Sunday, August 10, 2008

ரஜினி, தான் திரையுலகில் செய்த சாதனையாக கருதுவது எது?

எதிர் முகாமிலிருந்து சிலர் இங்கு வந்து 'கமெண்ட்ஸ்' என்ற பெயரில் தங்கள் வக்கிரத்தை அரங்கேற்றி வருகின்றனர். நானும் கூடுமானவரை அவற்றை ரிஜெக்ட் செய்து வருகின்றேன்.

குசேலன் படம் சிவாஜி அளவிற்க்கு இல்லையென்றாலும் மற்ற நடிர்களின் சூப்பர் ஹிட் படத்திற்க்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல.

சிவாஜியையே ஹிட் என்று ஒத்துகொள்ள மறுக்கும் வயித்தெரிச்சல் கோஷ்டி, குசேலனை குதறுவதில் ஆச்சரியமில்லை.

நமக்கு எப்போது சரிவு வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த மீடியாவில் உள்ள சில ஓநாய்கள் - நமது இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி குசேலன் ஓடுவதற்கு கூட நேரமளிக்காமல் அதற்க்கு இப்போதே முடிவுரை எழுதி - அதை மக்கள் மத்தியில் திணிக்க முயற்சித்து வருகின்றனர். நிச்ச்சயம் அவர்கள் முயற்சி பலிக்கபோவதில்லை.

ரஜினியின் திரையுலக சாதனை எது?

"தமிழ் திரையுலகில் சாதனை படைத்த பலபேர் இருக்கிறார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக நடித்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் நான் எந்த பெரிய சாதனையும் செய்துவிட்டதாக நினைக்கவில்லை. இவ்வளவு காலம் நடித்ததில் பெருமையாக நான் கருதுவது என்னவென்றால் - இறைவனின் அருளால் - ரஜினியால் நான் நஷ்டமடைந்தேன் என்று எந்த தயாரிப்பாளரும் இதுவரை சொன்னதில்லை"
- ரஜினி 25 விழாவில் சூப்பர் ஸ்டார் சொன்னது.

தலைவர் கூறியிருப்பது போல், கிட்டத்தட்ட 150 படம் நடித்து விட்டார். இது வரை எந்த தயாரிப்பாளரும் ரஜினி மீது புகார் கூறியதில்லை.

('பாபா' அவரது சொந்த தயாரிப்பு. அதில் கூட நஷ்டமடைந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு அவர்கள் கேட்டதற்கும் மேலாகவே பணத்தை திருப்பி கொடுத்தார் ரஜினி. அவரை பார்த்து 'பேராசைக்காரன்' என்று ஒரு வெப்சைட் கூறியிருப்பது மன்னிக்கமுடியாதது.)

ஆனால் உலக மகா நடிகர், தயாரிப்பாளர்களை நஷ்டமாக்குவதில் எந்த அளவு பெயர் பெற்றவர் என்பது ஊருக்கே தெரியும். அவரால் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்கள் பட்டியல் மிகபெரியது.

அதில் ஒரு சாம்பிள் தான் நீங்கள் இங்கே காண்பது.

கலைபுலி தாணு குமுதம் இதழுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த புலம்பல் பேட்டி இது. கமல் எப்படியெல்லாம் தனக்கு செலவு வைத்தார், பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார், தனக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என்று தாணு புட்டு புட்டு வைத்துள்ளார். எதிர் முகாம் இத்தோடு வாயை மூடிக்கொண்டு போக வில்லையெனில் மேற்கண்ட பேட்டியை நான் முழுதும் எனது இணையத்தில் பிரசுரிக்க நேரிடும் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். இணையங்கள் பிரபலமாகாத காலத்தில் வெளியான இந்த பேட்டி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வீணாக உங்கள் செயலால் அதை பிரபலபடுத்தவேண்டாம். சிறிது காலத்திற்க்கு உங்கள் வேலை என்னவோ அதை மட்டும் பாருங்கள்.

சூப்பர் ஸ்டாரின் பெருந்தன்மை

இந்த பேட்டி வெளியான சில நாட்கள் கழித்து தாணுவுக்கு சூப்பர் ஸ்டாரிடமிருந்து போன். "கமல் ஒரு மாபெரும் கலைஞன். அவரை வைத்து படம் எடுத்தது நீங்கள் செய்த புண்ணியம். இப்படியிருக்க நீங்கள் இவ்வாறு அந்த கலைஞனை பற்றி பேட்டியளித்தது பெரும் தவறு. நான் அதை பார்த்து மிகவும் வருத்தமடைந்தேன். இனி அப்படி செய்யாதீர்கள்," என்று கூறினார். இந்த பெருந்தன்மை யாருக்கையா வரும்? சந்தேகமிருந்தால் தாணுவிடமே கேட்டுபாருங்களேன். இந்த சம்பவத்திற்கு பிறகு தாணுவிற்கு சூப்பர் ஸ்டார் மேல் அவர் வைத்திருந்த மதிப்பு பன் மடங்கு உயர்ந்தது.

ஒரு நல்ல கலைஞனை சிறுமை படுத்த நான் விரும்பவில்லை

இப்போதே இந்த பேட்டியை வெளியிட்டு விடுவேன். ஆனால் கமல் என்ற அந்த மாபெரும் கலைஞன் மேல் எனது தலைவனுக்கும் மேலாக நான் மதிப்பு வைத்திருக்கிறேன். அவரது முட்டாள் ரசிகர்கள் சிலருக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து அவரை எந்த விதத்திலும் சிறுமை படுத்த நான் விரும்பவில்லை. எங்களது படங்களின் வெற்றி/தோல்வி பற்றிய தரமான விமர்சனங்களை, பின்னூட்டங்களை நான் என்றுமே வரவேற்று வந்துள்ளேன். அது உங்களுக்கே தெரியும். அதே சமயம் எங்கள் குசேலன் வெற்றி/தோல்வி பற்றி உங்கள் பின்னூட்டத்தை கட்டாயம் ஏற்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை.

குசேலன் vs மகராசன்

கமல் பத்து வேடம் ஏற்று நடித்த படத்துடன் எங்கள் தலைவர் கௌரவ வேடத்தில் நடித்த (சும்மா 45 நிமிஷங்கள் தான்) படத்தை ஒப்பிடுகிறார்கள் என்றால், அதை யாருக்கு பெருமையாக கருதுவது? (கௌரவ வேட படம் என்று நாங்கள் சொல்லவில்லை. படம் பார்த்த பொது மக்கள் விரக்தியுடன் கூறுகிறார்கள்.)

நியாயமாக குசேலன் படத்தை மகராசன் படத்துடன் ஒப்பிடுவதே சரியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

சூப்பர் ஸ்டாரை கீழ்த்தரமாக விமர்சிப்பதை நிறுத்திவிட்டு சிறிது காலத்திற்க்கு உங்கள் வேலை என்னவோ அதை மட்டும் பாருங்கள்.

இதற்க்கு மேல் எதிர் முகாம் நண்பர்கள் பேசமாட்டார்கள் என்று நினைக்கிறேன். பேசினால் விளைவிற்கு நான் பொறுப்பல்ல.

------------------------------------------------------------------------------------

What Rajini considers as his 'accomplishment' in his film career?
(Translation of DR Sharath Kannan)

Some people from the rival camp visit here and in the name of "comments" they pour out their venom. I am simply rejecting all their comments.


Though Kuselan is not as successful as Sivaji, it is in no way inferior to other actors' super-hit movies.

Kuselan being ridiculed by a group of jealous people, who did not accept the success of Sivaji itself, is not surprising.

A few wolves in the media who were eagerly waiting for the a slip from our side, taking undue advantage of our difficult times, have decided the fate of Kuselan - without even giving enough time for it to show its true response among the people - and trying to force their decision on the general public. Definitely their efforts will not bear fruit.

What is Rajini's achievement in film industry?
"There are many who have accomplished many things in Tamil film industry. They are present in this industry for a very long time. In comparison I feel that I have not achieved anything significant. After acting for so many years, if I feel proud of one thing that is - by God's grace - no producer has so far said I have incurred losses due to Rajini." This was said by Superstar on the event of Rajini25 function held to commemorate Rajini's 25 years in film industry.

As Thalaivar had said, after acting in about 150 films, so far no producer has complained against Rajini.

(Baba was Rajini's home production. Even in that, he had compensated for the loss incurred by the distributors and theatre owners. Accusing Rajini of being "greedy" by a website is certainly unforgivable.)

But, the ability of a "great" actor to make many producers bankrupt is a well known fact. The list of producers who have undergone losses due to that actor is pretty big. Just one sample of that is seen in this post.

This is an interview by Kalaipuli Dhanu to Kumudam magazine. In that he has detailed how that actor had made to increase the expenditure - and thus the budget - on the movie, how that actor had behaved irresponsibly and how much loss he had incurred.

I sternly warn that if the opposite camp does not stop spitting out their venom here, I will be forced to publish the entire interview in my blog.

This fact may not be known to many as this interview had come at a time when the internet and blogs where not that popular. Unnecessarily please do not make this interview a popular one by your actions.

Superstar's Magnanimity
A few days after this interview was published, Dhanu got a phone from Superstar. Rajini said - "Kamal is very great actor. You are fortunate to produce his film. Its not good on your part to criticise that actor in this way. I got very much disappointed on reading this interview. Please do not do this in future." Who will have this kind of magnanimity? If you have doubts on this, you can get that clarified by talking to Dhanu himself. After this incident, Danu's respect for Superstar increased manifold.

I do not want to degrade a good artiste
I could have posted this interview today itself. But, I have great respect towards Kamal - even more than that of my Thalaivar. Just to reply to his foolish fans I do not want to degrade him in any manner.

I have always welcomed just reviews and criticisms on our movies. Many of you know that. At the sametime, I have no compulsion to accept your views regarding Kuselan's fate at the B.O.

Kuselan Vs Maharasan
Whom are you praising by comparing a film in which Kamal has acted in 10 roles and Kuselan where Rajini appears for just about 45 minutes?

In my opinion, it will be fair to compare Kuselan with Maharasan alone.

Stop demeaning Superstar in filthy language
I hope the people from opposite camp will stop using filthy language to demean Superstar. If not, I will not be responsible for the consequences.