Sunday, January 4, 2009

ரஜினியின் செல்வாக்கை அளக்க கிளம்பியுள்ள கைப்புள்ளைகள்

*TRANSLATION AVAILABLE AT THE END OF THE ARTICLE

ஜினியின் செல்வாக்கை நாங்கள் அளக்கிறோம் பேர்வழி என்று கிளம்பியுள்ள சில கைப்புள்ளைகளை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

இளகின இரும்பைக் கண்டால் ஓங்கி அடிப்பான் கொல்லன் என்பது போல ரஜினி என்றால் நாம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், எழுதலாம்...யார் கேட்கப்போகிறார்கள் என்கின்ற நினைப்பு இவர்களுக்கு. (மற்ற நடிகர்கள் கதை அப்படியல்ல. ஏதாவது விழாக்களில் சம்பந்தப்பட்ட நிருபரை அந்த நடிகர்களின் தந்தைக்குலமோ அல்லது பி.ஆர்.ஒ. வோ பார்த்தால் வறுத்தெடுத்து விடுவார்கள். இதற்க்கு பயந்தே இவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள்.)

கஞ்சன் வைத்த எச்சில் இலை விருந்து கதையாக கஞ்சனைப் பற்றி கவலைப்படாத சிலர் மட்டும் சென்று வந்த (ஏமாந்த) அந்த விருந்து ஊரிலயே பெரிய விருந்தாம். அது போல இருக்கிறது இவர்கள் வாக்கெடுப்பு நடத்தி ரஜினியின் செல்வாக்கு குறைந்துவிட்டதாக அங்கலாய்த்து கொள்வது.

"இது ஒரு குப்பைத் தொட்டி!" என்று பெரும்பாலானவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே புறக்கணித்த, குறிப்பாக ரஜினி ரசிகர்கள் முற்றிலும் புறக்கணித்த அந்த வலைத்தளம் உலகத் தமிழர்களிடம் (??!!) வாக்கெடுப்பு நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளதாம். அதன் படி ரஜினி கடந்த சில ஆண்டுகளாக மூன்றாம் இடத்திலிருக்கிறாராம். இதெப்படி இருக்கு?

"நாங்கள் ஒரு குண்டு சட்டி. இந்த குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வருபவர்களை வைத்து எங்கள் வாக்கெடுப்பு முடிவுகளை அறிவிக்கிறோம்!" என்று அந்த தளம் ஒரு முன்னுரை கொடுத்துவிட்டு முடிவுகளை அறிவித்தால் நன்றாக இருக்கும்.

ஜஸ்ட் ஒரு ஆவரேஜ் வெற்றிப் படம் கொடுக்க கூட துப்பு இல்லாத நடிகர்கள் எல்லாம் அந்த வாக்கெடுப்பில் பெற்றிருக்கும் வாக்குகள் இருக்கிறதே.... அட போங்கப்பா.... அது இன்னும் பெரிய காமெடி.

………………………………………………………………………………………………………………

*This post is an outcome due to the anguish of one of our fan who told me about this.

Tom, Dick and Harry: "We are ready to gauge Rajini's fame!!"

When the whole Tamil speaking population of the globe is aware of the international acclaim of Superstar, it is really funny to see some jobless Tom, Dick and Harrys' attempts to gauge his fame by mere website voting.

"When the cat's away the mice will play". So as Superstar's tolerance to such things gives room for these crap sites to blabber like this. But this is not the case in writing about other actors. Concerned actor's papa or PRO will blast the particular writer or reporter if he is spotted in any event. So they won't dare to write like this about other actors.

The concerned Tamil website has been stamped as DUSTBIN and ignored by the common people particularly by Rajini fans long back itself and nobody cares to visit that site. But the website claims that it conducted the polls among Tamilians (??!!) all over the world and have published the results. It has expressed its concern that Superstar Rajini is trailing in the third place for the past three years. How is it? ha...ha...ha...!

It is rib-tickling to note the huge votes garnered by some actors in that poll, who are struggling to give even an average hit movie for years. Note: For years!!

………………………………………………………………………………………………………………

[END]