Friday, August 8, 2008

பிழைக்கவும் ரஜினி; பழிக்கவும் ரஜினி; ஒழிக்கவும் ரஜினி!!

ஒன்றும் அறியாத குற்றமற்ற ஒரு அப்பாவியை போவோர் வருவோர் எல்லாரும் தர்மடி அடிப்பது கணக்காக தமிழ் நாட்டில் ரஜினியை இது அடிக்கும் சீசன்.

ஏன் எதற்கு என்று கேட்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். (இதை சமாளித்து வெளிவரும் வல்லமையை இறைவன் அவருக்கு தர வேண்டுகிறோம்)

திருவள்ளூர் மாவட்ட இளைஞர் (??!!!) காங்கிரஸ் - என்ற ஒரு அமைப்பு சமீபத்தில் கூடி நாட்டுக்கு மிகவும் தேவையான பற்றி எரியும் ஒரு பிரச்னை பற்றிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

வேறு என்னவாக இருக்கும்? ரஜினி வருத்தம் தெரிவித்த பிரச்சனை தான்.

தீர்மானத்தை படித்தவுடன் (மேற்கண்ட தினகரன் பத்திரிக்கை கட்டிங்கை காண்க) நீங்கள் சொல்லப்போகும் ஒரே வார்த்தை - அடப்பாவிகளா....என்பது தான்.

நீங்கள் மேலே காண்பது, சென்னை பதிப்பு. வேறு ஒரு பதிப்பில் - கூறப்பட்டிருந்தது இன்னும் கொஞ்சம் ஓவர். "கன்னட ரவுடிகளுக்கு ஆதரவாக பேசிய ரஜினிக்கு கண்டனம் தெரிவிப்பதுடன்" என்று அதில் காணப்பட்டது. பாவிகளா அவர் எங்கேயடா ரவுடிகளுக்கு ஆதரவாக பேசினார்? (காங்கிரஸ் கட்சியின் குரலாக இதை நான் பார்க்கவில்லை. யாரோ அந்த அமைப்பில் உள்ள சிலரை இவ்வாறு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும்படி தூண்டியிருக்க வேண்டும்)

ரஜினிக்கு நற்சான்று அளித்த தங்கபாலு

அடுத்த்த நாள் காலை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி. தங்கபாலுவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது ரஜினி பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. தங்கபாலு, ரஜினிக்கு நற்சான்று அளித்து கூறிய பதில், மேற்கண்ட 'தமிழ் சுடர்' என்ற ஒரே ஒரு நாளிதழில் மட்டுமே வெளிவந்துள்ளது. (மேற்கண்ட பத்திரிக்கை கட்டிங்கை காண்க). மறுநாள் அந்த பேட்டியை தங்கள் பதிப்பில் பிரசுரித்த அனைத்து நாளிதழ்களும் (தினகரன் உட்பட) திட்டமிட்டு அதை இருட்டடிப்பு செய்துவிட்டன. தங்கபாலு நன்றாக கூறியதற்கு எதற்கு போய் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று நினைத்திருக்கலாம்.

அவர்களுக்கு ஒரு கேள்வி - இதே தங்கபாலு தனது பேட்டியில், ரஜினியை நான் கண்டிக்கிறேன் என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? அடுத்த நாள் அது தலைப்பு செய்தியாகியிருக்கும். அவர்கள் நேரம் அவர் நன்றாக சொல்லிவிட்டார். (இந்த கேள்வி கூட அவரிடம் வேறு விதமான ஒரு பதிலை எதிர்பார்த்து தான் எழுப்பபட்டிருக்க வேண்டும்.)

சென்னையின் ஒரு மூலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரமற்ற ஒரு சிறிய அமைப்பு ரஜினி பற்றி கூறியதை தனது அனைத்து பதிப்புகளிலும் வெளியிட்டு அல்ப சந்தோஷப்பட்ட தினகரன் குழுமம், அந்த கட்சியின் மாநில தலைவர், அகில இந்தியா காங்கிரஸ் கமிட்டியால் நியமிக்கப்பட்ட தங்கபாலு, ரஜினி பற்றி கூறியதை ஏன் தங்கள் செய்தி தாளில் போடவில்லை?

இதிலிருந்தே புரியவில்லையா? ரஜினியை ஒழிக்க தமிழ்நாட்டில் ஒரு பெரிய சதி வலை பின்னப்படுகிறது.

பிழைக்கவும் ரஜினி; பழிக்கவும் ரஜினி; ஒழிக்கவும் ரஜினி. இது தான் நம் பத்திரிக்கைகளின் தாரக மந்திரம். இது எப்படி இருக்கு?

ராமகோபாலன் கண்டனம்

மேற்கண்ட காங்கிரசாரின் தீர்மானத்தை கண்டித்து இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் கார சாரமாக அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அதில், "ஓகேனக்கல் பிரச்சனையில் மெளனம் சாதிக்கும் முதல்வர் கருணாநிதியைவிட்டு காங்கிரசார் ரஜினிகாந்தை விமர்சிப்பது ஏன்?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக எங்கே?

நாம் கடந்த தேர்தலில் ஆதரவு தெரிவித்திருந்த பாஜக மருந்துக்கு கூட இதுவரை வாய் திறக்கவில்லை. மற்ற அனைத்து பிரச்னைகளிலும் உடனடியாக கருத்து கூறும் கருத்து கந்தசாமி இல.கணேசன் எங்கே?