Monday, November 17, 2008

ஜால்ராக்கள், கேள்வி-பதில் 'அரசு'கள் சிந்திப்பார்களா?

மிழகத்தையே காக்க வந்த மாமணி போல அந்த அரசியல் கட்சி நடிகர் சீன் போடுவதும், அதற்க்கு சில பத்திரிக்கைகள் துணைபோவதும், அவரது குற்றங் குறைகளை கூட மூடி மறைத்து தேவையின்றி ரஜினியை மட்டம் தட்டுவதும் கண்டு பொதுமக்களில் ஒருவனான என் போன்றவர்களுக்கு ஆத்திரம் வருவது இயற்கையே.

“காவலுக்கு வெச்சிருக்கிற நாய் சரியில்லைன்னா, அந்த நாயைத்தான் மாத்தனுமே தவிர அதை விட்டுட்டு அந்த இடத்துல ஒரு ஓநாயை கொண்டுவது வைக்க கூடாது.” - ராணுவ வீரனில் சூப்பர் ஸ்டார்.

கழங்களின் ஆட்சிகளால் அதிருப்தியுற்று அல்லது பாதிக்கப்பட்டு, தற்போது அவர்களைவிட அனைத்துவகையிலும் ஆபத்தான ஒருவரை ஆராதிக்கும் மேற்படி பத்திரிக்கைகளுக்கு என்றைக்குத் தான் இது உறைக்குமோ..?????

…………………………………………………………………………………………………………………
ஜால்ராக்களே இதோ தெரிந்து கொள்ளுங்கள் அந்த நடிகர் நிஜ லட்சணத்தை.... (இவரைத் தான் நீங்கள் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள்... எல்லாம் தமிழ் நாட்டின் தலைவிதி!!)

கீழே நீங்கள் படிப்பது http://idlyvadai.blogspot.com/ இல் கண்டது....

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்....

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் ஓட்டளித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். இந்த வாய்ப்பை வழங்கினால் மக்களுக்காக குரல் கொடுப்பேன் - கோவில்பட்டியில் விஜயகாந்த் இப்படி பேசினார்.

'மரியாதை' படப்பிடிப்புக்கு, முன்பே தேதி கொடுக்கப்பட்டு விட்டது. இதனால், சட்டசபைக்கு செல்லவில்லை. தொடர்ந்து 20 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடக்கும்" சில நாட்கள் முன் விஜயகாந்த் ஏன் சட்டசபைக்கு செல்லவில்லை என்ற கேள்விக்கு பதில்.

மக்களுக்கு தர வேண்டிய மரியாதையை 'மரியாதைக்கு' தருகிறார். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்திலேறி வைகுந்தம் போனானாம்...

--------------------------------------------------------------

[END]