Tuesday, November 25, 2008

Revolution, the only way to save our country - Superstar's blazing interview (1993) - Part 1

இந்தியா உருப்பட புரட்சி தான் ஒரே வழி - சூப்பர் ஸ்டாரின் பரபரப்பான (1993) பேட்டி-Part 1

சூப்பர் ஸ்டார் இதுவரை எத்தனையோ பத்திரிகை பேட்டிகள் அளித்திருந்தாலும் அந்த பேட்டிகளில் தனது கொள்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றி அரிதாகத் தான் அவர் மனம் திறப்பார். மற்றபடி பொதுப்படையாக திரையுலக வாழ்க்கை, படங்களின் வெற்றி தோல்வி, அடுத்த படம், தன்னை பாதித்த நிகழ்வுகள் என்று பொதுவாகதான் பத்திரிக்கைகளிடம் பேசுவார்.

ஆனால் அவற்றிலிருந்து மிகவும் வித்தியாசப்படுகிறது 1993ல் அவர் ஆனந்த விகடனுக்காக மதனுக்கு அளித்த இந்த பேட்டி.

பேட்டியை வெளியிடுவதற்கு காரணம் ?

இந்த பேட்டியை நான் தற்போது வெளியிடுவதற்கு காரணம் உள்ளது. ஆபாச விகடன் அண்மையில் தனது இணைப்பில் மேற்படி பேட்டியை அறை குறையாக கைமா செய்து வெளியிட்டிருந்தது. பேட்டியில் தலைவர் கூறிய நிகழ் காலத்திற்கு மிகவும் பொருந்தக் கூடிய பல கருத்துக்களை, வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்துவிட்டது. அறை குறையாக படிப்பவர்களுக்கு, எதுவும் புரியாதல்லாவா? அது தான் அவர்கள் எண்ணம். இதோ நாம் முழுமையாக கொடுத்துவிட்டோம்.

சூப்பர் ஸ்பெஷல் பேட்டி

இந்த முப்பதாண்டு காலங்களில் அவர் அளித்திருக்கும் பல பேட்டிகளில் இந்த பேட்டியை சூப்பர் ஸ்பெஷல் பேட்டி என தாராளமாக கூறலாம். சூப்பர் ஸ்டாருக்குள் இப்படி ஒரு எரிமலையா என்று அனைவரையும் புருவம் உயர்த்தச் செய்த பேட்டி இது. அவரது சமூகக் கோபம் தீப் பிழம்பாய் வெளிப்பட்ட பேட்டி இது.

சூப்பர் ஸ்டாருக்குள் காந்திஜி மட்டுமல்ல ஒரு நேதாஜி கூட உண்டு

சூப்பர் ஸ்டாருக்குள் காந்திஜி மட்டுமல்ல ஒரு நேதாஜி கூட உண்டு என்று நமக்கு உணர்த்தியது இது. இந்த பேட்டியில் உள்ள ஒரு ஆச்சரியம் என்னவென்றால், 15 வருடங்களுக்கு முன்பு (வள்ளி வெளியான காலகட்டம்) அவர் கூறிய கருத்துக்கள் இன்றைய சூழ்நிலைக்கு கூட அப்படியே பொருந்துகிறது என்பது மிகப்பெரிய ஆச்சரியம். சூப்பர் ஸ்டார் உண்மையிலேயே தீர்க்கதரிசிதான்.

நாட்டை செம்மைப் படுத்த எமெர்ஜென்சி தேவை என்று 1993ல் சூப்பர் ஸ்டார் கூறினார். ஆனால் நாடு தற்போதுள்ள சூழலில் எமேர்ஜன்சி தான் சரிப்பட்டுவரும் என்று பெரும்பாலான மக்கள்
கருதுவது உங்களுக்கே தெரியும்.

தவிர வீணாகும் விவசாய நிலம், விஷம் போல ஏறி வரும் விலைவாசி, ஊழல் புரையோடிப்போன அரசியல், மரத்துப் போன மக்கள் என்று எல்லாரையும் பிடித்து வாங்கு வாங்கென்று வாங்கியிருப்பார்.

இரு தொகுதிகளாக வெளிவரும்

இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேட்டியை இரு தொகுதிகளாக வெளியிடுகிறேன். முதல் தொகுதியில் முன்னுரை மற்றும் வள்ளி படத்தை அவர் எடுத்ததற்கான சூழல், காரணம் ஆகியவை இடம் பெரும். அடுத்த தொகுதி தான் பாட்ஷா படத்தின் செகண்ட் ஹாப் போல விறுவிறுப்பாக இருக்கும். வழக்கம் போல சற்று பொறுங்களேன். (ஹி...ஹி...!!)

இப்போதைக்கு முதல் தொகுதியை தருகிறேன். இரண்டொரு நாட்களில் மீதி முழு பேட்டியையும் வெளியிட்டு விடுகிறேன்.

ஏற்கனவே நான் தொடரும் என்று கூறியிருந்தவற்றில் அடுத்தடுத்த பகுதிகளை விரைவில் தந்துவிடுகிறேன்.

[END]