Friday, August 1, 2008

இதைவிட பெரிசெல்லாம் பார்த்தாச்சு...இதென்ன சும்மா தூசு...

என்ன நடந்தது?

ஹைதராபாதில் 'கதாநாயகுடு' படத்தின் விசேஷ காட்சிக்கு சென்ற ரஜினி, அதற்க்கு முன் ஒரு கன்னட தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி தான் இவ்வளவு சர்ச்சைக்கும் காரணம்.

நானும் அந்த பேட்டியை பார்த்தேன். வெட்கப்பட வேண்டிய அளவிற்கோ அல்லது நாம் வருத்தப்படவேண்டிய அளவிற்கோ சூப்பர் ஸ்டார் எதையும் பேசவில்லை. தன்னை பற்றி, தான் பிறந்த மாநிலத்தில் பிரச்சாரம் செய்யப்படும் துவேஷ கருத்துகளுக்கு பதில் கூறியுள்ளார். அவ்வளவே.

அவருடைய அந்த பேட்டியை பார்ப்பவர்கள் யாரும் அவர் உள்மனதை எளிதில் புரிந்து கொள்வார்கள். தான் கன்னடம் உட்பட எந்த மொழிக்கும், மாநிலத்திற்கும் எதிரியல்ல. எல்லாருக்கும் பொதுவானவன் என்று மட்டுமே அவர் நிரூபிக்க முனைந்துள்ளார். தன் பேச்சு பொது மக்களை புண்படுத்தியிருந்தால் அதற்க்கு வருத்தபடுவதாக கூறியுள்ளார். இது தவறா?

அங்கு நிலவும் பதற்றத்தை தணிக்கும் பொருட்டு அவர் பேசிய வார்த்தைகளை பல்வேறு தொலைகாட்சியினர் அவர்களுக்கு ஏற்றவாறு வெளியிட்டு குளிர் காய்ந்துள்ளனர். வேறு ஒரு புடலங்காயும் இல்லை.

ஒன்று மட்டு தெளிவாக புரிந்தது. ரஜினியை வாய்ப்பு கிடைத்தால் ஒழித்து கட்ட ஒரு கூட்டம் நாம் நினைப்பதை விட பெரிதாக காத்திருக்கிறது.

இப்போது அதில் சில செய்தி நிறுவனங்களும் சேர்ந்திருக்கின்றன. தட்ஸ் ஆல்.

சரி இதன் விளைவு எப்படி இருக்கும்?

ரஜினியின் (உள்ளூர்) எதிர்பாளர்களுக்கு அவரை மறுபடியும் எதிர்க்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவ்வளவு தான்.

சரி...இதன் மூலம் அவர்கள் எதையாவது சாதிக்க முடியுமா? ரஜினியின் செல்வாக்கை அசைத்து பார்க்க முடியுமா?

இந்த முயற்சியில் அவர்களுக்கு ஏற்பட்ட கடந்த கால தோல்விகளே இதற்கும் பதில். அவர்களை பொறுத்தவரை ரஜினியின் 'முடிவு' என்பது தான் அவருக்கு 'ஆரம்பம்' ஆகிவிடுகிறது. ஒவ்வொரு முறையும்...!! ஹா....ஹா....ஹா...

இந்த சோதனையையும் ரஜினி வெல்வாரா?

இறைவன் ஒருவனுக்கு துணை நின்றால், இந்த உலகமே எதிர்த்தாலும் அவனை ஒன்றும் செய்ய முடியாது.....எந்த சோதனையிலும் அவன் வெல்வான்....புடம் போட்ட தங்கமாக வெளிவருவான்...

சூப்பர் ஸ்டார் இதையும் வெல்வார்....அவர் தான் சோதனைகளை சாதனைகளாக்கும் கலை கற்றவராயிற்றே. கவலையை விடுங்க...

தலைவா, நாம் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை. காலமும் கடவுளும் நம் பக்கம்.

கடைசியாக...நம் ரசிகர்களுக்கு...

படம் நன்றாக வெளியான செய்தி கேட்டு தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு ஒரு அவல் பொரி கிடைத்திருக்கிறது. விட்டு தள்ளுங்கள்.

மகா பாரதத்தில் கர்ணனை நேர் வழியில் வெல்ல முடியாமல் தோற்பவர்கள் எல்லாரும் கடைசியில், "நீ ஒரு தேரோட்டி மகன் தானே? " என்று சொல்லி அவனை நிலைகுலைய வைப்பர். குரூரமாக சிரிப்பர். ஆனால் இறுதியில் பஞ்ச பாண்டவர்களை விட கர்ணன் பெயர் பெறவில்லையா? அது போல தான் இதுவும்.

கொஞ்ச காலத்துக்கு எதையும் தாங்கும் பக்குவத்தை பெறுங்கள்.

இதைவிட பெரிசெல்லாம் பார்த்தாச்சு...இதென்ன சும்மா தூசு...

எதிர்ப்பாளர்களுக்கு...

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.