எங்கு பார்த்தாலும் “எந்திரன்” தான் பேச்சு. பஸ் ஸ்டாண்ட், டீக்கடை, அலுவலகம், பள்ளி குழந்தைகளின் கிளாஸ் ரூம், என்ஜீனியரிங் மாணவர்களின் லேப் என எங்கு பார்த்தாலும் எந்திரன் தான் வியாபித்திருக்கிறான். பள்ளி குழந்தைகள் எந்திரனில் சூப்பர் ஸ்டார் துப்பாக்கியுடன் Get Ready Folks என்பதை இமிடேட் செய்து பார்க்கும் அழகே தனி.
சென்னை திரையரங்கங்களை சுற்றி ரவுண்ட்ஸ் வந்ததில் எங்கு, யாரை பார்த்தாலும், உச்சரிக்கும் ஒரே வார்த்தை “டிக்கட் இல்லை” என்பது தான். குறிப்பாக முதல் நாள் டிக்கட். ஆனால் அதை கேட்டு யாருக்கும் கோபமோ ஏமாற்றமோ வந்ததா என்றால்…. ஹூ ஹூம் …. அதற்க்கு பதில் மகிழ்ச்சி தான்.
பெருமுதலீடு செய்தவனின் கடையில் சரக்கு காலியாகி வருவோர்க்கு “இல்லை” என்று சொல்வதில் ஒரு வித மகிழ்ச்சி ஒளிந்திருக்குமே அது போலத் தான் இது நம் ரசிகர்களுக்கு. தனக்கு டிக்கட் இல்லையென்றாலும் பரவாயில்லை, தலைவர் படத்திற்கான டிக்கட்டுகள் இல்லை என்ற சொல்லை கேட்டு அவன் மகிழ்ச்சி தான் அடைகிறான்.
“டிக்கட்டுகள் இல்லை” என்று தன் நட்பிற்கும் சுற்றத்திற்கும் பெருமையுடன் சொல்கிறான். தலைவர் படத்தை தவிர வேறு யாருக்கு இந்த பெருமை கிட்டும்?
எத்தனையோ தலைவர் படங்களை என் அனுபவத்தில் ரிலீஸ் சமயத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ளதை போல ஒரு எதிர்பார்ப்பு வேறு எந்த படத்திற்கும் நாம் கண்டதில்லை. படத்தை எப்படியாவது முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் அனைவரிடமும் தென்படுகிறது. “நான் எப்போவும் கொஞ்சம் சாவகாசமாத்தான் பார்ப்பேன். முதல் நாள் நமக்கு அலர்ஜி” என்று சொல்லிகொண்டிருந்தவர்கள் அனைவரும் இப்போது என்னடாவென்றால் முதல் நாள் முதல் ஷோ டிக்கட்டுக்கு அலைந்துகொண்டிருக்கின்றனர்.
“Out of the City தியேட்டர்ஸ் எல்லாம் எனக்கு வேண்டாம்; ஒன்லி சிட்டி தியேட்டர்ஸ் தான் வேண்டும்” என்று மிதப்புடன் கூறியர்வர்கள் எல்லாம் தற்போது “எங்கேயிருந்தாலும் பரவாயில்லே. ஒரு ரெண்டு டிக்கட்டாச்சும் இருக்கா பாருங்களேன்” என்று கெஞ்சி கொண்டிருப்பது தனி காமெடி. நம்ம சர்வீஸ்ல எத்தனை பேரை பார்த்திருக்கோம்.
கறுப்பு வெள்ளை காலத்தில் கதாநாயகனாக நடிக்க துவங்கி, இன்று ஆன்லைன் ரிசர்வேஷன் காலத்திலும் தலைவர் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டு பட்டையை கிளப்புகிறார் என்றால் அதற்க்கு காரணமாக எதை சொல்வது? “என்னோட ராசி நல்ல ராசி… அது எப்போதும் பெரியவங்க ஆசி” என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
எலக்க்ஷன் ரிசல்ட் போல நம் ரசிகர்கள் ரிசர்வேஷனுக்கு முதல் நாள் இரவு முழுதும் கண் விழித்திருந்து, ticketnew.com தளத்தை திரும்ப திரும்ப பார்த்து எந்த தியேட்டரில் ஆன்லைன் எப்போது துவங்குகிறது என்று ஆர்குட் மற்றும் பேஸ்புக்கில் அப்டேட் செய்தவண்ணமிருந்தனர். நாம் எந்த திரையரங்கம் என்று முடிவு செய்து புக் செய்வதற்கு முன்பே அனைத்து டிக்கட்டுகளும் சட சடவென புக்கான மாயத்தை என்னவென்று சொல்வது? அந்த அதிசயத்தை எப்படி சொல்வது? இப்படியெல்லாம் இனி ஒரு படத்திற்கு நடக்குமா? ஆன்லைன் ரிசர்வேஷன் வரலாற்றில் தலைவர் ஒரு புரட்சியையே செய்துவிட்டார்.
இப்படி புக் செய்யும்போது டிக்கட் கிடைக்கவில்லைஎன்றால் அப்போதும் நமக்கு கிடைப்பது மகிழ்ச்சி தானேயன்றி ஏமாற்றமில்லை.
நேற்று தியேட்டர் விசிட் சென்றபோது ஆல்பட் திரையரங்கில் பணிபுரியும் ஊழியர் ஒருவரிடம் புக்கிங் நிலவரம் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது “இத்துனை நாள் எங்களை மறந்திருந்தவர்களுக்கெல்லாம் எங்கள் நினைவு ஏற்படுத்தியிருக்கிறார் தலைவர்,” என்று சிரித்துக்கொண்டே கூறினார். உண்மை தான்!!
சரி.. எந்திரன் முன்பதிவு அதிசயம் குறித்து திரையரங்குகள் என்ன சொல்கின்றன? நமது எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட் On the Way!
Stay Connected…