பல்வேறு மாவட்டங்களிலிருந்து நமக்கு பிறந்த நாள் நலப் பணிகள் தொடர்பான செய்திகள் வந்த வண்ணமுள்ளன. இம்முறை கொண்டாட்டங்களை தவிர்த்துவிட்டு ஆக்கப்பூர்வமான பல நலப்பணிகளை செய்துள்ளனர் நம் ரசிகர்கள்.
அவற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளவை அன்னதானமும், ரத்த தானமும். இதுவரை தமது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் குறித்து, இப்படி இப்படித்தான் கொண்டாடவேண்டும், இவைகளை தான் செய்யவேண்டும் என்று ரஜினி கூறியதில்லை. ஆனால் இம்முறை, இலங்கை தமிழர் படும் துயரை கருத்தில் கொண்டு கொண்டாட்டங்களை தவிர்க்கும்படியும் அதற்க்கு பதில் மக்களுக்கு பயன் தரக்கூடிய நலப்பணிகளை மேற்க்கொள்ளும்படியும் கூறியிருந்தார். அதை கூட அவர் நேரடியாக கூறவில்லை. தற்போது ரசிகர் மன்ற நிகழ்வுகளை கவனித்து வரும் சுதாகர் மூலமாக தான் கூறியிருந்தார். தலைவர் சொல்லை தட்டாத நம் ரசிகர்கள் பல்வேறு நலப்பணிகளை செய்து திக்குமுக்காடவைத்துவிட்டனர்.
இந்த சக்திகள் எல்லாம் ஒருங்கே சேரும் நாள் நிச்சயம் தமிழகம் சொர்க்கமாகும். அந்த நன்னாளை எதிர்பார்த்து காத்திருப்போமாக.
அசத்திய நெல்லை ரசிகர்கள்
சூப்பர் ஸ்டாரின் 59 வது பிறந்த நாளை முன்னிட்டு, நெல்லை மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தினர் அதன் தலைவர் பானுசேகர் தலைமையில் பல்வேறு நலப் பணிகளை மேற்கொண்டனர்.
பாளையங்கோட்டை - பெருமாள்புரம் Hope பௌண்டேஷனில் உள்ள எய்ட்சால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
பாளையில் உள்ள பார்வையிழந்த முதியவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
பாளை தெற்கு பஜார் அரசரடி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
11/12/2008 அன்று மாலை நெல்லை ஷீபா மருத்துவமனையில் சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது. திரளான ரசிகர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்கள் ரத்தத்தை தானம் அளித்தனர்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்கள் விபரம் இணைக்கப்பட்டுள்ள செய்தித்தாள் கட்டிங்கில் உள்ளது.
[END]