட்டது.

அதிகாரப்பூர்வ ரிசர்வேஷன் இன்று காலை துவங்கியபோதும் முதல் நாள் மற்றும் சனி ஞாயிறு டிக்கட்டுகள் கிடைக்கவில்லை என பல ரசிகர்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கான டிக்கட்டுகளை வாங்கிசென்றனர்.

DSC 9374 640x425  படையெடுத்து வந்த ரசிகர்கள்; விற்று தீர்ந்த டிக்கட்டுகள்! – Advance Booking Report 1

சென்னையில், தேவி, மற்றும் சத்யம், அபிராமி, உள்ளிட்ட திரையரங்குகளில் கடும் கூட்டம் காணப்பட்டது.

ரிசர்வேஷன் சுவாரஸ்யங்கள் மற்றும் நிலவரம் குறித்த விரிவான செய்தி அடுத்து வந்துகொண்டிருக்கிறது.

Stay Tuned…

Thursday, September 23, 2010

ஏ.ஜி.எஸ். சினிமாஸில் ரஜினி ஸ்பெஷல் படங்கள் திருவிழா!

ஏ.ஜி.எஸ். சினிமாஸில் ரஜினி ஸ்பெஷல் படங்கள் திருவிழா + எந்திரன் முதல் நாள் டிக்கட்!

வில்லிவாக்கம் பஸ் நிலையம் அருகே இருந்த, ராயல் திரையரங்கம் தற்போது ஏ.ஜி.எஸ்.சினிமாஸ் என்ற பெயரில் மல்டிபிளெக்சாக புதிய பொலிவுடன் மாறியுள்ளது. புத்தம் புதிய தோற்றத்துடன் அசத்தலாக காட்சியளிக்கும் இந்த திரையரங்கில், தற்போது "சூப்பர் ஸ்டார் ரஜினி வாரம்" கொண்டாடப்படவிருக்கிறது.

தில்லுமுல்லு, முத்து, முரட்டுக்காளை, தளபதி,பாட்ஷா, மன்னன், அண்ணாமலை என சூப்பர் ஸ்டாரின் ப்ளாக் பாஸ்டர் திரைப்படங்கள் தொடர்ந்து ஒரு வாரம் திரையிடப்படவிருக்கின்றன.

இது குறித்து ஏ.ஜி.எஸ். திரையரங்கம் நேற்றும் இன்றும் ஹிந்து நாளிதழில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. (கீழே இணைக்கப்பட்டுள்ளது.).

Press Release From AGS:

Rajni film fest at AGS Cinemas

'Superstar' Rajnikanth needs no introduction. The 'Badshah' of the box office, he has swayed the masses with his style and charisma.

From Apoorva Ragangal to Endhiran, he has stood like a colossus virtually scaling one height after another, delivering successive hits.

From the lanky tall Sivaji Rao Gaekwad, his transformation to Rajnikanth has been phenomenal. The journey filed with hardwork and dedication has made hm what he is today.


With Endhiran ready for release and in a bid to salute the messiah of the masses, AGS Cinemas ( An Multiplex 5 minutes form Anna Nagar Round Tana) is organising a Rajnikanth Film Festival beginning this Friday(24th September 2010).


Friday (Annamalai), Saturday (Mannan), Sunday (Dalapathi), Monday (Guru Sishyan), Tuesday (Murattukaalai), Wednesday (Muthu). Thurday (Chandramuki)
.


Tickets:
www.agscinemas.com என்ற முகவரியில் ஆன்லைனில் புக் செய்யலாம்.

திரையரங்க முகவரி மற்றும் மேல் விபரங்களுக்கு:
http://www.agscinemas.com/contactUs.aspx
என்ற இணைய முகவரியை செக் செய்யவும்.

இந்த செய்தி நமக்கு முன்பே தெரிந்தாலும் ..official confirmation வரும் வரை இதை வெளியிடாமல் இன்று பிரஸ் அறிக்கை வெளியானதை அடுத்து இதை வெளியிடுகிறோம்.

-----------------------------------------------------------
ஏ.ஜி.எஸ். திரையரங்கில் உங்களை சனிக்கிழமை இரவு சந்திக்கிறேன்.
- சுந்தர்
+91-9840169215

Seattle friends celebration-Deccan

Deccan Chronicle has published our Seattle friends celebration for Enthiran Ticket sale inauguration in Today's news. Here is the article for you...

Enthiran ticket sale launched amidst festive fare in Seattle, USA - News & Pics!

The great moment has begun again.

Superstar is the only legend who can give continuous excitement to his fans. Seattle is the one of his largest fans hub in the USA.




The festival moment had started right from the Enthiran Audio Cd launch in Seattle. Seattle fans always find a way to celebrate their idol Superstar Rajinikanth. They decided to celebrate the Enthiran tickets sales launch at Mayuri Videos, Redmond , the only store in Seattle which sells the exclusive Collector's edition tickets for Enthiran. Local fans plus Fans from Portland(Oregon State) and other parts of Washington state have come and celebrated and bought the premier show tickets.


The event was organised by Seattle Superstar Rajini fans Elango, Filbert, Shivarajan, Gunasekar, Madurai Sha, Udipi Ramesh along with the head volunteer of Seattle Superstar fans Saha Nathan who is also well known author from India.


Mr.Kal Raman, Founder & CEO, Global Scholar who is the die hard fan of Superstar and Dr. Somasekar, Corporate VP, Microsoft who always encourage and support the Tamil community have facilitated this rememberable function. Both together inaugurated the tickets sales by cutting a cake which had a message "Enthiran Tickets Sales Starts".

It was distributed to all the fans to make a sweet start.


The important note is even few americans around the area was also excited and bought tickets for the premiere show.

The whole event was sponsored by a local website called desiroute.com.

The ticket price for premier show itself has created a new record for Enthiran

The tickets were priced at $ 40 for Enthiran. Earlier for Sivaji premier show - $25.

For other Tamil movies it was $15 and Telugu films $ 10 to $ 15.

News by : Seattle Thalaivar fans

---------------------------------------------------------------------
Our reader Satish says: I’m impressed to see Kal Raman’s name. See below the rediff article on Kal Raman. You will be impressed. He is like Thalaivar – a true rags to riches story.

http://business.rediff.com/slide-show/2010/sep/01/slide-show-1-from-studying-under-streetlamps-to-ceo-of-us-firm.htm
---------------------------------------------------------------------

Full Gallery:


Tuesday, September 21, 2010

அபிராமி உள்ளிட்ட திரையரங்குகளில் எந்திரன் புக்கிங் துவங்கியது!

க்டோபர் 1 திருவிழாவிற்காக ரசிகர்கள் ஒரு புறம் ரசிகர்கள் தயாராகிவருகின்றனர். மறுபுறம், திரையரங்குகள் தயாராகிவருகின்றன.

எந்திரனின் அதிகாரப்பூர்வ ரிசர்வேஷன் வரும் 26 ஆம் தேதி ஞாயிற்று கிழமை துவங்குகிறது. ஆனால் ஒரு சில திரையரங்குகளில் இப்போதே ஆன்லைன் புக்கிங் துவங்கிவிட்டது.

சென்னை அபிராமி மெகா மாலில் உள்ள அபிராமி செவென் ஸ்டார் திரையரங்கில் எந்திரன் படத்திற்கான முன் பதிவு நேற்று மாலை துவங்கியது. துவங்கிய சில மணி நேரங்களிலேயே முதல் நான்கு நாட்கள் ஃபுல்லாகிவிட்டது.

http://movie-ticket-abirami.com/index.aspx?sitefrom=Abirami.in

அதேபோல காரைக்குடி பாண்டியன் திரையரங்கிலும் ஆன்லைன் முன்பதிவு துவங்கிவிட்டது.

http://ticketnew.com என்ற முகவரிக்கு சென்று லாகின் செய்து தமிழகத்தில் உள்ள அனேக திரையரங்குகளில் ஆன்லைன் புக்கிங் செய்யலாம்.

இவை தவிர பல திரையரங்குகளில் கார்பரேட் மற்றும் bulk புக்கிங்கள் சத்தமின்றி நடந்து வருவதாக தகவல். இதையடுத்து முதல் மூன்று நாட்களுக்கான டிக்கட்டுகள் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

பல ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சி காண ஆவலோடு உள்ளனர்.

————————————————————-
We are growing. So as problems. If you experience any problem in our site, pls check in our standby blog : www.onlysuperstar.blogspot.com for updates.

Also keep visiting http://twitter.com/thalaivarfans any new announcements regarding movie or our website.

- Sundar
Mobile: 9840169215
E-mail : simplesundar@gmail.com

(Strangers, no ticket enquiries please!)
————————————————————-

[END]