Wednesday, November 26, 2008

Superstar Rajini’s 1995 Doordarshan interview - Part 4

சூப்பர் ஸ்டாரின் பரபரப்பான தூர்தர்ஷன் 1995 பேட்டியின் நான்காம் பகுதி இது.

நாம் இந்த தூர்தர்ஷன் கேள்வி பதில் தொகுப்பை ஆரம்பித்த நேரம் நிஜமாகவே ஒரு லேட்டஸ்ட் கேள்வி பதில் தொகுப்பை தந்து அசத்திவிட்டார் தலைவர் என்று நம் நண்பர்கள் சிலர் என்னிடம் கூறினார். மகிழ்ச்சியாக இருந்தது.

Part 3 ஐ படிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட லிங்க்கை க்ளிக் செய்யவும்.
http://www.onlyrajini.com/?p=2464

Part 2 ஐ படிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட லிங்க்கை க்ளிக் செய்யவும்.
http://www.onlyrajini.com/?p=2319

…………………………………………………………………………………………………………………

அந்த நடிகரின் நான்காண்டு அரசியல் டிராமாவை ஊதித்தள்ளிய ரஜினி

மேலும், அதில் இப்படி ஒரு பேட்டியை சூப்பர் ஸ்டார் அளித்தாலே போதும் சரிந்த அவரது செல்வாக்கு மீண்டு முன்பை விட பலமாக எழுந்துவிடும் என்று நான் அதில் கூறியிருந்தேன். அப்படியே நடந்தது இறைவன் அருள். சூப்பர் ஸ்டாரின் சமீபத்திய ரசிகர் சந்திப்பு தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டு, லட்சகணக்கான மக்களை அது சென்றடைந்தது. நான்கு வருடமாக கோடிக்கணக்கில் செலவு செய்து, ஆள் பிடித்து, பல ஜாலங்கள், தந்திரங்கள் செய்து, எண்ணற்ற விளம்பர பேனர்கள் வைத்து, கோடிக்கணக்கில் பத்திரிகை விளம்பரங்கள் கொடுத்து, மக்களுக்கு மாநாடு என்ற பெயரால் தொல்லை கொடுத்து, கரணங்கள் அடித்து, தி.மு.க.வை குறை கூறுவதையே அரசியல் தகுதியாக எண்ணிக்கொண்டு ஒரு நடிகர் நடத்தி வந்த அரசியல் நாடகத்தை சூப்பர் ஸ்டார் ஜஸ்ட் லைக் தட் ஒரு சிறு ரசிகர் சந்திப்பு மூலம் ஊதித்தள்ளிவிட்டார் என்றால் மிகையாகாது. (சூப்பர் ஸ்டாரின் பேட்டி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை விரிவாக ரசிகர் சந்திப்பு பற்றிய கவரேஜில் கூறுகிறேன்.)

ஆட்களை பிடித்து வந்து நடத்தப்பட்ட அவரது பிரம்மாண்டமான மாநாடு சாதிக்கமுடியாததை சூப்பர் ஸ்டாரின் இந்த எளிமையான ரசிகர் சந்திப்பு 'கேள்வி-பதில்' சாதித்துவிட்டது.

…………………………………………………………………………………………………………………

தூர்தர்ஷன் 1995 பேட்டியின் நான்காம் பகுதி

ந்த தூர் தர்ஷன் பேட்டியில் நம் rajinifans.com ராம்கி ஒரு கேள்விகேட்டிருப்பார் என்று கூறியிருந்தேன் அல்லவா? இந்த தொகுதியில் இடம் பெற்றிருக்கும் தியானம் செய்வது பற்றிய கேள்விதான் அது. மிக அற்புதமான, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு பதிலை சூப்பர் ஸ்டார் கூறியிருப்பார்.

பேட்டியின் சிறப்பம்சம்

இந்த பேட்டியின் சிறப்பம்சமே பெரும்பாலான பதில்களை சூப்பர் ஸ்டார் சொன்னவுடன் அதற்க்கு பொருத்தமான க்ளிப்பிங்குகளை, பாடல் காட்சிகளை காண்பித்ததுதான்.

உதாரணத்துக்கு, அன்றைய காலகட்டங்களில் சூப்பர் ஸ்டாரை கடுமையாக தொலைக் காட்சிகளிலும், பத்திரிக்கை களிலும் விமர்சித்து வந்த மன்சூர் அலி கானைப் பற்றிய கேள்விக்கு அற்புதமான, யாரும் எதிர்பார்த்திராத பதில் ஒன்றை அளித்தார் சூப்பர் ஸ்டார். பதிலின் முடிவில், பாட்ஷா படத்தில் சூப்பர் ஸ்டாரை கம்பத்தில் கட்டிவைத்து ஆனந்தராஜ் அடிக்கும் காட்சியும், பாட்ஷா பாரு... பாட்ஷா பாரு என்னும் அந்த சோகப் பாடலும் அதன் முடிவில் "உங்களுக்கு கோவமே வராதா..?" என்று அவர் தம்பி கேட்டவுடன் சூப்பர் ஸ்டார் அதற்க்கு ஒரு சிரிப்பு சிரிப்பாரே அந்த முழு காட்சி தொகுப்பும் காண்பிக்கப்பட்டது. அதன் மூலம், பலருக்கு பல விஷயங்கள் உணர்த்தப்பட்டது.

பாம்பு பற்றிய கேள்விக்கு முத்து படத்தில் அந்த சாரட் சேசிங் காட்சியில் பாம்புடன் வரும் காட்சி காண்பிக்கப்பட்டது.

முன்கோபம் பற்றிய கேள்விக்கு அவர் கூறியிருக்கும் பதில், குசேலனில் வரும் "எனக்குள்ள இன்னும் பழைய அசோக் இருக்கான்" என்னும் வசனம் நினைவு படுத்துகிறது அல்லவா? வாவ்...!

நான் அடிக்கடி கூறிவரும் ஒரு விஷயம், கீதையில் கூறப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் பின்பற்றும் ஒரு பாலிசி "நிகழ் காலத்தில் நில்!" என்பது தான்.

இந்த கேள்வி-பதில் தொகுப்பில் அவர் கூறியிருக்கும் மறக்க முடியாத நிகழ்ச்சி பற்றிய ஒரு பதில் அதை ஊர்ஜிதப்படுத்துகிறது. கடந்த காலத்தை பற்றி கவலைப்படாமல், வருங்காலத்தை பற்றி கோட்டை கட்டாமல், நிகழ்காலத்தில் வாழும் ஒருவராலேயே இப்படி பதில் கூற இயலும். மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் மேடையில் அவரிடம் இதே போன்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு அவர் கூறிய பதிலும் நிகழ்காலத்தை ஒட்டியே அமைந்தது. நிகழ்காலத்தில் வாழ்பவர்களால் தான் நிம்மதியாக, அமைதியாக கவலைகளின்றி இருக்க முடியும்.

சூப்பர் ஸ்டாருக்கு அரசியல் தெரியாது?

அரசியல் உங்களுக்கு தெரியாது என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு அவர் கூறிய பதில், பொதுமக்கள் பலரின் பாராட்டை பெற்றது. அவர் அரசியலுக்கு வந்தால் அது எத்தகையாதாக இருக்கும் என்று இந்த பதிலின் மூலமே தெரிந்துகொள்ளலாம். யாருக்காவது அரசியல் குறித்து இப்படி ஒரு தெளிந்த சிந்தனை இருக்கமுடியுமா?

மேலும் அண்ணாமலை படத்திலேயே அரசியல் ஒரு புனிதமான விஷயம், சம்பாதிப்பதற்கு எதற்கு அதை பயன்படுத்துகிறீர்கள் என்று வெடித்திருப்பார் சூப்பர் ஸ்டார். அரசியலை சாக்கடையாக எல்லாரும் பார்க்கும் நேரத்தில், அதை புனிதமாக பார்த்தது நம் தலைவன் ஒருவனே.

- கேள்வி பதில் தொகுப்பு தொடரும்

[END]