Saturday, April 12, 2008

பிழைக்க ரஜினி; அமுக்கி வைக்கவும் ரஜினி!!

வழக்கம் போல் தமிழக பத்திரிகைகள் பத்திரிக்கை தர்மத்தை குழி தோண்டி புதைத்து விட்டன. அதாவது சொந்த விருப்பு வெறுப்புகளை செய்தியில் காட்டுவது அல்லது பொறாமை காரணமாக இருட்டடிப்பு செய்வது.

2002 ஆம் ஆண்டு ரஜினி அவரது உண்ணாவிரதத்தை அறிவிப்பதற்கு முன்பு வரை அவரை பற்றி தாறுமாறாக எழுதிய பத்திரிகைகள் அவர் உண்ணாவிரதத்தை அறிவித்து அதை வெற்றிகரமாக நடத்தி முடித்தவுடன் (அதுவும் நெய்வேலி உல்லாச பயணத்தை செல்லா காசாக்கிய பின்பு) அவரை பற்றி நன்றாக எழுத தொடங்கின. குமுதம் ரஜினியை பாராட்டி அவரை எம்ஜியாருடன் ஒப்பிட்டு தனி தலையங்கமே எழுதியது. ஜூனியர் விகடனும் ரிப்போர்டரும் "ஹீரோவக்கப்பட்ட ரஜினி" "அரசியல் சக்தியாக உருவெடுத்த ரஜினி" என்று கவர் ஸ்டோரி எழுதி உண்ணாவிரதத்தை பற்றி நல்ல கவரேஜ் கொடுத்தன. பிற பத்திரிகைகளும் அப்படியே.

ஆனால் இப்பொழுது? உண்ணாவிரதத்தை பற்றி எழுத வேண்டும். ஆனால் ரஜினிக்கு பெயர் போயிவிடகூடது என்ற வக்கிர எண்ணத்தில் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அதுவும் இந்த விகடன் மற்றும் குமுதம் குழுமம் செய்கின்ற அடாவடி தங்க முடியவில்லை. மேற்படி இரு பத்திரிகைகளிலும் உண்ணாவிரதத்தை ரஜினி கைப்பற்றிய ,விதத்தை அவரது ஆவேச பேச்சை சும்மா "ஜஸ்ட் லைக் தட்" என்ற அளவில் மட்டுமே கவர் செய்துள்ளன.

அவர் வருவாரா மாட்டாரா என்று மட்டும் எழுத தெரிகிறதே? அது எப்படி? இதே ரஜினி உண்ணாவிரதத்துக்கு வரவில்லையெனில், இன்று வரை அதை பற்றி மட்டுமே மேற்படி பத்திரிகைகள் எழுதி கொண்டிருக்கும்.

இங்கு நக்கீரன் பற்றி கூறியே ஆகவேண்டும். இரு இதழ்கள் சமீபத்தில் ரஜினியை அட்டை படத்தில் தாங்கி வந்தன. ஆனால் இரு இதழ்களிலும் சத்யராஜை தூக்கி வைத்து எழுதப்பட்டுள்ளது. அதே சமயம் ரஜினியை மிகவும் உயர்த்தி விட கூடாது என்கின்ற எச்சரிக்கை தென்படுகின்றது. என்ன அக்கிரமம் இது? (நக்கீரனுக்கு ஒரு காலத்தில் சோறு போட்டதே ரஜினி ரசிகன் தான்) அட்டை படத்தில் ரஜினியை போட வேண்டும்; இளிச்ச வாய் ரசிகர்கள் வாங்குவார்கள். உள்ளே சரக்கு இல்லையென்றால் என்ன? நம்மை யார் கேட்பது? என்கின்ற எண்ணமே இதற்க்கு காரணம்.சரி. பத்திரிகைகளின் இந்த போக்கிற்கு காரணம் என்ன?

1) ரஜினி கதை முடிந்தது என்று நாமே எழுதியபின் எப்படி பின் வாங்குவது?
2) அந்த "........" நடிகரை முதல்வர் ஆக்குவது என்ற அவர்கள் லட்சியம் நீர்த்து போகும் அபாயம். (நாம் எழுதுவதால் அவர் ஆகிவிட மாட்டார் என்று அவர்களுக்கே தெரியும். பின்னர் ஏன் இப்படி எழுதுகின்றனர்? "காசேதான் கடவுளடா..."
3) இது எல்லாவற்றுக்கும் மேல் இந்த பத்திரிகைகளின் உள்ளே ஊடுருவிவிட்ட ரஜினி எதிர்ப்பு சக்திகள்.

நாம் அவர்களை ரஜினியை தூக்கி வைத்து எழுதுங்கள் என்று சொல்லவில்லை. உண்மையை எழுதுங்கள். அதுவே ரஜினியை உயர்த்தும். எங்களுக்கு அது போதும்.

கடைசியாக ஒன்று:
இப்படியெல்லாம் செய்வதால் ரஜினியின் புகழை குறைக்க முடியும் என்றோ அல்லது அவரை அமுக்கி வைக்க முடியும் என்றோ நினைத்தீர்களானால் அது பெரிய தவறு என்பதை காலம் உணர்த்தும். ரஜினி பற்றிய செய்திகளை புறக்கணிப்பதால் இழப்பு ரஜினிக்கு அல்ல. உங்களுக்கு தான். ரஜினி ரசிகர்கள் மிக பெரிய வணிக சக்தி. அதை புறக்கணிப்பவன் முட்டாள்.

மேற்படி பத்திரிகைகள் உண்ணாவிரதத்தை ரஜினி கைப்பற்றிய விதத்தை இருட்டடிப்பு செய்ய நினைத்தாலும் ஆங்கில சேனல்கள் அதை தகர்த்து ரஜினியை தேசிய அளவில் ஹீரோவாக்கிவிட்டன. நன்றி. கீழே பாருங்கள்.

மூன்றாம் பிறை மெல்ல மெல்ல வெண்ணிலவாய் மின்னுவதை மின்மினிகள் தடுத்திடுமா?

குறிப்பு1: இதை நான் டைப் செய்யும் நேரம் குமுதத்திலிருந்து எனக்கு போன். வாருங்கள் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் என்று. நேரில் சென்று கொட்டி தீர்த்துவிடுகிறேன்.

குறிப்பு2:நேரமின்மை காரணமாக ஆங்கிலத்தில் கொடுக்க முடியவில்லை. மன்னியுங்கள்.