நமது வெப்சைட் MAINTENANCE பணி காரணமாக கடந்த இரு வாரங்களாக, எந்த பதிவும் போட இயலவில்லை. இரு தினங்களில் முடியவேண்டிய பணி, இத்துனை நேரம் இழுக்கிறது. (எனக்கு இத்துனை காலம் இந்த பணிகளில் உதவியவர் மேற்படிப்புக்காக தற்போது அயல் நாடு சென்றுவிட்டபடியால், மாற்று ஏற்பாடு செய்ய தாமதமாகிவிட்டது.) தற்போது கோளாறுகள் ஒவ்வொன்றாக சரி செய்யப்பட்டு வருகிறது.
எதிர்காலத்தில், BY GOD'S GRACE நமது தளத்தில் எந்த வித தொய்வும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் நமது பழைய சர்வரை மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் அது முடிவடையும். இந்த தருணங்களில் எந்த வித புதிய போஸ்ட்டையும் தளத்தில் போட இயலாது.
அதே சமயம் சூடான செய்திகளை, புகைப்படங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் என்னால் எப்படி இருக்க முடியும்? எனவே, தற்காலிகமாக எனது ப்ளாக் அக்கவுன்ட்டை மீண்டும் பயன்படுத்த முடிவு செய்துள்ளேன்.(Hmm...இதை முதலிலேயே செய்திருக்க வேண்டும்..!)
Onlysuperstar.com தளம், முழுவதுமாக சரி செய்யப்படும் வரை இங்கு நாம் சந்திப்போம். உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரிவியுங்கள்.
சிரமத்திற்கு வருந்துகிறேன்.
- சுந்தர்
Onlysuperstar.com
நடிகர் விஜய் வசந்த் திருமண வரவேற்பு - சூப்பர் ஸ்டார் நேரில் வாழ்த்து
'நாடோடிகள்' படங்களில் நடித்தவர் விஜய் வசந்த். இவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்த குமாரின் மகன். விஜய் வசந்துக்கும் சென்னையை சேர்ந்த நடராஜன்-சாந்தி தம்பதி மகள் நித்யாவுக்கும் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று காலை திருமணம் நடந்தது.
மத்திய மந்திரி ஜி.கே. வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், ஜி.கே. மணி, திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோர் நேரில் வாழ்த்தினார்கள்.
அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்தினர். திருமண வரவேற்பு இன்று மாலை 6.30 மணிக்கு காமராஜர் அரங்கில் நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
சூப்பர் ஸ்டார் அரங்கில் இருந்தது மொத்தம் ஐந்து நிமிடத்திற்கும் குறைவுதான். ஆனால் அவர் இருந்தபோது ஏற்பட்ட பரபரப்பு பிறகு அடங்குவதற்கு நேரம் பிடித்தது. சூப்பர் ஸ்டார் வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் அவரை காண கூட்டம் முண்டியடிக்க, அங்கு கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. (இந்த புகைப்பங்களை பாருங்கள், மிகவும் கஷ்டப்பட்டு போட்டோக்ராபர் இதை எடுத்திருப்பது புரியும்.)
நிலைமையை புரிந்து கொண்ட சூப்பர் ஸ்டார், மணமக்களை வாழ்த்திவிட்டு மின்னலென கிளம்பி சென்றுவிட்டார். சூப்பர் ஸ்டார் நேரில் வாழ்த்திய இன்ப அதிர்ச்சியிலிருந்து மீள மணமக்களுக்கு தான் சற்று நேரம் பிடித்தது.
[END]