Wednesday, August 6, 2008

நம் பத்திரிக்கைகளின்படி நாட்டை இன்று உலுக்கும் பிரச்னை எது?

ரஜினியின் "வருத்தம்" கூறிய சர்ச்சை வெடித்த அடுத்த சில நாட்களில் நாட்டையே உலுக்கிய மூன்று பெரும் விபத்துக்கள் நடந்தன.

ஆந்திராவில் ஓடும் ரயிலில் தீயில் சிக்கி 35 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் நைனா தேவி கோவிலில் கூட நெரிசலில் சிக்கி 150 பேர் பலி

பீகாரில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து 50 பேர் பலி

மற்றும் தொடர்ந்து வெளிவரும் தீவிரவாதிகளின் சதி வேலை பற்றிய செய்திகள்

இது தவிர வெகு முக்கிய அரசியல் நிகழ்வுகள் சில.

ஆனால் நம் பத்திரிகைகள் முக்கியத்துவும் கொடுத்து முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக வெளியிட்டது எது தெரியுமா?

ரஜினி கர்நாடக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு

கன்னட ரவுடிகளிடம் ரஜினி மண்டியிட்டார்

ரஜினி பல்டி

ரஜினி மீண்டும் குழப்பம்

ரஜினி தமிழ்நாட்டுக்கு செய்த துரோகம்

ரஜினிக்கு மன்னிப்பு உண்டா?

இப்படி இட்டுகட்டிய செய்திகளை வெளியிட்டு குளிர் காய்ந்த நம் நான்காம் (நாலாந்தர) தூண்கள், பற்றி எரிந்த தேசிய பிரச்னைகளை பின்னுக்கு தள்ளி ரஜினி பற்றிய அவதூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. ஜனநாயக நாடு அல்லவா இது.

இது எதை காட்டுகிறது?

நாடே பற்றி எரிந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. ரஜினியை ஒழிப்பதுதான் எங்கள் ஒரே குறிக்கோள். இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்குமா?

அடப்பாவிகளா...

வெந்த புண்ணில் வேல்

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக இன்று வெளி வந்துள்ள ஜூனியர் விகடனிலும் இது தான் கவர் ஸ்டோரி. "நீங்க நல்ல தான் நடிக்கிறீங்க ராஜினி- சூப்பர் ஸ்டாருக்கு சுளீர்" - இது தான் அட்டை படம்.

சமீபத்தில் மாநிலத்தில் நடந்த மிகப்பெரிய அரசியல் நிகழ்வு உங்களுக்கு தெரிந்திருக்கும். அதை போட வேண்டும் என்று விகடன் குழுமத்துக்கு தோன்றவில்லை. (தைரியமில்லை)

சரி. இவர்களுக்கு என்ன வகையில் காலம் தண்டனை அளிக்கும்?

தங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு விரைவில் நடு தெருவிற்கு வரபோகிறார்கள் விகடன் குழுவினர். எதிர்காலத்தில் நடக்கத்தான் போகிறது. அன்று என்னை நினைத்துக்கொள்ளுங்கள்.

குறிப்பு: விகடன் குழுமத்தில் சந்தா சேர்ந்துள்ள நண்பர்களே, இன்னுமா அங்கு இருக்கிறீர்கள்?

இக்கட்டான தருணத்தில் உடன் நின்று செய்திகளை திரித்து கூறாமல் வெளியிட்ட குமுதம் குழுமத்திற்கு நன்றி.

இத்தோடு இது பற்றிய செய்திகளை ஏறகட்டிவிட்டு குசேலன் பற்றி வரும் வெற்றி செய்திகளை மட்டும் அளிக்க முயற்சி செய்கிறேன்.

படிக்க முந்தைய பதிவு:
தூங்குபவர்களை எழுப்பலாம். அப்படி நடிப்பவர்களை?
http://onlysuperstar.blogspot.com/2008/08/blog-post_06.html