Thursday, December 18, 2008

Sun Pics takes over Endhiran - Video, Photographs & complete media coverage

முதலில் கீழே நான் அளித்துள்ள வீடியோவை இந்த வீடியோவை பாருங்கள். தலைவரின் புது கெட்டப்பும் - கண்ணாடி + ஜீன்ஸ் + கருப்பு சட்டையில் அவரின் மேனரிசத்தை பாருங்கள். மற்ற விஷயங்களுக்கு பின்னால் வருகிறேன்.

நேற்று மாலை இந்த செய்தி வெளியானவுடன் நம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. உண்மைதானா என்று தெரிந்துகொள்ள போன் கால்களும் எஸ்.எம்.எஸ்.களும் பறந்தன. அதற்குள் சன் டி.வி.யில் நியூஸிலேயே காட்டிவிட்டனர்.

பிறகு கேட்கவேண்டுமா...? இதுகுறித்து ரசிகர்கள் பலருக்கு நிலவும் சந்தேகத்தை அடுத்த பதிவில் என்னால் இயன்றவரை தீர்த்துவைக்கிறேன்.

…………………………………………………………………………………………………………………

Pic 1 : Left to Right: Hans Raj Saxena, Shankar, Kalanidhi Maran, Superstar, Cinematographer Rathnavelu, Nagarajan Raja

Pic 2: Superstar and Kalanidhi Maran

…………………………………………………………………………………………………………………

The complete Media coverage
…………………………………………………………………………………………………………………

It is very important to know how other media sources project this news as Sun TV is a media giant and a competitor for all of them in one or another way.

Let's check what DC (Image version), Times of India (Image version) and The Hindu (Text version) say on Sun Pics & Endhiran deal:

…………………………………………………………………………………………………………………

The Hindu, 18/12/2008

Sun Pictures to produce ‘Enthiran’

The Hindu Staff Reporter

It will be released in Tamil, Telugu, Hindi and other languages by the end of next year.

CHENNAI: Sun Pictures, the films division of Sun TV Network, on Wednesday announced that it would produce actor Rajinikanth’s next film ‘Enthiran.’ The multi-crore project to be directed by Shankar has Aishwarya Rai playing the female lead and A.R Rahman scoring the music.

The film will be released simultaneously in Tamil, Telugu, Hindi and other languages by the end of next year.

Sun Pictures made the official announcement in the presence of Mr. Rajinikanth, Mr. Shankar and Sun TV Network Limited’s Chairman and Managing Director Kalanithi Maran. Sun Pictures Chief Operating Officer W Hansraj Saxena and the cinematographer of the film Rathnavel were also present.

According to a press release, Mr. Kalanithi Maran said, “This is a big moment for Sun Pictures as we feel this is going to be India’s biggest film. We are very happy and proud to be associated with Superstar Rajinikanth, Shankar and A R Rahman. With this Sun Pictures shall scale greater heights internationally.”

Mr. Shankar said: “I am proud to be associated with Sun Pictures and join hands with Mr. Kalanithi Maran, working with superstar Rajinikanth is a pleasure.”

Mr. Rajinikanth said: “This is India’s biggest movie and I am very happy and honoured to work with Sun Pictures and Mr. Kalanithi Maran.”

http://www.hindu.com/2008/12/18/stories/2008121857630200.htm

…………………………………………………………………………………………………………………

…………………………………………………………………………………………………………………

Video of Sun Tv news on Endhiran production



http://in.youtube.com/watch?v=nGogSxKTLek

[END]

Endhiran will be a sure fire hit - says Sun Tv, Shankar and Superstar

Sun TV's acquisition of Endhiran was shown primarily in Sun TV news today.

Superstar arrives at Maran's residence at Boat Club Road and Kalanidhi Maran received him at the portigo itself. The whole Sun Pictures team comprising Hansraj Saxena, Kalanidhi Maran and Endhiran team comprising Superstar, Shankar, Nagarajan Raja posed for photographs and exchanged pleasantries.

Superstar was spotted in black shirt and blue jeans with specs. Later he rested the specs in his shirt pocket.

Everybody including Superstar said that they were very happy with the recent development over the acquisition of Endhiran by Sun Pictures and expressed that the film would turn a sure fire hit. Superstar said that he is very happy over Sun Pictures producing the ambitious project.

Ellam Nanmaikkae.

- Sundar

SUN Pictures buys Endhiran - It's confirmed!!

When some of my friends, hinted me about this news this morning, i was skeptical. I said that i would enquire with proper sources and then will tell the exact happening.

Later this evening i got a solid news from my source that Superstar, Shankar and Kalanidhi Maran met this noon at latter's Boat Club residence and signed the agreement.

As per agreement, SUN TV will take care of the production of Endhiran and had settled Ayngaran their dues completely. (As per reports the amount of transaction was said to be Rs.100 crores including the amount Ayngaran spent so far!!)

The complete details of the happening and reasons will be available tomorrow.

As per me, it is a wise decision of Superstar as he once again strikes a bunch of mangoes in a single shot.

Herewith i present the Economic Times article from Bangalore edition, which came earlier this morning.

Scoop: Sun News scroll says that Endhiran will be produced by SUN Picture.

- Sundar

…………………………………………………………………………………………………

Sun Pictures set to snap up India’s costliest flick, Robot
Chandra Ranganathan CHENNAI

Economic Times 17/12/2008

BUOYED by its initial success in movie production, the Maransowned Sun Pictures has bought out the production rights for the costliest Indian movie to date, Robot, starring Rajinikanth and Aishwarya Rai.The sci-fi movie, to be directed by Shankar, with a whopping Rs 100 crore-plus budget, was supposed to have been produced by London-based Ayngaran International, in which Kishore Lullaowned Eros has a controlling stake.

But sources close to the development said owing to financial troubles, Ayngaran is transferring all the production costs of the movie to Sun Pictures.

Officials at Ayngaran and Sun Pictures could not be reached for comment or further details. But sources involved in the deal said that a formal agreement will be signed on Wednesday and the total value of the deal could cross Rs 100 crore.

If the agreement goes through, this will be the second such bailout for the recently floated Sun Pictures. It acquired the distribution rights for its maiden film Kadhalil Vizhunden from Atlantic Cinemas. Sun Pictures infused life into the movie and made it a runaway success by actively marketing it on Sun Network’s TV and radio media.
A similar positive climax awaits Robot, which is riding on huge dollops of money and hype. After the Rajini-starrer ‘Sivaji, The Boss’ created waves as the most expensive movie at Rs 80 crore, the Rajini-Rai starrer ‘Robot’ became the next big thing in film circles.

It also had a touch of drama to it because Shahrukh Khan was initially supposed to act in the movie and coproduce it through his company. But that plan did not go through reportedly due to creative differences.

[END]

Tuesday, December 16, 2008

சத்தியநாராயணா குறித்து கிளப்பிவிடப்படும் வதந்திகளும் - உண்மை நிலவரமும்!

சிகர் சந்திப்பில் ரஜினி தெளிவாக கூறிய ஒரு விஷயம், "குடும்பத்தை கவனிங்க. அப்பா அம்மாவை கவனிங்க. மத்ததெல்லாம் அதுக்கு பிறகு தான்." இந்த நிபந்தனை சத்திக்கும் பொருந்தும் தானே?

சிறுநீரக கோளாறால் இடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று தற்போது "தேவையான ஓய்வை எடுத்துக் கொள்ளவேண்டும், அலைச்சல் கூடவே கூடாது" என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப் பட்டிருக்கிறார் சத்தி. இது தான் உண்மை. எனவே சத்தி தனது உடல் நலத்தை பார்த்துக் கொள்ளவேண்டும் அல்லவா? தவிர அவரது வயதான தந்தையையும் அவர் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சத்தியை விட்டால் பார்த்துக் கொள்ள அவருக்கு வேறு யாரும் இல்லை.

சத்தி முன்பு போல மன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவேண்டும் என்று ரசிகர் ஒருவர் சமீபத்திய சந்திப்பில் சூப்பர் ஸ்டாரிடம் கேட்டுகொண்டபோது, அவரும் மேற் கூறியதை தான் கூறினார். எனவே அவருக்கு ஒய்வு கொடுத்திருப்பதில் என்ன தவறு?

மரமண்டைகளுக்கு எப்போது உறைக்கும்?

சத்தி நீக்கப்பட்டுவிட்டதாகவோ அந்த இடத்திற்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுவிட்டதாகவோ இது வரை சூப்பர் ஸ்டார் எந்த வித அறிவிப்பும் வெளியிடவில்லை. தற்காலிகமாக ரசிகர்களுக்கும் ரஜினிக்கும் இடையே பாலமாக செயல் பட்டுவரும் சுதாகர் கூட தாம் எந்த பதவியிலும் இல்லை, தாம் ஒரு போஸ்ட் மேன் மட்டும் தான் என்று தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உண்மை நிலை இப்படியிருக்கையில் இன்னும் இந்த விஷயத்தை வைத்து, சில விஷம சக்திகள் நம் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும்பொருட்டு செய்திகளை வெளியிடுவதை நினைத்தால், "இந்த மரமண்டைகள் என்றைக்கு தான் திருந்தி நடுநிலையான செய்திகளை தருவார்களோ?" என்ற ஆத்திரம் தான் வருகிறது.

சத்தியை ரஜினி கைவிட்டுவிட்டாரா?

ரஜினி ஏதோ சத்தியை நட்டாற்றில் விட்டுவிட்டதை போல அவர்கள் செய்தி எழுப்பிவருவதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. சத்தியநாராயணாவின் வாழ்வில் ஒவ்வொரு முக்கிய கட்டத்திலும் சூப்பர் ஸ்டார் உடனிருந்துள்ளார். மேலும் படையப்பா படத்திலேயே அவர் பங்குதாரராக நியமிக்கப்பட்டு ஒரு பெருந்தொகை அவருக்கு அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது இன்றும் கூட அவர் சூப்பர் ஸ்டாரிடமிருந்து மாதாமாதம் தனக்குரிய ஊதியத்தை மண்டபத்தில் வந்து பெற்றுகொள்கிறார். இதை விட வேறு என்ன வேண்டும்?

சொந்தமாக கார் வைத்திருக்கும் அவர், சிக்கனம் கருதி, 'அருகில் இருக்கும் இடத்திற்கு நம் ஒருவருக்காக எதற்கு கார் பயணம்?' என்று நினைத்து நகரில் உள்ள பல இடங்களுக்கு செல்ல பெரும்பாலும் ஆட்டோவையே பயன்படுத்துவார். தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் மட்டுமே காரை பயன்படுத்துவார். இதை கூட புரிந்துகொள்ளமுடியாத ஒரு இணையதளம் சில மாதங்களுக்கு முன்பு, "ரஜினியின் ரசிகர் மன்ற தலைவருக்கு இப்போது சொந்தமாக கார் இல்லை. பாவம் ஆட்டோவையே பயன்படுத்துகிறார்" என்று நீலிக்கண்ணீர் வடித்தது. உண்மை என்னன்னு விசாரிக்க கூட மாட்டீங்களா?

காரை திரும்ப ஒப்படைத்துவிட்டாரா?

இப்போது லேட்டஸ்டாக ஒரு செய்தி கிளம்பியிருக்கிறது. சத்திக்கு ரஜினி கொடுத்த காரை அவர் திரும்ப ரஜினியிடமே ஒப்படைத்துவிட்டதாக. இது குறித்து சத்தியநாராயணாவுக்கு நெருக்கமான நம் நண்பர் ஒருவரிடம் கேட்டோம். அவர் கூறியதாவது: சத்தி முதன் முதலில் வாங்கியது பிரபல பின்னணி பாடகர் டி.எம்.எஸ். வைத்திருந்த ஒரு காரை. பின்னர் சொந்தமாக ஒரு மாருதி எஸ்டீம் வாங்கினார். தற்போது வேறொரு காரை வாங்கியிருக்கிறார். (அதுவும் எஸ்டீம் தான் என்று கூறப்படுகிறது). ஆகையால் இரண்டாவதாக வாங்கிய மாருதி எஸ்டீமை விற்க அவர் முயற்சித்து வருவதாக தெரிகிறது. அவ்வளவுதான். மற்றபடி அவர் காரை சூப்பர் ஸ்டாரிடம் ரிடர்ன் செய்துவிட்டதாக கூறப்படுவதெல்லாம் வதந்தி தான் என்றும் அந்த நண்பர் தெரிவித்தார். சத்தியிடமே அந்த நண்பர் பேசி இது பற்றி நமக்கு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது லேட்டஸ்டாக இந்த விஷம சக்திகள் ஒரு கயிறு திரித்திருக்கிறார்கள். சத்தி நீக்கத்தை கண்டித்து தினமும் மண்டபத்துக்கு நூற்றுக்கணக்கில் கடிதங்கள் வருகிறதாம். ரஜினிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லையாம். ஹா...ஹா...ஹா... அடப்பாவிகளா உங்க காமெடிக்கு அளவே இல்லையா?

அபத்தத்தின் உச்சம்

சரி இதெல்லாம் போகட்டும், அவர்கள் கூறியுள்ள இன்னொரு தகவல் தான் அபத்தத்தின் உச்சம். ரசிகர் மன்றத்தை கவனித்துக்கொள்ளவேண்டும் என்ற காரணத்தினாலேயே சத்தி திருமணமே செய்துகொள்ளவில்லையாம். உண்மையில் சூப்பர் ஸ்டார் எவ்வளவோ வற்புறுத்தியும் சத்தி ஏதோ சில காரணங்களினால் திருமணம் செய்துகொள்ளவில்லை. அது அவரது தனிப்பட்ட விருப்பம் என்று சூப்பர் ஸ்டாரும் விட்டுவிட்டார். இதற்க்கு கூட ரஜினி மீது பழி போடும் இவர்களையெல்லாம் பேசாமல் நிற்க வைத்து.....

அப்போது கூட திருந்த மாட்டார்கள் இந்த ஜென்மங்கள். திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?

நல்லவேளை, "மன்றங்களை கவனித்துக்கொள்ளத்தான் தனது தாடியை கூட சத்தி ஷேவ் செய்துகொள்ளவில்லை" என்று சொல்லாமல் விட்டார்களே....அது வரைக்கும் சந்தோஷம்.

சத்தி ஏன் மௌனம் காக்கிறார்?

சரி இப்படி கிளம்பும் வதந்திகள் மற்றும் அவதூறுகளுக்கு எதிராக சத்தி ஏதாவது அறிக்கை விடக்கூடாதா? அல்லது பேட்டியாவது அளிக்ககூடாதா? அவர் ஏன் மௌனமாக இருக்கிறார்? என்று நீங்க கேட்க்கலாம்.

அப்படி அவர் பதில் கூற ஆரம்பித்தல் ஒவ்வொன்றுக்கும் பதில் கூற வேண்டியிருக்கும். இவரிடம் பதில் பெறுவதற்காகவே தேவையற்ற செய்திகளை கிளப்பிவிடுவார்கள். ஒன்றிற்கு பதிலளித்து, மற்றதிற்கு பதிலளிக்கவில்லைஎன்றால் அது உண்மையாக இருக்குமோ? அதனால் தான் அவர் மறுப்பு கூறவில்லையோ என்பது போன்ற சந்தேகங்கள் எழலாம். எனவே இந்த விஷயத்தில் சூப்பர் ஸ்டாரை கடைபிடிக்கிறார் சத்தி. இது போன்ற செய்திகளை பொருட்படுத்துவதேயில்லை என்று. சத்தியை பற்றி தலைவருக்கு தெரியும். தலைவரைப் பற்றி சத்திக்கு தெரியும். இருவரைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு எல்லாம் தெரியும். நம் ரசிகர்களுக்கும் இது தெரியும். இடையில் குழப்பம் விளைவிப்பவர்களை பற்றி நாம் ஏன் கவலைப்படுவானேன்?

சரி அவர்கள் நோக்கம் தான் என்ன?

ஒரு சாராரது நோக்கம் பரபரப்பு செய்திகள தரவேண்டும் (டிசம்பர் 12 பிறந்த நாள் பரிசாக சத்தி ஆதரவு ரஜினி மன்ற நிர்வாகிகள் மன்றத்திலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணையப்போகிறார்கள் என்று ஒரு பத்திரிகை கடந்த வாரம் செய்தி வெளியிட்டதே, ஞாபகமிருக்கிறதா?) அது போல... ஜஸ்ட் பரபரப்புகளுக்காக கிளப்பிவிடப்படும் செய்திகள ஒரு வகை.

மற்றொரு சாராரது நோக்கம் வேறு வகை. நம் மன்றத்திற்குள் குழப்பம் விளைவிக்கவேண்டும். முடிந்தால் சில அல்லது பல ரசிகர்களை சூப்பர் ஸ்டாருக்கு எதிராக திருப்ப வேண்டும். அதன் மூலம் அந்த குறிப்பிட்ட நடிகர் ஆதாயம் பெற வேண்டும். இது தான் அவர்கள் லட்சியம். அது நிச்சயம் நடக்கப்போவதில்லை.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வரட்டும்டி. அதற்க்கு பிறகுதான் இருக்கு வேடிக்கையே... அது வரை பொறு மனமே!!

[END]

ரஜினி வெப் டி.வி. - ஏன், எதற்காக, யாரால்?

டந்த சில தினங்களுக்கு முன்பு மீடியாவில் "ரஜினி பெயரில் Rajnitv.in என்னும் வெப் டி.வி. தொடக்கம்" என்ற செய்தியை பார்த்துவிட்டு, வியப்புற்று, என்ன இது, யார் நடத்துகிறார்கள், வெப் டி.வி. என்றால் என்ன? இது மற்றுமொரு வெப்சைட்டா? போன்ற விபரங்களை கேட்டு நமக்கு கமென்ட் மற்றும் இ-மெயில் அனுப்பினார்கள் நம் நண்பர்கள் சிலர்.

இதோ உங்களுக்காக தொகுக்கப்பட்ட முழு விபரங்கள்.

தேனாம்பேட்டையில் ராஜ் டி.வி. அலுவலகம் அருகே உள்ள ரஜினி டி.வி. அலுவலகத்தில் அதன் உரிமையாளர் திரு. ஆர்செல்.ஆறுமுகம் அவர்களை சந்தித்து அவர்களிடமே விபரங்கள் கேட்டோம்.

(அவரைப் பற்றியும், வெப் டி.வி. பற்றியும் தொழில் நேசன் என்ற பத்திரிகையில் வந்த விரிவான தகவல் கடைசியில் இடம்பெற்றுள்ளது.)

உங்களுடைய பெயர் வித்தியாசமாக உள்ளதே? ஆர்செல் ஆறுமுகம்...?

ஆர்செல் என்றால் நிறைய பேர் நான் ஏதோ Aircel நிறுவனத்தில் பணிபுரிவதாக நினைத்துகொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல. ஆர்செல் என்பது எனது பெற்றோரின் பெயர் ராமசாமி-செல்லம்மாள் (Ramasamy-Sellammal) எனபதன் சுருக்கமாகும். (வாவ்.... தாய்-தந்தையரின் பெயர்கள் இனிஷியலா...? சூப்பர்!! )

வெப் டி.வி. என்றால் என்ன? மற்ற வெப்சைட்டுகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

பொதுவாக ஒரு வெப்சைட் என்பது ஒரு நபருடைய அல்லது ஒரு நிறுவனத்தினுடைய அடையாளத்தை கூறுவதற்கு பயன்படுத்துகிறோம். நம் ரஜினி வெப் டி.வி. என்பது என்ன என்றால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சாட்டிலைட் மூலமாக பார்ப்பது போல இன்டர்நெட் மூலமாக வெப்சைட்டில் தொலைக்காட்சியை பார்ப்பது தான்.

ஒரு டி.வி பார்ப்பது போல feel உங்களுக்கு வரும். வீடியோ, அல்லது டி.வி.டி.யை play செய்து பார்ப்பது போல இது இருக்கும்.

ரஜினி.டி.வி.யின் சிறப்பு என்னவென்றால்: உலக அளவில் வெப்.டி.வி.க்கள் நிறைய உள்ளன. இந்திய அளவில் வெப் டி.வி நமக்கு தெரிந்த வரை இல்லை. ஒரு சிலர் ஆங்காங்கே தமது தயாரிப்புகளுக்காக நடத்திவரலாம். ஆனால் அவை நமது சிறப்பு என்னவென்றால் முழுமையான, 24 மணிநேர, தங்குதடையற்ற வெப் டி.வி.யாக இது இருக்கும். இது 24 மணிநேரமும் ரேடியோ போல செயல்படும். இதை பார்த்துகொண்டே நம் அன்றாட வேலைகளை செய்யலாம். இதற்க்கு Buffer அதிகம் தேவைப்படாது. குறைந்த பட்சம் 64 KPBS ஸ்பீட் உள்ள இன்டர்நெட் இருந்தாலே போதும். அதிகபட்சம் 100 KPBS தான் தேவைப்படும். பிராட்பேன்ட் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கிராமப்புறங்களில் உள்ளவர்கள் கூட இதை கண்டு களிக்கலாம். அவர்களையும் கருத்தில் கொண்டு தான் Zero Buffer வைத்து இதை தயார் செய்தோம். அது பாட்டுக்கு play ஆகிக்கொண்டே இருக்கும். மற்ற வெப்.டி.வி.க்களை அது போல பார்க்க இயலாது.

இதில் முழுக்க முழுக்க ரஜினி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் தான் பார்க்க முடியுமா?

ரஜினி பற்றி உங்களுக்கு தெரியும். உலகாளாவிய சூப்பர் ஸ்டார். மிகப் பெரிய நடிகர். ஒரு சாதரண குடும்பத்தில் பிறந்து கண்டக்டராக வேலை பார்த்து இன்று மிகப்பெரிய ஒரு இடத்தை அடைந்திருப்பவர். அவர் இன்று சேர்த்து வைத்திருக்கும் நற்பெயர் மற்றும் மக்கள் சக்தி மகத்தான ஒன்று. அதை கணக்கிட யாராலும் முடியாது. அவரால் மட்டும் எப்படி இது சாத்தியமாயிற்று என்று எவராலும் கூறமுடியாது.

அப்படிப்பட்ட ஒரு மாபெரும் நடிகரின் பெயரில் ஒரு வெப் டி.வி. ஆராம்பிக்கும் விஷயத்தை நான் மிக பொறுப்பாக செய்யவேண்டும் என்பதற்காக நான் ஒரு உறுதி பூண்டேன். அதாவது, இந்த ரஜினி.டி.வி.யில். காணப்படும் விஷயங்கள் அனைத்தும் சமுதாயத்திற்கு பயன் தரக்கூடிய விஷயமாக இருக்கவேண்டும். ரஜினி ரசிகர்கள் நிறைய நற்பணிகள் செய்து வருகிறார்கள்.

இது பிரத்யேகமாக ரஜினிக்கேன்றே இயங்கும். கலை, ஆன்மீக,இலக்கியம் உள்ளிட்ட மற்ற நிகழ்ச்சிகளும் ஓரளவு இருக்கும். ஆனால் பெரும்பான்மையானவை ரஜினி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளாக தான் இருக்கும். அவரது படத்திலிருந்து க்ளிப்பிங்குகள், பாடல் காட்சிகள், ரசிகர் மன்றங்கள் செய்யும் நற்பணிகள், அந்தந்த மாவட்ட மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் ஆகியவை இதில் இருக்கும்.

தவிர தனி மனிதர்களாக சமூக சேவை செய்பவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இது ஒரு மீடியமாக செயல்படும்.

ரஜினி வெப் டி.வி. தோன்றியது எப்படி?

முதலில் நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன் அல்ல. அவரை ஜஸ்ட் பிடிக்கும் அவ்வளவுதான். 2005 வாக்கில் ராஜ் டி.வி.க்காக "சிவாஜி ராவ் முதல் சிவாஜி வரை" என்னும் Biography Programme செய்ய நேரிட்டது. அதற்காக நான் தமிழகம் மற்றும் பெங்களூர் உட்பட பல இடங்களுக்கு சுற்றுப் பயணம் செய்தேன். அப்போது அவரது பிறப்பு முதல் வளர்ந்து சூப்பர் ஸ்டார் ஆனது வரை அவருடன் இருந்த பல நபர்களை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். ரஜினி சாரின் அண்ணன், அவரது பெங்களூர் நண்பர்கள் ஆகியோரை சந்தித்தேன். அவர் படித்த பள்ளி, அவர் விளையாடிய இடம், பணிபுரிந்த இடங்கள், வேலை செய்த பஸ் ரூட், உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்றேன். அதே போல இங்கு Film Institute இல் அவருடன் படித்தவர்கள், அவர் அறிமுகமான காலகட்டங்களில் அவருடன் நடித்தவர்கள் இப்படி பலரை சந்தித்தேன். நிகழ்ச்சி தயாரித்து முடிக்கும்போது எனக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது. ஒரு சாதரண குடும்பத்தில் எங்கோ பிறந்து, இன்று இங்கு ஒரு பெரிய மக்கள் சொத்தாக அவர் உருவெடுத்திருந்த அவர் வரலாறு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் அவர் இதை சாதித்தாரென்றால் அடிப்படையில் அவருக்கிருக்கும் நற்குணங்களால் தான் என்றால் மிகையாகாது. அவருடைய மனிதாபிமானம், மனிதர்களை மதிக்க கூடிய குணம் ஆகியவை என்னை வியப்பிலாழ்த்தியது. என்னையறியாமலே அவரது ரசிகராக மாறினேன்.

இதற்க்கு பிறகு, எதிர்பாராத விதமாக இந்த ஆண்டு முற்பகுதியில் கலைஞர் டி.வி.காக 'ரசிகன்' என்ற நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பை பெற்றேன். அதற்காக பல தரப்பட்ட ரஜினி ரசிகர்களை சந்தித்தேன். தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து பல ரசிகர் மன்றத்து பிரமுகர்களை சந்தித்தேன். அவர்கள் எப்படி இருப்பார்கள்? என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்வது ஏன் நோக்கம். பொதுவாக ரசிகர்கள் என்றால் பிறர் நினைப்பது விசிலடிப்பார்கள் போஸ்டர் ஓட்டுவார்கள் என்பதுதான். ஆனால் ரஜினி ரசிகர்களது நெட்வொர்க்கை கண்டு நான் பிரமித்தேன். அவர்களுக்குள் அவர்கள் இணைந்து செயல்படும் பாங்கு, மன்றத்தை வைத்து ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் பண்பு, ரசிகர்களுக்கு மட்டுமல்லாது சமூகத்தில் மற்றவர்களுக்கும் உதவுவது, ஒருவருக்கு பிரச்னை என்றால் முன் நிற்பது, கல்விப் பனியோ, விவசாயிகளுக்கு தேவையானவற்றை செய்வது என்று ரசிகர்கள் என்னை திக்குமுக்காடச் செய்தனர். ரஜினி பற்றிய நிகழி செய்யும் ஒரு நிகழ்ச்சி இயக்குனர் ஏன் மீது அவர்கள் பொழிந்த அன்பு என்னை நெகிழச் செய்தது. அவர்களுடன் நான் சில நாட்கள் பழகினாலும் அதோ பல வருடங்கள் பழகியது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்திவிட்டனர்.

இவர்கள் அன்பு இப்படியிருக்க, ஏன் நாம் ரஜினி சாரை அடிப்படையாக வைத்து தொடர்ந்து ஒரு விஷயத்தை செய்யக்கூடாது என்று நான் சிந்தித்ததன் விளைவுதான் இந்த ரஜினி வெப் டி.வி.

இதற்காக உங்கள் பின்புலத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட யாராவது உதவினார்களா? அல்லது இருக்கிறார்களா? இல்லை முழுக்க முழுக்க உங்களுடையது தானா?

முதல் முதலில் இந்த மாதிரி ஒரு கான்செப்ட்டை நான் கையில் எடுத்துக்கொண்டு செய்ய எனக்கு பயம் இருந்தது. காரணம் எனக்கு பெரிய பொருளாதாரப் பின்புலம் கிடையாது. மீடியாவில் சுமார் 15 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறேன். பல்வேறு தொலைக்காட்சிகளில் பணிபுரிந்திருக்கிறேன். அவ்வாளவுதான். நாம் ரஜினி சாரின் பெயரை பயன்படுத்துகிறோமே... அவரிடமிருந்து ஏதாவது எதிர்ப்பு வருமோ? அவர் பார்த்துவிட்டு ஏதாவது சொல்லிவிடப்போகிறார் என்பதால் அவரை சந்தித்து அவர் அனுமதி பெற்றுவிட முடிவு செய்தேன். அதற்கேற்றார்போல ரசிகன் நிகழ்ச்சியை நான் கலைஞர் டி.வி.யில் நடத்திகொண்டிருந்தபோது ரஜினி சாரை நேரடியா சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். இருப்பினும் என்னால் நிறைய விஷயம் பேசமுடியவில்லை. முதல் சந்திப்பில் என்னை அடையாளபடுத்திக்கொள்ள சிரமமாக இருந்தது. இருப்பினும் அவரிடம் முறைப்படி ஒரு வேண்டுகோளாக இதை கொண்டு சென்றேன். இது குறித்து அவரிடம் என்னால் பேசமுடியவில்லை. அடுத்ததுத்து அவர் படப்பிடிப்பு, ரசிகர்கள் சந்திப்பு என்று பிசியாகிவிட்டார். இருப்பினும் எனது வேண்டுகோளை கடிதமாக அனுப்பியிருந்தனே. அவர் கடிதத்தை படித்துவிட்டு, அவருக்கு வாழ்த்துக்களை சொல்லுங்கள், சிறப்பாக செய்ய சொல்லுங்கள் என்று கூறினார். இதன் மூலம் எனக்கு ஒரு பாசிட்டிவான சிக்னல் கிடைத்தது. உடனே மளமளவென்று இதற்கான வேலைகளை ஆரம்பித்தேன்.

ஓரளவு வெப்சைட்டை நிர்மாணித்த பிறகு - சில நாட்களுக்கு முன்பு - திரு.கலைஞானம், செல்வி மீனா, இயக்குனர் ஆர்.சி. சக்தி, பிரபல வர்ணனையாளர் அப்துல் ஹமீது ஆகியோரை வைத்து ஏ.வி.எம். ப்ரீவியூ தியேட்டரில் வெப் டி.வி. துவக்க விழாவை நடத்தினேன். ரியாஸ் என்பவர் இந்த வெப் டி.வி.க்கு P.R.O. வாக இருப்பார். ரசிகர் மன்ற பிரமுகர்கள் பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்தனர். ரஜினி சாரின் அண்ணன் திரு.சத்தியநாராயண ராவுடன் பேசினேன். அவர் எனக்கு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். அதே போல அவர் நண்பர் ராஜ் பகதூருடனும் பேசினேன். அவரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ரஜினி சாருடன் நேரடியாக பேச முடியவில்லைஎன்றாலும் அவருடன் இருப்பவர்களுக்கு நடப்பவற்றை அப்டேட் செய்துவிடவேண்டும் என்று விழா உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் தெரிவித்து வருகிறேன்.

ரஜினி சாரை நீங்கள் நேரடியாக சந்தித்த அனுபவத்தை கொஞ்சம் கூறுங்களேன்...

கலைஞர் டி.வி.யின் ரசிகன் நிகழ்ச்சிக்காக அவரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். ராஜ் டி.வி.க்காக "சிவாஜி ராவ் முதல் சிவாஜி வரை" செய்தபோதே அவரை சந்திக்கவேண்டும் என்ற ஆவல் என்னுள் பலமடங்கு எழுந்தது. ரசிகன் நிகழ்ச்சி துவக்கியபிறகு அது இனனும் பலமடங்கு ஆனது. அவரை 10 அல்லது 15 நிமிடங்கள் தான் சந்திக்க முடிந்தது. ரசிகன் நிகழ்ச்சி குறித்து அவரிடம் கூறினேன்.

"நல்ல விஷயம். யாரும் தொடாத சப்ஜெக்ட் அது. நன்றாக செய்யுங்கள். நிகழ்ச்சி முழு வெற்றியடைய என் வாழ்த்துக்கள்" என்றார்.

"எல்லாம் அவன் செய்யுறான்!!"

பிறகு அவரிடம் நான், "சார் பல தரப்பட்ட ரசிகர்களை நான் சந்தித்து வருகிறேன். உங்கள் ரசிகர்களின் நெட்வொர்க், அவர்கள் செயல்படும் விதம், ஒருவருக்கொருவர் செலுத்தும் அன்பு, அவர்கள் சமுதாயத்திற்கு செய்யும் பணிகள் எல்லாம் என்னை பிரமிக்க வைக்கிறது." என்றேன்.

எல்லாம் கேட்டுக்கொண்ட அவர் மேலே கையை காட்டி, "எல்லாம் அவன் செய்யுறான்!" என்றார் நெகிழ்ச்சியுடன்.

வெப் டி.வி. ஆரம்பித்துள்ள உங்கள் நோக்கம் தான் என்ன?

உலகம் முழுதும் உள்ள அவரது ரசிகர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கவேண்டும். அதற்க்கு பிறகு ரஜினி சாருக்காக பாடுபடக்கூடிய மீடியா நண்பர்கள், வலைத்தளம் நடத்துபவர்கள் உள்ளிட்ட அனைவருக்குள்ளும் ஒரு நல்லுறவை ஏற்படுத்தி ஒரு மிகப்பெரிய சக்தியாக அதை மாற்றவேண்டும். இதற்க்கு அனைவரும் ஒத்துழைக்கவேன்டும். அவர்களுக்கு தேவையான Visual கிளிப்பிங்குகள் சம்பந்தமான விஷயங்களில் நான் பெரும் உதவியாக இருப்பேன். அதே போல், ஒவ்வொரு மீடியா நண்பர்கள் செய்துகொண்டிருக்கும் நல்ல செயல்பாடுகளைஎல்லாம் அடையாளம் கண்டு அவர்களையெல்லாம் கௌரவிக்க இந்த ரஜினி டி.வி. எப்பொழுதும் தயாராக இருக்கும்.

மேலும், ரஜினி சாருக்காக அவரது புகழுக்காக எத்தனையோ சக்திகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அந்த சக்திகளையெல்லாம் ஒருங்கிணைக்க நான் பாடுபடுவேன். ரஜினி சாருக்கு நமக்காக இத்தனை பேர் இந்த வெப் மீடியாவில் துடிப்புடன் இயங்குகிறார்கள் என்று இதன் மூலம் தெரியப்படுத்தவேண்டும்.

எண்ணற்ற ரசிகர்கள் அவர் பெயரில் நற்பணிகள் செய்துவருகிறார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் பதிவு பெற்றவர்களோ அல்லது பெறாதவர்களோ யாராக இருந்தாலும் அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களை நிச்சயம் இந்த வெப் டி.வி.யில். பதிவுசெய்வோம்.

ரஜினி டி.வி.யை பார்ப்பதற்கு கட்டணம் வசூலிப்பீர்களா? அல்லது இலவசமா?

இது முழுக்க முழுக்க இலவசம்தான். கட்டணம் எதுவும் கிடையாது. Software Testing பொருட்டு சில வார்த்தைகள் இப்போது சைட்டில் உள்ளனர். அதை விரைவில் எடுத்துவிடுவோம். சைட்டில் நிறைய மாறுதல்கள் செய்ய்யவேண்டியுள்ள்ளது. வரும் ஜனவரி மாதம் வெப் சைட் பக்காவாக ரெடியாகிவிடும்.

ரசிகர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

ரசிகர்கள் மற்றும் அவருக்காக பாடுபடும் எல்லாரும் இதற்க்கு மிகவும் சப்போர்டிவாக இருக்கவேண்டும். அது போல தனிப்பட்ட முறையில் அவருக்காக பாடுபடும் யாராவது என்னை சந்திக்க வேண்டுமென்றால் அதற்க்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.

கமெர்ஷியல் என்பதற்காக கண்டதையெல்லாம் போட மாட்டேன். இதை நடத்தும் காஸ்ட் எனக்கு வந்தாலே போதும். இதை நான் ஒரு கேரீராக செய்யவில்லை. அவருடைய ஒரு ரசிகனாக இதை என் ஆயுள் முழுக்க பண்ணக்கூடிய ஒரு விஷயமாக இதை உருவாக்கியிருக்கிறேன். என் அல்டிமேட் லட்சியம் என்றால் திரைப்படம் இயக்குவது தான். அதற்கும் நேரத்தை ஒதுக்குவேன். இரு கண்களில் ஒரு கண் இந்த ரஜினி டி.வி., இன்னொரு கண் என் இயக்குனர் லட்சியம்.

அவரது லட்சியம் நிறைவேற நம் வலைத்தளம் சார்பாக நம் வாழ்த்துக்களை தெரிவித்தோம்.

www.rajnitv.in பார்ப்பதில் உங்களுக்கு எதேனும் சிரமம் இருந்தாலோ அல்லது இது தொடர்பாக உங்களுக்கு சந்தேகம் இருந்தாலோ நீங்கள் தாராளமாக திரு.ஆர்செல்.ஆறுமுகத்தை கீழ்கண்ட மொபைல் என்னில் தொடர்புகொள்ளலாம். திரு.ஆர்செல் ஆறுமுகம்: +91-9841466812

…………………………………………………………………………………………………………………

முக்கிய குறிப்பு:

எனது யாஹூ முகவரிக்கு (simple_sundar@yahoo.com) இ.மெயில்கள் அனுப்புவது சிரமாமாக இருப்பதாக நண்பர்கள் கூறியதையடுத்து என் இ.மெயில் முகவரியை மாற்றியிருக்கிறேன். இனி வலைத்தளம் மற்றும் சொந்த விஷயமாக என்னை தொடர்பு கொள்பவர்கள் simplesundar@gmail.com என்னும் முகவரியில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

நன்றி.

- சுந்தர்
simplesundar@gmail.com

…………………………………………………………………………………………………………………

[END]

அன்னதானம், சிறப்பு அர்ச்சனை, வழிபாடு - அசத்திய சென்னை ரசிகர்கள்

முன்னெப்போதும் இல்லாத வகையில் சென்னை ரசிகர்கள் இம்முறை சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு சமூக நலப் பணிகளை எக்கச்சக்கமாக செய்து அனைவரையும் பிரமிக்க வைத்துவிட்டனர்.

சூப்பர் ஸ்டார் மட்டும் கொண்டாட்டங்களை தவிருங்கள் என்று சொல்லாதிருந்தால் இதற்க்கு மேலும் பட்டையை கிளப்பியிருப்பார்கள் என்பது நிஜம். வேண்டாம் என்று சொல்லியே இந்த அளவு செய்கிறார்கள் என்றால் தலைவர் வழக்கம் போல எதுவும் சொல்லாமல் இருந்திருந்தால் கொண்டாட்டங்களுக்கு கேட்கவே வேண்டாம். (ரஜினி என்றுமே தன் பிறந்த நாளை கொண்டாடுங்கள் என்று சொன்னதில்லை. ரசிகர்களாக காலங்காலமாக செய்து வருவது இது.)

சென்னையில் பல இடங்களில் குறிப்பாக ராயபுரம், மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் இம்முறை பிறந்த நாள் குறித்த போஸ்டர்கள் அதிகளவில் தென்பட்டது. அதே போல டிஜிட்டல் பேனர்களும் சென்னை நகர் முழுக்க பரவலாக தென்பட்டன.

சென்னை எல்.ஐ.சி. யூனிட் ரசிகர்கள் சார்பாக சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் எளிமையாகவும் நிறைவாகவும் கொண்டாடப்பட்டது.

11ஆம் தேதி மாலை, சென்னை அண்ணா நகரில் உள்ள Guilf of Service, Home for Handicapped Childern இல் அண்ணா தானம் நடைபெற்றது.

நெகிழச் செய்த குழந்தைகளின் பிரார்த்தனை

ஊனமுற்ற குழந்தைகள் உலக அமைதிக்காகவும், இலங்கை தமிழர் துயர் தீரவும் பிரார்த்தனை செய்தனர். அனைத்து குழந்தைகளும் தங்கள் உணவை உண்ணும் முன், கோரசாக Happy Birthday to Rajini uncle என்று பாடியது நெஞ்சை நெகிழச் செய்தது. நிச்சயம் இந்த குழந்தைகளின் பிரார்த்தனை பலனளிக்கும் என்று நம்பலாம்.

அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை எல்.ஐ.சி. யூனிட்டின் தலைவர் ஸ்ரீதர் செய்திருந்தார். முன்னதாக ஸ்ரீதர் தலைமையில் மன்ற உறுப்பினர்கள் குழந்தைகளுக்கு உணவு பரிமாறினர்.

கோவில்களில் விஷேஷ வழிபாடு, அர்ச்சனை

மறுநாள் காலை சென்னை அயனாவரத்தில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் சூப்பர் ஸ்டாரின் பெயரில் விஷேஷ அர்ச்சனை செய்யப்பட்டது.

மதியம் காளிகாம்பாள் ஆலயத்தில் அம்பாளுக்கு உலக அமைதி வேண்டியும் சூப்பர் ஸ்டாரின் நலன் வேண்டியும் சிறப்பு அர்ச்சனைகளும் ஆராதனைகளும் செய்யப்பட்டது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் எல்.ஐ.சி. யூனிட் உறுப்பினர்கள் ராஜாராம், செல்வம், சார்லஸ், நோபிள் அலெக்ஸ், நெல்சன், ஆட்டோ மாலிக், மாத்யூ, மணிகண்டன், மணிவண்ணன், சுரேஷ், செல்வராஜ், சந்திரன், அரசு, கேச்வன், சேலம் குமாரவேல், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

…………………………………………………………………………………………………………………

12/12/2008 அன்று மாலை CNN-IBN தொலைகாட்சியில் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் குறித்து விஷேஷ செய்தி ஒளிபரப்பப்பட்டது. எல்.ஐ.சி. யூனிட் சார்பாக அதன் தலைவர் ஸ்ரீதர் CNN-IBN தொலைக்காட்சிக்கு சிறிய பேட்டி ஒன்று அளித்திருந்தார். கீழே அதன் விவரம் தரப்பட்டுள்ளது.

Fans celebrate Rajini's 58th birthday in Chennai - IBNlive.com
Meenakshi Mahadevan / CNN-IBN

Chennai: December 12 is southern cinema superstar Rajinikanth's birthday.

On Friday fans step out with much fervour to mark his 58th birthday.

However, this time the celebrations have been simple and subdued because of the Sri lankan Tamil controversy and the Mumbai terror attacks.

Instead of bursting crackers and worshipping the superstar's cutouts by breaking coconuts and pouring milk, fans offered their prayers in temples and distributed food amongst the poor.

Rajinikanth fan P Sridhar says, "We wanted to remember this day. So we decided to help the poor by feeding them and conducted poojas in temples and kept the celebrations very simple."

The celebrations were low key in tune to Rajinikanth's request to his fans to refrain following the terror attacks on Mumbai and in reaction to what is happening to the Tamils in Sri Lanka.

However, his fans are hoping that Rajnikanth would give them other reasons to celebrate.

Fan Abdul Malik says, "We believe this year is going to be very important for him. We are all waiting for an important announcement from him about entering politics. So we are all praying for that."

The crackers and colours may have been missing but the excitement still remained the same.

Rajini's loyal fans found a noble and silent way of celebrating their idol's birthday even if the superstar wasn't in the mood.

http://ibnlive.in.com/news/fans-celebrate-rajinis-58th-birthday-in-chennai/80418-8.html

[END]

Monday, December 15, 2008

உயிர் காக்கும் தானம் - 'ரத்த தானம்' செய்த நம் நண்பர்கள்

14/12/2008 - ஞாயிறு காலை - சென்னை கிண்டி பட்ரோட்டில் அமைந்துள்ள மௌன்ட் மெடிக்கல் சென்டரில் சூப்பர் ஸ்டாரின் 59வது பிறந்தநாளை முன்னிட்டு, ரஜினிபான்ஸ்.காம் சார்பில் ரத்த தான முகாம் இனிதே நடைபெற்றது.

முகாமுக்கு Rajinifans.com உறுப்பினர்ககள் திரளாக வந்திருந்து தம் ரத்தத்தை தானம் செய்தனர்.

முன்னதாக ரத்தம் பரிசோதிக்கப்பட்டு, அவரவர் க்ரூப் கண்டறிதல் மற்றும் இதர சோதனைகள் செய்யப்பட்டு, ரத்தம் பெறப்பட்டது. சராசரியாக ஒவ்வொவொருவருக்கும் ஆறு நிமிடங்கள் மட்டுமே செலவானது. மொத்தம் 33 பேர் ரத்த தானம் செய்தனர்.

அரசு ரத்த வங்கி சார்பாக பெறப்பட்ட இந்த ரத்தம் உடனடியாக அரசு ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது.

ரத்தம் அளித்த ரசிகர்களுக்கு உடனடியாக மினரல் வாட்டரும், பழ ரசமும், பிஸ்கட்டும் வழங்கப்பட்டது.

முடிவில் ரத்த தான முகாமுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துகொடுத்த டாக்டர் சச்சிதானந்தம் அவர்களுக்கு ரஜினிபான்ஸ்.காம் சார்பாக திரு. ரஜினி ராம்கி சந்தன மாலையும் சால்வையும் அணிவித்து கௌரவித்தார். ரசிகர்கள் அனைவரும் மருத்துவர் திரு. சச்சிதானந்தம் அவர்களுக்கு தம் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

முன்னதாக முகாமிற்கு வந்த ரசிகர்கள் அனைவரையும் வரவேற்று உபசரித்தார் ரஜினி ராம்கி. (முதல் படத்தில் ரத்தம் செலுத்துபவர்.)

முகாம் பற்றிய முழு தகவல், மற்றும் கலந்து கொண்டவர்கள், ரத்தம் செலுத்தியவர்கள் விவரம் Rajinifans.com ல் விரைவில் வெளியிடப்படும்.


[END]

Saturday, December 13, 2008

தினசரி கேலண்டரில் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள்!

திருப்பூரில் உள்ள ஒரு பிரபல டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் கேலண்டரில் கண்டது இது. நேற்று டிசம்பர் 12 அன்று சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை மார்க் செய்து அவரது படமும் அச்சிடப்பட்டுள்ளது.


நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு கூட சில கேலண்டர்களில் நான் இதை பார்த்திருக்கிறேன்.
தற்போது திருப்பூரிலிருந்து நண்பர் மனோ இந்த படத்தை அனுப்பினார். நம் ரசிகர்கள் ஆர்டர் செய்து தருவித்த கேலண்டர் அல்ல இது. ஒரு தொழில் நிறுவனம் அச்சிட்டுள்ள கேலண்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள், படத்துடன் குறிப்பிடப்பட்டது கிடைப்பதற்கரிய கௌரவம் ஆகும்.

தலைவர் எதிர் காலத்தில் குவிக்கபோகும் சாதனைகளுக்கு இவையெல்லாம் முன்னோட்டங்கள் என்றால் மிகையாகாது.


"பொறந்த ஊருக்கு புகழைச் சேரு

வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு

நாலு பேருக்கு நன்மை செய்தால்

கொண்டாடுவார் பன் பாடுவார்

எந்நாளும் உழைச்சதுக்கு பொன்னான பலனிருக்கு

ஊரோடு சேர்ந்து வாழுங்க

அம்மன் அருள் சேரும்

தினம் நம்ம துணையாகும்


[END]




பிறந்த நாளுக்கு போஸ்டர்கள், பன்ச் டயலாக்குகள், சமூகப் பணிகள் என்று தூள் கிளப்பிய ரசிகர்கள் - B'day Coverage 1

லைவர் என்ன தான் தன் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று சொன்னாலும், ரசிகர்கள் கொண்டாடி தள்ளிவிட்டார்கள். ஒரே வித்தியாசம் - இந்த முறை சமூக ரீதியிலான பல நலப்பணிகள் செய்து பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.

ரத்த தானம், அன்ன தானம், கோயில்களில் சிறப்பு வழிபாடு, அர்ச்சனை என்று பெரும்பாலான ரசிகர்கள் கொண்டாடியிருப்பதாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து நமக்கு தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இதை தவிர, அனாதை ஆசிரமங்களுக்கு உதவி, ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், வீல் சேர் முதலியன பல இடங்களில் வழங்கப்பட்டன. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆங்காங்கே நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கொண்டாட்டங்களை தவிர்த்து இதுபோல் மக்களுக்கு பயன் தரக்கூடிய பல சமுதாயப் பணிகளை நம் ரசிகர்கள் அனைவரும் செய்துள்ளனர்.

தீவிரவாதம் ஒழிய மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்

சேலம் ரசிகர்கள், வித்தியாசமாக ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு, தீவிரவாதம் ஒழிய வேண்டி கோட்டை பெருமாள் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

அவர்களுக்கு நம் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

அதே போல போஸ்டர்களிலும் நம் ரசிகர்கள் தூள் பரத்தியிருந்தனர். காண்போரை கவரும் வாசகங்கள் மற்றும் பன்ச் டயலாக்குகள் அடங்கிய போஸ்டர்கள் சென்னை, சேலம், வேலூர், திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, திருப்பூர், உள்ளிட்ட பல நகரங்களில் ஒட்டப்பட்டிருந்தன. சாம்பிளுக்கு ஒன்று நீங்கள் இங்கே காணலாம்.

இது தொடர்பாக செய்தித்தாள்களில் வந்த செய்திகளை தொகுத்து முதல் தொகுப்பாக தருகிறேன்.

அடுத்த தொகுப்பு அடுத்தடுத்து வெளிவரும்.

Add Image

A pompous birthday celebration for Thalaivar - The New Indian Express, Expresso

It was the 58th birthday of Superstar Rajinikanth. Though the star has banned any form of cele- brations due to the on going Sri Lankan crisis, his zillions of fans couldn’t be stopped from cele- brating the occassion Fans still found a way to make their day special; by feeding people, giving out free uniforms and school books.

IN the always-packed T Nagar bus depot junction, zealous fans of the T Nagar wing of Rajinikanth Rasigargal Narpani Mandram had a banner erected ‘Naalaiye Tamilagame’, referring to Rajinikanth wishing him for his birthday . ‘Naalaiye Tamilagame was actually in Hyderabad then, but that was no reason to bring down loud shrills of ‘Vaazhgai Superstar’ in the road junction, where a young lad, perhaps still in his teens, ceremoniously downed milk packet after another at Rajini’s cutout.

The Superstar’s fans couldn’t meet their thalaivar on his 58th birthday . So what, their almost-religious fanaticism to the matinee demigod Rajinikanth pushed them to distribute sweets and chocolates to all other devotees at the Tirumala Tirupathi Devasthanam Temple. In fact, packets of the prasadam were reserved to be delivered at his home later during the day . The actor had also banned grand celebrations on his birthday because of the ongoing ethnic crisis in Sri Lanka. However, the zillions of fans still found a way to make their day special: by feeding people, giving out free uniforms and school books.

Every devotee at the temple wore a quizzical look, as he was offered Parry Caramilk toffees inside the temple, but one small sentence ‘Thalaivar’s birthday innikku’ seemed reason enough for them to accept the offering, with a simper. The chocolate distribution was followed by an equally generous giving away of Sakkarapon gal to mark the actor’s birthday .

It was a hectic day for the actor’s fans, who actually claimed that they were refraining from grand celebrations! The day began early with abishekams and annadhanams in many venues, including Ilankaaliyamman Temple (Saidapet), KK nagar bus stand and the T Nagar anna dhanam. Elsewhere in the city, big posters announced the success of thalai’s success, following 50 days of Aegan, and his equally-zealous fans too had a thing or two up their sleeve.

But with Rajini having advised things to be at a low key, and the actor not even being in Chennai, celebrations should have been very restrained. But fans still made their presence felt, and the media, especially radio channels, celebrated his birthday, playing track after another of his songs. In fact, most programmes in the morning slot had questions relating to the actor, like ‘Who is the Superstar of your life? How will you wish the Superstar using his own style, etc. Rajinikanth wanted things restrained, but his entry into year 59 is still big news on newspapers, channels and websites. That’s what we call Rajini magic!

- Sharadha Narayanan, Express News Service

[END]

Friday, December 12, 2008

ஒரு ரசிகரின் சாதனை

ம் நண்பர் ஈ.ரா. தமது கைக்காசை செலவிட்டு, சூப்பர் ஸ்டாரை பற்றி தாம் சுயமாக எழுதிய ஒரு கவிதை தொகுப்பை சென்ற ஆண்டு சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டார். நம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்ற நூல் அது. எழுதியவர் நம்மில் ஒருவர என்பதாலேயோ என்னவோ அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. மிகவும் வருத்ததிற்குரிய விஷயம் அது.

அந்த கவிதை தொகுப்பில் தீர்க்கதரிசனமான பல வரிகள் இடம்பெற்றிருக்கும். படியுங்கள் அசந்து போவீர்கள். (பெரு ம்ழை தானாகக் பொழியும், கலங்காதீர்கள் என்று அவர் கூறியதும் அதன் படியே நடந்ததும் குறிப்பிடத்தக்கது.)

உதராணத்துக்கு சில வரிகள்

--------------------------

கொடுத்துச் சிவந்தனவாம் கரங்கள்!
நீதான் கொடுப்பதே பிறர்க்கு தெரியாதே? -
பின் எப்படி நாங்கள் கண்டு கொள்வது?

--------------------------

உன் இடுப்பு -
இந்த வயதிலும் ஆடுகிறது உன் இடுப்பு!
அதனால்தான் எரிகிறதோ பல ஆயிரம் அடுப்பு?

--------------------------

இன்றைக்கு ஜப்பானே விரும்பும்
ஒரே மேட் இன் இந்தியா - நீ தானே?

--------------------------

கோடிகளிலே புரளும்
கோமான்களுக்கு மத்தியிலே - தெருக்
கோடியில் இருப்போரும் வளம்பெற
கோலோச்சும் நாள் எந்நாள்?

--------------------------

உன்
இதயத்தின்
ஈரப்பதத்தை
எந்தக் கருவியாலும்
அளவிட முடியாது!

--------------------------

நீ புகைத்திருக்கிறாய் - ஆனால்
பிறர் வெற்றி கண்டு
புகைந்ததில்லை!

--------------------------

வந்த வழியை மறக்காமல்
வாழும் வழியை மறைக்காமல்
ஆசை சிறிதும் பிறக்காமல்
ஆட்சிக் கதவைத் திறக்காமல்
அடக்கத்தோடு நிற்கும்
அலெக்ஸ் பாண்டியனின் பிறந்த நாள்!

--------------------------

சூப்ப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈ.ரா.வின் கவிதைத் தொகுப்பை உங்களுக்கு மீண்டும் அளிக்கிறேன்.

http://padikkathavan.blogspot.com/2008/12/blog-post_10.html

(சன் செய்திகள் ஈ.வே.ரா.விற்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரா இவர் என்று சிலர் கேட்பதால் இதை கூறுகிறேன். இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கணிப்பொறி வல்லுனராக பணிபுரிகிறார். குணத்தில் ஒரு சின்ன ரஜினி.)

[END]

The boss makes headlines on his birthday despite his forbearance on celebrations

Deccan Chronicle and Times of India have comeup with a superb articles and news pieces on Superstar's birthday. Most FM channels and Music Channels are playing Rajini songs. Some FM channels are are announcing the various fan club activities across the city scheduled today.

Hello FM 106.4 (Thanthi group) will be broadcasting chandramukhi tonight at 9PM.
There is an ad related to this in today’s dinathanthi.

Hello FM has dedicated the entire day today to Thalaivar.
Many famous personalities are sharing their views about thalaivar today on Hello FM.

NDTV announced in news as Headlines about the birthday.

I started receiving lots of birthday wish SMSes from our friends by 12.00 am itself. Hereby i present one of the most interesting SMS.

Rasigargal and Makkal: Kadavulae thalaivar nalla irukka vaendum.
Thalaivar:
Kadavulae en rasigargalum, thamizhaga makkalum nandraaga irukka vaendum.
Kadavul:
En padaippil ippadi oru adhisaya piraviyaa?

The below is the full page article on today Deccan Chronicle, Chennai edition in the Main issue as 2nd page. The news piece where Cho speaks on Thalaivar is amazing. "HE IS NOT IMPULSIVE BUT INTUITIVE". Do read without fail.

Kindly click the image to ZOOM and READ the text.

Happy birthday Rajini, the undisputed Baasha at the box-office - (Times of India, Chennai)
CT wishes the Superstar a wonderful birthday as he turns 58 today

SREEDHAR PILLAI Times News Network

December 12 is a red letter day in the Tamil film calendar. It is the birthday of Superstar Rajnikanth and his fans celebrate it with a lot of fervour and enthusiasm. Rajinikanth has been ruling the Tamil box-office for over two decades. In most of the 153 odd movies he has done in a career spanning 33 years, Rajinikanth has reached out to the mass audiences with his electrifying screen presence mixed with heroism, peppy songs and famous punchlines.

Today, he turns 58, and he will be in Hyderabad at the Ramoji Rao studio shooting for daughter Soundarya Rajinikanth’s animation film Sultan — The Warrior. This year, he has urged his fans not to celebrate his birthday as he has been pained by what is happening to the Tamils in Sri Lanka. Added to that, the Mumbai massacre has also shell-shocked the nation and the film industry.

On the career front, this year will go down as one of the worst years for the star as Kuselan, in which he did a
cameo role, took a drubbing at the box-office. Then, he had to clarify on a Kannada television channel for his remarks on the Hogenekkal issue, which also created problems for the actor. But he has bounced back from every setback and remains the undisputed Baasha at the box-office.

Meanwhile, work is progressing on his prestigious magnum opus Enthiren, directed by Shankar. The shooting of the film is taking place in different locations in and around Chennai. Two songs have been shot and nearly 30 percent of the talkie portion has been completed. The producers are trying their best to release it for Diwali 2009. Rajinikanth, it seems, has passed the test of a true superstar as people who know nothing about Tamil cinema still recognise him as an icon!

[END]

ராஜா உண்டு, மந்திரி உண்டு, ராஜ்ஜியம் உனக்கு உண்டு!!

ராஜா உண்டு, மந்திரி உண்டு,

ராஜ்ஜியம் உனக்கு உண்டு

ஆள ஒரு ராஜகுமாரன் உண்டு

உறவும் உண்டு, அதில் பரிவுமுண்டு

அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நானும்

தெய்வத்துள் உன்னைக் கண்டேன்

தினம் தினம் பூஜை செய்தேன்

நிலவுக்கு களங்கமென்று உறவுக்கு விலகி நின்றேன்

மயக்கமும் ஏனோ தயக்கமும் ஏனோ

உலகில் உனக்கும் சரித்திரமுண்டு!!

தலைவர் இன்று தமது 59 வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார்.

(பிறந்த தேதி, வருடம்: 12/12/1950)

தமிழ்த் தாயின் தவப் புதல்வன், அரசியல் ஞானி
சூப்பர் ஸ்டாருக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

[END]