Actually, it is my friend who saw the article and called me and told me about this. As the article is very vital for us in the present scenario i break again my pledge and refer it here. Hope i a right...
The article is really good and explores the happenings...
எதிரிகள் இரண்டு வகை. நாம் நன்றாக இருக்கும் போது நம்முடன் மோதுபவர்கள் ஒரு வகை. மற்றொரு பிரிவினர் நாம் கீழே விழும் நேரத்திற்காக காத்திருந்து பிறகு நம்மை முதுகில் கத்தியை சொறுகுவர். குமுதம் முதல் வகை. குமுதம் குழுமத்திற்கு எதிராக நான் பல முறை கருத்து கூறியிருக்கிறேன். இப்பவும் கூறுவேன். அது நம் மாண்புமிகு எதிரி. சரியா?
இன்கு இணைக்கப்படிருக்கும் ரிப்போர்ட்டர் பக்கம் உங்களில் பலரது சந்தேகங்களை போக்கும் என்று நம்பலாம்.
குறிப்பு: நமது எதிரி பாரதிராஜா சமீபத்திய ரஜினியின் விளக்கத்துக்கும் சர்ச்சைக்கும் கூறியுள்ள பதிலை பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். பாரதிராஜாவிடம் இருக்கும் தெளிவு கூட நம் ரசிகர்களுக்கு இல்லையே என்று...
பாரதிராஜா கூறியது என்ன?
"ரஜினிகாந்த் வருத்தம்தான் தெரிவித்திருக்கிறார். மன்னிப்பு கேட்கவில்லை. தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும், கர்நாடகத்தில் உள்ள அவருடைய ரசிகர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் பரந்த மனப்பான்மையுடன் அவர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார் என்றார்.
சரி குசேலன் எப்படி?
இன்று நண்பர்களுடன் படம் பார்த்துவிட்டு, வாய் வலிக்க விசில் அடித்துவிட்டு, ஆனந்த கூப்பாடு போட்டுவிட்டு திரும்பியிருக்கிறேன். நல்ல செய்திகள் நாலா பக்கமும் வந்து குவிந்துகொண்டிருக்கிறது. நாளை மறுபடியும் சந்திக்கிறேன்...விரிவான தகவல்களுடன்...