ரஜினியை போல் நாமும் வரவேண்டும் என்று எந்த நடிகனும் விரும்பினால், அதில் தவறேதும் இல்லை. அது அவரவர் விருப்பம். அவர்களுக்கிருக்கும் தகுதியை பொறுத்தது அது. ரஜினி ஏன் உண்மையில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று ஆராய்ந்து அவர் கடைப்பிடிக்கும் குணாதீசியங்களை அவர்களும் கடைபிடித்தால் - ரஜினியைபோல் இல்லாவிட்டாலும் - ஓரளவாவது பிரகாசிக்க இயலும். அதை விட்டுவிட்டு நேர்வழியில் போராடாமல் குறுக்கு வழியில் போல அந்த பட்டத்தை அடைய முயற்சிப்பவர்களை பார்த்து நான் பரிதாபம்தான் படுகிறேன். ரஜினி பின்பற்றும் உயரிய பண்பாடுகள் சிறிதும் பின்பற்றாமல் ஆனால் அவரைபோல் வெற்றிகளைக் குவிக்கவேண்டும் என்று பேராசைப்படுவதைத்தான் நாம் எதிர்க்கிறோம்.
"உன்னோட வாழ்கை அது உன் கையில் இருக்கு; அடுத்தவன் கொடுத்தா அது நிக்காதப்பா!!
கஷ்டப்பட்டு உழைச்சி முன்னேறப் பாரு, இஷ்டப்பட்டு எல்லோரும் உன் பின்னால் வருவான்"
- எத்துனை சத்தியம் இந்த வார்த்தைகள்??!!
ரஜினியால் மட்டும் எப்படி இது சாத்தியமாகிறது?
அது சரி ரஜினி மட்டும் ஏன் இப்படி மக்கள் மனங்களில் கோலோச்சுகிறார்?
அவர் சொன்னால் மட்டும் அது மக்களை அவ்வளவு சுலபமாக சென்றடைகிறதே எப்படி? அந்தஸ்து மரியாதை இவையெல்லாம் அவரை தேடி வருகிறதே எப்படி?
மிகப்பெரும் சோதனைகளை கூட அனாயசமாக தாண்டிவிடுகிறாரே அது எப்படி? படத்துக்கு படம் அவரது மார்கெட் மட்டும் இப்படி உயருகிறதே எப்படி?
- இத்தகைய எப்படிகளை அவரைப் போல் வர விரும்பும் ஒவ்வொரு நடிகனும் தங்களுக்குள் கேட்கவேண்டும்.
விடை இது தான்:
அவரை அவரது நடவடிக்கைகளை, அடுத்தவர்களிடம் அவர் நடந்துகொள்ளும் முறையை கூர்ந்து கவனித்தாலே போதும். நடிகை நயன்தாரா கூறியதைப் போல அவர் நமக்கு உபதேசம் செய்வதில்லை. வாழ்ந்து காட்டுகிறார். அதிலிருந்து நாமே நிறைய கற்றுக்கொள்ளலாம்.
அவர் நிறைய படிக்கிறார். நிறைய கேட்கிறார். குறைவாக பேசுகிறார். தினமும் தியானம் செய்கிறார்.
தியானம் - மதங்களை கடந்த மாமருந்து!!
தியானம் என்பது மதங்களை கடந்த மாமருந்து. அதன் சக்தி அபாரமானது. தியானத்தின் பலன்களை அது நம் வாழ்வில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சுட்டிக்காட்ட சூப்பர் ஸ்டார் தவறுவதேயில்லை.
தியானம் செய்தேன் - உங்களை சந்தித்தேன்
2004 ஆம் ஆண்டு மலேசிய நட்சத்திர கலைநிகழ்ச்சியில் அவரிடம் கேள்வி கேட்க்கும் அறிய வாய்ப்பை பெற்ற ரசிகர் ஒருவர் சொன்னார், "தலைவா, நீங்கள் தியானம் செய்றதை பற்றி அடிக்கடி சொல்வீங்க. நான் அதை கேட்டு தியானம் செய்தேன். இதோ உங்களை நேரடியாக சந்திக்கும் அறிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன்" என்றார் பலத்த கைத்தட்டல்களுக்கிடையே.
ரஜினி 25 விழாவில் வரவேற்புரையாற்றிய சூப்பர் ஸ்டார், தனது வெற்றிக்கு முக்கிய காரணமாக தியானத்தை குறிப்பிட்டார். மேலும் தியானம் செய்ய மதம் ஒரு பொருட்டல்ல என்றும் எந்த மதத்தவராயினும் தியானம் செய்து பலன் பெறலாம் என்றும், அதற்குரிய வழிமுறைகளையும் கூறி அசத்தினார். (பெட்டிச் செய்தியில் காண்க).
தொண்டர்களை சுயலாபத்துக்காக தூண்டிவிடும் தலைவர்களுக்கிடையே, அவர்களை "மனதை ஒருமுகப்படுத்துங்கள்; வெற்றிகளை குவிக்கலாம்!!" என்று கூறும் சூப்பர் ஸ்டார் உண்மையில் வித்தியாசமான மனிதர் தான்.
குறிப்பு:
சென்ற பதிவில் நம் onlyrajini.com வலைதளைத்தை பற்றி "ரசிகனின் தீர்ப்பு" என்று பெட்டிச் செய்தியாக சினிமா எக்ஸ்பிரஸ் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதை நான் கூறவில்லை.
நம் நண்பர்கள் கண்டுபிடிக்கிறார்களா பார்க்கலாம் என்று விட்டுவிட்டேன். ஒரு சிலர் அதை கவனிக்கவில்லை என்று தெரிகிறது. அவர்களுக்காக தான் இந்த நினைவூட்டல். கட்டுரையின் மூன்றாம் பக்கத்தில் நம் வலைத்தளைத்தை பற்றிய செய்தி பெட்டிச் செய்தியாக வெளியாக வந்திருக்கிறது.
தற்போது நண்பர் முரளி எனக்கு தியானம் பற்றி அனுப்பிய சேதி ஒன்றை தருகிறேன்.
- சுந்தர்
…………………………………………………………………………………………………………………
சுந்தர் , தியானம் பற்றி தலைவர் சொல்படி நானும் கற்று இபொழுது அதன் பலன்களை அனுபவித்தும் வருகிறேன் இப்பொழுது ஈஷா யோகா மையம் திருவல்லிக்கேணியிலும் , தொடர்ந்து மைலாப்பூரிலும் வகுப்புகள் தொடங்க இருக்கிறார்கள் , அதை ஒட்டிய பதிவை உங்கள் இணையத்தளத்தில் போடமுடியும் என்றால் , அதன் மூலம் நம் ரசிகர்கள் பயன்பெறுவார்கள் எனபது உறுதி , மேலும் நம் தலைவர் வழி நடக்க நாமும் ஒரு அடி எடுத்து வைதூம் என்ற மனநிறைவும் இருக்கும் ,
இதுட்டன் தமிழில் தட்டச்சு செய்யப்பட்ட வகுப்புகள் பற்றிய விவரங்கள் தங்களக்கு அளிக்கிறேன் , அதில் உங்கள் பதிவில் போடவேண்டும் என்றும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
- முரளி
ஈஷா யோகா
வாழ்கையை புதிய கோணங்களில் சிந்திக்கவும் உணரச்செய்யவும் செய்கிறது . நினைவாற்றல் மனம் குவிப்பு திறன் முடிவெடுக்கும் திறன் ஆகியவை சில வாரப் பயிற்சிகளிலேயே 100% வரை அதிகரிக்க முடியும்
நாட்பட்ட நோய்களான ஆஸ்துமா , உயர் ரத்த அழுத்தம் , நீரிழிவு , மூட்டு வலிகள், தலைவலி , சைன்ஸ் , முதுகுவலி , இருதய கோளாறு , உடற்பருமன் மற்றும் தீராத நோய்கள் குணமடையவும் , வராமல் தடுக்கவும் இயலும்
மிகவும் தொன்யமையான ஷாம்பவி மகா முத்ரா பயற்சி வாழ்கை முறையை மாற்றி அமைக்கக்கூடிய அளவில் ஷக்தி வாய்ந்ததாகும் .
இப்பயிற்சியில் கலந்துகொள்ள வாழ்கை முறை மற்றும் பழகவழகங்களில் எந்த மாற்றமும் செய்துக்கொள்ள தேவையில்லை . எந்த மதமானாலும் , எந்த இனமானாலும் , எந்த பிரிவானாலும் இந்த யோகா பயிற்சிகளுக்கு தடை இல்லை .
இப்பயிற்சி அனைவருக்கும் முற்றிலும் பரிசோதித்து அனுபவபூர்வமாக அறியக்கூடிய விஞ்ஞானம் ஆகும் .தினமும் மூன்று மணி நேரம் வீதம் 7 நாட்கள் என விஞ்ஞான முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது
வாருங்கள் உங்களில் மலருங்கள்
அறிமுக உரையுடன் பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 3 ம் தேதி மாலை 6 மணிக்குத்துவங்கும்
(* பயிற்சிக் கட்டணம் ரூபாய் 900/- மட்டும் )
இடம் :
புது ரஹ்மத் மன்ஜில்
25/13 , குப்புமுத்து முதலி தெரு,
திருவல்லிக்கேணி
சென்னை - 600005
(எல்லிஸ் சாலை ஜாம்பஜார் மார்க்கெட் இடையில் )
தொடர்பு கொள்ள :
ரமேஷ் : 9841285177
முரளி : 9840223632
…………………………………………………………………………………………………………………
[END]