Sunday, January 4, 2009

Sceintist Rajini and Medico Aiswarya Rai - Endhiran Update

*TRANSLATION AVAILABLE AT THE END OF THE ARTICLE

சயன்டிஸ்ட் ரஜினி, மருத்துவ மாணவி ஐஸ்வர்யா ராய் - Endhiran Update

சும்மா வேலூரையே அதகளப்படுத்தி விட்டார்கள் நம் ரசிகர்கள். இப்படி ஒரு கூட்டத்தை வேலூரில் ஷங்கர் எதிர் பார்க்கவில்லை. விடுமுறை காலத்தில் படப்பிடிப்பை நடத்தியதற்கே இப்படியென்றால் வேலை நாட்களில் நடத்தியிருந்தால்?

VIT யில் படப்பிடிப்பை பார்க்க நேர்ந்தவர்கள் கூறும் அனுபவம் வித்தியாசமானது. எடுக்கப்பட்ட காட்சிகள் குறித்த விபரத்தை நான் வெளியிட விரும்பவில்லை. இருப்பினும் ஒரு சிறிய அவுட்லைன். ஷூட்டிங் பார்த்தவர்களிடம் நமது நண்பர்கள் பேசி, பிறகும் நம்மிடம் அதை தெரிவித்தனர். ஸோ, just enjoy and forget. உண்மை விபரங்கள் சற்று முன்னர் பின்னர் இருக்கலாம்.

ஐஸ்வர்யாவிடம் ரஜினி கோரிக்கை

மிகவும் திறமைசாலியான, படிப்பில் படு சுட்டியான மருத்துவக் கல்லூரி மாணவி ஐஸ்வர்யா ராய். அவர் தனது ஆராய்ச்சியில் உதவியாளராக சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கருதும் விஞ்ஞானி ரஜினி, அவரிடம் சென்று அதற்கான கோரிக்கையை வைப்பது போலவும் அதற்க்கு ஐஸ்வர்யா ராய் மறுத்து பிகு செய்வது போலவும் (சும்மா லுல்லுலுவாய்க்கு தான்) காட்சிகள் எடுக்கப்பட்டன. பார்ப்பதற்கு படு ஸ்லிம்மாக உண்மையில் ஒரு மருத்துவ மாணவி போலவே ஐஸ்வர்யா ராய் காட்சியளித்தார். அதற்கேற்றார்போல அவர் கழுத்தில் காலேஜ் ஐ.டி. கார்ட், கையில் ஒரு ஸ்டெதஸ்கோப், வெள்ளை நிற கோட் என்று சகலமும் பர்ஃபெக்டாக காணப்பட்டது.

எத்தனை வேடம் மொத்தத்தில்?

தொடர்ந்து சில நாட்கள் படப்பிடிப்பை பார்த்தவர்கள் சற்று குழம்பித்தான் போனார்கள். ரஜினிக்கு இதில் எத்தனை வேடம் தான் என்று. காரணம் ஒரு நாள் French Beard உடன் படு ஸ்டைலாக முழுக்கை சட்டை ஜீன்ஸில் காணப்பட்ட ரஜினி அடுத்த நாள் மீசையின்றி கருநீலம் மற்றும் கருப்பு பேன்ட் அதற்க்கு தோதான கூலிங் க்ளாஸ் என்று ஸ்டைலிஷாக காணப்பட்டார். (அநேகமாக இது ரோபோவாக இருக்க கூடும்).

சுற்றுலாத் தலமாக மாறிய VIT

படப்பிடிப்பை தூரத்திலிருந்து பார்த்த ரசிகர்கள் ரஜினியின் உடை அதன் நிறம், அவரின் கெட்டப், சின்ன சின்ன மேனரிசம் என்று ஒன்று விடாமல் தங்களால் முடிந்ததை பார்த்து அதை நண்பர்களுக்கு சொல்லி சொல்லி மகிழ்கிறார்கள். பொற்கோவில் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள சுற்றுலா மற்றும் வழிப்பாட்டு தளங்களுக்கு கேப்கள் மற்றும் பஸ்களில் வருபவர்கள் (குறிப்பாக சபரிமலை சென்று திரும்புபவர்கள்) எந்திரன் ஷூட்டிங் பற்றி கேள்விப்பட்டதும் VIT க்கு வண்டியை திருப்பிவிடுகின்றனர். இதனால் VIT மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகளில் கடந்த வாரம் நல்ல பிசினஸ். (வேலூர் நண்பர்கள் கூறியது!)

படப்பிடிப்பு வளாகத்தில் கேமிரா மற்றும் கேமிரா செல்போன்கள் அனுமதிக்கப்படாததால் புகைப்படம் எடுக்க நினைத்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். ஒரு சிலர் மட்டும் தொலைவிலிருந்தே தங்கள் உயர் ரக கேமிராவில் ZOOM செய்து படமெடுத்தனர். "எந்திரன் ஒரு தந்திரன், ரஜினி அவ்ளோ தான்" என்றெல்லாம் கவர் ஸ்டோரி எழுதித்தீர்த்த பத்திரிகை ஒன்று கவரேஜுக்காக தனது டீமையே ஸ்பெஷலாக அனுப்பியிருந்தது தான் உச்சகட்ட காமெடி.

தற்போது எந்திரன் கேம்ப் சென்னைக்கு மாறியாகிவிட்டது. விரைவில் பாடல் காட்சிக்காக குலுமனாலி கிளம்பவிருக்கிறது ஒட்டுமொத்த டீமும்.

………………………………………………………………………………………………………………

English Translation

Scientist Rajini & Medico Aishwarya Rai

Endhiran's Vellore schedule has already get completed and the crew has moved to Chennai last weekend. Our fans created a lot of fret and frenzy at VIT and its surroundings. Shankar didn't expect such a restless crowd even during holidays.

It was a unique experience for those who had the luck to have a glimpse of the shooting. I don't want to reveal the details. However i give a small outline straight away from those who watched the shoot. (through my Vellore friends).

Rajini's appeal to Aishwarya Rai

Aiswarya Rai is a meritorious medical student who always looks forward for challenging opportunities. The great and nationally acclaimed scientist Rajini wants to keep her as an assistant for his new vital project on Robotics. So, he goes to the National Research Centre & Medical college to meet her and persuade for this. But she acts pricey for that. Aiswarya Rai was looking like a perfect medico with stethescope & college uniform in her arms with college ID card hanging around her neck.

How many roles for Superstar?

Those watched the shoot continously for a few days get cofused regarding the number of roles that Superstar is acting in. Because one day he was spotted with Neat full shirt with jeans in a french beard (Scientist). The next day without moustache in a dark shirt and matching pants aka Aiyyampettai Arivudai Nambi Kaliyaperumal Chandran as in Thillu Mullu. (Probably this must be the Robot).

Fans keen watching the details

Fans who were watching the shooting from the distance didn't fail to notice even a minute mannersim of Superstar, details of his outfit and his makeup. Instantly they were seen relaying the same to their near and dearones. Pilgrimages and touristers who were heading for or returning from Golden Temple, adjacent tourist and religious spots were seen redirecting their vans and cabs to the shooting spot. Particularly those who were returing from Sabarimala. Due to this, restaurants and refreshment stalls had a sound business last week. (As told by our Vellore friends)

Camera phones or Digital cameras were not allowed inside the shooting spot and so it was very hard job to take snaps. A few who possessed hi-end cameras had luck to take snaps from quite distance with ZOOM operation. Others could simply stare at them. What the highlight was a magazine group which indulged continously in defaming Superstar sent a special team to VIT to cover the shooting news.

The Endhiran crew which is in Chennai may kick off to Kullu Manali anytime to shoot a song sequence.

………………………………………………………………………………………………………………

[END]