
இதற்கிடையே புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சூப்பர் ஸ்டாரின் ஈழப் போர் குறித்த உண்ணாவிரத கருத்துக்களை மெச்சியுள்ளார். (இணைக்கப்பட்டுள்ள தந்தி பேப்பர் கட்டிங்கில் காண்க)
எத்தனையோ பேர் இருக்க சூப்பர் ஸ்டாரின் உரை மட்டும் கூர்ந்து கவனிக்கப்படுவது ஏன்?
அவர் ஒருவரின் பேச்சு மட்டும் சுவாரஸ்யமாக அமைந்து விடுவது ஏன்? மனதில் பதிவது ஏன்?
மற்றவர்கள் எல்லாம் எப்போது பேசிமுடிப்பார்கள் என்று நாம் காத்திருக்க இவர் மட்டும் இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா என்று அவர் பேச்சு நம்மை ஏங்க வைப்பது ஏன்?
காரணம் - நண்பர் வினோ என்னிடத்தில் உரையாடும்போது கூறியது போல - அவரிடத்தில்'உண்மை' இருக்கிறது. மற்றவர்களிடம் அதை தேடித்தான் பார்க்கவேண்டும்.
மற்றவர்கள் கூறும் வார்த்தைகள் அவர்களது உதட்டிலிருந்து தான் வரும். ஆனால் நம் அரசியல் ஞானி ரஜினி கூறும் வாத்தைகள் அவர் உள்ளத்திலிருந்து வரும். அதனால் அதற்க்கு சக்தி அதிகம்.
இதோ வள்ளுவர் கூட சொல்கிறார்:
"சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது."
பொருள்:
சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.
[END]