Sunday, January 4, 2009

ரஜினியின் அறிவிப்பால் நாச்சிக்குப்பம் பெற்றுள்ள திடீர் அந்தஸ்து; மனைகளின் விலை கடும் உயர்வு!!

*TRANSLATION AVAILABLE AT THE END OF THE ARTICLE

Friends, I have provided the complete translation of the article at the end. - Sundar

………………………………………………………………………………………………………………

ரு சாதரண கல்லின் மீது தலைவர் கைவைத்தால் கூட அது விலை மதிக்கமுடியாத மாணிக்க கல்லாகிவிடும். அப்படியிருக்க ஒரு ஊரை குறிப்பிட்டு "இது தான் என் பூர்வீக இடம். என் பெற்றோருக்கு இங்கு நினைவிடம் எழுப்ப ஆசைப்படுகிறேன்" என்று சொன்னால்........?

நாச்சிக்குப்பம் பெற்றுள்ள திடீர் அந்தஸ்து

நேற்று வரை ஒரு சாதரண சிற்றூராக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இந்த நாச்சிக்குப்பம், சூப்பர் ஸ்டாரின் பூர்வீக கிராமம் என்று தெரிந்த பின்னர் ஓவர் நைட்டில் ஒரு VVIP அந்தஸ்தை பெற்றுவிட்டது. அதுவும் அவர் அங்கு தன் பெற்றோருக்கு நினைவு மண்டபம் அமைப்பதாக அறிவிப்பு வெளியிட்டவுடன் கிட்டத்தட்ட ஒரு சுற்றுலாத் தலமாகிவிட்டது.

கேட்பாரற்று கிடக்கும் இடத்தையே பிளாட் போட்டு பெரிய விலைக்கு விற்றுவிடும் நம்ம ரியல் எஸ்டேட்காரர்கள் நாச்சிக்குப்பம் பற்றி சூப்பர் ஸ்டார் கூறியவுடன் சும்மா இருப்பார்களா? அந்த இடத்தில் தற்போது காலியிடங்களின் விலை தாறுமாறாக எகிறிவருகிறது. மனைகளின் விலை மட்டுமின்றி நாச்சிக்குப்பத்தில் சொத்துக்களின் மதிப்பும் கடுமையாக உயர்ந்துவருகிறது. நாச்சிக்குப்பத்திற்கு கிடைத்துள்ள இந்த திடீர் நட்சத்திர அந்தஸ்தால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி கடலில் திக்குமுக்காடிவருகின்றனர். ஒரு ஏக்கர் தற்போது நாசிக்குப்பத்தில் 40 லட்சத்துக்கு விலைபோகிறது. வருங்காலத்தில் இது மேலும் உயரக்கூடும் என்று தெரிகிறது.

தை பிறந்தால் வழி பிறக்கும்!!

இன்றைய தினமலர் இது குறித்து இன்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 27 ஆம் தேதி சூப்பர் ஸ்டாரின் அண்ணன் சத்யநாராயணா ராவ் இங்கு வந்ததாகவும் அங்கு அவர்கள் குடியிருந்த வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களை பார்வையிட்டதாகவும் பின்னர் அந்த ஊர் கோவிலுக்கு சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டாரின் தூரத்து உறவினர்கள் சிலர், சத்யநாராயணா ராவுடன் பேசியதாகவும், கடந்த கால நினைவுகளை அவருடன் அசைபோட்டதாகவும் தெரிகிறது.

தற்போது மார்கழி மாதம் நடைபெற்றுவருகிறது. தை மாதம் பிறந்தவுடன் (தை பிறந்தால் வழி பிறக்கும்!!) இது குறித்த பணிகள் துவங்கப்படும் என்று அங்கு ரசிகர்களிடம் சத்யநாராயணா உறுதி தெரிவித்திருக்கிறார்.

சென்னை மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த பல ரியல் எஸ்டேட் முதலாளிகள் தினசரி நாச்சிக்குப்பத்திற்கு படையெடுத்து வருகின்றனர். அங்கு சுற்று வட்டாரத்தில் இடங்களை வாங்கி குவிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூரைப் போல எதிர்காலத்தில் நாச்சிக்குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி தொழில்வளம் சார்ந்த ஒரு பெரிய மையமாக மாறும் என்பது உறுதியாகிவிட்டது.

சும்மாவா பின்னே? தமிழகத்தை வருங்காலத்தில் செதுக்கப்போகும் சிற்பி ஒருவரின் பூர்வீக ஊராயிற்றே....

………………………………………………………………………………………………………………

Translation

The Man of Midas touch Rajini, converts the tiny village into a gold mine

Nachikuppam gains VVIP status

We all know that Superstar is a Man of Midas touch. Just imagine what would happen to a small village like Nachikuppam when he says, "It's my ancestral home place. I would like to raise a Memorial to my parents there..!!"

The village which is less known to the outsiders till previous night gained international fame when Superstar said that it is his ancestral place in his fans' meet. The tiny village suddenly wore a VVIP status. And it has turned more or less a tourist spot after his announcement of to-be built memorial there.

Will our real estate giants who sell even an useless land at unimaginable price stay cool after this? The price of vacant lands in and around Nachikuppam is shooting up to exorbitant prices. Not only lands the property value including newly constructed houses and old houses also has shot up. The residents of Nachikuppam are in euphoric mood because of this. Presently a single is acre is costing near Rs.40 lakhs there. It is expected that the price will shoot up in forthcoming days.

Today's Dinamalar has comeup with a news regarding this. It is said that Superstar's brother Mr.Sathyanarayana Rao came to the small town last 27th and visited various places including their ancestral home and street. He also had a chat with their distant relatives who were dwelling there for decades. Later Mr.Sathyanarayana Rao paid visit to the local temple. Before starting he has assured to local fan club members that the process for memorial construction and land acquisition would start in coming Thai month. (Jan 15th).

The real estate brokers in and around Chennai and Krishnagiri are thronging to Nachikuppam daily and buying the lands in large spree. Like Sriperumbudur it is expected that Nachikuppam would turn into industrial and wealth hub in future.

Why not? Isn't the ancestral place of a sculptor who is going to sculpt modern Tamil Nadu....?

………………………………………………………………………………………………………………

[END]