சென்னையில் அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் உற்சாக ஆரவாரத்துடன் ரிசர்வேஷன் துவங்கியது.
காலை 10.30 நிலவரப்படி பெரும்பாலான திரையரங்குகளில் ஐந்தாம் தேதி வரை டிக்கட்டுகள் விற்றுதீர்ந்துவிட்டன.
ரிசர்வேஷனுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக துல்லியமாக செய்யப்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை சீர் செய்யப்பட்டது.
அதிகாரப்பூர்வ ரிசர்வேஷன் இன்று காலை துவங்கியபோதும் முதல் நாள் மற்றும் சனி ஞாயிறு டிக்கட்டுகள் கிடைக்கவில்லை என பல ரசிகர்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கான டிக்கட்டுகளை வாங்கிசென்றனர்.
சென்னையில், தேவி, மற்றும் சத்யம், அபிராமி, உள்ளிட்ட திரையரங்குகளில் கடும் கூட்டம் காணப்பட்டது.
ரிசர்வேஷன் சுவாரஸ்யங்கள் மற்றும் நிலவரம் குறித்த விரிவான செய்தி அடுத்து வந்துகொண்டிருக்கிறது.
Stay Tuned…