எந்திரன் ரிசர்வேஷன் சாதனை குறித்து நீங்கள் செய்திகள் படித்திருந்தாலும் பார்த்திருந்தாலும் எந்திரன் ரிசர்வேஷன் எப்படி? பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்? என சம்பந்தப்பட்ட திரையரங்குகளையே கேட்டுவிடுவதென களமிறங்கினோம்.
ரசிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்ததைவிட சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது எந்திரன் முன்பதிவிற்கு. இத்துனை தியேட்டர்களில் திரையிட்டும் எந்திரன் படத்திற்கான டிக்கட்டுகளை ரசிகர்கள் அள்ளி சென்றுவிட்டனர். தயாரிப்பு தரப்பிலும் exhibitors தரப்பிலும் மகிழ்ச்சியில் திளைத்துவருகின்றனர்.
பண்டிகைகால ரயில்வே டிக்கட்டுக்களை போல ஆன்லைன் டிக்கட்டுகள் பறந்துகொண்டிருக்கின்றன. புக் செய்ய முடிவு செய்து, க்ளிக் செய்வதற்கு முன்பாகவே தீர்ந்துபோய் பல தியேட்டர்களில் ஆன்லைன் பதிவு பட்டையை கிளப்பியிருக்கிறது. (சென்னையில் மட்டும் 42 தியேட்டர்ஸ் சார். 42 தியேட்டர்ஸ். ஞாபகம் வெச்சுகோங்க!)
நாம் முதலில் பேசியது தேவி திரையரங்கம்.
ரிசர்வேஷன் தினத்தன்று மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்து, வரிசையில் கால் கடுக்க நின்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது முதல் நாள் டிக்கட்டுகளை அள்ளி வழங்கிய திரையரங்குகளில் தேவியும் ஒன்று. தேவி, தேவி பாரடைஸ் என இரண்டு திரையரங்குகளில் எந்திரன் இங்கு திரையிடப்பட்டுள்ளது.
காலை நான்கு மணிமுதலே இங்கு ரசிகர்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர். சிலர் முந்தைய நாள் இரவே வந்துவிட்டனர். தேவி நிர்வாகம் மற்றும் போலீசார் சேர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்து, டிக்கட்டுகளை சலிக்காமல் வழங்கினர்.
ரிசர்வேஷன் துவங்கிய ஒரு மணிநேரத்தில் மூன்று நாட்கள் ஃபுல்லாகிவிட்டது. பொதுவாகவே ரசிகர்கள் அனைவருக்கும் படத்தை தேவியில் அந்த பிரம்மாண்ட ஸ்க்ரீனில் ஒரு தடவையாவது எந்திரனை பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. சென்னையில் அண்ணா சாலையில் பிரதான இடத்தில் இருப்பதால், தேவி திரையரங்கில் எந்திரன் நிச்சயம் மக்களை பெரிதளவில் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.
எந்திரனின் ரிசர்வேஷன் சாதனை குறித்து தேவி திரையரங்க மேனஜர் திரு.வி.ஆர். சங்கர் நம்மிடம் கூறுகையில், “எந்திரன் படத்திற்கு மிக பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. எங்கள் வளாகத்தில் டிக்கட்டுகளுக்கு கடும் பிரஷர் ஏற்பட்டுள்ளது. முதல் 5 நாளைக்கு படம் முழுக்க முழுக்க ஃபுல்லாகிவிட்டது. பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து அதற்க்கு பிறகு ஒரு வாரம் வரை டிக்கட்டுகள் புக் செய்து வருகிறோம். அவையும் மளமளவென புக்காகி வருகிறது. பொதுமக்கள் மற்றும் family audience அதிகளவில் புக் செய்ய திரண்டு வருகிறார்கள். அவர்களில் அநேகம் பேர், நீண்ட நாளுக்கு பிறகு குடுமபத்துடன் திரையரங்கிற்கு வரப்போவதாக கூறுகின்றனர். இன்னும் பலர், தங்கள் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு வந்து புக் செய்கின்றனர். இத்துனை தியேட்டர்களில் படம் வெளியிட்டும் இந்தளவு ரிலீசுக்கு முன்பாகவே வரவேற்பை பெற்றுள்ளது என்றால் அதற்க்கு முழு முதல் காரணம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். எம்.ஜி.ஆருக்கு பிறகு அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு அளவிடமுடியாதது. அடுத்து இந்த படத்திற்கு அமைந்துள்ள பிரம்மாண்ட கூட்டணி ஒரு பெரிய ப்ளஸ். கூடவே சன் பிக்சர்சின் அருமையான ப்ரோமோஷன்! ஒரு படத்தின் வெற்றியை உறுதி செய்வதற்கு வேறென்ன வேண்டும்?”
அடுத்து நாம் பேசியது, சென்னையின் உதயம் தியேட்டர் நிர்வாகத்திடம். திரையரங்க உரிமையாளர் திரு.மோகன் நம்மிடம் பேசியபோது, “ட்ரெயிலர் திரையிட்டபோதே, படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. தற்போது எந்திரன் டிக்கட்டுகளுக்கு ஏற்பட்டுள்ள அதீத பிரஷரை அடுத்து நாம் என் செல்போனை சுவிச் ஆப் செய்துவிட்டேன். ரஜினியின் படம் ஒவ்வொன்றும் ரிலீஸ் ஆகும்போதும் இப்படித் தான் செய்யவேண்டியிருக்கிறது. எங்கள் வளாகத்தை பொறுத்தவரை 8 ஆம் தேதி வரை அனைத்தும் ஃபுல்லாகிவிட்டது. ட்ரெயிலரை திரும்ப திரும்ப தியேட்டர்களிலும் டி.வி.க்களிலும் பார்த்த பொதுமக்களுக்கு இதன் மீது ஏற்பட்ட ஆர்வமும் இந்த பிரம்மாண்ட ரிசர்வேஷனுக்கு காரணம். அதுமட்டுமல்ல, இந்தளவு செலவு செய்திருக்கிறார்களே, அப்படி என்ன தான் படத்துல இருக்கு? என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்க்கு முன்பு சூப்பர் ஸ்டாரின் சிவாஜிக்கு தான் இப்படி ஒரு ரெஸ்பான்சை பார்த்திருக்கிறேன். இன்னும் கூட அதிகமான நாட்களுக்கு டிக்கட்டுகளை கொடுக்கும்படியும், ரிசர்வேஷனை ஓபன் செய்யும்படியும் பொதுமக்கள் எங்களை கேட்டு வருகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை ரிசர்வேஷன் கொடுப்பதில் கட்டுப்பாடுகள் உள்ளன. அதை மீறி நாங்கள் எதுவும் செய்வதில்லை. ஒன்றே ஒன்று உங்கள் ரீடர்சுக்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். எந்திரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும். நீங்களும் திரும்ப திரும்ப படத்தை பார்க்கப்போகிறீர்கள்! குழந்தைகளை படம் பெரிய அளவில் ஈர்க்கும்!!” என்று முடித்துக்கொண்டார் திரு.மோகன்.
அடுத்து நாம் பேசியது சங்கம் சினிமாஸ். இந்த காம்ப்ளெக்சில், சங்கம், பத்மம், ரூபம் என மூன்று திரையரங்குகள் உள்ளன. இங்கு எந்திரன் ரெஸ்பான்ஸ் எப்படி? பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்?
சங்கம் சினிமாஸ் MANAGER & HEAD, HR திரு.கார்த்திக் கூறுகையில், “முதல் நான்கு நாட்களுக்கு படம் எங்கள் வளாகத்தில் அனைத்து ஸ்க்ரீன்களிலும் புல்லாகிவிட்டது. 40 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் ஸ்க்ரீன் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இது ஒரு மிகப் பெரிய சாதனை.” என்றார் கார்த்திக்.
“இதற்க்கு என்ன காரணமாக இருக்கும்?” என்றோம் நாம்.
“வேறு என்ன சார் காரணமாக இருக்கமுடியும்? ‘ரஜினி’ என்ற ஒரு மந்திரச் சொல் தான். அந்த மந்திரம் தற்போது தன்னுடன் இரு பிரமாண்டங்களையும் சேர்த்து கூட்டிவருகிறது. வரவேற்ப்பு கேட்கவேண்டுமா?” நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே டிக்கெட்டுகள் கேட்டு பல மட்டங்களில் இருந்தும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் போன்கால்களில் பதிலளிக்க முடியாது கார்த்திக் திணறிக்கொண்டிருந்தார்.
அடுத்து நாம் சந்தித்தது சென்னையின் the most happening தியேட்டரான ஆல்பட். மேனேஜர் திரு.மாரியப்பனை அவரது அறையில் சந்தித்தோம். டிக்கட்டுகள் கவுண்டரில் அட்வான்ஸ் புக்கிங் செல்லும் நிலவரத்தை பார்வையிட்டுக்கொண்டிருந்தார். முகத்தில் எதையோ சாதித்த திருப்தி தெரிந்தது. கூடவே, டிக்கட்டுக்கான பிரஷரை சமாளிக்க முடியாது அவதியுறும் டென்ஷனும் தெரிந்தது.
“எந்திரனின் இந்த உச்சகட்ட எதிர்ப்பார்ப்பிற்க்கும் காரணம் ரஜினி.. ரஜினி தான். அவர் படம் திரையிடும்போதேல்லாம் முதல் நாள் ஷோவுக்கான டிக்கட் கேட்டு பெரிய பெரிய இடங்களில் இருதேல்லாம் ப்ரெஷர் வரும். இந்த படமும் விதிவிலக்கல்ல. இன்றைய நிலவரத்தை வைத்து சொன்னால் படம் மிகப் பெரிய ஹிட்டாகும் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை வந்த ரஜினி படங்களின் சாதனை அனைத்தையும் இது முறியடிக்கும்.” என்று முடித்துகொண்டார் திரு.மாரியப்பன்.
கமலா திரையரங்கில் விசாரித்ததில் 12 நாட்கள் வரை ஹவுஸ்புல்லாகிவிட்டதாக கூறினர். சாலிகிராமம் மற்றும் வடபழனி பகுதியில் உள்ள பெரும்பாலனவர்கள் கமலாவில் டிக்கட்டுகளை புக் செய்திருப்பதாக ஊழியர் ஒருவர் நம்மிடம் கூறினார். தவிர, கார்பரேட் புக்கிங்கும் பெருமளவில் இங்கு நடைபெற்றுள்ளது.
நாம் பேசிய, சந்தித்த பல திரையரங்குகளில் நமக்கு முதல் நாள் முதல் ஷோ டிக்கட்டுகள் சுலபமாக கிடைககும் வாய்ப்பிருந்தும் நண்பர்களுடன் படம் பார்க்கவிருப்பதால் அவர்களின் ticket offer ஐ மறுத்துவிட்டேன். (எனக்கு கொடுக்கிறேன்னு சொன்னா, என் நண்பர்களுக்கும் சேர்த்து கொடுங்கன்னு எப்படி கேட்பதாம்?).
படம் எப்படி வந்திருக்கிறது? விநியோகஸ்தர்களின் கருத்து என்ன? என்று தியேட்டர் வட்டாரங்களில் விசாரித்தபோது….
“படம் பட்டையை கிளப்பும் வகையில் வந்திருப்பதாக நமக்கு தகவல் கிடைத்தது. தவிர இதுவரை வந்த ரஜினி படங்களிலேயே இந்தப் படத்திற்கு அதிகபட்ச ரிப்பீட் ஆடியன்ஸ் இருப்பார்கள்” என்றும் உறுதியாக கூறுகிறார்கள்.
ரிசர்வேஷன் துளிகள் :
* அனைவரும் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று: வழக்கத்திற்கு மாறாக, ஞாயிற்று கிழமைக்கு பதில் இம்முறை ரிசர்வேஷன் சனிக்கிழமை துவங்கியதால், பலரால் முன்பதிவு செய்ய செல்ல முடியவில்லை. (எனக்கு லேட்டானது காரணமே, ஞாயிற்றுகிழமை தான் ரிசர்வேஷன் ஸ்டார்ட் ஆகும்னு நினைச்சி மெத்தனமா இருந்துட்டேன். ஆபீசுக்கு திடீர்னு என்னால லீவ் சொல்லமுடியலே. ரிலீசுக்கு வேற லீவ் போடணுமே..!) ரிசர்வேஷனுக்கு தியேட்டர்களில் திறளக்கூடியர்வர்களில் பெரும்பாலனவர்கள் பணி செல்பவர்கள். தொழிலாளர்கள், ஓட்டல் வேலை மற்றும் கூலி வேலை, செய்பவர்கள். ஆனால் அதையும் மீறி ரிசர்வேஷனுக்கு கூட்டம் அதிகமாக வந்ததென்றால், அது சூப்பர் ஸ்டாரை தவிர வேறு யாருக்காக இருக்க முடியும்?
* காலை ஒன்பது மணிக்கு துவங்கவேண்டிய முன்பதிவு பல தியேட்டர்களில் அதிகாலையே துவங்கிவிட்டது. ஒன்பது மணிக்கு தானே அன்று சாவகாசமாக தாமதமாக வந்தவர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.
* ரிசர்வேஷன் ஆரவாரம் மற்றும் அந்த களேபரங்களை பதிவு செய்ய எட்டு மணிக்கு மேல் நாம் சென்றதால் நமக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.
* சத்யம் மற்றும் தேவி திரையரங்குகளில் காலை 9 மணிக்கு ரிசர்வேஷன் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், பல தியேட்டர்களில் இரவு முதலே வந்து மக்கள் வரிசையில் நிற்க துவங்கிவிட்டனர்.
* ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகமாகிக்கொண்டே போனது. இப்போதே இப்படியென்றால், ரிசர்வேஷன் துவங்கும்போது காலை 9 மணிக்கு எப்படி இருக்கும் என்று கலவரப்பட்ட போலீசார், திரையரங்கு நிர்வாகத்திடம் பேசி, முதலில் வரிசையில் காத்திருப்பவர்களுக்கு டிக்கட்டுகளை கொடுத்து அனுப்பிவிடுங்கள் என்று கூற, அதன்படி பல தியேட்டர்களில் அதிகாலையே டிக்கட்டுகள் தரப்பட்டது. இதனால், நாம் கேமிராவுடன் சென்ற போது, ரிசர்வேஷனுக்கு கூடிய மொத்த கூட்டத்தையும் கவர் செய்ய முடியவில்லை.
* ரிசர்வேஷன் கவுண்டர் முன் நிறைய கூட்டத்தை போலீசார் அனுமதிக்கவில்லை. பின்பக்கமாக தேக்கி, வரிசையில் நிற்க வைக்கப்பட்டிருந்தவர்களை ஒவ்வொருவராக அனுமதித்தவண்ணமிருந்தனர். (பார்க்க படம்!). இதன் மூல தள்ளுமுள்ளு தவிர்க்கப்பட்டது. தங்களுக்கு தேவையான டிக்கட்டுகளை பொறுமையாக ரசிகர்கள் ரிசர்வ் செய்ய வழி கிட்டியது.
* ஊனமுற்ற இளைஞர் ஒருவர் வரிசையில் காத்திருந்து முதல் டிக்கட்டை பெற்றார். அவர் முகத்தில் அத்துணை மகிழ்ச்சி. (தினகரன் நாளிதழில் இந்த படம் இடம் பெற்றது!)
* சத்யம் திரையரங்கில் கிட்டத்தட்ட அதிகாலை 3000 பேர் காத்திருந்தனர். ரசிகர்களின் ஆரவாரம் அதிகரித்துக்கொண்டே போனதால் விதிகளையெல்லாம் தளர்த்தி 5:00 மணிக்கெல்லாம் டிக்கட்டுகள் தர ஆரம்பித்துவிட்டது நிர்வாகம். (இந்தமுறை, கார் பார்க்கிங் என்ட்ரன்ஸ் வழியாக க்யூ அனுமதிக்கப்பட்டது. வெளியே ஒயிட்ஸ் ரோட்டை தொட்டு அதன் பாதி வரை வரிசை காணப்பட்டது.)
* டிக்கட்டுகளை புக் செய்தவர்கள் தங்கள் நண்பர்களுக்கு போன் செய்து, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
* போலீசார் பலர் தங்களின் பங்கிற்கு பல திரையரங்குகளில் தங்கள் உயரதிகாரிகளுக்கும் குடும்பத்தினருக்கும் டிக்கட்டுகள் புக் செய்தது தனி கதை.
ஆக ரிலீசுக்கு முன்பாகவே வெற்றியை உறுதி செய்துவிட்டான் எந்திரன்.
* இறுதியாக நாம் நமது FDFS ஐ பெரம்பூரில் உள்ள பிருந்தாவில் பார்க்கவிருக்கிறோம். பிருந்தா – சென்னையிலேயே Hottest Rajini Hub. இந்த முறை சென்னையை கலக்கப்போவது பிருந்தா & காசி தான். இந்த இரண்டு தியேட்டர்களும் இந்த முறை கலக்கவிருக்கின்றன. ஏற்கனவே பிருந்தா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதி முழுதுவதும் அசத்தலான பேனர்களால் நிரம்பி வழிகிறது. தவிர, பிருந்தா நமக்கு சென்டிமென்ட்டாக மிகவும் ராசியான் தியேட்டர். நான் அங்கு FDFS பார்க்கும் அனைத்து தலைவர் படங்களும் இதுவரை சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன – பாட்ஷா, முத்து, அருணாசலம், படையப்பா! (பெரம்பூரில் ஆறு வருடங்களுக்கும் மேல் நான் வசித்திருக்கிறேன்.)
————————————————————
Note: For updates on media news about thalaivar, pls refer to the RSS feed of our thalaivarnews.blogspot.com at the bottom of the home page our website.
————————————————————