Sunday, January 4, 2009

உலக சரித்திரத்தின் அடுத்த அத்தியாயமே...

ந்த பிறந்த நாளுக்கு நம் ரசிகர்கள் நலத் திட்ட பணிகள் பலவற்றை செய்து அசத்தியதோ டல்லாமல் , வழக்கமாக வைக்கும் பேனர்கள், எழுப்பும் போஸ்டர்கள் ஆகியவற்றையும் வித்தியாசமாக செய்து அசத்தி விட்டார்கள்.

அவற்றுள் என்னை மிகவும் கவர்ந்தது சின்மயா நகரில் நான் பார்த்த ஒரு பேனர். "உலக சரித்திரத்தின் அடுத்த அத்தியாயமே...." என்று சூப்பர் ஸ்டாரை அழைத்த அந்த பேனர் என்னை மிகவும் கவர்ந்தது. முதலில் பைக்கில் அந்த இடத்தை வேகமாக கடந்து சென்று விட்டேன். அட, அந்த பேனர் ஏதோ வரைபடம் (MAP) போட்டு வித்தியாசமாக இருக்கிறதே என்று திரும்பி வந்து பார்த்தால், வாவ் அசந்து விட்டேன்.

உலக நாடுகள் பலவற்றை மார்க் செய்து அந்தந்த நாட்டில் தோன்றிய தலைவர்கள் பெயரை ஹைலைட் செய்து, இந்தியாவுக்கு வாழ்ந்த மஹாத்மாவையும் தற்போது வாழும் மஹாத்மாவையும் ஹைலைட் செய்திருந்தனர். (அந்த ஐடியாவை கேப்டன் ரசிகர்கள் இனி Copy & Paste தான்!!).

இந்த கணக்கு எப்படி?

எந்திரனின் உலகளாவிய ரிலீஸ், பாபா படத்தில் ஜோதிடர் விஜயகுமார் கூறும் வாக்கு, எதைச்சையாக இந்த ரசிகர்கள் எழுப்பியுள்ள பேனர் எல்லாவற்றையும் கூட்டி கழித்து பாருங்கள்...!! நல்ல திட்டங்களை வகுக்க, செழுமையை பெருக்க, தீமைகளை கழிக்க, அரசியல் அராஜகங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க, ஒரு தலைவன் உலக அளவில் தயாராகிக்கொண்டிருக்கிறான் என்பது புரியும்.

(Double click the image to ZOOM bigger)

என்ன ஒரு பிரமாதமான யோசனை... பேனர் எழுப்பிய அந்த ரசிகர்களை பாராட்டுகிறேன். ஒரே போக்கில் சிந்திக்காமல் தமது சிந்தனையை அகலப்படுத்திய அந்த ரசிகர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

பக்க வாட்டில் உள்ள பேனரில், "இந்தியாவின் இயந்திரனே..." என்னும் வாசகத்தையும் அதற்க்கு கீழே "மலரினும் மெல்லிய மனம் படைத்த மன்னனுக்கு..." என்ற வாசகத்தையும் காணத்தவறாதீர்கள்.

பேனரை பெரிதாக பார்க்க டபுள் க்ளிக் செய்யவும். ஒவ்வொரு நாட்டின் தலைவர்களின் தகவலும் நன்கு தெரியும்.

………………………………………………………………………………………………………………

நீங்களும் இது போன்ற படங்கள் அனுப்பலாம்

ரசிகர்கள் தங்கள் ஊரில் இது போன்று பேனர்கள் போஸ்டர்கள் ஏதாவது கண்டால் அதை படமெடுத்து அனுப்பலாம். இங்கு தக்க முன்னுரையுடன் பிரசுரிக்கப்படும்.

அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:
simplesundar@gmail.com

………………………………………………………………………………………………………………

[END]