Monday, May 24, 2010

கூட்டத்தில் இடறி விழுந்த ரசிகர்; ஓடிச் சென்று தூக்கிய தலைவர்!

டிகர் விஜய் வசந்த்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சூப்பர் ஸ்டார் வந்தபோது அவரை பார்க்க கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது என்றும், இதன் காரணமாக சூப்பர் ஸ்டார் அந்த நிகழ்ச்சியில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் இருக்க முடியவில்லை என்றும் நமது முந்தைய பதிவில் ஏற்கனவே நாம் குறிப்பிட்டிருந்தோம்.

அந்த நிகழ்ச்சியில் நடந்த மற்றோர் நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் இதோ.
(இன்றைய Times of India நாளிதழிலிருந்து...)

எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு சூப்பர் ஸ்டாருக்கு இத்துனை கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் காரணமில்லாமல் இல்லை. அவரது அசத்தலான நடிப்பு மற்றும் ஸ்டைலுக்கு ரசிகர்கள் எண்ணற்றோர் இருக்கிறார்கள் என்றாலும், அதையும் தாண்டி அவருக்குள் இருக்கும் அடக்கமான, எளிமையான, பிறருக்கு உதவும் எண்ணமுள்ள ஒரு மனிதனுக்கு தான் ரசிகர்கள் அதிகம். இந்த அவரது குணாதிசியம் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மீண்டும் வெளிப்பட்டது.

நடிகர் விஜய் வசந்த்தின் திருமண வரவேற்ப்பு நடந்த காமராஜர் அரங்கத்திற்கு சூப்பர் ஸ்டார் வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன், நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அவரை பார்க்க அலைமோதினர். பலர் அவருக்கு கைகொடுக்க முண்டியடித்தனர். கூட்டம் ஒரு கட்டத்தில் கட்டுக்கடங்காமல் போக, சூப்பர் ஸ்டார் மணமக்களுக்கு வாழ்த்துக் கூறிவிட்டு அனைவருக்கும் கை கூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு சூப்பர் ஸ்டார் திரும்பலானார்.

உடனே, மொத்த கூட்டமும் அவருக்கு பின் ஓடிச் செல்ல, இந்த சலசலப்பில் அவரை காண முற்பட்ட ஒரு ஊனமுற்ற ரசிகர் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென தவறி விழுந்துவிட்டார். விழுந்த வேகத்தில் அவரது ஊன்றுகோல்கள் சிறிது தூரம் தள்ளிப்போய் விழுந்தது. தனக்கு பின்னால் ஏதோ பரபரப்பு என்பதை உணர்ந்த சூப்பர் ஸ்டார் திரும்பிப் பார்க்க, உடனே ஓடிச்சென்று அவரை தூக்கி அவரது ஊன்றுகோல்களை தனது கையால் எடுத்துகொடுத்து, ஆறுதல் கூறினார். "இது போன்ற கூட்டம் மிகுந்த இடங்களில் பார்த்து கவனமாக வரவேண்டும்" என்று அவருக்கு புத்திமதி கூறினார். சூப்பர் ஸ்டாரை பின் தொடர்ந்து புகைப்படமெடுக்க சென்ற ஒரு போட்டோக்ராபர் இதை பார்த்துவிட உடனே இதை படமேடுத்துவிட்டார்.

கீழே விழுந்த அந்த ரசிகரோ, தான் விழுந்ததை பற்றி கூட பொருட்படுத்தாமல், "தலைவர் என்னை தொட்டுவிட்டார். நான் அவருடன் பேசிவிட்டேன். எனக்கு கீழே விழுந்ததனால் ஏற்பட்ட வலியை பற்றி கவலையில்லை. தலைவருடன், பேசியதே எனக்கு மகிழ்ச்சிதான்," என்றார்.

--------------------------------------------------------
Times of India (24/05/2010) English Transcript:

IMPRESSIVE AS EVER
K S PRAKAASH

It’s not without reason that superstar Rajini has such a huge fan following. The man, who is known for his style and acting skills, is also known for his altruistic nature. And it was this nature of his that was on display at a recent function.

When superstar Rajini walked in to wish Chennai-600028 actor Vijay at his wedding reception, he was greeted by a crowd that had gathered to catch a glimpse of him.And in the crowd was a differently abled person, who was equally intent on meeting the star. As people pulled and pushed at each other in their eagerness to meet the star, he lost his balance and fell.

Rajini, seeing the commotion, rushed to the rescue of the man. He helped him up and suggested that he be careful while in a crowd.

The man, who did not seem to care about the fact that he had fallen down, was heard saying, “Rajini sir touched me! I spoke to him! I don’t care about the pain. I’m happy I could talk to the superstar.”

--------------------------------------------------------